பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 04, 2011

நூலகம் இடம் மாற்றம்

ஜெயலலிதா ஆட்சி அமைத்த பின்பு புதிய தலைமைச் செயலகம் உபயோகப்படாமல் போகும் என்று பலர் நினைத்தது போலவே நடந்தது, மருத்துவமனையாக மாற்றப்படும் என்று சொன்னதற்கு எங்கே சினிமா செட் போட்ட கூறை கீழே விழுமோ என்று பலர் கவலைப்பட்டனர்.
( செய்தி: நூலக இடம் மற்றம் விஜய்காந்த் அதிர்ச்சி, படம் நன்றி: விகடன் )

சென்னையில் செம்மொழிப் பூங்காவின் பெயர்ப் பலகையையும் திறப்புவிழாக் கல்வெட்டுகளையும் மறைத்து வைத்திருக்கும் ஜெயலலிதா அரசுக்கு ஞாநியை தவிர மற்ற பத்திரிக்கைகள் யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.ஆனால் சில நாட்களுக்கு முன் அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று சொன்னது பலருக்கு அதிர்ச்சியாக உள்ளது.

தினமணி தன்னுடைய தலையங்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது ( சில பகுதிகள் இங்கே )

"கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டுவது என்ற முடிவு உள்நோக்கம் உடையது என்று நம்புவதற்கு இடமுண்டு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அவர் தேர்ந்தெடுத்துப் பூஜை போட்டிருந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டித் தான் கட்டிய தலைமைச் செயலகத்தைச் செயலிழக்க வைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டினார் என்கிறார்கள். இருக்கலாம். அதற்காக? நூலகம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வந்த பிறகு, சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை இன்னொரு கட்டடத்துக்கு இடம் மாற்றி, நூலகத்துக்காகக் கட்டப்பட்ட அமைப்பை மருத்துவமனையாக மாற்றுவது என்பது, நமது இளைஞர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால், "ரொம்ப ஓவர்!'"

அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வருக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக்காட்டாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இன்னொரு தலைமைச் செயலகத்தை கட்டிவிடக்கூடாது என்பதற்காக மட்டும் அந்த நூலகம் கட்டப்படவில்லை. தனது குடும்பத்தினரும் அமைச்சர்கள் சிலரும் மக்கள் வரிப்பணத்திலிருந்து பல கோடி ரூபாய்களைச் சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்காகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்டது அந்த நூலகம் என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 170 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொடங்கி ஏறத்தாழ ரூ. 230 கோடி ரூபாயை விழுங்கி இருக்கிறது இந்த நூலகம். சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்துக்கு இவ்வளவு பணம் செலவாக வேண்டிய அவசியம் என்ன?

சதுர அடிக்கு ரூ. 2,000 என்று கணக்கிட்டாலும், 3.75 லட்சம் சதுர அடி அளவில் கட்டடம் கட்ட அதிகபட்சம் ரூ. 75 கோடிதானே செலவாகி இருக்கும்? இத்தனைக்கும், இடம் இலவசம், கட்டட அனுமதி, குடிநீர் வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு உடனடி அனுமதி, லஞ்சம் கிடையாது எனும்போது இத்தனை கோடி செலவுக்கு என்ன காரணம்?

சுமார் ஆறு லட்சம் புத்தகங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஏறத்தாழ 4 லட்சம் புத்தகங்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்றவை. தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்தப் பதிப்பாளர்களிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் வாங்கினால்கூட ரூ. 5 கோடிக்குமேல் தேவையில்லையே... வெளிநாட்டுப் புத்தகங்களை ரூ. 5 கோடிக்குமேல் வாங்கினாலும்கூட ரூ. 10 கோடிதானே செலவாகி இருக்கும்? எல்லா செலவும் சேர்த்து அதிகபட்சம் ரூ. 100 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லையே, எங்கே போயிற்று மீதம் செலவாகியிருக்கும் ரூ. 130 கோடி?

உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டு, நூலகத்தின் பெயரால் நடந்த மோசடியை வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தால், அரசைப் பாராட்டி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக்குகிறோம் என்று கிளம்பினால், மக்களின் அதிருப்தியை வலியப்போய் விலை கொடுத்து வாங்குகிறது அரசு என்றுதானே பொருள்?

நூலகத்துக்காகக் கட்டப்பட்ட இடம் நூலகமாகவே தொடரட்டும். அறிவுசார் பூங்காவில் இன்னொரு நூலகம் அமைவதாக இருந்தால் அமையட்டும், அதில் தவறொன்றுமில்லை. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முழுக் கவனமும் செலுத்தப்பட்டு, சர்வதேசத் தரத்தில் செயல்படட்டும். மக்கள் வரிப்பணத்தை நூலகம் என்ற பெயரில் கபளீகரம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதைப் பற்றியும் அரசு யோசிக்கட்டும். அதுதான் ராஜதந்திரமான முடிவாக இருக்கும்!


இட்லிவடையின் கருத்தும் இதுவே.

சென்னை அண்ணா சாலையில் புதிதாக அமைந்த தலைமைச் செயலகத்துக்கு அருகே உள்ள மன்னர் ஏழாம் எட்வர்டு மற்றும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் ஆகிய இருவருடைய சிலைகளும் அப்புறப்படுத்தப்பட்டு அவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அதே போல ராஜாஜி முதல்வராக இருந்தபோது, ஆங்கிலேயர்களின் சிலைகளை அப்புறப்படுத்தி அருங்காட்சியகத்தில் வைத்தது வரலாறு.

தமிழர்களுக்கு நெருக்கடியான காலத்தில் அரை நாள் உண்ணாவிருந்தம் இருந்துவிட்டு, மகள் ஜாமீனுக்கு ஒரு பெரிய படையே டெல்லியில் மௌரியா ஹோட்டலில் முகாமிட்டுள்ளார்கள். நூலக மாற்றத்துக்கு அவர் "இதை தன்மானமுள்ள தமிழர்கள் தமிழறிஞர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்" என்று கூறுவது நல்ல வேடிக்கை.

கோயம்பேடு பேருந்து நிலையம் கலைஞரால் கட்டப்பட்டாலும் அவர் அதை திறப்பதற்குள் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து தன பெயரை பெரிதாக போட்டுக்கொண்டார். சென்ற ஜெ ஆட்சியில் அங்கே சட்டசபை வரவிடாமல் தடுத்து ,மிகுந்த பொருட்செலவில் இந்த நூலகத்தை தற் பெருமைக்காக அமைத்தார் கலைஞர்.

இன்று ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் நடக்கும் குழாயடி சண்டையில் நாளை தமிழகத்தை அருங்காட்சியகத்தில் வைத்தாலும் ஆச்சரியப்பட கூடாது. இவர்களுக்கு யாராவது நல்ல புத்தி தரும் புத்தகங்கள் சிலவற்றை பார்செல் செய்தால் நன்றாக இருக்கும்.

இந்த இடம் மாற்றம் நியூஸ் வந்த பிறகு தான் சென்னையில் இருக்கும் பலருக்கு இந்த மாதிரி ஒரு நூலகம் இருக்கிறது என்று தெரியவந்தது.

பீச் பக்கம் இருக்கும் கண்ணகி எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

48 Comments:

Nadhiya said...

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களுமே புதிய புத்தகங்கள். நீங்கள் எழுதியிருப்பது போல பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்ற புத்தகங்கள் இங்கு வைக்கப்படவில்லை. நாங்கள் சேகரித்த புத்தகங்கள் இருப்பதை பார்க்க சென்ற பொழுது இதை சொன்னார்கள்.

--நதியா
--சென்னைப் பல்கலைக்கழகம்

Nadhiya said...

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களுமே புதிய புத்தகங்கள். நீங்கள் எழுதியிருப்பது போல பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்ற புத்தகங்கள் இங்கு வைக்கப்படவில்லை. நாங்கள் சேகரித்த புத்தகங்கள் இருப்பதை பார்க்க சென்ற பொழுது இதை சொன்னார்கள்.

--நதியா
--சென்னைப் பல்கலைக்கழகம்

Ganpat said...

நல்லவேளை!கோபாலபுரமும்,போயஸ் தோட்டமும் மிக அருகாமையில் உள்ளன இல்லையென்றால் கூடங்குளம்
மின் நிலையம் கோபாலபுரதிற்கு மாற்றப்பட்டிருக்கும்!
நாயர்(இட்லிவடை):பீச் பக்கம் இருக்கும் கண்ணகி எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
மாடிப்படி மாது:ராணிமேரிகல்லூரி!!! அதை மறந்துட்டீங்களே!
தமிழ்நாடு அடுத்த 55 மாதங்களுக்கு எதிர்நீச்சல்தான்!

Anonymous said...

சிகரங்களில் உறைகிறது காலம்;
அகத்திணை ;
பார்வைகள்;
கருகும் மருதாணி;
கருவறை வாசனை;
ராஜா;
ரோமபுரி பாண்டியன் ,
தென்பாண்டி சிங்கம் , வெள்ளிகிழமை ,
நெஞ்சுக்கு நீதி ,
இனியவை இருபது ,
சங்க தமிழ் ,
குறளோவியம்,
பொன்னர் சங்கர் ,

மேற்கண்ட புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு நூறு பிரதியாவது இருக்கும் என நினைக்கிறேன்.அதை எல்லாவற்றையும் தூக்கி கடாசி இருந்தாலே முடிந்தது வேலை.அதை விடுத்து மூட்டைப்பூச்சியை ஒழிக்க
வீட்டை கொளுத்துவது போல!!

அமுதா கிருஷ்ணா said...

என் மகன் 100 புத்தகங்களை இந்த நூலகத்திற்கு கொடுத்தான். கலைஞர்,ஸ்டாலின்,ஆளுநர் கொடுத்த புத்தகங்கள் அங்கே இருக்கின்றன.சென்னை கல்லூரிகளில் கலெக்ட் செய்த புத்தகங்கள் இனிமேல் தான் அடுக்கி வைக்க படும் என்று அங்கு சொன்னார்கள்.

venkatesan said...

ஜெ வின் இந்த முட்டாள்தனமான, ஆணவ முடிவை எதிர்க்கிறேன். அதே சமயம், இந்த நூலகம் உலகப் புகழ் வாய்ந்த ஒரு சின்னம் என்றெல்லாம் புகழ்வதை ஏற்க முடிவதில்லை. இங்கு உள்ள நூல்களின் எண்ணிக்கை ஐந்து லட்சம். அமெரிக்காவில் நான் படித்த விஸ்கான்சின் பல்கலைக்கழக நூலகம் பல கட்டிடங்கள் கொண்டது. பொறியியலுக்கு என்று ஒரு மூன்று மாடி கட்டிடம், கலை, இலக்கியத்துக்கு என்று இன்னொரு கட்டிடம் என. இங்கு உள்ள மொத்த நூல்களின் எண்ணிக்கை எழுபது லட்சம். உலக மொழிகள் பலவற்றிலும் நூல்கள் உண்டு. ஒரு அரை முழுக்க தமிழ் புத்தகங்கள் இருக்கும், சங்க இலக்கியத்திலிருந்து வண்ணநிலவன் வரை. இத்தனைக்கும் இது ஒன்றும் புகழ் பெற்ற நூலகம் அல்ல. ஒரு சாதாரண பலகலைக்கழக நூலகம். சென்னை பல்கலை நூலகம் போல. இப்படிப்பட்ட நூலகங்கள் தமிழக பலகலை அனைத்திலும் இருக்க வேண்டாமா? ஏதோ. வயித்தேரிச்சலால் எழுதுகிறேன். அதே சமயம், இருப்பது ஒன்னே ஒன்னு. கண்ணே கண்ணு. அதையும் அழிக்கலாமா?

Anonymous said...

கொஞ்சம் இதைப் பாருங்க.

http://ramanans.wordpress.com/2010/09/22/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/


இதை மாத்தக் கூடாது. ஊழல் செஞ்சவங்களைக் கண்டுபிடிச்சு தண்டிக்கணும். அதுவரைக்குமாவது இந்த நூலகம் இருக்கணும் சார்!

வயிறு எரியுது...

kothandapani said...

மிகத் தெளிவாக தினமணி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த ஊழலை பற்றி யாராவது வாயை திறகின்றர்கள ... உலக தரம் என்று சொல்லி
ஊழல் பண்ணால் ஊரே மெச்சுகின்றது. அதனால் தான் ஜெயாவும் உலக தரம் வாய்ந்த ஹாஸ்பிடல் கட்ட போகின்றார்கள். எதோ தன்னால் முடிந்த அளவு தமிழகத்துக்கு நன்மை பண்ண போகின்றார்கள்.

Anonymous said...

not been to the ACL.so can not say about the books. now time has to come to go.
if one goes rewind each one will remember how M K though not in power (2004-06)in the state, made use of his Azhagu Parthavargal- mean central cabinet minister & stalled all project at that time initiated by Jay- includes a power expansion/ desalinization plant & of course the new secretariat.
this is tit for tat- some time aghuniattam also will come- so enjoy
if it is library will get mamaulla thamizhargalin kortaai in ACL- if made child hospital we will hear qua qua and cries future india-
entha andavanalum tamilnattai kappathamudiadhu.
to end this we need electoral reforms- one cant be CM /MLA/ MP/MLC for more than 1 or max 2 terms - there should be a gap one term.

Anonymous said...

மஞ்சத்துண்டை பழி வாங்க வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல் செய்யவேண்டும்.இறுந்தாலும் மஞ்சத்துண்டு அடுத்தவரை கோர்த்து விடுவதில் சுட்டி.தன்மான தமிழர்கள் முடிவு செய்யவேண்டுமாம்.இவர் தன்மான‌ தமிழர் இல்லை போலும். என்ன செய்வது,போனதும் சரியில்லை,வந்தது வாய்ச்சதும் சரியில்லை.

Anonymous said...

Jaya is a “Femme Fatale”.

She is a useless, selfish, ego maniacal, fit for nothing “Prima Donna”. There is nothing good is going to come out of this administration. I can assure you about that. At least Karuna and his thieves are able administrators (kind of sort of). Jaya and her morons are going to destroy TN is next five years.

You have every right to disagree with me. But that is the ground reality.

Just speaking “English” does not qualify anybody to be a good administrator. It requires hard work, dedication and the will to serve. Jaya has none of those qualities. She never had and never will be.

Already half of TN is fast becoming a desert. There is no water left in TN villages. Even hardy palm trees are dying. The farmers are demoralized and they are in dire state. They need help NOW. But neither Karuna or Jeya can do that. They don’t have the mental capacity or intelligence to understand what is going on.

Places like Thanjavore fed us for generations. It was considered “the most fertile place” even during British Raj. Now everything is in disarray.

Tamil Nadu is the only remaining “Classical Society” in the whole world. No other Classical socity is in existence today. Everything is destroyed. Moronic Karuna systematically destroyed a wonderful, 2000 year old culture, without even understanding what he is doing. Jeya will take care of the rest in next 5 years. That is a fact.

I can tell you this.

In next five to ten years there is going to be a mass migration from all of Tamil Nadu. The farmers and villagers are going to get away from their native villages and move towards big cities and different parts of India. That is going to create an unprecedented social and economical problem for the whole country.

I WANT to be wrong and I WISH to be wrong on this one. But the ground reality is terrifying. I was heartbroken when I visited my native village.

Hope something good will happen for my wonderful people of Tamil Nadu. I pray someday we will chase out all the FAKES who call themselves as leaders, and take serious steps towards restoring our Pride and our glorious culture, that was OURS.

If you disagree with me, that’s fine. I fully understand.

- Narenthiran

Anonymous said...

Jaya is a “Femme Fatale”.

She is a useless, selfish, ego maniacal, fit for nothing “Prima Donna”. There is nothing good is going to come out of this administration. I can assure you about that. At least Karuna and his thieves are able administrators (kind of sort of). Jaya and her morons are going to destroy TN is next five years.

You have every right to disagree with me. But that is the ground reality.

Just speaking “English” does not qualify anybody to be a good administrator. It requires hard work, dedication and the will to serve. Jaya has none of those qualities. She never had and never will be.

Already half of TN is fast becoming a desert. There is no water left in TN villages. Even hardy palm trees are dying. The farmers are demoralized and they are in dire state. They need help NOW. But neither Karuna or Jeya can do that. They don’t have the mental capacity or intelligence to understand what is going on.

Places like Thanjavore fed us for generations. It was considered “the most fertile place” even during British Raj. Now everything is in disarray.

Tamil Nadu is the only remaining “Classical Society” in the whole world. No other Classical socity is in existence today. Everything is destroyed. Moronic Karuna systematically destroyed a wonderful, 2000 year old culture, without even understanding what he is doing. Jeya will take care of the rest in next 5 years. That is a fact.

I can tell you this.

In next five to ten years there is going to be a mass migration from all of Tamil Nadu. The farmers and villagers are going to get away from their native villages and move towards big cities and different parts of India. That is going to create an unprecedented social and economical problem for the whole country.

I WANT to be wrong and I WISH to be wrong on this one. But the ground reality is terrifying. I was heartbroken when I visited my native village.

Hope something good will happen for my wonderful people of Tamil Nadu. I pray someday we will chase out all the FAKES who call themselves as leaders, and take serious steps towards restoring our Pride and our glorious culture, that was OURS.

If you disagree with me, that’s fine. I fully understand.

- Narenthiran

Anonymous said...

நூலகம் பற்றிய உங்கள் கருத்து சரி.அது என்ன தமிழர்களுக்கு நெருக்கடியான காலத்தில்..?

சா.கந்தசாமி said...

சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்தை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டது இந்த நூலகம். நான் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது, 'இப்படி தமிழ்நாட்டில் ஒரு நூலகம் இல்லையே’ என்று ஏங்கியிருக்கிறேன். அண்ணா நூலகம் தமிழகத்தின் கனவு. எங்கே காற்று வேண்டும், எங்கே வெளிச்சம் வேண்டும் என்று பார்த்துப் பார்த்து, படிப்பதற்கும் எழுதுவதற்கும் என்றே வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டடத்தை, எப்படி மருத்துவமனையாக்க முடியும்? மருத்துவம் அவசியம்தான். ஆனால், அது சென்னைக்கு மட்டும்தானா? வேறு எந்த நகரத்திலும் குழந்தைகள் இல்லையா?

பொன்னீலன் said...

மருத்துவமனை கட்ட இடமா இல்லை? இந்த அரசுக்குக் கொஞ்சமும் சகிப்புத்தன்மை இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த நடவடிக்கை. இது அறிவுல கத்துக்கு விடப்பட்டுள்ள சவால். எழுத்தாளர்களை இந்த அரசு அவமானப்படுத்தியுள்ளது. அறிவுலகத்தின் மீதான ஒடுக்குமுறை என்பது சமூக ஒடுக்குமுறைக்கான ஒத்திகை. இது மிகவும் வருத்தம் தரக்கூடியது, சகிக்க முடியாதது.

பொன்னுசாமி said...

முந்தைய அரசின் சாதனைகளை முறியடிப்பது என்பது சரி. ஆனால், அவற்றை ஒழித்துக் கட்டக்கூடாது. இது மிகவும் தவறான அணுகுமுறை. ஷாஜஹானுக்குப் பிந்தைய மன்னன் அப்படி நினைத்திருந்தால் இன்றைக்கு தாஜ்மஹால் இருந்திருக்காது. ராஜராஜசோழனுக்கு அடுத்து வந்த மன்னன் நினைத்திருந்தால்... தஞ்சை பெரிய கோயில் இருந்திருக்காது. கரிகால சோழனைத் தொடர்ந்தவன் அப்படி நினைத்திருந்தால் கல்லணை இருந்திருக்காது.

வண்ணதாசன் said...

இது இன்னொருவித 'யாழ் நூலக’ எரிப்பன்றி வேறில்லை. உயர் மருத்துவம் உடனடி யாகத் தேவைப்படுவது குழந்தைகளுக்கு அல்ல; இந்த அரசுக்குத்தான். அசுரப் பெரும்பான்மை என்பது, சொல்லுக்கு சொல் உணரப்படுகிறது; பிணம் தின்னல் தொடர்கிறது.

புனிதபாண்டியன் said...

சட்டசபைக் கட்டடத்தையும் தலைமைச் செயலகத்தையும் தன் ஆணவப் போக்கினால் மாற்றினார் ஜெயலலிதா. ஆனால், அப்போது 'இது ஏதோ கருணாநிதியின் சொந்தப் பிரச்னை’ என்பதைப் போலப் பலரும் மௌனமாக இருந்ததால், இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் கை வைக்கிறார். சமச்சீர்க்கல்வி, அறிவை விரிவு செய்யும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டை மாற்றுவது போன்ற தமிழர்களின் அறிவு மற்றும் பண்பாடு சார்ந்த விஷயங்களைச் சீர்குலைப்பது ஆகியவை ஜெயலலிதாவின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்தான்!

Anonymous said...

மன்னர் ஆட்சிக் காலங்களில் கூட, ஒரு மன்னன் வெற்றி பெற்ற பிறகு, பழைய அரசனின் கட்டடங்களை உடைக்கவில்லை. ஆனால், ஜனநாயகம் என்ற பெயரில் ஜெயலலிதா, முடியாட்சியை விட மோசமாக நடந்துகொள் கிறார்.

சங்கர் said...

இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்பு உணர்வில் எடுக்கப்பட்ட முடிவு. சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மை கூட ஆட்சியாளர்களுக்கு இல்லாதது வருந்தத்தக்கது. டி.பி.ஐ. வளாகத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்குக் கூட போதுமான இடங்கள் இல்லை. எப்படி லட்சக் கணக்கான புத்தகங்களைப் பராமரிக்கப் போகிறார்கள்?

சிவகாமி said...

நூலகமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு கட்டடத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டிய நிர்பந்தம் இப்போது அரசுக்கு என்ன? கருணாநிதி காலத்தில் கட்டப்பட்டது என்கிற ஒரு காரணத்தைத் தவிர வேறெந்தக் காரணத்தையாவது அரசால் சொல்ல முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் முதல்வர் இந்தள வுக்கு அராஜகமாகவும், தான் தோன்றித்தனமாகவும் நடந்து கொள்வதைத் தடுப்பதற்கு என்னதான் வழி?

யாழ் said...

''இது இன்னொருவித யாழ் நூலக எரிப்பன்றி வேறில்லை!''

மானமுள்ள தமிழன் said...

<< ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் நடக்கும் குழாயடி சண்டையில் நாளை தமிழகத்தை அருங்காட்சியகத்தில் வைத்தாலும் ஆச்சரியப்பட கூடாது. இவர்களுக்கு யாராவது நல்ல புத்தி தரும் புத்தகங்கள் சிலவற்றை பார்செல் செய்தால் நன்றாக இருக்கும். >>


தினமணி / இட்லிவடை...! உங்களையெல்லாம் திருத்தவே முடியாதா ?
பிரிட்டிஷ் காரன் காலத்திலிருந்து இதே பொழப்புத்தானா ? தமிழனைக்காட்டிக்கொடுத்து காட்டிக்கொடுத்து என்ன கண்டீர்கள்..!
ஊடகங்கள் நடத்தும் வெகு ஜன விபச்சாரம் இது.
ச்ச்சீ காரி உமிழ்கிறேன்.

பாரதியார் said...

சோ-வின் துக்ளக் வரிசையில் ஆரிய மாயை காக்க புறப்பட்டுள்ளார் தினமணி வைத்யநா(ர)த ஐயர். அந்தவரிசையில் இட்லி வடையும் ..!

இது தகாது இட்லி வடை!
“பேராசைக்காரனடா ...ர்ப்பான் அவன் ஏது செய்தும் காசு பெறப்பார்ப்பான்..”
இது பாரதியார் சொன்னது.

யாழ் said...

<< ஊடகங்கள் நடத்தும் வெகு ஜன விபச்சாரம் இது.
ச்ச்சீ காரி உமிழ்கிறேன். >>

காட்டமான வார்த்தைகள்தான்..
ஆனால்
மிகச்சரியானவை!

விஷம் கலந்த தினமணி said...

இட்லிவடையையும் வழக்கில் சேர்க்கச்சொல்லி நாம் சொல்ல மாட்டோம். ஏனென்றால்..
நாம் தமிழர்கள்.


""நவம்பர் 4-ம் தேதி வெளிவந்த தினமணியில், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை ஜெயலலிதா அரசு மாற்றுவது தொடர்பாக "தேவைதானா?' என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில் ஏதோ நூலகத்தை அதிமுக அரசு அகற்றக்கூடாது என்பதற்காக எழுதப்பட்டதுபோல தெரிந்தாலும்கூட, ஒரு சொம்பு பாலில் ஒரு துளி விஷத்தைக் கலப்பதைப்போல எழுதப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வருக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக் காட்டாமல் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியினை முன்னாள் முதல்வர் கருணாநிதி முற்றாக மறுப்பதோடு, இத்தகைய விஷமத்தனமான, விஷம் கலந்த அவதூறு செய்தி வெளியிட்ட தினமணி மீது சட்டரீதியான வழக்கு தொடரப்படும்''.

ஓர் அறிஞன் said...

ரொம்ப நாளாக பார்க்கவேண்டும் என்று நினைத்த நண்பன் விபத்தில் இறந்து விட்ட தகவல் கேட்டது போல இருக்கிறது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றப்போகும் அறிவிப்பை கேட்டவுடன்.

கடந்த ஆட்சியில் கட்டியது என்பதற்காக தலைமைச் செயலகத்தை மாற்றியபோது பெரிய அளவில் நாம் எதிர்ப்பு தெரிவிக்காததாலேயே, முதல்வர் இப்படியொரு விபரீதமான் முடிவை எடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

"நூலகம் ஒன்றில் மட்டும் தான் மனிதர்கள் தங்கள் குரலை தாழ்த்தி சிந்தையை உயர்த்துகிறார்கள்," என்று ஓர் அறிஞர் கூறியது நினைவுக்கு வருகிறது.

Anonymous said...

திருச்சி மலைக்கோட்டையை மெரினா பீச் இருக்கற இடத்துக்கு மாத்தப் போறோம். அந்த எடம் காலியா இருக்குமேன்னு பாக்கறயா? அங்கதான் குதுப்மினாரக் கொண்டு வரப் போறோமே .... எஸ்.வி. சேகரோட ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நாடகம் பாக்கற மாதிரி இருக்கு.

மதுரை said...

குழந்தை நல மருத்துவமனை வேண்டுமென்று எண்ணினால், அதற்கு வேறு இடமா இல்லை தமிழகத்தில்?

மாநிலம் முழுவதற்கும் ஒரே குழந்தை நல மருத்துவமனை சென்னையில் மட்டும் தான் இருக்கிறது. புதிய மருத்துவமனையை திருச்சியிலோ, மதுரையிலோ அமைத்தால், அது தென் தமிழகத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக இருக்கும்.

இது மாதிரியான பகை உணர்ச்சி நாட்டுக்கும், தனக்கும் எந்த விதத்திலும் நன்மை தராது என்பதை நமது முதல்வர் உணர வேண்டும்.

Erode Nagaraj... said...

பாலகர்க்குப் பரிந்ததாய் பாவனைகள் புரிகின்றாய் - உன்

காலகமே தங்கிடாது கண்டதையும் எண்ணுகிறாய் - நீண்ட

வாலகம் சுருட்டியே சும்மாயிராமல் - நன்

நூலகம் கெடுத்திடவே நூல்விட்டும் பார்க்கிறாய்.

காகிதத்தில் கையை வைத்துக் காருண்யமென்னடி?

காப்பியங்கள் பிழைக்கட்டும் கானகமே செல்லடி.

#SaveAnnaCentenaryLibrary

Anonymous said...

//பிரிட்டிஷ் காரன் காலத்திலிருந்து இதே பொழப்புத்தானா ? தமிழனைக்காட்டிக்கொடுத்து காட்டிக்கொடுத்து என்ன கண்டீர்கள்..!//

பிரிட்டிஷ் காரன் காலம் தொட்டு நீங்க திருட்டுத்தனம் பன்னுறதே குறியா இருக்கீங்களே அத திருத்திக்க மாட்டீங்களா??

Ganpat said...

I fully endorse and agree with the views expressed by Mr.Narenthiran.Karuna and Jaya are two evil forces set to destroy the state in their own style.These two have to be banished.This state is in for serious catastrophe if these personification of badness and madness are not expelled immediately.
God save our nation.

Prakash said...

நடுநிலை குபீர்கள் ஏதோ கருணாநிதி, ஜெயலலிதா புதிய தலைமை செயலகதிற்காக கோட்டூர்புரத்தில் அடிக்கல் நாட்டிய இடத்தில் அண்ணா நுற்றாண்டு நூலகம் காட்டிவிட்டார் , அதினால் தான், இப்போது ஜெயா அதை மாற்ற முயல்கிறார் என்று ஜல்லி அடிகிறார்கள்...

ஜெயா புதிய தலைமை செயலகதிற்காக கோட்டூர்புரத்தில் அடிக்கல் நாட்டி பூஜை போட்டது 2003ல், அதிலிருந்து 2006 மே வரை ஜெயா என்ன செய்துகொண்டிருந்தார் ....

ராணிமேரி கல்லூரி இடத்தில் கட்ட தான் , கடற்கரை அருகாமை என்று கூறி மதிய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி மறுத்தது....கோட்டூர்புரத்தில் 2003ல் அடிகல் நாட்டியவர் 2006 வரை எதையும் கட்டாமல் இருந்தது ஏன்....

http://www.hindu​.com/2003/10/31/stor​ies/2003103105750100​.htm

R. Jagannathan said...

நூலகம் கட்டியதில் ஊழல் - இதை சொல்ல வேண்டிய நேரம் கடந்து ரொம்ப மாதம்மகிவிட்டது. இத்தனை நாள் தினமணி அல்லது அதிமுக என்ன செய்துகொண்டிருந்தன?
இப்போதைய செய்தி- நூலகம் குழந்தைகள் ஆஸ்பத்ரியாக மாற்றம் செய்யப் படப்போவதுதான். அதைப் பற்றிய கருத்து முக்கியமாக எழுதப் படவேண்டும்.
ச. கந்தசாமி, வண்ணதாசன், அனானிமஸ்(ஆங்கிலதில்) பொன்னுசாமி, சங்கர், சிவகாமி ஆகியோர் எழுதிய கருத்துக்களுடன் உடன் படுகிறேன். நான் இந்த நூலகத்திற்கு சில மாதங்கள் முன் சென்றிருந்தேன். சிறந்த அனுபவமாகவே உணர்ந்தேன். ஒரு முறை ஜெ இங்கு சென்று வர வேண்டும்.
நீதிமன்றம் தடை உத்தரவு போட்டிருக்கிறது. பார்க்கலாம். முதலில் ஜெ தன் சொந்த ஊழல் வழக்கிலிருந்து மீண்டு வரட்டும். - ஜெ.

Anonymous said...

கருணாநிதியை போல் தேவையற்றவைக்கு பணம் செலவிடுபவர் எவரும் இல்லை

இப்பொழுது இருக்கும் இன்டர்நெட் காலத்தில் நூலகம் சென்று வாசிப்பவர்கள் மிகவும் குறைவு.

கன்னிமரா, பிரிட்டிஷ் கவுன்சில் போன்ற நூலகத்துக்கே ஆட்கள் வருவதில்லை என்று நிர்வாகிகள் புலம்புவதுண்டு

அப்படி இருக்க , இவளவு பெரிய நூலகம் (சாப்ட்வேர் கம்பெனி போல்) தேவையே இல்லை என்பது என் அபிப்பிராயம்

"பைத்தியக்காரன் கிழிச்சது கோமணத்துக்கு உதவிச்சு" என்ற வசனதிர்க்கேர்ப்ப,

ஜெயலலிதா கருணாநிதி சண்டையில் நல்லது நடந்தால் செரி.

அப்படி பார்க்க "குழந்தைகள் மருத்துவமனை" வரவேற்க்கத்தக்கதே

Anonymous said...

மூடு விழா!! மூடு விழா என்று கூப்பாடு போடுபர்களுக்கு!!

ஓர் விஷயம் சொல்கிறேன் கேட்டு கொள்ளுங்கள்!!

2006 ஆட்சி காலத்தில் அதிமுக ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் தங்கள் இயற்க்கை உபாதைகளை கழிக்க சுகாதார மையம் அமைத்தது!! இருநூறு கோடி செலவு பண்ணி அமைத்தது!!

... ஆனால் அதனை அடுத்து வந்த திமுக அரசு அதனை திறக்காமல் பாழடைந்த கட்டிடமாக ஆக்கினார்கள்!!

இயற்க்கை உபாதை கழிக்கும் கட்டிடத்தை கூட மக்கள் பயன்படுத்தாமல் கருணா ஆக்கினார்!! நீங்கள் ஒருவரும் வாய் திறக்கவில்லை!! அது என்ன கருணா ஆட்சியில் நீங்கள் என்ன வாய் மூடி மவுநிகலா!!

மற்றும் மழை நீர் சேகரிப்பு என்பது எவ்வளவு பொன்னான திட்டம்!! அது என்ன கருணாவுக்கு பண்ணியது!! அதன் மீது சுணக்கம் எதற்கு!!

உழவர் பாதுகாப்பு திட்டம் என்று அதிமுக காலத்தில் அறிமுகபடுத்தியது!! அதனை திமுக வந்தவுடன் மூடு விழா பண்ணியது

தொட்டில் குழந்தை திட்டம் என்பது உலகம் போற்றும் உன்னதமான திட்டம் அதனை மூடு விழா கட்டியது!!

பச்சை கலர் ஆக இருக்கும் கட்டிடத்தை, பெயர் பலகை, எல்லாவற்றையும் மஞ்சள் சாயம் பூசினார்கள்!!

பேருந்து நிறத்தை கூட விடவில்லை!!

திண்டிவனம் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் திட்டத்தை முடக்கிநீர்கள்!! இன்று வரை புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டவில்லை!!

புறநகர் பைப்பாஸ் சாலை செல்லும் மேம்பாலத்தை ஐந்து வருடமாக முக்கி முக்கி கட்டினார்கள்!!

கோவில், சர்ச் , மசூதி அன்னதான திட்டத்திற்கு அரசாங்க நிதியை குறைதீர்கள்!! சுணக்கம் ஏற்படுதிநீர்கள்!!

கோவில் செருப்பு இலவசமாக வைக்கலாம் என்ற உத்தரவை சுணக்கம் ஏற்படுத்தி கட்சிகாரர்களுக்கு காசு போகுமாறு பார்த்து கொண்டீர்கள்!!

தலைவர்களின் சிலை பொது இடத்தில திறக்க கூடாது!! அருங்கன்காட்சியில் தான் திறக்க வேண்டும் என்ற கொள்கை காற்றில் விட்டது!! ஏன் எனில் இவரது சிலை வைக்க இடையூறாக இருக்க கூடாதாம்!!

மணல் வருமானம் முழுவதும் அரசாங்கத்திற்கு போகும் நேரடி நிலை மாற்றி இடைத்தரகரை வைத்து இழந்த தனி நபர் வருமானத்தை மீட்டது

பள்ளி, கோவில் போன்ற இடங்களில் டாஸ்மாக் அருகில் அமையக்கூடாது என்ற விதியை காற்றோடு விட்டது!!

அதிமுக அரசு எந்த மாதிரியான திமுக திட்டத்திற்கு மூடு விழா பண்ணுகிறது

வருடத்திற்கு ஐந்து கோடி செலவு பண்ணும் கனிமொழி சங்கமத்திற்கு

அரசாங்க மருத்துவமனை சரி பண்ண வக்கு இல்லாமல் வருடத்திற்கு எழுநூறு கோடி
ரூபாய் செலவு செய்த தனியார் மருத்துவ காப்பிடு திட்டம்

கட்டிட வேலை முடியாமலே தோட்டாதரணி வைத்து பல கோடிகள் செலவு செய்து ஓர் திட்டம் இல்லாமல் கட்டிய ஊழல் மிகுந்த புதிய சட்டமன்றம்

பல கோடிகள் செலவு பண்ணி கண்ணகி சிலை பாதுகாப்பு

வாரம் வாரம் கோடிகள் செலவு பண்ணி வள்ளுவர் கோட்டத்தில் பாராட்டு விழா

சொந்த இடமே இல்லாதவர்க்கு வீடு கட்டி கொடுக்காமல், ஏற்க்கனவே வீடு உள்ளவர்களுக்கு இலவச வீடு என்று கக்குஸ் கூட கட்ட முடியாத திட்டம்

முப்பத்தி ஐந்து ரூபாய் தினசரி வருமானம் உள்ள நாட்டில் வெட்டி பந்தாவுடன் பல நூறு கோடிகள் செலவு செய்து நூலகம்

திறந்த கட்டிடத்தில் கருணா பெயர் மட்டும் போதாதா!! எதற்கு அவர் பொன்மொழிகள்!! அவர் கவிதை!! வேண்டாத பெருமை!! அதற்காக சில கல்வெட்டு மொழிகளை அழித்தார்!!

சமச்சீர் புத்தகத்தில் இருக்கும் கனி கவிதைகளும், கருணா கவிதைகளும், ஒத்த ரூபாய் கவி கவிதைகளையும் அழித்தார்!!

சென்னையில் இருக்கும் பூங்காவுக்கு எல்லாம் வெறி பிடித்தவர் மாதிரி செம்மொழி என்று பெயர் வைத்தல்!! இதனை செம்மொழி பூங்காக்கள், இதனை செம்மொழி நூலகம்!! அங்கு தொன்மை வாய்ந்த தமிழ் நூல்கள் கிடைக்குமோ இல்லையோ கனி கவிதை, கருணா பொன்மொழிகள், ஒத்த ரூபாய் கவி வரிகள், ஜால்ரா வைர வரிகள் கிடைக்கும்!!

திமுக குடும்ப தொழில் வளர அடுக்கு மாடி வீடு வைத்துள்ளவருக்கும் தொலைக்காட்சி கொடுப்பதை நிறத்தல்!!

மின்சாரத்திற்கு வழி காண வில்லை, ரோடு , பஸ் வசதி இல்லை, ஒரு ருப்பய்க்கு அரிசி வாங்குகிறார்கள்!! நானூறு ரூபாய் கொடுத்து எப்படி ஏழை மக்கள் காஸ் சிலின்டர் வாங்குவார்கள்!! இதனை நிறுத்தினார்!!

பேருந்துகளில் திருக்குறளை பின்னிளைபடுத்தி கருணா பொன்மொழிகள் முன்னிலை படுத்தியதை நீக்கம்!!

ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் அறிஞர்கள் பெயரில் இருக்கும் பலகலை கழகத்தை மூடும் நோக்கத்துடன் அண்ணா பல்கலை கழகத்தை கிளை என்று தேவை இல்லாமல் எல்லா மாவட்டங்களில் திறந்த இழிவான செயலை நீக்குதல்!!

சும்மா கதை விட்டு கதை விட்டு கூவுவதை விட்டு சிந்தித்து பாருங்கள்!!

கருணா எத்தகைய திட்டத்தை நிறுத்தினார்!!

ஜெயலலிதா எத்தகைய திட்டத்தை நிறுத்தினார்!!

கருணா திட்டம் அனைத்தும் அவர் புகழ் பாடுமாறும், குடும்பம் வளம் பெறுமாறும் இருக்கும்!!

ஜெயலிதா திட்டம் எல்லாம் தொலை நோக்கு பார்வையுடன் இருக்கும்!!

நூலகம் வைத்தால் கூட அதில் இவரின் அணைத்து நூல்களும் நூறு காபிகள் உள்ளது!!

சே.வேங்கடசுப்ரமணியன் said...

//இந்த இடம் மாற்றம் நியூஸ் வந்த பிறகு தான் சென்னையில் இருக்கும் பலருக்கு இந்த மாதிரி ஒரு நூலகம் இருக்கிறது என்று தெரியவந்தது.// உங்களைப்போல மொக்கை மனிதர்களாகவே எல்லோரையும் நினைத்து விடுகிறீர்கள்.

R. Jagannathan said...

ஜெயலலிதா திருந்த மாட்டார். திருந்தவே மாட்டார். மூளையைக் கழட்டிவைத்துவிட்ட அவர் ஜால்ராக்களும் (அனானியாக எழுதுபவர்கள் உட்பட)அப்படியே தான். இட்லி வடை எப்படி? இவ்வளவு பின்னூட்டங்களுக்குப் பின்னும் முயலுக்கு மூணு கால் தானா இல்லை புரிந்து கொண்டு திருந்தும் மனசு உண்டா? - ஜெ.

மலைக்கோட்டை said...

<< சென்னையில் இருக்கும் பூங்காவுக்கு எல்லாம் வெறி பிடித்தவர் மாதிரி செம்மொழி என்று பெயர் வைத்தல்!! >>

ஆம் கருணாநிதி தமிழின வெறியர் தான் ..!

ஆனால் உம்மைப்போல் தமிழினத்துரோகி கிடையாது. செம்மொழி என்றாலே ஏனையா உமக்கு பற்றிக்கொண்டு வருகிறது.
உம்மைப்போல் திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்...?

சிறந்த தமிழன் said...

<< எதற்கு அவர் பொன்மொழிகள்!! அவர் கவிதை!! >>

பூனைக்குட்டி இப்போது வெளியே வந்து விட்டது.
தமிழைப்பொறுத்த வரை கருணாநிதியை விஞ்ச யாரும் கிடையாது. அவர் தமிழையாவது மதியுங்கள். குடும்பம், எனும் வலையில் சிக்காமல் இருந்திருந்திருந்தால் அவரைப்போல் சிறந்த தமிழன் / அறிஞர் யாருமில்லை.
நூலகம், பூங்கா, சமச்சீர் இவற்றில் எல்லாம் கருணாவின் தமிழ் உள்ளது. அதில் தான் ஜெயலலிதாவுக்கு இடிக்கிறது.

நூலகத்தில் “ புத்தகத்தில் உலகத்தைப்படிப்போம்” என்ற கருணாவின் வரிகள், செம்மொழிப்பூங்கா என்ற பெயரே கருணா வின் கையெழுத்தில் இருப்பது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரிகள் கூட கருணா வின் கையெழுத்தில் இருப்பதுதான் ஜெயா வுக்கு இடிக்கிறது.
அரைவேக்காடு ஜெயா திருந்தப்போவதுமில்லை, அதுவரை அவரது ஜால்ராக்கள் ஓயப்போவதும் இல்லை.

செம்மொழி said...

<< குடும்பம், எனும் வலையில் சிக்காமல் இருந்திருந்திருந்தால் அவரைப்போல் சிறந்த தமிழன் / அறிஞர் யாருமில்லை. >>

நிதர்சனமான உண்மை.
அண்ணா வுக்கும் பெரியாருக்கும் எம்ஜியாருக்கும் வாரிசுகள் இல்லை..! கரடு முரடான கொள்கைகளுக்கு நடுவிலும்.
அதனால் அவர்களின் சமூக சேவைக்கு பெயர் கிடைத்தது, கருணாவிற்கு வாரிசு இருந்து அதுவே அவரது வீழ்ச்சிக்கு காரணாமாயிருக்கிறது.

Ganpat said...

கருணாவும்,ஜெயாவும் ஜன்ம விரோதிகள் என்ற மாயையிலிருந்து நாம் எப்பொழுது வெளி வரப்போகிறோம் என்று தெரியவில்லை!

கருணா தன் ஆட்சிகாலம் முழுவதும் அடுத்த தேர்தலில் ஜெயா ஆட்சி
வருவதற்கு உழைக்கிறார் செயல்படுகிறார்.

அதேபோல ஜெயா தன் ஆட்சிகாலம் முழுவதும் அடுத்த தேர்தலில் கருணா ஆட்சி வருவதற்கு உழைக்கிறார் செயல்படுகிறார்.

ஒன்றல்ல இரண்டல்ல..கடந்த 20 வருடங்களாக இதுதான் நடந்து வருகிறது.இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் ஜன்ம விரோதிகள்!

srinivasan said...

கருணாநிதி கட்டிய பாலங்களை எல்லாம் தொங்கும் தோட்டமாக மாற்றிவிடலாமே

R. Jagannathan said...

Very well said, Mr. Ganpath! - R. J.

ஓலைச்சுவடி said...

இதற்குத்தானா ஜெயித்தார் ஜெயலலிதா?

நூலகங்களை அழிப்பது போர் வியூகங்களில் ஒன்று. அழிக்கப்பட்ட நூலகங்கள் பட்டியலைப் பண்டைய எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தில் இருந்து ஆரம் பிக்கலாம். பாரசீகத்தின் டெஸிஃபோன் நூலகம், சீனாவின் சிங் ஹுவா நூலகம், பர்மாவின் ராயல் நூலகம், யூகோஸ்லோவேகியாவின் செர்பிய நூலகம், இராக்கின் பாக்தாத் நூலகம்... நூலகங்களைத் தீயிட்டுக் கொளுத்துவதும், சூறையாடு வதும், குண்டு வீசித் தகர்ப்பதுமே உலகம் இதுவரை கண்டிருக்கும் முறைகள். ஜெயலலிதா இப்போது 'அஹிம்சா’ வழியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்... இடம் மாற்றி அழிப்பது!

ஏற்கெனவே ஜெயலலிதா ஒரு நூலகத்தை அழித்துவிட்டார். ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாளே அவர் நடத்திய தலைமைச் செயலக மாற்றத்தால் அங்கு செயல்பட்ட பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தில் இருந்த அரிய ஓலைச்சுவடிகள், செம்மொழி நூல்கள், சங்க இலக்கியப் பழைய பதிப்புகள், பழைய இதழ்கள் தொகுப்புகள் யாவும் செல்லரித்துக்கொண்டு இருக்கின்றன. உலகின் பெரிய நூலகங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நூலகம் மீது இப்போது அவர் கை வைத்திருப்பது தமிழ் அறிவுலகின் நூற்றாண்டுக் கனவு மீதான குரூரமான தாக்குதல்.

ஓலைச்சுவடி said...

தமிழகத்தில் 4,028 பொது நூலகங்களும் 12,620 ஊராட்சி நூலகங்களும் இருக்கின்றன. ஆனால், இன்றைய நவீன உலகில் 'நூலகம்’ என்ற சொல்லுக்கு உள்ள விரிவான அர்த்தத்தைக்கொண்டு இருப்பது அண்ணா நூலகம் மட்டும்தான். 172 கோடியில், 3.75 லட்சம் சதுர அடிகள் பரப்பளவில், 9 தளங்களில் அமைந்து இருக்கும் இது ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம். ஏறத்தாழ 12 லட்சம் புத்தகங்களைவைக்கும் கொள்ளள வைக்கொண்ட இதில், இப்போது 5.5 லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றில் தமிழ்ப் புத்தகங்களின் எண்ணிக்கை மட்டும் 1.5 லட்சம். இங்கு உள்ள புத்தகங்களின் மதிப்புக்கு ஓர் உதாரணம் 'என்சைக்ளோபீடியா ஆஃப் ஹ்யூமன் பயாலஜி’. மருத்துவம் தொடர்பான இந்த நூல் தொகுதியின் விலை எவ்வளவு தெரியுமா? 1,99,545.

உலகின் முக்கியமான பதிப்பகங்களான ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான நூல்கள் அத்தனையும் அண்ணா நூலகத்தில் உண்டு. யுனெஸ்கோவின் உலக இணைய நூலகத்துடன் இணைக்கப் பட்ட இதன் மூலம், உலகின் முக்கியமான நூலகங்கள் எதையும் தொடர்புகொள்ள முடியும்.

பசுமைத் தொழில்நுட்பத்தைப் பின்பற்றிக் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில் உள்ள ரம்மியமான சூழலும் நல்ல நூலக அறிவைக்கொண்ட இதன் ஊழியர்களின் ஒத்துழைப்பும் தமிழகத்தின் வேறு எந்த நூலகத்தின் சூழலோடும் ஒப்பிட முடியாதவை.

திருச்சி said...

ஜெயலலிதாவின் முடிவு நேரடியாகத் தாக்குதல் நடத்தியிருப்பது இந்தச் சமத்துவத்தின் மீதுதான். யாழ்ப்பாணம் நூலகத்தை இன வெறியர்கள் தீயிட்டு அழித்தார்கள். அண்ணா நூலகத்தை ஜெயலலிதா இடம் மாற்றி அழிக்கப்போகிறார். இரண்டுக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை!

நூலகம் இருக்கும் இடத்தில் குழந்தைகள் உயர் சிறப்பு மருத்துவமனை கொண்டுவரப்படுவதன் மூலம் தமிழகம் குழந்தைகள் நல மருத்துவத்தில் முன்மாதிரி மாநிலமாக மாறும் என்று அறிவித்து இருக்கிறார் ஜெயலலிதா.

தமிழகத்தில் குழந்தைகள் நல மருத்துவத்தில் அரசு காட்டும் அக்கறை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம், சென்னை எழும்பூர் அரசினர் குழந்தைகள் மருத்துவமனை. 1968-ல் பெரிய கனவுகளுடன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் 40 துறைகள் இருக்கின்றன. துறைகள் அளவில் ஆசியாவிலேயே பெரிய மருத்துவமனை இது.

இன்றைக்கு இந்த மருத்துவமனையின் மூளை நரம்பியல் துறையில் அறுவை சிகிச்சை செய்ய நிபுணர்கள் கிடையாது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் கிடையாது. இதய நோய்ப் பிரிவில், இதய செயல்பாட் டைத் துல்லியமாக அறிந்துகொள்ள உதவும் கேத் லேப் கருவி கிடையாது. எல்லாத் துறை களும் ஒன்று அல்லது இரண்டு சிறப்பு மருத்துவ நிபுணர்களை மட்டுமே கொண்டு இயங்குகின்றன. கிட்டத்தட்ட 25 சதவிகிதப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி அரசு மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால், ஒரே ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர் இழந்தது நினைவிருக்கலாம். தமிழகத்தில் கிட்டத்தட்ட 50 அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் நலப் பிரிவு இருக்கிறது. அநேகமாக எல்லாமே மருத்துவர்கள், உபகரணங்கள் பற்றாக்குறையுடன் தான் இயங்குகின்றன. போதிய மருத்துவர் களும் மருத்துவ உபகரணங்களும் இல்லாத நிலையில், வெறும் கட்டடங்களை மட்டும் கட்டிக்கொண்டேபோவதால் யாருக்கு என்ன பயன்?

நிச்சயமாக கருணாநிதியின் சாதனைதான்... அண்ணா நூலகம். மருத்துவமனையின் பெயரால் அதை அழித்துவிடுவதாலேயே கருணாநிதியின் பெயரையும் அழித்துவிட முடியும் என்று ஜெயலலிதா நம்பினால், அது அறியாமை.

புத்தகங்கள் said...

அமெரிக்காவின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் நூலகம் பிரிட்டிஷ் படைகளால் அழிக்கப் பட்டபோது, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் தாமஸ் ஜெபர்சன் சொன்னார்: ''மக்களின் தேவைகளை அறிந்துகொள்ள, உலகில் எந்தெந்தத் துறைகளில், என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றனவோ, அவ்வளவையும்கொண்ட நூலகமாக இதை மீண்டும் நிர்மாணிப்போம்.''

தன்னுடைய வார்த்தைகளுக்காக ஜெபர்சன் கடுமையாக உழைத்தார். அவருக்குப் பிந்தைய அமெரிக்க அதிபர்கள் அத்தனை பேரும் உழைத்தார்கள். இன்றைக்கு 460 மொழிகளைச் சேர்ந்த 14.4 கோடிப் புத்தகங்கள், வரைபடங்கள், குறுந்தகடுகள், கையெழுத்துப் பிரதிகளுடன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் உலகின் மிகப் பெரிய நூலகமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது. ஆட்சியாளர்களுக்குப் புத்தகங்களுடனும் நூலகங்களுடனும் இருக்க வேண்டிய தொலைநோக்குப் பார்வைக்கு உதாரணமாக லைப்ரரி ஆஃப் காங்கிரஸும் ஜெபர்சனும் வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார்கள்.

வரலாற்றில் ஜெயலலிதாவும் நினைவுகூரப்படுவார். பண்டைய இந்தியாவின் அறிவுச் சுரங்கமான நாளந்தா நூலகத்தை அழித்து இன்றும் நினைவுகூரப்படும் முஹம்மது பின் பக்தியார் கில்ஜிபோல!