நேற்று சவேரா ஹோட்டலுக்கு போனேன். உள்ளே 'சூடா பஜ்ஜி' என்ற போர்டுக்கு பக்கம் ப்ராடிஜி டி ஷர்ட் போட்ட ஒருத்தரை பார்க்க முடிந்தது.
எதாவது காது குத்துவிழாவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்
மெதுவாக அவரிடம் பேச்சு கொடுத்தேன்
"எங்கே பத்ரி"
"சரக்கு மாஸ்டர் வரலையா ? "
"அவருக்கு ஆபீஸில் ஏகப்பட்ட வேலை எப்போதும் ஜி.டாக்கில் இருப்பார்" என்றார்
"பத்ரி வரலை,சரக்கு வரலை நீங்க எதற்கு வந்தீங்க" என்ற கேள்வியை கேட்கலாமா என்று நினைக்க
"இன்னும் கொஞ்ச நேரத்துல பபாஸி எலக்ஷன் நடக்க போவுது இங்கே" என்றார் ப்ராடிஜி டி.ஷர்ட்.
சரி பாராளுமன்றம், சட்டசபை, உள்ளாட்சி தேர்தல் என்று பல தேர்தலை பார்த்துவிட்ட நமக்கு இந்த தேர்தலையும் ஒரு முறை பார்த்துவிடலாமே என்று உள்ளே பேசாமல் போய் கடைசி சீட்டில் உட்கார்ந்தேன். பக்கத்துல இருந்தவரிடம் பேச்சு கொடுத்தேன். பபாஸி தேர்தல் என்று ஒரு அறிவுப்பு கூட இல்லையே ஏன் ? காதும் காதும் வைத்த மாதிரி நடத்துறாங்க ?
மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு "நீங்க எந்த பதிப்பகம்?" என்றார். நைசாக அந்த கேள்வியை சாய்ஸுக்கு விட்டுவிட்டு தேர்தல் நடத்த அய்யர் மாதிரி யாராவது வருவாங்களா ? என்று பதில் கேள்வி கேட்டேன்.
"அட நீங்க வேற இந்த வருஷம் புக் ஃபேர் நடக்காதுன்றாங்க" என்றார்.
"என்ன நீங்க சொல்லுவது நிஜமா ?" என்று கேட்டு முடிப்பதற்குள் அவர் தடையில்லாமல் பேச ஆரம்பித்தார் ....
"வழக்கமா புக் ஃபேர் நடத்துற இடத்தை வாடகைக்கு தரமாட்டேன்னு சொல்றாங்களாம். அதனால சிலர் இந்த வருஷம் புத்தகக் கண்காட்சி நடக்காதுன்னுதான் சொல்றாங்க வேற இடம் பார்த்தாலும் அது சரியா வராதுன்னு ஃபீல் பண்றாங்க இனிமே இடம் பார்த்து அரங்குகள் பிரிச்சு வாட்கை கொடுத்து வாங்கி
பந்தல் போட்டு, டாய்லட வசதி(?) செய்துகொடுத்து... வாய்ப்பே இல்லைன்றாங்க"
"அம்மாவோட எஃபெக்ட் ஏதாவது... ?
"அவங்களோட பங்களிப்பு இதுல இருக்கலாம் என்று சிலருக்கு சந்தேகம் இருக்கு ஆனால் அம்மா இதுல எல்லாம் இண்ட்ரஸ்டா இருக்க வாய்ப்பே இல்லைன்னும் சொல்றாங்க"
"ஏங்க புத்தகக் கண்காட்சி நடக்கலைன்னா அப்ப எதுக்கு இந்த தேர்தல் ?"
"ஆமாங்க அது தான் இப்ப ஹாட் டாப்பிக். பபாசின்னு ஒண்ணு எதுக்கு இருக்கணும்னு பதிப்பாளர்களுக்குள்ள பேச்சு. இவங்க நடத்துற மதுரை புக் ஃபேர் கொஞ்சம் சுமார் திருச்சில நடத்துறதே இல்லை கோவைலயும் நடத்துறது இல்லை ஈரோடு மட்டும் ஓகே, அதுவும் தனிப்பட்ட ஒருத்தர் முயற்சியால"
"பபாசி புக் ஃபேர் நடத்தமுடியலைன்றது தன்மான தமிழனுக்கு எவ்வளவு கேவலம்!"
"ஏங்க நீங்க எந்த பதிப்பகம் ?"
"அதைவிடுங்க நீங்க கண்டினுயூ பண்ணுங்க"
"இப்ப பாருங்க இந்த வருடம் எலெக்ஷன் போன முறை (ரெண்டு வருடத்துக்கு ஒரு தடவை நடக்கும்) கனஜோரா நடந்தது ஒரே நோட்டிஸ் மயம் அது இதுன்னு ஆடம்பரமா ஆனா இந்த தடவை ரொம்ப கமுக்கமா ரகசியமா நடக்குது. அதுவும் ஒரே டீம் ஆளுங்க ஜெயிச்சு வந்துட்டாங்க போன டீம்தான் இந்த தடவையும் தலைவர் நிக்க விரும்பாததால வேற ஒருத்தர் தலைவர் ஆனா இத்தனை நடந்தும் என்ன புண்னியம்! சென்னை புக் ஃபேர் நடக்கலைன்னா இவங்க எல்லாருமே வேஸ்ட்னு அர்த்தம்"
"கலைஞர் ஆட்சியாக இருந்தால் இது நடந்திருக்காது இல்லையா ?"
"கருணாநிதி ஆட்சில இருந்தப்ப அவருக்கு ரொம்ப ஜால்ரா போட்டுட்டாங்க கிட்டத்தட்ட அவங்க எம் எல் ஏ மாதிரி கை கட்டி வாய் பொத்திதான் நின்னாங்க அவர்கிட்ட இப்ப இந்த அம்மா ஜெயிச்சதும் இந்த பபாஸிக்கு என்ன பண்றதுன்னே தெரியலை அவரை எதாவது செண்டிமெண்ட்டா பேசி ஏமாத்திடலாம் இந்த அம்மாகிட்ட அதுவும் நடக்காதுன்னு கலங்கி போய் இருக்காங்க.
"ஆமாம் அண்ணா நூலகத்தையே மாத்திட்டாங்க"
"பொதுவா கலைஞர் ஆட்சில நூலக ஆர்டர் வரும், இந்த அம்மா ஆட்சில வராதது தான் வரலாறு ஆனா என்னமோ தெரியலை, கருணாநிதி ஆட்சியிலயும் இந்த தட்வை கடந்த 2 வருஷமா ஆர்டரே வல்லை இனிமே இந்தம்மா வந்தா தரப்போகுது, அதுலயும் இந்த பபாஸி கருணாநிதிக்கு அந்த ஜால்ரா அடிச்சப்புறம் இந்தம்மா எப்படி ஆர்டர் தரும்னு ஒரே கவலை எல்லாத்துக்கும். அதுலயும் சிலருக்கு சந்தோஷம். ஏன்னா கருணாநிந்தியோட ஆசியோட பலர் பலவிதமா அநியாயமா ஆர்டர் வாங்கினாங்க. இப்ப அவங்களுக்கும் கிடைக்காதுன்னு பலர் சந்தோஷபப்டறாங்க.
"சரி நீங்க எந்த பதிப்பகம் ? "
"நீங்க எந்த பதிப்பகம் என்று சொல்லுங்க" என்று நான் எதிர் கேள்வி கேட்க அவர் உடனே ஓடிவிட்டார்.
"எங்கே இவ்வளவு அவசரமா ஓடறீங்க ..."
"விஷயமே தெரியாதா வெட்டோத்தி சுந்தரம் படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் பண்ண..." என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்.
அவருக்கும், புத்தகக்கண்காட்சி நடக்க வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, November 10, 2011
சென்னை புத்தகக்கண்காட்சி இல்லையா ? - எக்ஸ்க்ளூசிவ்
Posted by IdlyVadai at 11/10/2011 04:28:00 PM
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Subscribe to:
Post Comments (Atom)

பொண்ணுக்கு நல்லா பாட தெரியுமா ?
பானிபூரிக்கும் பேல் பூரிக்கும் வித்தியாசம் தெரியாத தமிழர்கள், எப்படி தான் ஹன்சிகா அடுத்த குஷ்பு என்று கண்டுப்டிச்சாங்களோ ?








14 Comments:
Nice Write-Up.Interesting Read.Short story padithathu pol irunthathu. Nantri.
அறிவுலாயத்தில் இருக்கும் திருமண மண்டபங்களில் நடத்திக்கொள்ள வேண்டியதுதான். மஞ்சள் துண்டர்கள்தான் மார்கழி மாதம் கல்யாணம், காதுகுத்து எதுவும் நடத்தமாட்டார்களே. அந்த ஆளுக்கும் ஒரு 10 நாள் பொழுது போகுமே?
பாரா sorry இட்லிவடை ,
வெட்டோத்தி சுந்தரம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!படத்தில் பல பேர் வசனத்தை கூர்ந்து கவனிக்க போகிறார்கள்
அடுத்து ஜகத்தின் சங்கமும் இருக்காது. தையில் தமிழ் புத்தாண்டு விழாவை மற்றொரு ஜகத்தும் கொண்டாட முடியாது. (வள்ளுவர் கோட்டம் ஏரியாவில் மின்சாரமே இருக்காது.).. நோபல பரிசும் தமிழ் நாட்டுக்கு இல்லை,என்னமோ போங்க, மனசே சரியில்லை.-- ம்ணா
புத்தக கண்காட்சி நடத்த உதவுங்கள் என்று உரியவர்கள் மூலம் அம்மாவிடம் எடுத்து செல்லுங்கள். அதை விட்டுவிட்டு கேனத்தனமாக(பா.ரங்கதுரை மாதிரி ) இதற்கும் கருணாநிதியை குற்றம் சாட்டாதீர்கள்.
<< அறிவுலாயத்தில் இருக்கும் திருமண மண்டபங்களில் நடத்திக்கொள்ள வேண்டியதுதான். மஞ்சள் துண்டர்கள்தான் மார்கழி மாதம் கல்யாணம், காதுகுத்து எதுவும் நடத்தமாட்டார்களே. அந்த ஆளுக்கும் ஒரு 10 நாள் பொழுது போகுமே? >>
உங்க வீட்டில குழந்தை கொல்லைக்குபோகலன்னா கூட
மஞ்சள் துண்டு தான் காரணமாய்யா..!
ஜால்ராவுக்கு ஓர் அளவில்லயா ?
மாத்தி யோசி ..!
வேற வேலைப்பாருமய்யா ரெங்கதுரை...!
<< அறிவுலாயத்தில் இருக்கும் திருமண மண்டபங்களில் நடத்திக்கொள்ள வேண்டியதுதான். மஞ்சள் துண்டர்கள்தான் மார்கழி மாதம் கல்யாணம், காதுகுத்து எதுவும் நடத்தமாட்டார்களே. அந்த ஆளுக்கும் ஒரு 10 நாள் பொழுது போகுமே? >>
சாவு வீட்டில போயி பொண்ணு பார்க்குராணய்யா இந்த ரெங்கதுரை...!
புத்தகக்கண்காட்சி நல்ல படியா நடக்க வேண்டிக்குமய்யா இராஜபார்ட் ...!
Well said Amar.
புத்தகக் கண்காட்சி நடத்தப்பட வேண்டும். இட்லி வடை மூலமாக இந்தக் கோரிக்கையை சம்பந்தப் பட்டவர்களுக்கு விடுக்கின்றோம்.
பாபாசிக்கு என்ன குழப்பம் என்று தெரியவில்லை.
சென்ற ஆண்டுகளில் கருணாநிதிக்கு தாடிவைத்து கையில் எழுதுகோல் ஒன்றை கொடுத்து படம் வரைந்து "வள்ளுவரே,தொல்காப்பியரே" என்று கண்காட்சி வாயிலில் பானர வைத்து பிழைப்பு நடத்தியது போல,வரும் ஐந்து ஆண்டுகளில் அம்மாவை தாமரை மலரில் அமர்த்தி,கையில் வீணையைக்கொடுத்து படம் வரைந்து
"கலைவாணியே,சரஸ்வதியே"என்று கண்காட்சி வாயிலில் பானர வைத்து பிழைப்பு நடத்தினால் ஆயிற்று.
தமிழன்தான் , வெட்கம் மானம் சூடு சொரணை ஆகியவற்றை இழந்து அகவை நாற்பத்து நான்கு ஆகிறதே!!
அபத்தமான கிசுகிசு கட்டுரை. தேர்தல் ஒவ்வொரு முறையும் நடப்பது போலவேதான் இந்த முறையும் முறையான அறிவிப்புகளுடன் நடந்தது. பல பதவிகளுக்குப் போட்டியிட யாரும் முன்வராததால், பலர் போட்டியின்றி தேர்வானார்கள். மீதி பதவிகளுக்கு அன்று தேர்தல் நடந்தது.
சென்னைக்கு வெளியே பபாசி நடத்தும் புத்தக்காட்சிகள் நஷ்டத்தில் நடந்தாலும் தொடர்ந்து நடத்தவேண்டும் என்றே முடிவாகியிருக்கிறது. பபாசி கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்கவேண்டுமென்று தொடர்ந்து வற்புறுத்துபவர்கள் அன்றைய பொதுக் குழுவிலும் சொன்னார்கள்.
ஜனவரி 2012 சென்னைப் புத்தகக்காட்சிக்கு புனித ஜார்ஜ் பள்ளிக்கூடம் தன் மைதானத்தை இந்த முறை தர மறுத்திருக்கிறது. பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பே காரணம். மாற்று இடம் தேடிவருகிறார்கள் பபாசி நிர்வாகிகள். பச்சையப்பன் கல்லூரி முதல் ஒய்.எம்.சி.ஏ வரை பல இடங்களில் முயற்சித்து வருகிறார்கள். நிச்ச்யம் புத்தக் காட்சி இந்த ஆண்டும் நடக்கும். அரங்கு வாடகை குறித்தெல்லாம் விரிவான விவாதம் நடந்தது.
அண்ணா நூலகத்தை இடம் மாற்றவேண்டாமென்ற வேண்டுகோள் தீர்மானமும், ஆண்டு தோறும் நூலகங்களுக்கு நூல்கள் வாஙவேண்டுமென்ற கோரிக்கைத் தீர்மானமும் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டது.
ஞாநி
பொதுக் குழுவில் பங்கேற்ற பபாசியின் சாதாரண உறுப்பினர்
த்..த்..த்..திக்குராயன் க்க்..க்க்..கவிதை...
பப்..பப்..பப்..பப்பரப்பா
ப..ப..ப..பபாசி படா த்..த்..தமாசப்பா
ப்பு..ப்பு...புஸ்தகம் விக்கிறதுக்கு பதிலா
இ..இ..இ...இவிங்கெல்லாம்
ப்ப்..ப்ப்..புண்ணாக்கு வி..வி..வி..வி...வி...
அட போங்கப்பா...
//புத்தக கண்காட்சி நடத்த உதவுங்கள் என்று உரியவர்கள் மூலம் அம்மாவிடம் எடுத்து செல்லுங்கள். அதை விட்டுவிட்டு கேனத்தனமாக(பா.ரங்கதுரை மாதிரி ) இதற்கும் கருணாநிதியை குற்றம் சாட்டாதீர்கள்.//
உங்க வீட்டில குழந்தை கொல்லைக்குபோகலன்னா கூட
மஞ்சள் துண்டு தான் காரணமாய்யா..!
ஜால்ராவுக்கு ஓர் அளவில்லயா ?
மாத்தி யோசி ..!
வேற வேலைப்பாருமய்யா ரெங்கதுரை...!//
VERY GOOD
latest news (18.11.11) : தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஜனவரி 5 முதல் 17வரை 35 வது சென்னை புத்தககாட்சியை அமைந்தகரை, செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இது குறித்த விண்ணப்படிவம் நவம்பர் 28 முதல் பாபாசி அலுவலகத்தில் கிடைக்கும்.
Post a Comment