பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 22, 2011

யார் அன்னா ?



லோனாவாலா அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் அன்னா ஹசாரேயின் மெழுகு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இதில் யார் உண்மையான அன்னா என்று சொல்லுங்கள் பார்க்கலாம் ?


மெழுகு உருவில் இருக்கும் அன்னா, வாழ்நாள் முழுவதும் ஊழலுக்காக உண்ணாவிரதம் இருப்பார் என்பது கூடுதல் சிறப்பு !

20 Comments:

Anonymous said...

The one with hands separated and a smile is Wax.

I appreciate your confidence that Corruption has become another organ in the system and is no more considered a extra growth.

தினேஷ் said...

வலது பக்கம் இருப்பவர் தான் அன்னா...

இடது பக்கம் பொம்மை...

Anonymous said...

இடப்பக்கம் மெழுகு அண்ணா..!
வலப்பக்கம் மெய் அண்ணா..!

பாரதி மணி said...

இன்னும் கூடுதல் சிறப்பு......பேச மாட்டாரே!

kg gouthaman said...

//மெழுகு உருவில் இருக்கும் அன்னா, வாழ்நாள் முழுவதும் ஊழலுக்காக உண்ணாவிரதம் இருப்பார் என்பது கூடுதல் சிறப்பு !//

அது! ...

R. Jagannathan said...

அவர் வாழ்நாளில் ஊழல் ஒழியாது என்பது இருக்கட்டும், தேசத்தின் வாழ்நாளில் என்றாவது ஊழல் ஒழியுமா?

இனி மேடம் டுஸ்ஸாட் சிலைகளுக்கு முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று நம்புகிறேன். இந்த மெழுகு சிற்பிக்கு பாராட்டுகள்.
-ஜெ.

சந்தானம் as பார்த்தா said...

//மெழுகு உருவில் இருக்கும் அன்னா, வாழ்நாள் முழுவதும் ஊழலுக்காக உண்ணாவிரதம் இருப்பார் என்பது கூடுதல் சிறப்பு !
//

Atleast சிலையிலாவது வாழ்நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருக்கட்டும்...

மாயன் :ahamumpuramum.blogspot.com said...

மெழுகு அன்னா 'கன்னாபின்னா' வென்று அரசியல்வாதிகளை திட்ட மாட்டாரே! இடது மெழுகு!

Anonymous said...

நடுவில் இருப்பவர் தான் அன்னா. மாறு வேடத்தில் இருக்கிறார்!

முரளிதரன் தி ரா said...

//மெழுகு உருவில் இருக்கும் அன்னா, வாழ்நாள் முழுவதும் ஊழலுக்காக உண்ணாவிரதம் இருப்பார் என்பது கூடுதல் சிறப்பு !
//

வாழ்நாள் முழுவதும் ஊழலுக்காக மவுனவிரதமும் இருப்பார் ....

Ganpat said...

//மெழுகு உருவில் இருக்கும் அன்னா, வாழ்நாள் முழுவதும் ஊழலுக்காக உண்ணாவிரதம் இருப்பார் என்பது கூடுதல் சிறப்பு !//
அப்படியே நாடு மேன் மேலும் சீரழிவதைப்பார்த்து,உருகியும் விடுவார்!

ஸ்ரீராம். said...

வலது பக்கம் இருப்பதுதான் உண்மையான அன்னா.

ஸ்ரீராம். said...

இடது பக்கம் இருப்பது பொம்மை அல்ல!

Karuthu Kandasamy said...

தமிழ் துரோகிகளே

எத்தனை அன்னா-க்கள் வந்தாலும், அண்ணா ஒருவர் தான். வாழ்க அண்ணா நாமம், வாழ்க MGR நாமம்,

போடுங்க தமிழ் மக்களுக்கு நாமம் :)

பித்தன் பெருமான் said...

மெழுகு அன்னா - இனி யாரையும் மரத்தில் கட்டி வைத்து அடிக்க மாட்டார். பாரதி மணி அவர்கள் சொன்னது போல் பேசமாட்டார். மாயன் சொன்னது போல் திட்டமாட்டார். முக்கியமாக உளறமாட்டார்.

பித்தன் பெருமான்

Anonymous said...

யாரா இருந்தாலும் இந்திய அரசியல் வாதிகளே, ஊழலோ மரையப்போவதுமில்லை, வல்லரசு ஆவதுமில்லை.
நாம் மட்டும் இந்தியா ஒளிர்கின்றது என்று விளம்பரம் செய்வோம்.

Anonymous said...

மெழுகுச்சிலை பிரமாண்டம். கன்னடத்துல பிரம்மாண்டம்' ன்னா பிரமாதம் தானே.

murali said...

It is hightime idlyvadai gets the spelling of anna right. In marathi it is written and pronounced as அண்ணா. or अण्णा हजारे

IdlyVadai said...

//It is hightime idlyvadai gets the spelling of anna right. In marathi it is written and pronounced as அண்ணா. or अण्णा हजारे//

நன்றி ஆனால் அண்ணா என்றால் அது திமுக/அதிமுக அண்ணா என்று ஆகிவிடும். அதனால் அன்னாவே சரி :-)

சுழியம் said...

//மெழுகு உருவில் இருக்கும் அன்னா, வாழ்நாள் முழுவதும் ஊழலுக்காக உண்ணாவிரதம் இருப்பார் என்பது கூடுதல் சிறப்பு !//

ஊழலுக்காக உண்ணாவிரதமா ?

சரியாப் போச்சு !

“ஊழலுக்கு எதிராக” உண்ணாவிரதம் இருப்பார் என்று போடுங்கள் ஐயா.