பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 03, 2011

கனிமொழி ஜாமீன் நிராகரிப்பு

2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழியை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது. கனிமொழி தெரிந்தே இந்த பொருளாதார குற்றத்தைச் செய்துள்ளார். இது மிகவும் கடுமையானது. மேலும் பொது நிதியை தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தியுள்ளார் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

எந்தவித நிர்பந்தத்தின் அடிப்படையிலும் இந்த தீர்ப்பு அளிக்கப்படவில்லை. உண்மை மற்றும் வழக்கின் தன்மை ஆகியவற்றை கருத்தில்கொண்டு மட்டுமே இந்த தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காதது சட்டத்தின் பார்வையில் எந்தவித விளைவையும் ஏற்படுத்தாது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் முக்கியமானவைதான். ஆனால் அதேசமயம் பாதிக்கப்பட்டவர்களும், சாட்சிகளும் மதிப்பு குறைந்தவர்கள் அல்ல என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
( நன்றி: தினமணி )

சில கேள்விகள்:
1. ஏன் ராஜா இது வரை ஜாமீம் மனுவை தாக்கல் செய்யவில்லை ?
2. கனிமொழி ஜாமீன் மனுவிற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காது என்று எப்படி பத்திரிக்கைக்கு முன்பே தெரிந்தது ? ஏன் அது லீக் செய்யப்பட்டது ?
3. கனிமொழிக்க்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்று சில திமுக எம்.பிக்கள் திருப்பதியில் மொட்டை போட்டுக்கொண்டார்கள். இதை பற்றி திமுக தலைவர் என்ன சொல்லுவார் ?

அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் முன் திமுக மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று தெரிகிறது.சில காங்கிரஸ் அமைச்சர்கள் இன்றோ நாளையோ கனிமொழியை ஜெயில் சந்தித்து நலம் விசாரிப்பார்கள் என்றும் தெரிகிறது. தமிழகத்தில் இன்றும் மழை வாய்ப்பு உள்ளது !

15 Comments:

Anonymous said...

எதிர்பார்த்தது தான்.......

Anonymous said...

சில கேள்விகள்
அ) ஏன் இந்த இட்லி வடை நூலக இடமாற்றம் குறித்து வாய் திறக்கவில்லை?
ஆ) நூலகம் எதற்கு என்று இருந்துவிட்டீர்களா?
இ) தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி குறித்த தங்களை போன்றோரின் கருத்து இதுதானா?
ஈ) இட்லிவடைக்கு அம்மா சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரியதை குறித்த செய்தி கிடைக்கவில்லையா?
உ) அம்மா சொத்து குவிப்பு வழக்கில் வெற்றி பெற யாகம் செய்ததது நினைவில்லையா?
ஊ) தன்மானம் இன்றி அம்மாவின் காலில் விழும் நமது மாண்புமிகுகளை இட்லிவடை மறந்துவிட்டதா?

யதிராஜ சம்பத் குமார் said...

1.தன்னுடைய நண்பர் ஸாதிக் பாஷாவிற்கு நேர்ந்த கதி தனக்கும் நேர்ந்து விடக் கூடாதென்பதற்காகத்தான் ராசா இதுவரை ஜாமீன் கோரவில்லை.

2. என்னவெல்லாமோ லீக்காகி விட்டது. இப்பொழுது இதுதான் கவலையா?

3. கோவில் கோவிலாகவும், மடம் மடமாகவும் சுற்றும் கனிமொழியின் தாயார் ராசாத்தியை முகவால் என்ன செய்ய முடிந்தது? இனியும் அந்தியூர் செல்வராஜை நீக்கியது போல் யாரையாவது நீக்கினால் ஊர் சிரிப்பாய் சிரிக்கும்.

ConverZ stupidity said...

its payback time for mu.ka

ஜெயக்குமார் said...

நெஞ்சு வலிக்குது.. ஃபுருட்லாங்வேஜுக்கு நடப்பதை நெனச்சு..அப்பன் பாவம் புள்ளைக்குன்னாக் கூட எல்லோரும் பரிதாபப் படுவாங்க.. ஆனா ஃப்ருட்லாங்வேஜ் அப்பன்கூட சேந்து தானும் பாவம் செஞ்சு இன்னிக்கு எல்லோரும் சிரிப்பா சிரிக்கிற மாதிரி ஆகிப்போச்சு..என்னோட கவலையெல்லாம் ஜெயலலிதாவின் அராஜக அரசியலினால் மீண்டும் அந்த வீல்சேர் ஆட்சிக்கு வந்து தொலைந்தால் ஃப்ருட்லாங்வேஜ் தியாகிபோல சித்தரிக்கப்படக் கூடும்..

சீனு said...

//3. கனிமொழிக்க்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்று சில திமுக எம்.பிக்கள் திருப்பதியில் மொட்டை போட்டுக்கொண்டார்கள்.//

ஐய்யைய்யோ...அப்ப அந்த முடிகளை எல்லாம் திரும்ப கேட்பார்களோ...!!!???

R. Jagannathan said...

1. யதிராஜ் அவர்களின் கணிப்பு (ராஜா ஏன் ஜாமீன் கோரவில்லை என்பது பற்றி) சரியாகத் தான் தெரிகிறது.
2. அனானிமஸின் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன? (நூலக மாற்றம், ஜெ தன் வழக்கில் ஆஜராகாமல் தவிர்ப்பது பற்றி.)
3. ஜட்ஜ் என்பவர் வாதி, ப்ரதிவாதி களின் வக்கீல்களின் வாதங்களை வைத்துத் தானே முடிவு பண்ணவேண்டும்? எத்தனை தடவை கேஸ்கள் கோர்ட்டுக்குப் போனபின்னும் இரு தரப்பும் வெளியில் சமரசம் செய்துகொண்டு கேஸ்கள் தள்ளுபடி செய்யப்பட்டன? அப்போதெல்லாம் கோர்ட்டுகள் ஒரு தரப்பு குற்றவாளி என்று தண்டிப்பதில்லையே! இப்போதும் சார்ஜ் ஷீட் போட்டாயிற்று, கேஸ் நடக்கட்டும். எத்தனை நாளாகுமோ முடிய. அது வரை ஜட்ஜ் கனியை ஜெயிலில் வைத்திருப்பாரா? அல்லது ஒரு ஃபைன் நாள் அவரே ஜாமீன் கொடுப்பாரா?

4. தி மு க வினர் திருப்பதியில் மொட்டை: மு க என்ன சொல்வார்? ‘நான் தான் கடவுள் இல்லை என்று சொன்னேனே’. (தனி ரூமில் அவர் இப்போது பிரார்த்தனை செய்து கொண்டிருப்பாரோ?)
-ஜெ.

vsankar said...

Kalaignar Delhi povaaraam.Soniavai parpparam.Udalnilayai mattum visaarithaaraam.Tharcheyalaga cbi arivikkirathu-Kaniyin jameen manuvai edhirppathillai endru.Makkalai ippadi muttaalaakinal needhimandram vaithathu aappu.

Dhas said...

எல்லாரும் தப்பா புரிஞ்சுக்கிட்டு பேசுறீங்க.

ஜாமீன் கொடுக்காம இருந்தாதான் வழக்கு சீக்கிரமா நடக்கும். அவசர அவசரமா தப்பு தப்பா சாட்சிகள் வரும். CBI (Congress Bureau of Investigation) அழகு நமக்கு தெரியும்.

தண்டனை கம்மியா வெளிய வர நிறைய வாய்ப்பு இருக்கு!!

Anonymous said...

bail got denied due to the negative oriented argument of Siddharth Baruva's( Telecom Secretary)advocate
who clearly said it is political pressure on CBI - not to oppose Kanis bail. both are in jail for similar charges but Kani is more influential than Baruva so as to make the case weak.
she is the conduit for the bribe money given MK TV.whop can accept that fruit vendor is interested in TV Media shares- if so kani & Mk could ahve gone to our Koyembedu whole seller & others.
kadhula Poo for all of us-- but judge said not for me as of date- pogapoga ennaagumue-

For MK-chimbara petrorin vaitherichall indru attuvakkirathy

ரூபன் said...

தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது...

ஆஹா அருமையான finishing..

Anonymous said...

சில கேள்விகளுக்கு சில பதில்கள்

அ) அறிவுப்பு தானே செய்திருக்கிறார்கள்? இன்னும் மாற்றவில்லையே!

ஆ) தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களை தர மேம்படுத்துதல் செய்யாமல் கோடி கோடியாகக் கொட்டி (ஊழல் செய்து) தன் பெயர், புகழுக்காக ஒரு நூலகத்தை ஏற்படுத்தியவர் அய்யா. அது மாற்றப்படுவதால் ஒன்றும் குடி முழுகி விடாது. (ஒரு நாளைக்கு அந்த நூலகத்திற்கு எத்தனை பேர் வந்து செல்கிறார்கள் தெரியுமா? 350-400 கூட கிடையாது) அதுமட்டுமல்லாமல் மாற்றம் தானே செய்யப் போகிறார்கள், இழுத்து மூடவில்லை அல்லவா?

இ)நூலக மாற்றத்துக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

ஈ) அது வழக்கமான நியூஸ் தானே! அதில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது? அவருக்குத்தான் ‘வாய்தா ராணி’ என்று பட்டமே கொடுத்தாகி விட்டதே, பிறகு என்ன?

உ) ஜெ. யாகம் செய்வது இது என்ன புதுசா? வாரா வாரம் கூட ஏன் தினந்தோறும் கூட நடக்கலாம். நடக்கக் கூடும். (சாமி இல்லை என்று வெளியே கூறி விட்டு, வீட்டிற்குள் சாமி கும்பிடுபவர்களும், கோயில் கோயிலாகச் சுற்றுபவர்களும், மொட்டை அடிப்பவர்[;-]களும்தான் வெட்கப் பட வேண்டும்)

ஊ) ஜெ. காலில் விழுவது என்ன புதுசா? தனியறையில் நான்கு கதவுகளுக்குப் பின்னால் காலில் விழுந்து (அ) கையைப் பிசைந்து “அன்னை”களிடம் கெஞ்சுவதை விட பப்ளிக்காகக் காலில் விழுவதுது எவ்வளவோ பரவாயில்லை.

(பின் குறிப்பு - இது இட்லிவடையின் கருத்தல்ல. உண்மைத் ‘தம்பி’யின் கருத்து)

Anonymous said...

To Anonymous :
If I were idly vadai, I would answer as follows
a. Changing the library premises is not the crying issue of the day. The library is still intact, and books are not burnt and thrown away. Only the location is changed.
b. Jayalalitha has done this action just to snub Karunanidhi. I personally do not support this action of hers. This is condemnable. However, this is not as big as a serious corruption issue that rocks the country. In fact, I was also awaiting write-ups on the Kanimozhi bail issue, like many others in the country.
c. What has this got to do with backward classes? Are you trying to rake up an issue for the sake of it?
d. Idlyvadai defintely would have got information about Jayalalitha's petition, and her petition is part of legal process. Even Kanimozhi's bail petition was known in advance, but there was no article on that, because it is usual for the accused to take the recourse available in law. If Jayalalitha's petition is rejected, then it might be a news. REFER to posting dated 19/10/11, which criticises her actions related to her petitions. Is this posting not visible in your computer?
e. Nothing wrong in anybody doing yagam. But criticising other doing yagam in vulgur words and me doing yagam at the backyard is what is condemnable. Try to understand the real meaning here
f. Manbumighus never have thanmanam in any party. In ADMK, it is more visible. What happened to Parithi? He wanted to show his 'thanmanam' and he now has been made to lose his 'manam' when the leader accused him of swindling money and backstabbing.

Anonymous said...

Hello இட்லி

நூலக இடமாற்றம் ??

R. J. said...

கனிமொழிக்கு பெய்ல் கிடையாதா? நேற்று பூரா சன் ந்யூஸும் கலைஞர் ந்யூஸும் பார்த்துக் கொண்டிருந்தேனே - அவற்றில் இந்த ந்யூஸ் வர வில்லையே! - ஜெ.