பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 09, 2011

அப்படியா செய்திகள் ....

நேற்று வந்த சில அப்படியா செய்திகள்....

1. ஜாமினில் வெளியே வரும் எடியூரப்பாவை மீண்டும் முதல்வர் ஆக்க பாஜக மேலிட தலைவர்கள் சிலர் ஓசையின்றி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ரதயாத்திரை தான் முடிந்துவிட்டதே!

2. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கலாநிதி மாறன் குடும்பத்துடன் தனி விமானத்தில் ஃபின்லாந்து சென்றுள்ளார். இந்த விஷம் சிபிஐக்கு கூட தெரியாதாம். ஆங்கில பத்திரிக்கைகள் இந்த செய்தியை கண்டுக்கொள்ளவில்லை.என்ன குளிர் இருந்து என்ன? அவருக்குதான் சிபிஐ குடுக்கும் சப்போர்டில் குளிர் விட்டுப் போயிருக்குமே!


3. “சார்க்” மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் இன்று மாலத்தீவு பயணம்.

துக்ளக் கேள்வி பதில் ஒன்று...
கே : ‘தான் விரைவில் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதால், அச்சமயம் மத்திய அரசின் பணிகளை ஒருங்கிணைக்கவும், அவசரமான முடிவுகளை எடுப்பதற்கும், அரசியல் விவகாரங்களுக்கான மந்திரிசபைக் குழுவைக் கூட்டவும் பிரணாப் முகர்ஜி அல்லது ப.சிதம்பரம் பொறுப்பேற்க வேண்டும்’ – என்று பிரதமர் உத்திரவு பிறப்பித்துள்ளது பற்றி?

ப : ‘பிரணாப் முகர்ஜி அல்லது ப.சிதம்பரம்’ என்று பிரதமர் கூறினாரா? இல்லாவிட்டால் ‘ப.சிதம்பரம் அல்லது பிரணாப் முகர்ஜி’ என்று கூறினாரா? இந்த விவரம் சரியாகத் தெரியவில்லை. இதில் யார் பெயரை பிரதமர் முதலில் குறிப்பிட்டுள்ளாரோ அவர் பக்கம்தான் அவர் நிற்கிறார் – என்று மற்றவர் சந்தேகப்பட வாய்ப்பிருக்கிறதே? இதை எப்படி பிரதமர் தீர்க்கப் போகிறார்? ‘பிபரசிணாதப்ம்முபகரர்ம்ஜி கவனித்துக் கொள்வார்கள்’ என்று வேண்டுமானால் சொல்லிப் பார்க்கலாம். அது ஓரளவு சமாதானமாக இருக்கும்.

4. சொத்துக்குவிப்பு வழக்கு - பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராகவில்லை. மீண்டும் பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா 22-ந்தேதி ஆஜராக உத்தரவு. அதுவரை நாம் எல்லோரும் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! " என்ற பாட்டை கேட்டுக்கொண்டு இருக்கலாம்.

5. தவறு செய்தவர்களைப் பிடிக்க போலிஸ் இருக்கு. அந்தப் போலிசுக்கு ஒரு அமைச்சர் இருப்பார். சமயத்துல முதலமைச்சரே இதை கவனிப்பார். ஆனால் போலிஸ் பிடிச்ச ஆட்களை போலி-ஸ்டேஷனுக்கு ஒரு குண்டர் படையோடப் போயி விடுவிச்சது இந்த உலகத்துல முதல் முறையா மேற்கு வங்காளத்தில் நடந்து இருக்கு. நல்ல பிரசிடென்ஸ் நன்றி மம்தா

8 Comments:

கிரி said...

// இந்த "விஷம்" சிபிஐக்கு கூட தெரியாதாம். //

இட்லிவடை இது தெரிந்து எழுதியதா இல்லை தெரியாமல் எழுதியதா ;-)

கிரி said...

// ‘பிபரசிணாதப்ம்முபகரர்ம்ஜி கவனித்துக் கொள்வார்கள்’ என்று வேண்டுமானால் சொல்லிப் பார்க்கலாம். அது ஓரளவு சமாதானமாக இருக்கும்.//

ஹா ஹா ஆனால் இதிலும் "பி" தான் முதலில் வருகிறது எனவே செல்லாது :-))

குரோம்பேட்டைக் குறும்பன் said...

//அவசரமான முடிவுகளை எடுப்பதற்கும், அரசியல் விவகாரங்களுக்கான மந்திரிசபைக் குழுவைக் கூட்டவும் பிரணாப் முகர்ஜி அல்லது ப.சிதம்பரம் பொறுப்பேற்க வேண்டும்//
ராகுல் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்லாமல் இருந்தால் சரிதான்!

R. Jagannathan said...

1. விஷம் என்றது விஷமத்தனமானது என்று கலாநிதி வழக்குத் தொடரப்போகிறார். எதற்கும் மறுப்பு / மன்னிப்பு பின்னூட்டம் போட்டுவிடவும்.

2. சோ ரொம்ப அறிவாளி தான், ஆனாலும் இந்த மாதிரி அவ்வப்போது தத்துபித்து பதிலளித்து கேலி செய்பவர்களுக்க் சான்ஸ் கொடுத்துவிடுகிறார்.

3. ஜெ ஏமாற்றுகிறாரா, கோர்ட்டுகள் ஏமாறுகின்றனவா? ஜெ வெள்ளப் பகுதிகளை பார்வையிடுவதாக அவர் வக்கீல் சொன்னாராம். இந்த விஷயம் இதுவரை பத்திரிகைகளுக்குக் கூட தெரியாமல் ரகசியமாக இருந்துள்ளது! 13,14 தேதிகளில் மீட்டிங் என்றார். ஜட்ஜ் 17ஆம் தேதி வரச்சொன்னார். ஜெ முடியாது, 22ஆம் தேதிதான் வருவேன் என்றதும் ஜட்ஜ் தலையாட்டிவிட்டது..சாரி, தலையாட்டிவிட்டார்.

4. மம்தா என்ன ஜெயாவா, அவர் பெயரை சொல்லி அடியாட்களே போலிஸை மிரட்ட? பாவம் அவர் ஒருத்தரே தான் எல்லாம் செய்யவேண்டியிருக்கிறது.

-ஜெ.

Anonymous said...

Read in TOI today.

There is an RTI filed asking for details of Sonia Ji's foreign trips for the past two years.

1) Ministry of External affairs
2) Parlimentary Affairs
3) Ministry of statistics and prog. implemntation nor
4) Prime ministers office have any details about this.

Awesome indian government

Anonymous said...

எனக்கென்னமோ ஸ்டாலின்தான் ஜெகனாதன்ற பேருல அனானியா எழுதறாருனு தோணுது

விஜயன் said...

ஆச்சரியமா இருக்கு. இட்லிவடையில ஜெயலலிதா பத்தி எல்லாம் எழுதறாங்க (short time memory loass...?!)

R. Jagannathan said...

”Anonymous said...
எனக்கென்னமோ ஸ்டாலின்தான் ஜெகனாதன்ற பேருல அனானியா எழுதறாருனு தோணுது.”

ஹா..ஹா.. என்ன கற்பனை! ஒருத்தர் ஜெ. என்றால் ஜெயா என்று நினைக்கிறார், இவர் ஸ்டாலின் என்கிறார்!!

-ஜெ.