பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 25, 2011

அன்னாவும் "THE"முகவும்

ஊழலை முற்றாக ஒழித்துக் கட்டுகிறேன் பேர்வழி என்று அன்னா ஹஸாரே என்ற காந்தியவாதி ஒருவர் கிளம்பினார். மீடியாக்கள் எல்லாமாகச் சேர்ந்து கொண்டு செய்த களேபரத்தால், எங்கு பார்த்தாலும் அன்னா அன்னா என்று ஸ்மரணையே இல்லாமல் ஜெபித்துக் கொண்டும், ஊழல் சாம்ராஜ்யம் வீழ்ந்து விட்டது போலவும் கற்பனை செய்து கொண்டு, சினிமா ஷூட்டிங் பார்க்கக் கிளம்பிய பட்டிக்காட்டு ஜனம் போல மக்கள் கூட்டம் திரண்டது.

விட்டால் ஊழலை ஒழித்தே விடுவார் போலிருக்கிறதே என்று காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகளே மிரளும் வண்ணம் அத்தகைய கூட்டத்தைக் கூட்டினார். ஜன் லோக்பால் என்ற சட்ட வடிவை முன்னிறுத்தி, இதில் ஒரு எழுத்து குறைந்தாலும் ஏற்க மாட்டோம் என்று நிபந்தனை விதித்தார். சாகும் வரையிலான 15 நாள் உண்ணாவிரதம் இருந்தார். பிறகு அரசு பணிவது போல் பணிந்து, அன்னா சொல்வதை உணர்வுப் பூர்வமாக ஏற்கிறோம் என்று அரசுக்கும் புரியாமல், அன்னாவுக்கும் புரிந்து விடாமல், காங்கிரஸின் ட்ரபிள் ஷூட்டர் எனப்படும் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் எதையோ பேசப் போக, மீடியாவின் துணையுடன் அனைவரும் ஜெய ஜெய என ஜெய கோஷமெழுப்பி ஊழலை ஒழித்துக் கட்டினர். இதெல்லாம் கொஞ்சம் பழைய கதை.


“இந்தியாவிலேயே ஊழலற்ற மாநிலம் குஜராத்தான். நரேந்திர மோதி அப்பழுக்கற்றவர், மிகச் சிறந்த நிர்வாகி”, என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார். மோதியும், இப்படியெல்லாம் என்னைப் புகழ்ந்தால் உங்களைச் சிலர் களங்கப் படுத்த முயல்வர் என்று கடிதம் எழுதினார் ஹஸாரேவுக்கு. அதற்கெல்லாம் சளைத்தவன் நானல்ல என்று மார் தட்டினார் அன்னா. கடைசியில் என்னவாயிற்று? அன்னா ஹஸாரேயின் மதச்சார்பின்மை கேள்விக்குரியதாகிறது, அவர் பாஜக அனுதாபி, ஆர் எஸ் எஸ் ஸ்வயம்சேவக் போல் பேசுகிறார் என்று மதச்சார்பற்ற மாந்தர்கள் குரலெழுப்பவும், எதற்கு வம்பு என்று, “குஜராத்தைப் போல் ஊழல் மலிந்த மாநிலம் உலகிலேயே இல்லை” என்று ஒரே போடாகப் போட்டார். முன்பு அப்படிச் சொன்னீர்களே, பிறகு ஏன் இப்படி என்று மீடியாக்கள் இவரைக் கேட்கவில்லை, அதுவும் மதச்சார்பின்மைக்கு எதிராக முடியுமென்பதால்.

இவ்வாறாக காந்தியவாதி, சமூக சேவகர் என்ற பட்டங்களுடன் மீடியாக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வலம் வந்த அன்னா தற்போது முக போல் முன்னுக்குப் பின் முரணாக தினமும் எதையாவது ஒன்றைப் பேசி வருகிறார். கூட்டம் கூட்டிக் காண்பித்தாயிற்று, மீடியாக்கள் மூலம் மக்கள் ஆதரவு இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியாயிற்று, இனி எது சொன்னாலும் எடுபடும் என்ற அளவில் அன்னாவின் பேச்சுக்கள் இருக்கின்றன.
மௌன விரதம் இருக்கிறேன் என்றால் உடனே ஒரு பேப்பர் பேனாவை கொடுத்து மீடியா பேட்டி எடுக்கும் நிலைக்கு வந்த பின்னர் என்ன செய்வது என்று அவருக்கும், மீடியாவிற்கு தெரியவில்லை.

காங்கிரஸை ஊழல் மலிந்த கட்சி என்றார். ஹிமாச்சலில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார். ஏற்கனவே பாஜக கூட்டணி வசமிருந்த தொகுதியாதலால், பாஜக கூட்டணி எளிதாக வெற்றி பெற்றது. அன்னா ஹஸாரேவால் காங்கிரஸ் தோல்வி என மதச்சார்பற்ற மீடியாக்கள் வரிந்து தள்ளின. சற்று நேரத்திற்கெல்லாம், ஜன் லோக்பாலை அரசு நிறைவேற்றினால் காங்கிரஸுக்காகப் பணியாற்றுவேன் என்று அந்தர் பல்டியடித்தார்.


இவ்வாறாக அடித்த பல்டிகளில் லேட்டஸ்ட் பல்டி, நேற்றைய பல்டிதான். இந்த பல்டியில்தான் சற்றே சறுக்கி விட்டார். மீடியாக்கள் கூட கேள்வி கேட்க ஆரம்பித்த்தால், அன்னாவே நிலை தடுமாறித்தான் விட்டார். நேற்றைய தினம், மத்திய அமைச்சர் ஷரத் பவாரை ஹர்விந்தர் சிங் என்பவர் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார். ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரதிபலிப்பு என்று எல்லோரும் நினைக்க அன்னாவும் அதையே நினைத்துவிட்டார்.

நேற்றைய தினம் மராட்டிய மாநிலம் புனேவில் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்ட அன்னாவிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அன்னா சற்றே நக்கலான தொனியில், ஒரே ஒரு அறைதானா? என்று கேட்டார். பின்பு இது பற்றி மீடியாக்கள் பெரிது படுத்தவும், காந்தியவாதி என்ற பட்டத்திற்கு பங்கம் வந்துவிடும் என்பதால் உடனேயே வன்மையாக்க் கண்டிக்கத்தக்கது என்ற ரீதியில் ஒரு அறிக்கை வெளியிட்டார். முன்பு பேசியது எங்கு தவறாக எடுத்துக் கொள்ளப்படுமோ என்ற பதட்டத்தில், ஒரே அறைதானா அல்லது கடுமையாகத் தாக்கப்பட்டாரா என்ற ரீதியில்தான் அவ்வாறு கேட்டேன் என்றார், பிறகு மன்னிப்பு வேண்டுமானாலும் கோருகிறேன் என்றிருக்கிறார் சமீபமாக. முக கூட மஞ்சள் துண்டிற்கு இவ்வளவு விளக்கங்கள் கொடுத்திருக்க மாட்டார்.


இன்னமும் இவர் ஊழலை ஒழித்து, காங்கிரஸிடமிருந்து மக்களையும், இந்தியாவையும் காப்பாற்றி விடுவார் என விடாமல் பகல் கனவு காண்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாவை காந்தியவாதி என்கிறார்கள். அது ஏனென்று புரிபடவே இல்லை. ஷரத் பவாரை ஒரே ஒரு அறைதான் அறைந்தார்களா என்று ஆவலுடன் கேட்கிறார்; எங்கள் ஊரில் குடிப்பவர்களை எல்லாம் மரத்தில் கட்டி வைத்து அடிப்போம் என்கிறார். இதெல்லாம் காந்தியவாதி செய்யும் செயல்களாகத் தெரியவில்லை. அமைப்பிற்கு நன்கொடை என்ற பெயரில் வந்த பணத்தில் பேர்பாதி கணக்கில் வராத பணமாம், அதையும் திருப்பிக் கொடுக்கிறார்களாம். வாங்கும்போது அது தெரியவில்லையா? அல்லது பேசியதை மாற்றி மாற்றி பிறழ்ந்து பேசுபவர்களெல்லாம் காந்தியவாதிகளா?


இது தெரியாது மீடியா ஒருவரை கொஞ்சம் நேரம் காண்பித்தால் தமிழ் இலக்கிய உலகம் உடனே இன்ஸ்டண்ட் தொடர், கேள்வி பதில், அதை தொடர்ந்து புத்தகம் என்று நல்ல காமெடி!

14 Comments:

Anonymous said...

http://idlyvadai.blogspot.com/2011/04/blog-post_2511.html
அண்ணா இதுவும் நீங்க போட்டததுதானே?

“””””தொடர்ந்து இட்லிவடையில் அண்ணா ஹஸாரே பற்றி செய்திகள் வரும். இவர் நமக்காக செய்கிறார் நிச்சயம் ஆதரவு கொடுக்க வேண்டும்.

“””
இதுவும் நீங்க சொன்னதுதான்! மறுக்கமாட்டீங்கன்னு நெனக்குறேன்

துக்களக் சோ சொல்லிடாருன்னு ஊழலுக்கெதிரான ஒரு நல்ல முயற்ச்சியை எதுக்க்றீங்களே

இதுலயமுமா பூணல் பாசம்?

Pradeep said...

Good one !!!

Anonymous said...

அன்னா சொல்ல மறந்தது,

"தப்பை தப்புன்னு சொல்றது
தப்பில்லை அப்பு.
அதைவிடுத்து இங்ஙனம்
'சப்பென்று' அறைவது
சாலவும் தப்பு"

அன்னாஜி, தோடா மூவ் பந்த் கர்கே சுப் ரஹ்னேக்கு கோஷிஷ் கீஜியே.

IdlyVadai said...

//இதுவும் நீங்க சொன்னதுதான்! மறுக்கமாட்டீங்கன்னு நெனக்குறேன்

துக்களக் சோ சொல்லிடாருன்னு ஊழலுக்கெதிரான ஒரு நல்ல முயற்ச்சியை எதுக்க்றீங்களே

இதுலயமுமா பூணல் பாசம்?//

எங்க அன்னா அடிக்கடி தான் சொல்லுவதை மாற்றுகிறார் நான் மாற்றக்கூடாதா ? சோவை விட அன்னாவையே நான் பின்பற்றுகிறேன் என்று கூட நினைக்கலாம்.

ஜெகன்னாதன் said...

உங்கள் வாதங்கள் அங்கீகரிக்கப் படவேண்டுமானால் நீங்கள் இன்னும் நடு நிலையோடு விமரிசிக்க வேண்டும். எல்லோரும் அந்த அந்த நேரங்களின் நிகழ்வுக்கு ஏற்ப பேசுவதுதான். ஆனால் முக்கிய கொள்கையில் பிடிவாதமாகவும் இருக்கவேண்டும், விட்டும் பிடிக்க வேண்டும். தவறை தவறு என்று தெரிந்தபின் திருத்திக்கொள்ள வேண்டும்.

நீங்கள் அன்னா எதிர்ப்பு என்ற நிலையில் மிக்க கொள்கைப் பிடிப்போடு இருப்பதில் சந்தோஷம். ஆனால் உங்கள் தவறை ஒப்புக்கொள்ள மறுப்பதிலும் அதே பிடிவாதம் சரியில்லை என்பது என் கருத்து.

ஊழல் ஒழிக்கப்பட வேண்டும், அந்த விழிப்புணர்வுக்கு அன்னா மிக மிக முக்கிய காரணி என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

-ஜெ.

Rajaraman said...

\\ஹிமாச்சலில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார்.//

இடைத்தேர்தல் நடந்தது ஹிமாச்சலில் அல்ல, ஹரியானாவில்.

Rajaraman said...

\\ஹிமாச்சலில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார்.//

இடைத்தேர்தல் நடந்தது ஹிமாச்சலில் அல்ல, ஹரியானாவில்.

Anonymous said...

We should not deviate from the Ultimate goal to eradicate corruption. No need to corner particular person lets work for Nation cause....

தமிழினி said...

உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

http://www.tamil10.com/

ஒட்டுப்பட்டை பெறநன்றி

Anonymous said...

Next Ad in the making

" Still stuck with blogs that make u sleep (Idly vadi )"


Aiyo aiyo. yaen sir ipdi aayiteenga. Adisayama sachin 100 adipaara nu oru new poteenga.. aduvum nadakama pochu.

R Sathyamurthy said...

Gandhian in 20th century need not mean he should be non- violent as the present day politicians are worse than probably the British.

R Sathyamurthy said...

Gandhian in 20th century need not mean he should be non- violent as the present day politicians are worse than probably the British.

Anonymous said...

cho predicted this anna long back.he's a joker.dont have clearcut mind.he may be a true person,but persons around him want to explit him.............poor anna

BalajiS said...

Ramanujar did what was required in his time.

Gandhi did what was necessary during his time.

Anna Hazare is doing what is necessary in his time!

Dont make stupid comparisons!