பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 04, 2011

யுரேகா ஓட்டம் 2011

அன்புள்ள இட்லி வடைக்கு,

எனது முந்தைய பதிவுகளை தாங்கள் இட்லி வடையில் வெளியிட்டுள்ளீர்கள்.. அதற்கு முதற்கண் நன்றி. மேலும் நாங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டி நடத்தவிருக்கும் "யுரேகா ஓட்டம் 2011" பற்றிய அறிவிப்பையும் தங்கள் வலைத்தளத்தில் பதிவிட வேண்டுகிறேன்.

இத்துடன் ஓட்டம் பற்றிய விபரங்கள் அடங்கிய போஸ்டரையும் இணைத்துள்ளேன்.

கீழேயுள்ள கட்டுரையை பிரசுரித்தால், பல்லோர் வாசித்து பங்கு பெறுவர்.

நன்றி,
செல்வா

அக்டோபர் 2ஆம் தியதி டில்லியில், டைம்ஸ் ஆப் இந்திய நாளிதளால் இந்நிறுவனத்திற்கு "Social Impact Award" கிடைத்தது குறிப்பிட தக்கது. மேலும் இந்த விருதை தமிழகத்திலுள்ள நெர்குனபட்டு என்ற கிராமத்தை சேர்ந்த அஸ்வினி என்கிற பெண் பெற்றுக்கொண்டார். அஸ்வினி 4ஆம் வகுப்பில் தமிழ் வாசிக்க தெரியாமால் தடுமாறிய ஒரு குழந்தை. இவரது தந்தை வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் மற்றும் தாயார் மன நலம் குன்றியவர். 4ஆம் வகுப்பில் இவரால் வாசிக்க இயலாததைக்கண்டு யுரேகா கல்வி இயக்கத்தினர், பகுதி நேர வகுப்பில் சேர்த்தனர்.. தற்போது 11ஆம் வகுப்பு படிக்கும் அஸ்வினி ஒரு கவிஞர். தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ள ஒரு புதுமை பெண். இதுபோல் ஆயிரமாயில் அஸ்வினிகள் யுரேகா கல்வி இயக்கத்தின் மூலம் பயனுருகின்றனர். இதற்க்கு நீங்களும் உதவி புரியலாம்.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 14ஆம் தியதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.. குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு யுரேகா கல்வி இயக்கம் இரண்டாவது ஆண்டாக சென்னை மரினாவில் "யுரேகா ஓட்டம்" நடத்தவுள்ளது .

தமிழ்நாட்டில் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமென்பதர்க்காகவும், தற்போதய கல்வி நிலையை மக்களுக்கு எடுத்து சொல்வதற்காகவும் இந்த ஓட்டம் நடைபெற உள்ளது. யுரேகா கல்வி இயக்கம் தனது பணியை தற்போது தமிழகத்தில் 1000 கிராமங்களில் செய்து வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மாலை நேர வகுப்புகள் மூலம் குழந்தைகளுக்கு தரமான கல்வியினை அளித்து வருகிறது. உங்களை மற்றும் என்னைப்போல தன்னார்வ தொண்டாளர்களின் உதவியுடன் கல்வி மட்டுமல்லாது ஆரோக்கியம், மற்றும் ஒருமித்த கிராம வளர்ச்சி பணிகளை செய்ய துவங்கி உள்ளது. இன்னும் சில வருடங்களில் 1000 மாதிரி கிராமங்களை உருவாக்குவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

இந்த யுரேகா ஓட்டத்தில் பங்கு கொள்ளுங்கள்... நீங்களும் யுரேகா கல்வி இயக்கத்திற்கு உங்கள் ஆதரவை அளியுங்கள்..

( படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )
நாள் : நவம்பர் 12, 2011
இடம் : சென்னை மரினா கடற்கரை,
துவக்கம் : காந்தி சிலை அருகில்
நேரம் : காலை மணி 6.30


வலைத்தளத்தில் பதிவிட - http://www.eurekachild.org/run2011/
முகநூலில் உங்கள் வரவை பதிந்திட - https://www.facebook.com/event.php?eid=231319860256166
உங்களால் உங்கள் நண்பர்களிடதோ அல்லது உங்கள் அலுவலகத்திலோ பதிவு சீட்டை விற்க முடிந்தால் பதிவு சீட்டுகளை பெற அணுகவும் - செல்வா - 9790951652 ,volunteer@aidindia.in , aid.selva@gmail.com

10 Comments:

selva ganapathy said...

நன்றி இட்லி வடை!,
நீங்கள் எப்போதும் எங்களுக்கு அளிக்கும் ஆதரவால் நெகிழ்ச்சி அடைகிறேன்! :-)

Anonymous said...

இந்த அமைப்பு நக்சல் ஆதரவு அமைப்பான எய்ட்ஸ் இந்தியா என்னும் இந்திய விரோத சக்தியால் நடத்தப் படுவது. இந்திய தேசீயத்தில் நம்பிக்கையுள்ள இட்லி வடையில் இந்த தேச விரோத அமைப்புக்கு விளம்பரம் வருவது ஆச்சரியமாக உள்ளது

selva ganapathy said...

அய்யா! நீங்கள் உங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை... சரி... ஆதாரம் ஏதேனும் இருந்தால் சமர்பிக்கலாமே!அதுவும் எய்ட் இந்தியா என்னும் நிறுவனத்தை தாங்கள் எய்ட்ஸ் இந்தியா என்றல்லவா எழுதி இருக்கிறீர்கள்!

Anonymous said...

நக்சல் ஆதரவு இயக்கம் ஒன்றைப் பற்றி எழுதும் பொழுது பெயரைப் போட்டு எழுத உயிர் பயம் தடுக்கிறது. ஆதாரங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. ஆஷா என்ற அமைப்பின் நிறுவனரான சந்தீப் பாண்டேயும், எய்ட் அமைப்பின் நிறுவனரான பாலாஜி சம்பத்தும் அப்பட்டமான தேச விரோத நிலைப்பாடு எடுத்தவர்கள். பாக்கிஸ்தானை ஆதரிப்பவர்கள். ஆதாரங்களை எனது அடுத்த பதிலில் இடுகிறேன். எய்ட் அமைப்பை எய்ட்ஸ் அமைப்பு என்று சொன்னதிலும் தவறேதும் இல்லை.

எய்ட் அமைப்பு பற்றிய வண்டவாளம் வெளிப்பட்டு விட்டபடியால் இப்பொழுது பெயரை மாற்றிக் கொண்டு யுரேக்கா என்ற பெயரில் வருகிறீர்கள். உங்களை நம்பி ஏமாறவும் நாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள்.

selva ganapathy said...

ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்....

Anonymous said...

சந்தீப் பாண்டே, பாலாஜி சம்பத் இருவருமே இரண்டு பெரிய சேவை அமைப்பை நடத்தி வருபவர்கள். சந்தீப் பாண்டே ஆஷா என்ற அமைப்பையும் பாலாஜி சம்பத் எய்ட் இந்தியா என்ற அமைப்பையும் நடத்தி வருபவர்கள். இருவருமே மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் அவர்களுக்குத் தார்மீக ஆதரவு அளித்து வருபவர்கள். மாவோயிஸ்டுகள் மட்டும் இன்றி ஜிஹாதிகளுக்கும் சந்தீப் பாண்டே ஆதரவு அளித்து வருபவர். ஆனால் ஐ டி இளைஞர்கள் குறிப்பாக அமெரிக்கா வாழ் இந்திய இளைஞர்கள் இந்த இரு அமைப்புகளுக்கும் பெரும் அளவில் நிதி திரட்டித் தந்து உதவி செய்கிறார்கள். அவர்களில் எவருக்கும் இவர்களது பின்ணணியோ அல்லது பொதுவாகவே நாட்டு நடப்பு எதுவும் தெரிவதில்லை. அவர்களுக்கு தாங்கள் ஒரு செக்யுலரான சேவை அமைப்புக்கு உதவுகிறோம் என்ற பெருமிதமே உள்ளது. சுநாமியின் பொழுது பாலாஜி சம்பத்தின் அமைப்பு டி ஒய் எஃப் ஐ யுடன் இணைந்து அமெரிக்காவில் வசூலான நிதியைச் செலவு செய்தது. வெளியில் தங்களை கொள்கை/கட்சி/ம்தம் சாராத அமைப்பு என்று அறிவித்துக் கொண்டு அப்பாவிகளைப் பயன் படுத்தி நிதி திரட்டிக் கொண்டு பின்னர் தங்கள் கொள்கை சார்ந்த அமைப்புகளின் நலனுக்குச் செயல் படுபவர்கள் என்பதே இந்த இருவர் மீதுமான குற்றசாட்டு. உதாரணமாக எய்ட் அமைப்பு என்பது இந்தியாவில் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவும் அமைப்பு என்ற எண்ணத்தில் மட்டுமே ஆயிரக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் நிதி அளிக்கிறார்கள். ஆனால் சர்ச்சைக்குரிய நக்சல் ஆதரவாளரான பினாயக் சென்னின் விடுதலைக்காக தீவீரமாக எய்ட் அமைப்பு போராடி வருகிறது http://aidindia.org/main/content/view/1361/74/ ஒரு சமூக சேவை அமைப்புக்கும் மாவோயிஸ்ட் ஆதரவாளருக்கும் என்ன சம்பந்தம்? ஏன் எய்ட் அமைப்புக்கு நிதி தருபவர்கள் எல்லாம் பினாயக் சென்னின் விடுதலைக்காக மெழுகு வர்த்தி ஏந்தி ஊர்வலம் போனார்கள் அல்லது போக வைக்கப் பட்டார்கள்? பாலாஜியின் மீதும் சந்தீப் மீதும் இன்னும் பல்வேறு குற்றசாட்டுக்கள் உள்ளன. இவர்களது சேவை நிறுவனங்களுக்கு கொடுக்கும் நிதி மறைமுகமாக மாவோயிஸ்ட் கொள்கை வளர்ச்சிக்கான நிதியே என்பது பலமுறை நிரூபிக்கப் பட்டுள்ளது. பாலாஜி சம்பத் வெறும் சமூக சேவகர் மட்டும் என்றால் அவர் ஏன் தன் சேவை அமைப்பை பினாயக் சென் அரசியலுக்குப் பயன் படுத்துகிறார்? அப்படி அநியாயத்தை எதிர்த்துப் போராடுவதும் எய்ட் அமைப்பின் குறிக்கோள் என்றால் இந்தியா முழுவதும் கைது செய்யப் பட்டு பல ஆண்டுகளாக விசாரணை ஏதும் இன்று சிறையில் அடை பட்டிருக்கும் அப்பாவிக் கைதிகளுக்காகவும் இவர் குரல் கொடுத்திருக்கிறாரா? ஏன் குறிப்பாக விநாயக் சென்னுக்கு மட்டும் இவர் தன் அமைப்பைப் பயன் படுத்துகிறார்? இது ஒரு தந்திரமான உபாயம். உலகம் முழுதும் உள்ள அப்பாவி இளைஞர்களிடம் மெதுவாக இவர்களது கொள்கைகளைத் திணிக்கிறார்கள். மாவோயிஸ்டுகளை தியாகிகளாகவும் போராளிகளாகவும் சந்தேகப் படாத மக்களிடம் நிறுவுகிறார்கள் அதற்காக இவர்களது சேவை அமைப்புகளை ஒரு கேடயமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்கள். இன்னும் சொல்ல நிறைய உள்ளது. நீளம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். அடுத்த முறை எய்ட் இந்தியாவுக்கோ ஆஷாவுக்காகவோ நிதி அளிக்கும் முன்னால் அவர்கள் ஏற்பாடு செய்யும் மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்ளும் முன்னோ கொஞ்சம் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு உங்களது பணத்தையும் நேரத்தையும் செலவு செய்யுங்கள். சந்தீப் பாண்டே, பாலாஜி சம்பத் போன்றோர் அளித்த பேட்டிகளைப் படித்துப் பாருங்கள். அவர்களது கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் முழுக்க அறிந்து கொண்டு செயல் படுங்கள்

இந்த விளம்பரத்தைப் போட்டதன் மூலமாக இட்லி வடை நக்சல்களுக்கு ஆதரவு அளிக்கிறாரா என்பதைத் தெளி படுத்த வேண்டும்.

Anonymous said...

குற்றச்சாட்டுக்குப்பின் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று எய்ட் தளம் அவசர அவசரமாக அந்த வலைப்பக்கங்களை அழித்தது. DYFI -யோ 'எய்ட் இருக்கிறது; எமக்கு இனி பணத்துக்குக்கவலையில்லை' என்று கொண்டாடியது. எய்ட் அமைப்பின் தலைவர் ஒருவர் தன் மனைவியின் பிரசவத்துக்கு இந்தியாவிலிருந்து அமேரிக்கா வந்து அமெரிக்காவில் குழந்தை பெற்று குழந்தைக்கு குடியுரிமை வாங்கிய பின் இந்தியா திரும்பினார். இந்தி எதிர்ப்பை எல்லோருக்கும் போதித்தவர்கள் தன குழந்தைகளை ஹிந்தி படிக்க வைத்து வட நாட்டில் கோலோச்ச தடை போடாதாது போல, ஏகாதிபத்திய அமெரிக்க வெறுப்பு, அமெரிக்க குடியுரிமையை அரும்பாடுபட்டாவது தன குழந்தைக்கு வாங்கித்தர இவர்களுக்கு தடையாக ஆகவில்லை. மார்க்சிய சார்பையும், இந்திய இறையாண்மைக்கு எதிரான அரசியல் தள செயல்பாடுகளையும் பற்றி கேள்வி கேட்டால் அடித்தள மக்களுக்கு எவ்வளவு சேவை செய்கிறோம் பாருங்கள் என்பது மட்டுமே திருப்பித்திருப்பி இவர்களால் சொல்லப்படுகிறது. இவர்களின் சேவை பல நேரங்களில் புல்லரிப்பை ஏற்படுத்துவது. படேல்களின் வியாபாரத்திற்கு எதிராக கச்சை கட்டிக்கொண்டு எய்ட் அமைப்பு பிரசாரம் செய்தது. மோடி வருகையை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் முன்னணி வகித்தது. உங்களது நன்கொடைகளின் துணையுடன் பல லட்சக்கணக்கான ரூபாய் செலவில் பாகிஸ்தானுக்கு சமாதான நடைபயணம் . நடத்தியது. இப்படிப்பட்ட சேவைகள் ஒன்றா இரண்டா? பாகிஸ்தானுக்கு நடை பயணம் மேற்கொண்டவர்கள், சாவும் கற்பழிப்பும் நிழலாய்த்துரத்த, ஆயிரமாண்டு சொந்த நிலங்களும் சொத்து வளங்களும் பகிரங்கமாகப் பறிக்கப்பட்டு துரத்தப்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக, தெருமுனை டீக்கடைக்காவது நடந்திருப்பார்களா? மாறாக, இந்திய முஸ்லீம் கவுன்சிலின் மாநாடடில் பங்கு பெற ஏழாயிரம் டாலருக்கு மேல் - இந்திய கிராம சேவைக்கென்று நீங்கள் தந்திருக்கக்கூடிய பணத்தை- எய்ட் அமைப்பு செலவழித்தது. ஆனால் சின்மயா பள்ளிகளுக்கு பணம் திரட்ட வரும்போது இந்த செக்யுலர் நெஞ்சரிப்பு எல்லாம் பாலாஜி சம்பத்துக்கு தடையாக இருக்கவில்லை. சேவை என்கிற முகமூடிதான் எவ்வளவு விஷயங்களுக்கு, எத்தனை அமைப்புகளுக்கு, எவ்வளவு வசதியாக ஆகி விட்டது!

Anonymous said...

http://www.aidindia.info/ http://www.vigilonline.com/index.php?option=com_content&task=view&id=969&Itemid=1

இதையெல்லாம் படித்து விட்டு இட்லி வடை போன்ற பொறுப்பான இந்திய தேசீயத்தை ஆதரிக்கும் பதிவர்கள் ஒரு இந்திய விரோத, மாவோயிஸ்ட் ஆதரவு, பாக்கிஸ்தான் மற்றும் தீவீரவாத ஆதரவு இயக்கங்களுக்கு ஏன் இலவச விளம்பர்ம் அளிக்கிறார் என்பதுதான் புரியவில்லை. இதைப் படிக்கும் இட்லி வடை வாசகர்களாவது விழித்துக் கொள்ளட்டும்

selva ganapathy said...

இணையத்தில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்... நாங்கள் செய்யும் பணி பற்றி சந்தேகமிருந்தால், நாங்கள் பணி செய்யும் எங்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள்... எங்கள் அலுவலக முகவரியும் அணைத்து வலைதளத்திலும் உள்ளது!.. எப்போது வேண்டுமானாலும் வந்து பாருங்கள்... இல்லை இணையத்தில் உள்ளதை படித்து உண்மை என்ன என்பதை ஏற்க மறுத்து கட்டுரை எழுதுவதாயின் அது உங்கள் விருப்பம்!

Anonymous said...

ஐயா

நான் இணையத்தில் படிப்பதையெல்லாம் நம்பும் அளவுக்கு இன்னும் கேனையில்லை. உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் நிறுவனங்களை நடத்தும் ஆட்களின் யோக்யதையை எல்லாம் நன்கு அறிந்த பின்னால்தான் இந்த எதிர்ப்பே. நானும் உங்களைப் போல அப்பாவியாக இந்த எய்டுக்கு எல்லாம் காசு கொடுத்தவன் தான். உங்களைப் போன்ற அப்பாவிகளை வைத்துக் கொண்டு இந்திய விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். போய் உங்கள் தலைவர் பாலாஜி சம்பத்திடம் போய் கேளுங்கள் யார் கொடுத்த காசில் அவர்கள் பாக்கிஸ்தானுக்கு டூர் போய் ஆதரவளித்தார் என்று? விநாயக் சென்னை விடுவிப்பதற்கும் எய்டுக்கும் என்ன சம்பந்தம் என்று? இணையத்தை நம்பக் கூடாது சரி, அலலது உங்கள் வலைத்தளத்தையும் நம்பக் கூடாதா? உங்கள் எய்ட் வலைத்தளத்தை நீங்களாவது படிப்பதுண்டா? அதிலே முதல் பக்கத்திலேயே விநாயக் சென்னை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தும் அறிவிப்பு வந்ததே அப்ப அதையும் நான் நம்பக் கூடாதா? பாலாஜியிடம் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க சார்? எய்டுக்கும் விநாயக் சென்னுக்கும் நகசலைட்டுகளுக்கும் பாக்கிஸ்தான் தீவீரவாதிகளுக்கும் ஜிலானி மற்றும் அப்சல் குருவின் விடுதலைக்குன் என்ன தொடர்பு என்று கேட்டு விட்டுச் சொல்லுங்கள் அது வரை காத்திருக்கிறேன்

இட்லி வடைக்கும் அதன் வாசகர்களுக்கும் நீங்கள் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளை ஆதரிக்க விரும்பினால் மாவோயிஸ்டுகளுக்குக் காசு கொடுக்க விரும்பினால் தாராளமாக இந்த தொண்டு நிறுவனம் என்ற பெயரில் நடக்கும் பயங்கரவாத ஆதரவு நிறுவனங்களுக்குக் காசு கொடுங்கள். அப்சல் குருவை விடுவிக்கக் கோரி போராடும் ஆட்களால் நடத்தப் படுவது இந்த டுபாக்கூர் தொண்டு நிறுவனம். எச்சரிக்கை. இட்லி வடை இனியாவது இந்த விளம்பரங்களை வெளியிடாமல் இருங்கள். நாளைப் பின்னே நீங்களும் பதில் சொல்ல வேண்டிய நிலை வந்து விடும்