பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 07, 2011

உடன்பிறப்பு கடிதங்கள்...


நேற்று தினமலர் கலைஞருக்கு ஒரு 8 பக்க கடிதம் பற்றி எழுதியிருந்தது. உடனே இன்று முரசொலியில் அதற்கு கலைஞர் பதில் சொல்லிவிட்டார்.

கடித விவரம் கீழே...


உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களுக்கு,


தாங்கள் உடன்பிறப்பே என்று எங்களை அழைக்கும் பாசச் சொற்களை கேட்டவுடன், எங்கள் உடம்பில் உள்ள மயிர்க் கால்கள் எழுந்து நிற்கும். தங்களின் உடன்பிறப்பு கடிதங்களை பார்த்தாலே எங்களுக்கு உணர்வுபூர்வமாக தெம்பு உண்டாகும். இந்நிலை பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்தது. நாங்களெல்லாம் அவசர நிலை காலத்திலும், எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலும், எங்களின் குடும்ப நன்மை தீமைகளையெல்லாம் கவனிக்காமல் கலைஞர், கழகம் தான் முக்கியம் என்று பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றோம். இன்றைக்கு நாங்கள் தி.மு.க.வில் அன்னியப்பட்டுள்ளோம். எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்., சேடப்பட்டி முத்தையா, ஈரோடு முத்துசாமி, கரூர் சின்னசாமி, ரகுபதி, சத்யமூர்த்தி, செல்வகணபதி, கருப்பசாமிபாண்டியன், கம்பம் செல்வேந்திரன், அழகு திருநாவுக்கரசு, தென்னவன், மைதின்கான், இந்திராகுமாரி, கே.பி.ராமலிங்கம், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, டி.கே.எஸ். இளங்கோவன் (இவரின் தந்தை சீனிவாசன் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் பாடநூல் நிறுவனத்தின் தலைவர், எம்.பி.) என அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்களுக்குத்தான் இன்றைக்கு தி.மு.க.வில் முதல் மரியாதை. உங்களின் உடன்பிறப்புகளான எங்களுக்கு கறுப்பு - சிவப்பு கொடி, உதயசூரியன், கலைஞர் இதை தவிர வேறு ஒன்றும் தெரியாது. இதனாலேயே நாங்கள் எல்லாம் அன்னியப்பட்டு வெளியே இருக்கிறோம்.

அ.தி.மு.க.விலிருந்து வந்த பிரமுகர்கள் உங்களோடும், ஸ்டாலினுடனும் வலம் வருவதை பார்த்து வேதனைப்பட்டு வெட்கப்படுகிறோம். நாங்கள் எல்லாம் பெரியாரின் வழிவந்த சுயமரியாதைக்காரர்கள். தனி மனிதர்களின் பலவீனங்களை அறிந்து சேவை செய்யும் பழைய அ.தி.மு.க.காரர்கள் போன்று எங்களால் இருக்க முடியாது. இன்றைக்கு கட்சி பழைய தி.மு.க. இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலங்களில் சம்பாதித்தவர்கள், பயன் அடைந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு தி.மு.க.வில் உள்ளனர். சுடுகாட்டு ஊழல், பல்பொடி, செருப்பு போன்றவற்றில் ஊழல் செய்தவர்கள் எல்லாம் இன்றைக்கு உதயசூரியனுக்கு வாக்குக் கேட்கின்ற துரதிஷ்டமான நிலை உள்ளது. இதற்கெல்லாம் என்ன காரணம்?இன்றைக்கு தி.மு.க.வில் அதிகார மையங்கள் பல உள்ளன. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தமிழரசு, ராசாத்தி அம்மாள்; செல்வி, அவருடைய மருமகன் ஜோதி; இவர்களோடு மட்டுமல்லாமல், உதயநிதி, சபரீஸ், மாறன் சகோதரர்கள், அழகிரியின் பிள்ளைகள் வரை கட்சியில் கோலோச்சுகின்றனர். இந்த அதிகார மையங்கள் எடுப்பதுதான் கட்சியின் முடிவாக உள்ளது. இவர்களின் தயவு இல்லாமல் தி.மு.க.வில் இருக்க முடியாது. இவர்கள் மனது வைத்தால்தான் மந்திரி, எம்.பி. எம்.எல்.ஏ., கட்சி பதவிகள் எல்லாம் கிடைக்கும். இவர்களுக்கு வேண்டிய பணிகளை அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்கள் சமயமறிந்து பூர்த்தி செய்வதால்தான் பழைய அ.தி.மு.க.வினரை உங்கள் குடும்பத்தினருக்கு பிடித்து விட்டது.எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில், தி.மு.க.வில் ஒன்றுபட்ட சென்னை மாவட்ட செயலாளராக இருந்த டி.ஆர்.பாலு இன்றைக்கு ஒதுக்கப்படுகிறார். கட்சியின் முன்னோடிகளான சா.கணேசன், திருச்சி சிவா, காதர் பாட்சா (எ) வெள்ளைசாமி, ஜி.எம்.ஷா என பலர் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார். கட்சியில் என்ன நடக்கிறது என்பது பேராசிரியர் அன்பழகனுக்கோ, ஆர்க்காடு வீராசாமிக்கோ தெரிவதில்லை. ஆர்க்காடு வீராசாமியின் வசமிருந்த பொருளாளர் பதவியை பிடுங்கி ஸ்டாலினிடம் கொடுத்து அவரை நிலை நிறுத்தினீர்கள். ஆனால் அவரோ ஊரை சுற்றி வருகிறாரே தவிர, பிரச்சினைகளை தீர்க்க கூடிய சாதூர்யம் அவரிடம் இல்லை. அவரை நம்பியவர்களுக்கு நம்பிக்கை அளிக்காதவராக அவர் இருக்கிறார். மாறாக, அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்களுக்கு நம்பிக்கையானவராக இருக்கிறார். நெருக்கடியான நேரத்தில் ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்த பரிதி, வக்கீல் பாபு, அண்ணாநகர் ரமேஷ், நாகை அசோகன், திருச்சி பரணிகுமார் போன்றோர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் போய்விட்டார்கள். ஸ்டாலினின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கும் பொழுது, அவரை நம்பும் கழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகும். ஸ்டாலின் - அழகிரி என்கிற சகோதர யுத்தத்தில் ஸ்டாலினை நம்பியவர்களை காப்பாற்றாத ஸ்டாலின் எப்படி களத்தில் நிற்பார். சொந்த அண்ணனோட மோத திராணியில்லாதவருக்கு அரசியலில் போர்க்குணம் எப்படி இருக்கும். தேவைகள் அறிந்து பூர்த்தி செய்யும் பழைய அ.தி.மு.க.வினர்தான் இவருக்கு சரியாக இருப்பார்கள். எங்களைப் போன்றவர்களை, உண்மையான கழகத் தொண்டர்களை இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் இவர் சட்டமன்றத்தில் சண்டமாருதம் செய்வாரா என்பது சந்தேகமே. தங்களுக்கு வணக்கம் செய்தால் அதை ஏற்றுக் கொண்டு, "என்ன?' என்று நீங்கள் கேட்பீர்கள். ஆனால் ஸ்டாலினுக்கு வணக்கம் செலுத்தினால், தலையை கூட அசைக்காமல் முறைத்துக் கொண்டு செல்வார்.அழகிரி, திருமங்கலம் தேர்தலுக்குப்பின் தங்களால் பல வாய்ப்புகள் தரப்பட்டன. ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது இவர் செய்த அடாவடித்தனங்களை மதுரையில் உள்ள எங்களை போன்ற கட்சிக்காரர்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்களுக்கு மகனாக பிறந்த அழகிரிக்கு உங்களுக்கு இருந்த அரசியல் கண்ணியம், கட்டுப்பாடு எதுவும் இல்லை. வரம்பற்ற முறையில் இவர் மதுரையை வேட்டையாடியதை தங்களால் இப்போது தடுத்து நிறுத்த முடியாததால் - மதுரையில் மதுரை முத்து போன்றவர்கள் வளர்த்த கட்சியை மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்டங்கள் முழுதும், அஞ்சாநெஞ்சன் என்று சொல்லிக் கொண்டு கட்சியின் மரியாதையை ஒழித்துக் கட்டினார் அழகிரி. குறிப்பிட்ட சில ரௌடிகளை தன்னருகில் வைத்துக் கொண்டு இவர் செய்த அடாவடிகள் மக்களை முகம் சுழிக்க வைத்தது. தற்போதைய அ.தி.மு.க. மேயர் ராஜன் செல்லப்பாவுக்கு உதவியாளராக இருந்த - பஜ்ஜி சுட்டு விற்றுக் கொண்டிருந்த - பொட்டு சுரேஷ் சொல்வதுதான் சட்டமாக இபுருந்தது. மத்திய அமைச்சராக இருந்துகொண்டு, டில்லிக்குச் செல்லாமல் பொறுப்புகளை கவனிக்காமலும் இவர் இருந்ததை நீங்கள் மகனென்று பாராமல் தட்டிக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் தட்டிக் கேட்க முடியவில்லை. அதன் பலன்தான் அழகிரி வசிக்கும் இடத்தில் தி.மு.க., உள்ளாட்சி தேர்தலில் 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்றைக்கு தூங்காநகரம் அவரது பிடியிலிருந்து மீண்டு நிம்மதியாக இருக்கின்றது.கனிமொழிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கொடுத்து, 2ஜி ஊழலை தாராளமாக செய்ததுதான் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோல்விக்கு காரணமாக அமைந்தது. பாசத்தால் மகள் என்று டில்லிக்கு அனுப்பினீர்கள். டில்லி மத்திய அரசு நிர்வாகமே கனிமொழி நடவடிக்கையால், 2ஜி ஊழலால் கேவலப்பட்டது. கனிமொழியும், ராசாவும் சேர்ந்து செய்த நடவடிக்கைகளால் நாடு சிரித்தது. அந்த மகளுக்கு கட்சி பணிகளையும் கவனிக்காமல், அவருக்கு எப்போது ஜாமின் கிடைக்கும் என மௌன முனியாக ஏங்கும் தங்களுக்கு நாங்கள் என்ன சொல்லமுடியம். கனிமொழியின் சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சிக்கு அரசாங்கமே திட்டமிட்டு சட்டத்திற்கு புறம்பாக உதவியது. கனிமொழி ஒரு சிறு குழுவை தன்னுடன் வைத்துக்கொண்டு, அவர்களுக்கு வேண்டிய பதவிகளையும் வாங்கி கொடுத்துள்ளார். போன் ஒட்டு கேட்பில் மந்திரி பதவியை இழந்த பூங்கோதை ஆலடி அருணாவிற்கு உடனே அமைச்சரவையில் இடம் கொடுத்ததற்கு கனிமொழியும், ராசாத்தி அம்மாளின் சிபாரிசும் தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததுதான். அப்படியானால் தி.மு.க. சமதர்ம கொள்கையை காக்கும் என்பதையெல்லாம் விட்டுவிட வேண்டியதுதான்.தலைவரையும், கழகத்தையும் விமர்சித்து வெளியேறிய ஆலடி அருணா மகள் பூங்கோதைக்கும் தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம்? அவரை தேடி பிடித்து தேர்தலில் போட்டியிட வைத்த, வெற்றபெற செய்து, அமைச்சரவையிலும் பதவி அளித்தீர்கள். கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல என்று சொல்லும் தாங்கள், எந்த தியாகமும் செய்யாத பூங்கோதைக்கு மந்திரி பதவி அளித்தது ஏன்? இந்த அதர்மத்தை எங்கே போய் சொல்ல, நாடாளுமன்றத்திற்கு செல்பவர்கள் வசந்தி ஸ்டான்லி போன்ற தகுதியற்ற நபர்களைத்தான் கட்சி தேர்ந்தெடுக்கிறது. பொருத்தமான பலர் இப்பதவிகளுக்கு இருந்தும் அவர்களை திட்டமிட்டு புறக்கணிக்கிறீர்கள். நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வும் உங்கள் அதிகார மையங்களின் கண்ணசைவில்தான் நடைபெறுகின்றது. செல்வகணபதி அப்படித்தான் பொறுப்பை பெற்றார். இவற்றையெல்லாம் பார்க்கையில் தி.மு.க.வில் கொள்கை பிடிப்பும், தியாகங்களும், போராட்டங்களும் இல்லாமல் உங்கள் சுற்றத்தாருக்கு பிடித்துவிட்டால் பதவியை வாங்கி விடலாம். அதற்காக கனிமொழியின் கடைக்கண் பார்வை கிடைத்துவிட்டால் தங்களின் கனிவான அணுகுமுறை கிடைக்கும்.ராசாத்தி அம்மாள், பூங்கோதை, கனிமொழி சம்பந்தமான விவகாரங்கள், 2ஜி விஷயத்தில் பேசிய பேச்சுக்கள் யாவும் ஒலிநாடா வடிவில் நிரந்தர ஆவணங்களாக என்றைக்கும் இருக்கும். இவர்கள் வருங்கால சந்ததியினரின் பரிகாசத்திற்கு நிச்சியம் ஆளாவார்கள். முரசொலி மாறனின் மகன்கள் என்பதற்காக மாறன் சகோதரர்களை அரசியலில் உருவாக்கி விட்டீர்கள். அவர்களும் தங்களால் முடிந்த அளவு தி.மு.க. மேய்ச்சல் காட்டில் சுற்றினார்கள்.இவ்வளவு அதிகார மையங்களின் ஆட்டம் ஒரு பக்கம், உங்கள் பேரப் பிள்ளைகள் திரைப்படம் எடுக்கிறேன் என அடித்த லூட்டிகள், அவர்கள் செய்த அராஜகங்களை பத்திரிகைகள் பத்தி பத்தியாக எழுதின. பேரப் பிள்ளைகள் நள்ளிரவில் நட்சத்திர ஓட்டல்களில் ஆடிய ஆட்டங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. உட்லண்ட்ஸ் ஓட்டலில் துப்பாக்கி கொண்ட மிரட்டிய உங்கள் வாரிசுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நெஞ்சுக்கு நீதி எழுதிய தலைவரே, உங்கள் மனசாட்சியை தொட்டுப் பாருங்கள்.


ஸ்டாலின், அழகிரி, கனிமொழி இவர்கள் என்ன தி.மு.க.வை வளர்த்த ஐம்பெரும் தலைவர்களா? ஏன் இவர்களை தட்டிக் கேட்க முடியவில்லை? அல்லது உங்களால் முடியவில்லையா? அத்தகைய இயலாமைக்கு காரணம் என்ன? அவசரநிலைக் காலத்தில் இந்திராவையே சவாலுக்கு அழைத்த நீங்கள், தற்போது உங்கள் குடும்ப உறுப்பினர்களை கட்டுப்படுத்த முடியாதா? அல்லது குடும்பத்தார் மீது உள்ள அச்சமா? இதுபோன்ற சந்தேகங்கள் எங்களுக்கு வருகின்றது. கட்சிக்காக உழைத்தத் தொண்டன் என்ற காரணத்திற்காக இவற்றையெல்லாம் கூறுகிறோம். இதனை குற்றச்சாட்டாக கருதாமல், தாங்கள் சுயபரிசோதனை செய்யுங்கள். தவறுகளை களையுங்கள், பிரச்சினைகளுக்கு முடிவு காணுங்கள். அவ்வாறு நடைபெறவில்லையெனில், எதிர்கால வரலாறு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தூற்றும். முகலாய பேரரசில் தந்தைக்கும், பிள்ளைகளுக்கும் நடைபெற்ற சண்டைகளைப் பற்றிய செய்திகள் இன்றைக்கும் வரலாற்றில் உள்ளன. அம்மாதிரியான நிலை தி.மு.க.வுக்கு வந்துவிடக் கூடாது என்ற பயத்தில், கழக உறுப்பினர் உரிமை சீட்டு வைத்துள்ள தகுதியால் இதை உங்களிடம் மூடி மறைக்காமல் சொல்கிறோம். அ.தி.மு.க.வில் இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.டி.எஸ்.ஸோடு இருந்த ராஜா சங்கர்தான் தற்போது ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கிறார். அவர் மூலம்தான் எந்த பதவியையும் பெறமுடியும் என்ற சூழல் நிலவுகின்றது. அழகிரியை பொறுத்த வரையில், அவரது மகன், மகள் இவர்கள் மூலம் தான் கட்சியில் பொறுப்புகளை பெற முடியும்.


எங்களைப் போன்றவர்களை நீங்கள் அழைப்பது போராட்டம், ஜெயில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், வாழ்க முழக்கங்கள் செய்வதற்காகத்தான். நீங்கள் கோலோச்சிய கோட்டையில் அமைச்சர்களின் அறையை கூட நாங்கள் எட்டிப் பார்க்க அனுமதி கிடைக்காது. ஆனாலும் உங்கள் மீது விசுவாசமிக்க தொண்டர்களாக நாங்கள் இருக்கிறோம்.மு.க.முத்து என்ற மகனுக்காக எம்.ஜி.ஆரை இழந்தீர்கள். ஸ்டாலினுக்காக வைகோ வெளியேற்றப்பட்டார். அழகிரி என்ற மகனை கட்டுப்படுத்தாததால் பல பிரச்சினைகள், கனிமொழியையும், ராசாவையும் கட்டுப்படுத்த இயலாததால் இந்தியாவே நம்மை பார்த்து சிரிக்கும் அளவிலான 2ஜி ஊழலால் தேர்தலில் தோல்வி. இது எல்லாம் தேவைதான்?


உங்கள் உழைப்புக்கு ஈடு சொல்ல முடியாது. நீங்கள் ஓய்வரியா சூரியன். ஆனால் குடும்ப பாசமும், உங்கள் ரத்த பாசங்களும் செய்கின்ற அத்துமீறங்களால் அறிவாலயம் பாதிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட செயலாளர்களாக இருப்பவர்கள் குறுநில மன்னர்கள் போல எங்களை மதிப்பதில்லை. நீங்கள் வரும்பொழுது அலங்கார விளக்கு அமைத்து, பணம் கொடுத்து கூட்டம் கூட்டியும் நாடகம் ஆடி வருகிறார்கள். சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா; விழுப்புரத்தில் பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி; கோவையில் பொங்கலூர் மற்றும் அவரது மகன் பாரி; ஈரோட்டில் பண்பு தெரியாத எம்.கே.பி.ராஜா; திருச்சியில் நேரு, அவரின் தம்பி ராமஜெயம்; கடலூரில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்; தஞ்சாவூரில் பழனிமாணிக்கம், அவருடைய தம்பி; இராமநாதபுரத்தில் சுப.தங்கவேலன், அவரது மகன் சுப.சம்பத்; மதுரை, தேனி, சிவகங்கையில் அழகிரி, அவரை சார்ந்தவர்களுடைய அட்டகாசம்; தூத்துக்குடியில் பெரியசாமி, அவரது மகள் கீதா ஜீவன்; திருநெல்வேலியில் கருப்பசாமி பாண்டியன், அவரது மகன் சங்கர், ஆவுடையப்பன், அவரது மகன் பிரபாகரன்; கன்னியாகுமரியில் சுரேஷ்ராஜன், அவரது மனைவி பாரதி னெ பரிவாரங்களின் கீழ் எங்களைப் போன்றத் தொண்டர்கள் பணியாற்ற முடியுமா? மிருகத்தனமாக பண்பாடற்று நடந்து கொள்ளும் இந்த மாவட்டச் செயலாளர்களிடையே உள்கட்சி ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியுமா? மாவட்டச் செயலாளர்களை மாற்றப் போகிறீர்கள் என்று முடிவெடுத்து, அந்த முடிவை அமுல்படுத்தாதது எங்களை போன்றவர்களை வருத்தமடைய செய்துள்ளது. அது நடைமுறைக்கு வராததன் காரணம் என்ன?


இவையெல்லாம், ஒரு உறையில் ஒரு வாள்தான் இருக்கும் என்று நீங்கள் சொல்லிய விளக்கத்திற்கு சரியாக பொருந்தவில்லை. ஒரு பக்கம் ஸ்டாலின்; இன்னொரு பக்கம் அழகிரி; மற்றொரு பக்கம் கனிமொழி, ராசாத்தி; இனனொரு பக்கம் மாறன் சகோதரர்கள் என அதிகார மையங்களை வைத்துவிட்டீர்கள். உங்களுக்கு பின் இவர்களில் யார் என்பது தான் கேள்வி. தி.மு.க.வில் பிற்காலத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால், அண்ணா தி.மு.க.வைத் துவக்காமல் பெரியாரின் திராவிடர் கழகத்திலேயே இருந்திருப்பார். எத்தனை பேரின் தியாகங்கள், உழைப்பு, போராட்டங்கள், சிறைச்சாலை என கொண்டு, 1967இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஆலமரமாக வளர்ந்தது. அந்த ஆலமரத்தின் கீழ் இன்றைக்கு உண்மையான கழகத்தினர் இருக்க முடியாமல், உங்கள் குடும்பத்தாரும், எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அவரோடு பதவி பெற்று வாழ்ந்தோரும், ஜெயலலிதாவிடம் வாழ்வு பெற்று ஊழலில் உழன்று, பின் அவரால் தூக்கி போடப்பட்ட கழிசடைகள்தான் தி.மு.க. ஆலமரத்தின் கீழ் வாழ்கின்றனர். எங்களை போன்ற கழக உடன்பிறப்புகள் 60 ஆண்டுகளாக தி.மு.க., உறுப்பினர்களாக இருந்தவர்களின் சொற்களுக்கு தற்போது தி.மு.க.,வில் மதிப்பு இல்லை. தி.மு.க.,விற்கு உழைத்த மதுரை முத்து. அன்பில் தர்மலிங்கம், உடுமலை நாராயணன், தூத்துக்குடி சாமி, ஏ.கோவிந்தசாமி, மதியழகன் போன்றோர்கள் இன்றைக்கு இருந்தால் இந்த நிலையை பார்த்து கண்ணீர் வடிப்பார்கள். தி.மு.க., துவக்கத்தில் குடும்ப பாசத்தோடு இருந்தனர். ஒரு பேச்சாளர் ஏதாவது ஒரு ஊருக்கு சென்று விட்டால் அங்குள்ள கட்சி உறுப்பினர் தங்கள் விருந்தினர் வந்துவிட்டார் என்பதைபோல தனது குடிசை வீட்டில் உபசரிப்பர். ஆனால் இன்றைக்கு உள்ள பேச்சாளர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் அறை மற்ற வசதிகள் செய்து தரவேண்டும்.30- 40 ஆண்டுகளுக்கு முன்னாள் சேலத்தில் ஈ.ஆர்., கிருஷ்ணன் , வீரபாண்டி ஆறுமுகம், தர்மபுரியில் சின்னச்சாமி, திருச்சியில் அன்பில் தர்மலிங்கம், தஞ்சையில் மண்ணை நாராயணசாமி, கோ.சி.மணி, தென்னாற்காடு மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, செஞ்சி ராமச்சந்திரன், வண்டிப்பாளையம் சுப்பிரமணியம், விருத்தாச்சலம் செல்வராசு, செங்கல்பட்டில் மதுராந்தகம் ஆறுமுகம், சி.வி.என். அண்ணாமலை, ராஜரத்தினம், மதுரையில் முத்து, பொன்.முத்துராமலிங்கம், ராமநாதபுரத்தில் தா.கிருஷ்ணன், தென்னரசு, பெ.சீனிவாசன், தங்கப்பாண்டியன், திருநெல்வேலியில் ரத்தினவேல் பாண்டியன், வை.கோபால்சாமி, கன்னியாகுமரியில் எம்.சி.பாலன், போன்ற தளபதிகள் கட்சிப்பிடிப்போடு தங்கள் பகுதியில் உள்ள தொண்டர்களை அரவணைத்து வழிநடத்தினர். ஆனால் இன்றைக்கு வழிநடத்தும் பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போன்றவர்களிடம் இந்த பாச உணர்வை எதிர்பார்க்க முடியவில்லையே. பிறகு எப்படி கட்சித் தொண்டன் உரிமையோடு பணி ஆற்றுவான்.தற்போது நடந்த முப்பெரும் விழாவில் பாரதிதாசன் யார் என்று தெரியாதது மட்டுமல்ல, கட்சிக்கு தியாகம் செய்யாத ஒருவருக்கு பாரதிதாசன் விருது, பாரதிதாசன் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் கண்ணீர் வடித்திருப்பார். கழக ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களும் மாவட் செயலாளர்களும், அ.தி.மு.க.,வினரிடம் சேர்ந்து கொண்டு மணல் கொள்ளை ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு கொள்ளையடிக்கும்போது நாங்கள் எல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டு கண்ணீர் வடித்தோம். 1991 - 96 ஜெயலலிதா ஆட்சி காலம் ஊழலின் உச்சம் என தாங்கள் கூறினீர்கள். அதற்கு மாறாக 2001-06 ஆட்சி கால மெகா ஊழல் ஆட்சியாக அமைந்தது. உங்கள் கவனத்திற்கு வராமலேயே மந்திரிகள் அடித்த கொள்ளைகள் ஏராளம். இந்நிலையில் உங்கள் ஜெயலலிதாவை குறை சொல்ல தமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.


குடும்ப பாசத்தில் இருந்து மீண்டு வாருங்கள் தலைவரே: தலைவரே, குறிப்பிடப்பட்டுள்ள இந்த விவரங்கள் எல்லாம் உண்மையானவை என்பது உங்களுக்கு நன்கு தெரியும். இந்த பிரச்னைகள போக்கும் வழியும் , ஆற்றலும் உங்களுக்குத்தான் உண்டு. தங்களால் தங்கள் குடும்ப வாரிசுகள் அனைவரும் வசதியாக வாழ்கின்றனர். திருவாரூரில் இருந்து ரயிலில் கள்ளத்தனமாக வந்த தாங்கள் இதைவிட தங்கள் குடும்பத்திற்கு வேறு என்ன செய்ய வேண்டும். உங்கள் குடும்பத்திற்கு இனிமேல் எந்த பிரச்னையும் கவலையும் இல்லை. குடும்ப பாசத்தில் இருந்து மீண்டு வாருங்கள் தலைவரே. கட்சியில் உண்மையானன ஜனநாயகத்தை வழங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சும் சர்வாதிகார குறுநில மன்னர்களான மாவட் டசெயலாளர்களை மாற்றுங்கள். ஜெயலலிதாவால் விரட்ட்பட்டு நம்மிடம் அடைக்ககலம் பெற்ற அ.தி.மு.க.,வினரை சற்று அடக்கி வையுங்கள். இந்த மூன்று நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டால் கழகம் வீறு கொண்டு எழும்.


நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் என்னவென்றால்; என் குடும்பத்திற்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டேன். இனி கட்சியும் தமிழக நலனும்தான் எனக்கு முக்கியம் என அறிவித்து விட்டு அறிவாலயத்தில் குடியேறி விடுங்கள். எங்களை போன்ற கட்சித்தொண்டர்கள் உங்களை பாதுகாப்பார்கள். அப்படி இல்லையென்றால் வரலாறு உங்களை பழிக்கும். தமிழன தலைவர் என்ற பட்டத்தை எதிர்கால சமுதாயம் ஏற்காமல் வெறும் குடும்பத்தலைவர் என்ற பட்டத்தைத்தான் வழங்கும். இந்த கடிதம் எழுதும் நாங்கள் அனைவரும் எம்.எல்.ஏ., எம்.பி., ஆகும் கனவில் உள்ளவர்கள் அல்ல. எளிய தொண்டர்கள்தான். கூட்டங்களில் உங்கள் பேச்சை கேட்கும் கூட்டம்தான் நாங்கள். நீங்களும் கழகமும் உயர்வு பெற வேண்டும் என கருதுவோர் எழுதுகின்ற கடிதமாகும்.

இப்படிக்கு
உடன்பிறப்புகள்.

( நன்றி: தினமலர் )உடன்பிறப்பே,

உலக அளவிலும் சரி, அல்லது இந்திய நாட்டளவிலும் சரி, எந்த இயக்கமும் ஒரு குறிப் பிட்ட குறிக்கோளை வென்றெடுப்பதற்காகவென்றே தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒரே குறிக்கோளை அடைவதற்காக அந்த இயக்கம் எடுக்கின்ற முயற்சிகளில் அல்லது வகுக்கின்ற வழிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு அல்லது பிளவுகள் தோன்றி பல்வேறு கிளைகளாகப்பிரிந்தாலுங்கூட, குறிப்பிட்ட ஒரு மரத்தின் கிளைதான் அது என்ற நிலையில் இயங்குவதும், நம் கண் முன்னாலே காணு கின்ற சரித்திர உண்மை களாகும்.

சுதந்திரம் என்ற ஒரே இலட்சியத்திற்காக காந்தி அடிகளால் வழி நடத்தப்பட்ட காங்கிரஸ் பேரியக்கம் என்னும் விடுதலை இயக்கத்தில் மாவீரர் சுபாஷ் சந்திரபோசும், பட்டாபி சீதா ராமைய்யாவும் பிரிந்து நின்று காங்கிரஸ் தலைமைக்குப்போட்டியிட்டபோது; "பட்டாபி சீதாராமையா தோல்வி தனது தோல்வி" என்கிற அளவிற்கு - வரிந்து கட்டிக்கொண்டு பணியாற்றிய வார்தா முனிவர், உத்தமர் காந்தியடிகள் அந்தப்போட்டியில் தோற்றுத் தான் போனார். இது வரலாற்று உண்மை.

அந்தப் போட்டியில் வென்ற சுபாஷ் சந்திர போஸ் இந்திய விடுதலைக்காக புரட்சி மார்க்கத்தைப்பின்பற்றி தேவர் திருமகனோடு இணைந்து ஐ.என்.ஏ. படையை உருவாக்கி, பிரிட்டிஷ்காரர்களோடு மோதியதும் அனை வரும் அறிந்த ஒன்றாகும்.

"வெள்ளையனே வெளியேறு" என்ற இலட்சியம் நிறைவேற வேண்டுமென்று அதற்காகத் துப்பாக்கி ஏந்தி தூக்குமேடைக்குச்சென்ற பகவத் சிங் ஒருபுறம்! அந்த பகவத் சிங் கொள்கை, கோட்பாடு ஏற்கத்தக்கதல்ல என ஒதுங்கி நின்று அமைதி வழியில் அகிம்சா போராட்டம் நடத்திய அண்ணல் காந்தி அடிகள் மற்றொரு புறம்!

இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்காக ஓரணியில் குரல் கொடுத்த பண்டித நேரு, ஜனாப் ஜின்னா இருவரும் அந்த ஓரணியிலேயே நீடிக்காமல் தனித்தனி அணியாகி, தனித்தனி நாடுகளாக - இந்தியா, பாகிஸ்தான் எனப்பிரிந்ததும் வரலாற்றின் ஒரு பகுதியாகும்.

பரந்த இந்தியாவில் மட்டுமல்ல; அந்த இந்தியாவில் ஒரு பகுதியான தமிழகத்தில் காந்தி அடிகளின் வழிநின்று காங்கிரஸ் இயக்கத்தை வளர்த்தோர் எனச்சொல்லப்படுபவர்களில் ராஜாஜி, காமராஜரிடையே ஏற்பட்ட வேறுபாடு "கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது" என்ற சரித்திரத் தலைப்புகளாக ஆனதையும் யாரும் மறந்துவிட முடியாது.

காங்கிரசிலிருந்து "வைக்கம் வீரர்" பெரியார் பிரிந்ததும் - அவர் தலைமையை ஏற்றிருந்த சாமி சிதம்பரனார், ஜீவானந்தம், அய்யாமுத்து போன்றோர் அவரிடமிருந்து விலக நேர்ந்ததும்; அவ்வளவு ஏன்? அண்ணாவின் சேலம் மாநாட்டுத் தீர்மானத்தையேற்று, அய்யா பெரியார் முழங்கியதும்; அதன்பிறகு சில ஆண்டுகளில் "பெரியார் இன எழுச்சி சமுதாய இயக்கம் நடத்துவார்; நான் அந்த உணர்வுகள் அடங்கிய அரசியல் இயக்கம் நடத்துகிறேன்" என்று திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக்கழகம் கண்டதும்; இந்தியாவிலும், தமிழகத்திலும் எழுதப்பட்ட அரசியல் சரித்திரங்கள்! ஆனால், தனி வழி அமைத்துக் கொண்டு தனித்தனியே இயக்கம் நடத்திய யாரும் - (திருவாசகமணி பாலசுப்பிரமணியம்; ஒருவரைத்தவிர) - தொடக்கத் தில் கொண்ட குறிக்கோளை மாற்றிக் கொள்ளவும் இல்லை; மறந்துவிடவும் இல்லை!

"தினமலர்" பத்திரிகை திராவிட முன்னேற்றக் கழகத்தை இடித்துச் சிதைத்து குறு கலாக்குவதற்காக எடுக்கின்ற முயற்சி களின் தொடர்ச்சியாக, "உடன்பிறப்புகள்" என்ற பெயரால் ஒரு கற்பனைக்கட்டுரையை வெளியிட்டிருக்கின்றது. அந்தக்கட்டுரையின் உள் நோக்கத்தை உண்மையான உடன் பிறப்புகள் அனைவருமே உணர்ந்தே இருப்பார்கள். ஏனென்றால் "தினமலர்" நம்மைக்கொஞ்சி மகிழ்வது; பூதகி; கண்ணனைக்கொஞ்சி மகிழ்வது போல் நடித்து, அவனைக்கொல்லவே துணிந்தாள் என்று பாரதத்தில் ஒரு கிளைக்கதை உண்டே, அந்தக் கிளைக்கதையின் தலையாய கதாபாத்திரமான பூதகியின் பாத்திரத்தைத்தான் "தினமலர்" நாளேடு தாங்கிக் கொண்டு புறப்பட்டிருக்கிற தென்றால் அதில் துளியளவும் தவறில்லை.

அழகிய மங்கை உருவில் வந்து தாய்ப்பாசம் காட்டுவது போல் நடித்து, கண்ணனை பாலருந்தச்சொல்லி, அவனைக்கொன்றுவிட முற்பட்ட பாதகியாம் பூதகிக்கும், இன்று பசப்பு மொழி பேசி நம்மிடையே கசப்புணர்வை வளர்த்து கழகத்தை வீழ்த்திவிட பகற்கனவு காணும் படுபாவிகள் சிலருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அந்தப் படு பாவிகள் பத்திரிகை வடிவத்திலே நம்மிடையே வருவர். அந்த விஷநாகங்களில் ஒன்று பச்சைப் பாம்பு வடிவெடுத்து, பச்சை வண்ண பசுங்கிளையில் தன்னை மறைத்துக் கொண்டு, பாகுமொழி பேசுவதைக்கண்டு - கேட்டு - உடன் பிறப்புகள் யாரும் ஏமாற மாட்டார்கள்! எச்சரிக்கையாகவே இருப்பார்கள்!

அன்புள்ள,

மு.க.

( நன்றி: முரசொலி )
எல்லாம் பச்சை பச்சையாக இருக்கு இதில மஞ்சளா நான் என்ன சொல்ல

ஸ்மைலி கார்னர்: கண்ணன், பூதகி

34 Comments:

மழை said...

கலைஞர் சொல்றது புரியுறது மாதிரி இருக்கும் புரியாது!!! தெளிவா குழப்பிவிடுவார்.

Anonymous said...

நாங்கள் நன்கு அறிவோம் பூதகி தினமலர் மட்டும் அல்ல இந்த இட்லிவடையும் தினமணியும் என்று.....

Selva said...

செத்த பாம்ப எவ்வளவு நாளைக்கு அடிபீங்களோ? இவர விட்டுட்டு ஜெ பக்கம் வருவதற்கு இட்லிவடைக்கு என்ன தயக்கமோ தெரியவில்லை?

IdlyVadai said...

//நாங்கள் நன்கு அறிவோம் பூதகி தினமலர் மட்டும் அல்ல இந்த இட்லிவடையும் தினமணியும் என்று.....//

கண்ணன் இருக்கிறார் என்று நீங்கள் நம்பினால் பூதகியாக இருக்க நான் ரெடி.

அடுத்த வாரம் ராமர் கலைஞர் கடித்ததில் ராமர் வருவார் அதுவரை ....வெயிட்டீஸ்...

சங்கரசீனிவாசன் said...

// கண்ணன் இருக்கிறார் என்று நீங்கள் நம்பினால் பூதகியாக இருக்க நான் ரெடி.//

நடு நிலையாளர்கள் செய்ய வேண்டிய வேலையை தினமலரும் தினமணியும் இட்லி வடையும் செய்வதாகப் பாசாங்கு செய்வது..
உங்களுக்கே கொஞ்சம் ஓவராய்த்தெரியவில்லை ?
உவமைகள் “ தெரிந்த ஒன்றைக்கூறி தெரியாத ஒன்றை விளக்குவதற்காகவோ அல்லது தெரிந்த ஒன்றை சிறப்பிப்பதற்காக சொல்லப்படுவது என்பது அடிப்படையான தமிழ் இலக்கணம்.
நமக்குத்தெரிந்த கண்ணன் கதையை வைத்து தெரியாததாக ( நீர் பாவனை செய்யும்) உண்மையை விளக்குகிறார்.

இந்த இலக்கண வகைகளை இட்லி வடையிடம் எதிர்பார்ப்பது எங்கள் பேராசைதான்.

IdlyVadai said...

இல்லாத ஒன்றை இருப்பதாக கூறினால் ( அது உவமையாக இருந்தாலும் ) யாருக்கு தான் கோபம் வராது

ஸ்ரீராம் கண்ணன் said...

// 30- 40 ஆண்டுகளுக்கு முன்னாள் சேலத்தில் ஈ.ஆர்., கிருஷ்ணன் , வீரபாண்டி ஆறுமுகம், தர்மபுரியில் சின்னச்சாமி, திருச்சியில் அன்பில் தர்மலிங்கம், தஞ்சையில் மண்ணை நாராயணசாமி, கோ.சி.மணி, தென்னாற்காடு மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, செஞ்சி ராமச்சந்திரன், வண்டிப்பாளையம் சுப்பிரமணியம், விருத்தாச்சலம் செல்வராசு, செங்கல்பட்டில் மதுராந்தகம் ஆறுமுகம், சி.வி.என். அண்ணாமலை, ராஜரத்தினம், மதுரையில் முத்து, பொன்.முத்துராமலிங்கம், ராமநாதபுரத்தில் தா.கிருஷ்ணன், தென்னரசு, பெ.சீனிவாசன், தங்கப்பாண்டியன், திருநெல்வேலியில் ரத்தினவேல் பாண்டியன், வை.கோபால்சாமி, கன்னியாகுமரியில் எம்.சி.பாலன், போன்ற தளபதிகள் கட்சிப்பிடிப்போடு தங்கள் பகுதியில் உள்ள தொண்டர்களை அரவணைத்து வழிநடத்தினர். //


ஏதோ தினமலர், மேலே குறிப்பிட்ட பேர்கள் தி மு க வில் கோலோச்சிய போது அவர்களின் பணி சிறக்க பத்திரிகைச்செய்தி போட்ட்து போல எழுதிஉள்ளதே ?
பசப்பு வார்த்தைகளை தினமலர் தினமணி செய்யட்டும்.

இட்டிலி வடை யிடம் இருந்து நாங்கள் நிறைய நடு நிலைமையை எதிர்பார்க்கிறோம்..!

ஸ்ரீராம் கண்ணன்
"Spread smiles...over the miles u go"

சாதாரண கிராமத்தான் said...

இட்லி, நானும் கருணாநிதியை விமர்சிதவந்தான். ஆனால் இப்போதும அவரையே விமர்சித்து கொண்டு இருப்பது சரியாக படவில்லை. ஜெயலலிதாவை பற்றி செய்திகளும் கருத்துக்களும் போடவேண்டும். அல்லது விஜயகாந்த் மாதிரி ஒரு வருடம் ஜெயலலிதா அரசை விமர்சிக்கமட்டேன் என்று முடிவு எடுத்திருந்தால் சொல்லவும். இப்போதும் சோவும் இதையேதான் செய்து வருகிறார். முக்கிய பிரச்சினைகளான கூடங்குளம், பெங்களூர் கோர்ட்டில் நடக்கும் சொத்துகுவிப்பு வழக்கு, அமைச்சர்கள் மாற்றம் என நிகழ்கால நிகழ்சிகளுக்கு முக்கியத்துவம் தரலாமே? தினமலர் கருணாநிதி பற்றி வந்த கடிதத்தை பிரசுரிக்கும் நீங்கள் கருணாநிதி பற்றி வேறு நல்ல செய்திகள் வந்தால் அதையும் போடுவீர்களா? அதை போடா மாடீர்கள் அல்லது நான் இது வரை படித்ததில்லை எனும்போது வுங்கள் நடுவு நிலை கேள்விக்குரியதாக இருக்கிறது. கருணாநிதிக்கு தான் ஆட்சியுல் இருக்கும்போது நடக்கும் எல்லா சங்கடமான நிகழ்சிகளுக்கும் நடுவண் அரசை கை காட்டுவதும், அல்லது எதிர் கட்சிகளை கை கட்டுவதும் வழக்கமான ஒண்டுஉ. ஜெயலலிதாவும் அதையே செய்வது நன்றாக தெரியவில்லை. ஐவரும் அதிஎஎதன் செய்வர் என்றல் இவரை என் முதல்வராக ஆகியிருக்க வேண்டும்? என்னை பொறுத்தவரை கருணாநிதியும் சரி ஜெயலலிதாவும் சரி மாறப்போவது இல்லை. ஆறு அமைச்சர்களை மற்றியதறுஉ எந்த காரணமும் சொல்லப்படவில்லை. எனை போருதவரி பெங்களூரில் நடக்கும் வளகுகளுக்கு கொடுக்கப்படும் செய்திகளின் முக்கியத்துவத்தை தவிர்பதர்ககத்தன் இந்த அமைச்சர் மற்றம் என்றே தோன்றுகிறது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின் எந்த மாற்றமெல்லாம் நடந்திருக்கிறது என்று எழுத்தில்ஆள் நட்ரக இருக்கும். மாற்றம் நடக்கும் அதுவும் இந்த முறை கண்டிப்பாக நடக்கும் என்று வாகஅளித்த மக்களுக்கு நாங்கள் எந்த காலத்திலும் மாறப்போவது இல்லை என ஜெயலலிதா மீண்டும் நிருபோதுள்ளார் அவரது சீனியர் கருணாநிதி இதை எப்போதோ காண்பித்து விட்டார். ஒரே ஆறுதல் இப்போது சினிமா நிகழ்சிகளில் முதல்வரை போற்றி புகழ்வது தான் நாடு நாயகமாக துவார பாலகர்களுடன் அமர்ந்து கொள்வது தவிர்க்கபட்டுலஅது.

சாதாரண கிராமத்தான் said...

இட்லி, நானும் கருணாநிதியை விமர்சிதவந்தான். ஆனால் இப்போதும அவரையே விமர்சித்து கொண்டு இருப்பது சரியாக படவில்லை. ஜெயலலிதாவை பற்றி செய்திகளும் கருத்துக்களும் போடவேண்டும். அல்லது விஜயகாந்த் மாதிரி ஒரு வருடம் ஜெயலலிதா அரசை விமர்சிக்கமட்டேன் என்று முடிவு எடுத்திருந்தால் சொல்லவும். இப்போதும் சோவும் இதையேதான் செய்து வருகிறார். முக்கிய பிரச்சினைகளான கூடங்குளம், பெங்களூர் கோர்ட்டில் நடக்கும் சொத்துகுவிப்பு வழக்கு, அமைச்சர்கள் மாற்றம் என நிகழ்கால நிகழ்சிகளுக்கு முக்கியத்துவம் தரலாமே? தினமலர் கருணாநிதி பற்றி வந்த கடிதத்தை பிரசுரிக்கும் நீங்கள் கருணாநிதி பற்றி வேறு நல்ல செய்திகள் வந்தால் அதையும் போடுவீர்களா? அதை போடா மாடீர்கள் அல்லது நான் இது வரை படித்ததில்லை எனும்போது வுங்கள் நடுவு நிலை கேள்விக்குரியதாக இருக்கிறது. கருணாநிதிக்கு தான் ஆட்சியுல் இருக்கும்போது நடக்கும் எல்லா சங்கடமான நிகழ்சிகளுக்கும் நடுவண் அரசை கை காட்டுவதும், அல்லது எதிர் கட்சிகளை கை கட்டுவதும் வழக்கமான ஒண்டுஉ. ஜெயலலிதாவும் அதையே செய்வது நன்றாக தெரியவில்லை. ஐவரும் அதிஎஎதன் செய்வர் என்றல் இவரை என் முதல்வராக ஆகியிருக்க வேண்டும்? என்னை பொறுத்தவரை கருணாநிதியும் சரி ஜெயலலிதாவும் சரி மாறப்போவது இல்லை. ஆறு அமைச்சர்களை மற்றியதறுஉ எந்த காரணமும் சொல்லப்படவில்லை. எனை போருதவரி பெங்களூரில் நடக்கும் வளகுகளுக்கு கொடுக்கப்படும் செய்திகளின் முக்கியத்துவத்தை தவிர்பதர்ககத்தன் இந்த அமைச்சர் மற்றம் என்றே தோன்றுகிறது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின் எந்த மாற்றமெல்லாம் நடந்திருக்கிறது என்று எழுத்தில்ஆள் நட்ரக இருக்கும். மாற்றம் நடக்கும் அதுவும் இந்த முறை கண்டிப்பாக நடக்கும் என்று வாகஅளித்த மக்களுக்கு நாங்கள் எந்த காலத்திலும் மாறப்போவது இல்லை என ஜெயலலிதா மீண்டும் நிருபோதுள்ளார் அவரது சீனியர் கருணாநிதி இதை எப்போதோ காண்பித்து விட்டார். ஒரே ஆறுதல் இப்போது சினிமா நிகழ்சிகளில் முதல்வரை போற்றி புகழ்வது தான் நாடு நாயகமாக துவார பாலகர்களுடன் அமர்ந்து கொள்வது தவிர்க்கபட்டுலஅது.

The Grinch... said...

Not sure if this idlyvadai or jaya tv !!! Its boring to keep reading something negative about MK...Already people know this and that's why sent him / family to home....Why dont this blog publish something more informative...Nothing interesting to copy paste from thuklak !!! Wat is his view point on changing anna library to hospital...wat about jaya case rejected in supreme court !!!! Give MK some time to sob for his daughter :P

Anonymous said...

--இல்லாத ஒன்றை இருப்பதாக கூறினால் ( அது உவமையாக இருந்தாலும் ) யாருக்கு தான் கோபம் வராது--

ஹி ஹி அது இல்பொருள் உவமையணி சார். படிச்சதில்லை -- இருகை வேழத்து ராகவன் தன் கை - அப்படின்னு கம்ப ராமாயணத்துல?

அதாவது தலைவர் என்ன சொல்ல வர்றாருன்னா கண்ணன் ஒத்தன் இல்லை. அது போல கழகம்னு ஒண்ணு தனியா இல்லை. கழகம் தான் குடும்பம். குடும்பம் தான் கழகம் அப்படின்ங்குரார்.

இது எதுக்கறவுங்க எல்லாம் பூதகிங்க அண்ட் பூதகங்க. இட்லி வடை ஒரு பூதகர் ஓகேவா. இப்ப பிரியுதா?

Anonymous said...

--இல்லாத ஒன்றை இருப்பதாக கூறினால் ( அது உவமையாக இருந்தாலும் ) யாருக்கு தான் கோபம் வராது--

ஹி ஹி அது இல்பொருள் உவமையணி சார். படிச்சதில்லை -- இருகை வேழத்து ராகவன் தன் கை - அப்படின்னு கம்ப ராமாயணத்துல?

அதாவது தலைவர் என்ன சொல்ல வர்றாருன்னா கண்ணன் ஒத்தன் இல்லை. அது போல கழகம்னு ஒண்ணு தனியா இல்லை. கழகம் தான் குடும்பம். குடும்பம் தான் கழகம் அப்படின்ங்குரார்.

இது எதுக்கறவுங்க எல்லாம் பூதகிங்க அண்ட் பூதகங்க. இட்லி வடை ஒரு பூதகர் ஓகேவா. இப்ப பிரியுதா?

Anonymous said...

//ஸ்மைலி கார்னர்: கண்ணன், பூதகி//

wov.. Great.. கண்ணன் கழகம்; தினமலர் போன்றவை பூதகிகள். சரி.

தங்களுக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு மாய்ந்திறந்த ‘யாதவர்கள்” யார் என்பதுதான் என் கேள்வி.

நீங்கள் சொல்லுங்களேன் பார்ப்போம்.

சித்தார்த் said...

/*செத்த பாம்ப எவ்வளவு நாளைக்கு அடிபீங்களோ?*/

இது அனகோண்டா ! ஒரு தடவ போதாது

Raja said...

நல்ல வேலை, காலையில தினமலர் பாத்தப்போ இதெல்லாம் செஞ்சு கழகத்தை தூக்கி நிறுத்திடுவாரோன்னு பயந்துட்டேன், இப்போதான் நிம்மதி..

Anonymous said...

//கண்ணன் இருக்கிறார் என்று நீங்கள் நம்பினால் பூதகியாக இருக்க நான் ரெடி.

அடுத்த வாரம் ராமர் கலைஞர் கடித்ததில் ராமர் வருவார் அதுவரை ....வெயிட்டீஸ்...//

reply;

கண்ணனும் இல்லை ராமனும் இல்லை என்பதே எங்கள் வாதம்....... இல்லாத கண்ணனை தமிழாகவும், தமிழனாகவும், திராவிட கருத்தியலாகவும் உருவகப்படுத்தினால் பார்ப்பனிய பூதகி இருப்பது வெளிச்சமே......

விச்சு said...

தமிழகத்தின் மோசமான நாளேடுகளில் தினமலரும் ஒன்று.

K said...

hello comments ezhuthiya udanpirappugale... why didnt you understand the dinamalar writeup. all the words are true right? but karunanidhi didnot reply anything to them. he just talks about past 70's and past 48's. Not about now. he frankly says, his family is important for him. he doesnt want party people :)

Anonymous said...

NATTUKKU NALLUDHU NADAPPATHAI ELLORUM AAN KEDUKKA PARKIRIRGAL.DMK IS NEARING ITS END.SINCE NO KNOWN WORTHY OPPONENT IS THERE GOD HIMSELF IS DESTROYING DMK BY FAMILY QUARRELS. TIME HAS COME FOR THE VISHA KIRUMIGAL SPREAD IN 67 TO DIE AND MAKE TAMILNADU CLEAN.LIKE PMK AND VC THIS DMK WILL DIE ITS NATURAL DEATH. IT IS GOOD FOR TAMILNADU THAT KARUNANIDHI DOES NOT LISTEN TO SANE ADVISE.LET US NOT REPEAT THE MISTAKE OF THE GREAT RAJAJI IN 67 AND CHO IN 96.BUT FOR THIS PEOPLE DMK WOULD HAVE NEVER CAPTURED POWER IN TAMILNADU LEADING TO ITS MOARAL AND CULTURAL DEGRADATION.

Anonymous said...

http://snapjudge.posterous.com/with-idly-vadai-and-nesa-kumar-vivaji-elavasa

அண்ணே... மேற்கண்ட படத்தில் காணப்படுவது நீங்களா? இது என்னன்ணே வம்பா இருக்குது..

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ.

>>>ஒரே குறிக்கோளை அடைவதற்காக அந்த இயக்கம் எடுக்கின்ற முயற்சிகளில் அல்லது வகுக்கின்ற வழிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு அல்லது பிளவுகள் தோன்றி பல்வேறு கிளைகளாகப்பிரிந்தாலுங்கூட, குறிப்பிட்ட ஒரு மரத்தின் கிளைதான் அது என்ற நிலையில் இயங்குவதும், நம் கண் முன்னாலே காணு கின்ற சரித்திர உண்மை களாகும்.<<<<

கலைஞர் என்ன சொல்ல வருகிறார்? திமுகவிலிருந்து அதிமுக பிரிந்தாலும் இன்னமும் ஒரே மரத்துக் கிளைதான் என்கிறாரா?! புரியவில்லையே!

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.com

Prakash said...

யாரை பார்த்து ஜெயாவை பற்றியும், அதிமுக ஆட்சி குறித்தும் விமர்சனகளை எழுத சொல்கரீர்கள்... எதுவேண்டும் என்றாலும் எழுதி, எந்த நடையிலும் கண்டதை எழுதினாலும் பொறுத்துகொள்ள, ஜல்லி அடிக்க இது என்ன கருணாநிதியின் ஆட்சியா.....டங்குவார் கிழித்து, கோவணத்தையும் உருவி, அதன் பின் ஆசிடையும் ஊற்றி, கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவார்கள் என்று எல்லாம் தெரிந்த இட்லிவடைக்கு தெரியாதா என்ன.....

Anonymous said...

Idlyvadai...Romba bore adikuthu...Pavam thaatha MK...Dinamalar and unga blog vara vara jaya tv mathiri ayidhuchu...MK fraud nu thaan makkal avara veetuku anupichaachu....appuram enn eppadi useless articles publish pannitu...vara comments paathu kuda theriyalaya...Jaya amma enna pannikitu irrukaanga....1. MK kudutha elavasam (vesam athu) mathiri ennum elavasam, 2. MK eluthini letter mathiri PM ku fisherman problem pathi letter, 3. Pettermax lightaae venumgara mathiri anna librarya maatha sollurathu....etha pathi unga karuthu enna....

Anonymous said...

//அண்ணே... மேற்கண்ட படத்தில் காணப்படுவது நீங்களா? இது என்னன்ணே வம்பா இருக்குது..//

ஆமாங்க, அவரே தான்

கானகம் said...

கருணாநிதி பூதகியை உவமையாகக் காட்டுவது “ இல்பொருள் உவமை அணி” யில் வருமோ? அவரைப் பொருத்தவரை...

IdlyVadai said...

//கருணாநிதி பூதகியை உவமையாகக் காட்டுவது “ இல்பொருள் உவமை அணி” யில் வருமோ? அவரைப் பொருத்தவரை...//

ஸ்டாலின் அணி, அழகிரி அணி, கனிமொழி அணி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இது நான் கேள்விப்படாத அணியாக இருக்கிறது. தகவலுக்கு நன்றி

Anonymous said...

கடிததில் வந்த விஷயங்களுக்குப் பதில் சொல்லிவிட்டு பிறகு கடிதத்தை வெளியிட்ட தினமலரை விமர்சிப்பது தான் சரி.
சரி தினமலரை ’பூதகி’ என்று சொல்லியாகிவிட்டது.
கடிதத்தில் உள்ள 20. 30 கேள்விகளுக்கு பதில் என்ன?== கபாலி

Anonymous said...

அம்மாவின் ஆட்சி.கடவுளுக்கு பிடிக்கவில்லை.ஆரம்பம் முதல் தினம் ஒரு காவு தான்.கொலைக்கலாமாகி விட்டது தமிழ்நாடு.

Anonymous said...

மானமுள்ள மம்தா பானர்ஜிக்கும், மானங்கெட்ட மஞ்ச மாரியப்பனுக்கும் என்ன வித்தியாசம் பாருங்க!! மதுர முன்னாள் ரவுடிக்கி மந்திரி பதவி போயிடுமேன்னு இன்னும் மத்தியஅரசிலே எச்சில் இலைக்காக காத்துகொண்டிருக்கும் அழகு!!

Anonymous said...

மானமுள்ள மம்தா பானர்ஜிக்கும், மானங்கெட்ட மஞ்ச மாரியப்பனுக்கும் என்ன வித்தியாசம் பாருங்க!! மதுர முன்னாள் ரவுடிக்கி மந்திரி பதவி போயிடுமேன்னு இன்னும் மத்தியஅரசிலே எச்சில் இலைக்காக காத்துகொண்டிருக்கும் அழகு!!

Anonymous said...

சாத்தான் is reading வேதம் ?

ramasami said...

As far as I know, putanai, krishna sub-story is not part of Mahabharatham (unlike what 'kalaingar' says) but part of Bhagavatham.

The problem with Thiruvaalar Karunanidhi is that he has not 'studied in depth' any of the classical works including our own Tamil sangam literature, but pretends to have an exhaustive & erudite knowledge of them! What blather!

Anyway, what will we all do without our ex-CM constantly providing us with some comically clownish relief! :-)

வடமுகாக்கினி said...

உலகில் இல்லாத ஒரு பொருளை உவமையாகக் கூறுவது இல்பொருள் உவமை அணி எனப்படும்.

கோயிலைப் பாடியது என்ற பகுதியில் காளிதேவியின் இருக்கையாக ஆயிரம் தலையுடைய ஆதிசேடன் என்ற பாம்பு அமைந்துள்ளது. அதன் கண்களுக்கு வடமுகாக்கினி என்ற தீயும்,பற்களுக்கு நஞ்சோடு சேர்ந்த சந்திரனின் அமுத கிரணமும் உவமையாகக் கூறுப்பட்டுள்ளது.

உலகம் அழியும் காலத்தில் தோன்றக்கூடிய தீயாகிய வடவை உலகம் அழியாத இன்று இல்லை. சந்திரன் குளிர்ந்த அமுதகிரணங்களையே (ஒளிக்கதிர்) உடையது. ஆனால் நஞ்சோடு சேர்ந்த கதிர்கள் சந்திரனுக்கு இல்லை. எனவே இவை இரண்டும் இல்பொருள் உவமை அணி ஆகும்.

Anonymous said...

மு.க... உங்களுக்கு உண்மையை ஒத்து கொள்ளும் மனப்பான்மை அறவே இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை... நீங்கள் பதில் கடிதம் போடாமலே இருக்கலாம்... கடிதம் எழுதினாலும் எவரேனும் நம்பும்படி எழுதனும்... அது என்ன... மூச்சுக்கு மூச்சு பெரியாரை இழுப்பது... அவர் பெயரை சொல்லி கொண்டு, எடுத்துகாட்டாக கண்ண பரமாத்மா கதை சொல்வது... யோசிங்க . உங்களுக்கு வயசு ஜாஸ்தி ஆயிட்டு...

ஒன்றே ஒன்று... உங்களுக்கு பெரியார் பெயரை சொல்வதற்கோ, அண்ணா வீற்றிருந்த அரியணையில் அமர்வதற்கோ ஒரு அருகதையும் இல்லை. அவர்கள் உயிரோடு இருந்தால் நீங்கள் செய்வதை கண்டு தற்கொலை செய்து இருப்பார்கள்.