பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 01, 2011

வாழ்க நகைச்சுவை !

இந்த வார துக்ளக் ஆசிரியருக்கு ப.சிதம்பரம் எழுதியுள்ள கடிதம்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,


துக்ளக் 19.10.2011 இதழில் வெளியான கேள்வி–பதில் பகுதியைப் படித்தேன். கேள்வி கேட்ட சென்னையைச் சேர்ந்த நண்பர் ஆர்.நாகராஜன் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லையே என்று வருத்தம் அடைந்தேன். தங்களுடைய பதிலைப் பார்த்தவுடன் தங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறது என்பது ஆறுதல் அளித்தது. அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 27-ஆம் பக்கத்திலும் மற்றும் 35-ஆம் பக்கத்திலும் வெளியான கேலிச் சித்திரங்களைப் பார்த்த பிறகு, தங்களுடைய ஆசிரியர் குழுவில் பலருக்கு நகைச்சுவை உணர்வு இல்லையோ என்று கேட்கத் தோன்றுகிறது.

‘வாழ்க நகைச்சுவை’ – என்று சொல்லும் காலம் வரும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி!

– ப. சிதம்பரம்,
உள்துறை அமைச்சர், புதுடெல்லி.


அவர் குறிப்பிட்டுள்ள கேள்வி பதில், கார்ட்டூன் கீழே....


கேள்வி-பதில்

ஆர். நாகராஜன், சென்னை-117

கே : ‘எனக்குச் சற்று ஞாபக மறதி உள்ளது’ – என்று உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ப.சிதம்பரம் பகிரங்கமாகக் கூறுகிறாரே?

ப : 2ஜி விவகாரத்தில் ஏல முறையை வற்புறுத்த சிதம்பரம் தவறினார் என்ற குற்றச்சாட்டைக் கூறுகிற நிதியமைச்சகத்தின் குறிப்பு பற்றியும், பின்னர் பிரணாப் முகர்ஜிக்கும் சிதம்பரத்திற்கும் ஏற்பட்ட ‘சமாதானம்’ பற்றியும், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில்தான், சிதம்பரம் ‘தனக்கு ஞாபக மறதி’ என்று கூறினார்.

நிருபர்களின் சில கேள்விகளுக்குப் பதில் அளிக்க விரும்பாதவர்கள், ‘இது பற்றி எதுவும் சொல்வதற்கில்லை’ என்று கூறுவார்கள். அல்லது ‘இப்போது கருத்து தெரிவிக்கவில்லை’ என்று கூறுவார்கள். சிலர் வேறு விதங்களிலும் பதில் சொல்வார்கள். அந்த மாதிரிதான் சிதம்பரமும் ‘தனக்கு ஞாபக மறதி’ என்று கூறியும், ‘தனக்கு கணக்குத் தெரியாது’ என்று சொல்லியும் சில கேள்விகளைத் தவிர்த்தார்.

இதை ஒரு நகைச்சுவையாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, சீரியஸாக எடுத்துக் கொண்டு, ‘சிதம்பரத்திற்கு ஞாபக மறதியா? அவருக்குக் கணக்குத் தெரியாதா?’ என்று கேட்பதில் அர்த்தமில்லை.

கார்டூன்2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அப்பப்போ குண்டு வெடிக்கும் போது தரும் அறிக்கையைவிடவா இது பெரிய நகைச்சுவை ? வாழ்க நகைச்சுவை! என்று சொல்லும் காலம் நிச்சயம் வரும்!10 Comments:

jaisankar jaganathan said...

.//எனக்குச் சற்று ஞாபக மறதி உள்ளது//

இதே பதில எக்ஸாம்ல சொன்னா மட்டும் ஏன் திட்டுறாங்க வீட்டுல

R. Jagannathan said...

From Cable Sankar:

ரெண்டு இட்லி.. ஒரு வடை..


இந்த சொல்வடை பொது மக்களிடையே ஒரு குறிப்பிட்ட குழுவினரை கிண்டல் செய்ய மிகப் பிரபலம். இது யாரைக் குறிக்கும் என்றால் ஜூனியர் ஆர்டிஸ்ட் எனப்படும் துணை நடிகர்களை குறிக்கும். பொதுமக்களிடையே புழங்கும் இந்த மாதிரியான கிண்டல் எப்படி வந்தது என்று பார்க்கும் போது அவர்கள் சொல்லும் காரணம். படு கற்பனையான விஷயம். காலையில் டிபனுக்கு ரெண்டு இட்லி, ஒரு வடை சாப்பிட்டு விட்டு கும்பலில் நின்றுவிட்டு போய்விடுபவர்கள் என்று கிண்டலாய் சொல்கிறார்கள்.

ஆனால் இவர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு சினிமா முழுமையாகாது என்பது சினிமாவில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். ............... இப்படி இவர்களை பற்றி சொல்வதானால் நிறைய சொல்லலாம். சரி அதை விடுங்கள் நாம் இப்போது நம் கட்டுரையின் தலைப்புக்கு வருவோம். ஷூட்டிங்கில் இரண்டு இட்லி, வடை மட்டுமே சாப்பிடுபவர்கள் என்று யார் இப்படி கதை கட்டி விட்டது என்றே தெரியவில்லை. ஒரு நாளைக்கான ஷூட்டிங் மெனுவை சொல்கிறேன் கேளுங்கள். இட்லி, வடை, பொங்கல், வடைகறி, மூன்று விதமான சட்டினிகள், ராகி, அல்லது கோதுமை உப்புமா, வெள்ளை உப்புமா அதாங்க ரவை உப்புமா என்று வரிசைக் கட்டி இருக்கும் அயிட்டங்களுடன், டீ, காபியும் உண்டும். இது தவிர எல்லோருக்கும் கேன் வாட்டரும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு டீ யோ காபியோ இருக்கும். இது தவிர மதியம் சாதம், ஒரு கலந்த சாதம், சாம்பார், ரசம், மோர், நான் வெஜ் என்றால் குழம்போ, அல்லது ட்ரை அயிட்டமோ ஒரு முறை மட்டுமே காட்டப்படும். ஆனால் உண்டு. முக்கியமாய் லைட்மேன்களுக்கு நான் வெஜ் இருந்தாக வேண்டும். பளுவான லைட்டுகளை தூக்கிச் செல்பவர்களாதலால் அந்த கவனிப்பு. இது தவிர இரண்டு பொரியல், கூட்டு, சைவமாய் இருந்தால் அப்பளம், அசைவம் சாப்பிட்டால் கிடையாது. திரும்பவும் மதியம் ஒரு மூன்று மணிக்கு ஒரு டீயோ, அல்லது லெமன் டீயோ உண்ட பின் வரும் மயக்கத்தை தெளிவிப்பதற்காக.. மறுபடியும் டீ.. காபி.. என்று ஓடும் . சாயங்காலம் பேட்ட வாங்கிக் கொண்டு போகும் போது டிபன் என்று ஒரு ஸ்வீட், ஒரு காரம் கொடுக்கப்படும்.

பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், என்று வெய்யிலில் கூட்டமாய் நிற்கும் காட்சியன்று உச்சி வெய்யிலுக்கும் மோரோ, அல்லது சில்லென லெமன் ஜூஸோ, அல்லது இர்ண்டு லிட்டர் பேண்டாவோ அனைவருக்கு வெய்யில் ஏற ஏறக் கொடுக்கப்படும். இதைத் தவிர, இரவு ஷூட்டிங் என்றால் நிச்சயம் டீ காபி தொடர்வதும், அது மட்டுமில்லாமல், இரவு சாப்பாட்டுக்கு இட்லி, பரோட்டா, தோசை, சட்னி வகைகள் மூன்று, வடகறி அல்லது குருமா.. அசைவத்தில் சிக்கனோ, மீனோ குழம்பாய் இருக்கும். பைனல் டச்சாய் தயிர்சாதம் ஊறுகாய் கூட இருக்கும்.

அவுட்டோர் கூட்டிக் கொண்டு போனால் காலையில் ரூமில் காபி/டீயுடன் தான் பள்ளியெழுச்சியே நடக்கும். இப்படி ஒரு ஆளுக்கு சைவம் என்றால் இன்றைய விலைவாசிக்கு இவ்வளவும் போட்டு நூறு ரூபாயிலிருந்து நூற்றியமைப்பது ரூபாய் வரை செலவு செய்கிறார்கள். விஜயகாந்த், எம்.ஜி.ஆர் படப்பிடிப்புகளில் அவர்கள் சாப்பிடும் சாப்பாடே துணை நடிகர்களுக்கும் போடச் சொல்லி பசியாறுவதை பார்த்து சந்தோஷப்பட்டவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். எனவே இனிமேலாவது கட்டுரைத் தலைப்பை வைத்து பொத்தாம் பொதுவாய் யார் மனைதையும் ஏன் இப்படி சொல்கிறேனென்றால்.. சாப்பிடுபவர்களையும் சாப்பாடு போடுபவர்களையும் சேர்த்து அவமதிப்பது போலிருக்கிறது அந்த சொல்வடை.. அவர்களும் கலைஞர்கள் தான். அவர்கள் இல்லாமல் சினிமா இல்லை. ..இல்லை.

- R. J.

NIZAMUDEEN said...

ஆஹா, இதுவல்லவோ நகைச்சுவை?

விச்சு said...

இனிமேல் இதுபோன்ற கேள்விகளைத் தவிர்க்க இந்த பார்முலாவை மற்றவர்களும் பின்பற்றலாம். வாழ்க ஞாபக மறதி...

ரூபன் said...

கூடிய விரைவில் இட்லி வடை ஆசிரியருக்கும் உள்துறை அமைச்சரிடம் இருந்து பதில் வரும் என்று எதிர் பார்க்கிறேன்..

Harish.M said...

இந்த கேலிச்சித்திரங்களைப் பற்றி உள்துறை அமைச்சர் இவ்வளவு வருத்தப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. இவருக்கும் கூட நகைச்சுவை உணர்வு இல்லாமல் போய்விட்டதோ என்னவோ.சரி, இது என்ன அரசாங்க நடவடிக்கையா இதையும் நகைச்சுவையைக் கருத,தன்னைப் பற்றிய விமர்சனம் அல்லவா அதனால் இப்போது நகைச்சுவை உணர்வு மறைந்து அறிவுரை சொல்லும் பொறுப்புணர்வு வருகிறது.பலே இது ஒரு வித selective மறதி தான் போல

Harish.M said...

இந்த கேலிச்சித்திரங்களைப் பற்றி உள்துறை அமைச்சர் இவ்வளவு வருத்தப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. இவருக்கும் கூட நகைச்சுவை உணர்வு இல்லாமல் போய்விட்டதோ என்னவோ.சரி, இது என்ன அரசாங்க நடவடிக்கையா இதையும் நகைச்சுவையைக் கருத,தன்னைப் பற்றிய விமர்சனம் அல்லவா அதனால் இப்போது நகைச்சுவை உணர்வு மறைந்து அறிவுரை சொல்லும் பொறுப்புணர்வு வருகிறது.பலே இது ஒரு வித selective மறதி தான் போல

Anonymous said...

ரெண்டு இட்லி ஒருவடைக்கு வேறு அர்த்தம் உண்டே..!

Anonymous said...

\\ரெண்டு இட்லி ஒருவடைக்கு வேறு அர்த்தம் உண்டே..!//

அடக் கண்றாவியே! கந்தனுக்கு புத்தி கவட்டுக்குள்ளதனே! அதாவது முருகனோட நினைப்பெல்லாம் தான் உட்கார்ந்திருக்கும் மயில் மீது என்ற பொருளில் சொன்னேன். இதுக்கும் தப்பர்த்தம் எடுத்துக்க வேண்டாம் அனானி சார்.

இ. வ. ரசிகன்.

Anonymous said...

கேபிளின் பதிவில் அப்படி என்னா இருக்குன்னு இங்கே விளம்பரம் ?????


வே....வே...லாயுதம்.