பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 06, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 06-11-2011

அன்புள்ள முனிக்கு,

இந்த வார துக்ளக் பகுதியில் வந்த பக்தி கட்டுரை முதலில் .....
வர வர, கலைஞரின் பேச்சுக்கள், ரொம்ப சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருக்கின்றன. ‘அண்ணாவும் பெரியாரும்தான் எனது ஒரே தெய்வம்; அவர்களைத் தினமும் வணங்குகிறேன்’ – என்று அவர் கூறியிருப்பது, அவருடைய ‘லேட்டஸ்ட்’ பகுத்தறிவுப் பேச்சு.

‘தெய்வமே கிடையாது; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்’ என்றெல்லாம் பேசுகிற பகுத்தறிவுவாதிகள், அண்ணாவையும் பெரியாரையும் கடவுள் என்று கூறினால் – அவர்கள் இருவரையும் கிண்டல் செய்கிறார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

சரி. அது ஒருபுறம் இருக்கட்டும். அவர்களைத் தினமும் வணங்குவதாகக் கலைஞர் கூறியிருக்கிறார். எப்படி? அவர்களுடைய படத்திற்கு முன்னின்று வணங்குவாரா? அல்லது அவர்களை மனதில் நினைத்துக் கொண்டு வணங்குவாரா? அவர்களுடைய உருவங்களைக் கற்பனையில் கொண்டு வந்து நிறுத்தி வணங்குவாரா? எப்படி வணங்குவார்? கையெடுத்துக் கும்பிடுவாரா? சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வாரா? மனதில் மரியாதை செலுத்துவாரா?

இதில் எதைச் செய்தாலும் – அதை யாருக்குச் செய்கிறார்? செத்தவர்களுக்குத்தானே? பகுத்தறிவு ரீதியாகப் பார்த்தால், இப்படி செத்தவர்களுக்குச் செய்யப்படுகிற மரியாதை அல்லது அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிற வணக்கம் – இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம்? நல்ல பகுத்தறிவு! கொஞ்சம் ஏமாந்தால், ‘பெரியார் பிரசாதம், அண்ணா பிரசாதம்’ கூட கலைஞர் வினியோகிக்கத் தொடங்கி விடுவார் போலிருக்கிறது.

பகுத்தறிவு பேசும் கலைஞரே திருந்தாத போது ஜெயலலிதா திருந்த மாட்டார். திருந்தவே மாட்டார். மூளையைக் கழட்டிவைத்துவிட்ட அவர் ஜால்ராக்களும் (அனானியாக எழுதுபவர்கள் உட்பட)அப்படியே தான். இட்லி வடை எப்படி? இவ்வளவு பின்னூட்டங்களுக்குப் பின்னும் முயலுக்கு மூணு கால் தானா? இல்லை புரிந்து கொண்டு திருந்தும் மனசு உண்டா? என்று ஒரு அன்பர் பின்னூட்டத்தில் கேட்டுள்ளார். ஜெ என்று பெயர் வைத்துள்ளதால் அவர் சொல்வதுதான் சரி என்று எண்ணுவது தவறு என்று அந்த அன்பரும் எண்ணிப் பார்த்தால் நல்லது. எது எப்டியோ, கலைஞர், ஜெ, கேப்டன், வைகோ, மமொசி மாறும் அன்னா என்று ஒருவரும் திருந்தாத போது இட்லியும் வடை மட்டும் எதற்குத் திருந்த வேண்டும்?

முரசொலியில் வரும் சின்னதம்பி-பெரியதம்பி, ஆண்டியும்-போண்டியும், சிந்துமணி-அந்துமணி போன்ற பகுதிகளை படித்தால் திமுக துருப்பிடித்த கட்சி என்பது வெட்ட வெளிச்சமாக தெரியும். உதாரணத்துக்கு சில பகுதிகள்

சின்னதம்பி:- "அண்ணே; கூடங்குளம் அணுமின் நிலையப்பிரச்சினையில் ஜெய லலிதா கொஞ்சம்கூட அக்கறை இல்லாமல் ஏனோதானோவென இருக்கிறாரே.....!"

பெரியதம்பி:- "தம்பி; மத்திய அரசை பொறுத்தவரை இப்பிரச்சினையை சுமூக மான முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பிரதமரின் ஆணைப்படி 15 நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வுப் பணியில் ஈடுபடவுள் ளனர். ஆனால் ஜெயலலிதா அரசு ஒப்புக் கொண்டபடி நிபுணர் குழு அமைத்திட இதுவரை முன்வரவில்லை. 20 நாட்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் தொடர் உண்ணா விரதம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஜெயலலிதா எந்த பரபரப்பும் காட்டாமல் இருப்பது அங்கே பிணங்கள் விழ வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறாரோ என்னவோ.....!"

போன மாதம் ஞாநி எழுதிய ஓ-பக்கங்களிலிருந்து ஒரு பகுதி இதற்கு பதிலாக...

...1988-89ல் அணு உலைகளின் ஆபத்து பற்றி நானும்(ஞாநி) நண்பர்களும் முரசொலி மாறனுக்கு எடுத்துச் சொன்னோம். அதையடுத்து கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று தி.மு.க செயற்குழுவில் தீர்மானம் போட்டது. அடுத்த சில மாதங்களில் ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சி, போதிய பாதுகாப்புகளுடன் அணு உலையை ஆரம்பிக்கும்படி மாற்றித் தீர்மானம் போட்டது. அன்று அந்த துரோகம் நடக்காமல் இருந்திருந்தால், கூடங்குளம் உலை கட்டும் வேலையே நடந்திராது. கேரளாவைப் போல நாமும் நம் மாநிலத்தில் அணு உலை வேண்டவே வேண்டாம் என்று சொல்லியிருக்க முடியும்........என்று போகிறது செய்தி.

மேலே சொன்ன முரசொலி செய்தியப் பார்த்தால் பேரன்கள் மேல் உள்ள கோவத்தால் மருமவனை முக மறந்துட்டார் போல.

இன்று தனிப்பட்டமுறையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்த்த அப்துல் கலாம் "மொத்தத்தில் கதிர்வீச்சு வெளிவராமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த ஆபத்தும் இல்லை என எனக்கு நம்பிக்கை உள்ளது" என்று சொல்லிவிட்டார். உடனே கூடங்குளம் அனுமின்நிலையம் பாதுகாப்பாக உள்ளது என அப்துல் கலாம் கூறியதை ஏற்ற முடியாது போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் கூறிவிட்டார். கூடங்குளம் வந்த அப்துல் கலாம் எங்களை சந்திக்கவில்லை என்றும் சொல்லிவிட்டார்.

நம் நாட்டு தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் மிக அவசியம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாமல் உற்பத்தி தொடங்கப்போகும் நேரத்தில் போராட்டம் நடத்துவது மிகப்பெரிய தவறு. அதுவரை இவர்கள் போராட்டம் நடத்தாமல் ஜபம் செய்துக்கொண்டு இருந்தார்களா?

அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ‌நியூயா‌ர்‌க் செ‌ன்ற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ‌திரு‌ப்‌பி அனு‌ப்‌ப‌ப்‌ப‌ட்டா‌ர். தமிழ் நாட்டில் செய்ய முடியாத செயலை அமெரிக்கா செய்ததற்கு அவர்களைப் பாராட்ட வேண்டும். உணர்ச்சியைத் தூண்டும்விதத்தில் பேசிவிட்டு, தூண்டப்பட்ட இளைஞர்கள் தீக்குளித்தபின் மலர் வளையமும் வைக்கும் இது போல போல (தறு)தலை-வர்களிடம் தமிழக இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தத் தலைவர்கள் வீட்டுக் குழந்தைகளோ உறவினர்களோ ஒருபோதும் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிப்பதே இல்லை என்பதை, தமிழ் இளைஞர்கள் கவனிக்க வேண்டும் என்று ஒரு முறை ஞாநி எழுதியதை இங்கே சொல்லியே ஆகணும்.

சீமான் தன்னை விடுதலைபுலி ரேஞ்சில் பார்த்துத் திருப்பி அனுப்பி விட்டார்கள் என்று மத்திய அரசை நோக்கிக் கூவும் இந்த வேளையில் தென்னிந்தியாவின் பெரிய தனியார் யுனிவர்சிட்டி என்று சொல்லிக் கொள்ளும் SRM இலங்கையில் தனது பல்கலைக்கழகக் கிளையைத் திறந்துள்ளதாம். அடுத்த முறை இலங்கைக்கு எதிராக ஏதானும் போராட்டம் செய்தால் இந்தப் பல்கலைக் கழகத்தில் இருந்து வருவார்கள் என்று சீமான் நம்பலாம்.

இயக்குனர் சசிகுமாரின், உதயநிதி ஸ்டாலின் எல்லோரும் 7 ஆம் அறிவு படத்தில் வரும் 'தமிழர்' வசனம் மாதிரி பேட்டி கொடுத்துள்ளாகள். சில பகுதிகள்...

"தமிழ் உணர்வை எழுப்புற மாதிரி ஒரு வசனம் வந்தால்கூட சம்பந்தப்பட்ட படத்தை இலங்கை அரசாங்கம் தடை பண்ணிடுது. சமீபத்தில்கூட இந்த மாதிரி கெடுபிடிகளை இலங்கை அரசு காட்டி இருக்கு. அவங்க என்ன நம்ம படங்களைத் தடை பண்றது?
கோடம்பாக்கம் மனசு வைத்தால் கொழும்புக்கே வருமானரீதியா செக் வைக்க முடியும்.

"....சினிமாவுக்கு வருமானம் அவசியம்தான் என்றாலும், அதைவிட, தமிழனின் தன்மானம் முக்கியமானது!"

என்னத்த சொல்ல !

அடுத்து ஒரு முரசொலி ஆண்டி போண்டி...

ஆண்டி:- "ஏன்ய்யா; சென்னையில் பெய்து வரும் மழையால் ஆங்காங்கு தண்ணீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகமாகி டெங்குகாய்ச்சல் பரவுதாமே?"

போண்டி:- "ஆமாய்யா; ஜெயலலிதா அரசுக்கு டெங்கு காய்ச்சலைப் பற்றி என்ன கவலை? மக்கள் மீது அக்கறைக்கொண்ட அரசாக இருந்தா முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து தண்ணீர் தேங்குவதை தடுத்திருப்பாங்க! இவங்களுக்கு மக்களைப்பற்றி கவலைப்படவா நேரமிருக்கு? கலைஞர் அரசின் திட்டங்களை ரத்து செய்யவும்; கலைஞரய்யாவின் பெயரை மறைத்திடவுமே நேரம் பத்தலையே!"

இதில என்ன காமெடி என்றால் இந்த குண்டும் குழியும் இருக்க காரணம் போன ஆட்சி தான் என்பது ஆண்டிக்கும் போண்டிக்கும் தெரிய நியாயம் இல்லை. அப்டியே தெரிஞ்சாலும் சொல்ல முடியாது.

அதிர்ச்சி செய்தி:
திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறவர்கள் இனிமேல் சம்பந்தப்பட்ட படத்தின் விஷயங்களையும், அதன் பாடல்களை பற்றியும் தான் பேச வேண்டும். படத்திற்கு சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றி பேசக்கூடாது என்று முடிவு செய்துள்ளார்கள் இயக்குனர் சங்கம். இது பரவாயில்லை கூடவே, நடிகைகள் தொடை தெரியும் அளவிற்கு அணியும் கவர்ச்சி உடைகளுக்கும் தடை விதிக்கப்படும் என்று சொன்னது அண்ணா நூலகத்தை மாற்றுவது என்பதை விட பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.





கடைசி செய்தி:
தமிழ் நாட்டில் புதுமைக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. டைட்டில் சாங் ஒன்று போட்டு கவிப்பேரரசின் ரெண்டாவது மைந்தன் கபிலன் எழுதியுள்ள நாவலை கிழக்கு இந்த மாதக் கடைசியில் வெளியுடுவதில் மகிழ்ச்சி.

என்ன, இந்த நாவலின் விற்பனை கிழக்கின் பின்னூட்டப் பொட்டியையே மூட வைத்த எக்சல்(என்ட்) நாவல் ரெக்கார்டைத் தூக்கி சாப்டுமா என்றுதான் தெரியல.


அதிர்ச்சியுடன்,
இட்லிவடை

13 Comments:

Sivakumar said...

// "எக்சல்(என்ட்)" //
என்ன "என்ட்"?

Anonymous said...

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு, குறிப்பாக ஒரு மத அமைப்பிடமிருந்து அதிகமாக வருகின்றதே - இதன் மர்மம என்ன?

மடல்காரன் said...

திருத்தம்...
இயக்குனர் சசிகுமாரின், உதயநிதி ஸ்டாலின் எல்லோரும் 7 ஆம் அறிவு படத்தில் வரும் 'தமிழர்' வசனம் மாதிரி பேட்டி "பொ"டுத்துள்ளாகள்
"பொ" என்பதை "கொ" மாற வேண்டும்.
கி.பாலு

Anonymous said...

@sivakumar

its charu's novel i think :P

Anonymous said...

இ.வ க்கு பைத்தியம் பிடித்து பாயை பிறாண்டும் நிலையில் இருக்கிறார் என்பது இந்த போஸ்டிங் மூலம் தெரிய வருகிறது. ஆமா என்னதான் சொல்ல வரார்.சென்னை தெருவில் மூத்திரம் போய்க்கொண்டே நடந்து போகும் எறுமை மாடுதான் ஞாபகத்துக்கு வருது.

jaisankar jaganathan said...

//ஒருவரும் திருந்தாத போது இட்லியும் வடை மட்டும் எதற்குத் திருந்த வேண்டும்?//

அதானே

//இந்தத் தலைவர்கள் வீட்டுக் குழந்தைகளோ உறவினர்களோ ஒருபோதும் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிப்பதே இல்லை என்பதை, தமிழ் இளைஞர்கள் கவனிக்க வேண்டும் //

அதானே

// நடிகைகள் தொடை தெரியும் அளவிற்கு அணியும் கவர்ச்சி உடைகளுக்கும் தடை விதிக்கப்படும் என்று சொன்னது அண்ணா நூலகத்தை மாற்றுவது என்பதை விட பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது./

என்ன கொடுமை இது

/என்ன, இந்த நாவலின் விற்பனை கிழக்கின் பின்னூட்டப் பொட்டியையே மூட வைத்த எக்சல்(என்ட்) நாவல் ரெக்கார்டைத் தூக்கி சாப்டுமா என்றுதான் தெரியல.
//
எக்சல் கடையில விக்குதா? நான் திருச்சில இருக்கேன். எங்க வாங்குறது? தெளிவா சொல்லுங்க

//அனானி
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு, குறிப்பாக ஒரு மத அமைப்பிடமிருந்து அதிகமாக வருகின்றதே //

நல்லத யாரு பண்ணினா என்ன?

Anonymous said...

இட்லி வடை அண்ட் முனி..

’எக்செல்’ நாவலை ’சோ’ மற்றும் ’வாலி’ வெளியிட உள்ளார்களாமே உண்மையா?

//சென்னை தெருவில் மூத்திரம் போய்க்கொண்டே நடந்து போகும் எறுமை மாடுதான் ஞாபகத்துக்கு வருது.//

சென்னையில் இவ்வாறு சுதந்திரமாக எருமை மாடுகள் சுற்றித் திரிவதற்கு ஜெ அரசு தான் காரணம்.

இன்று காலையில் எனக்கு ---- வரவில்லை. இதற்கும் அவரே காரணம். உடனே பதவிலியிருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும்.

மீண்டும் ஆரிய-திராவிடப் போர் தொடங்கும்.

R. Jagannathan said...

1.. கலைஞரின் / தி மு க வின் கடவுள் மறுப்புப் பேச்சுகளுக்கும், அண்ணா / பெரியார் தெய்வங்கள் என்பதற்கும் இன்னும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? (வெளியில் காட்டும் கடவுள் எதிர்ப்பை வீட்டில் காட்ட முடியவில்லை; இல்லை, இதனால் தான் அதுவோ?)

2.. என் பின்னூட்டத்திற்கு பதில் அளித்ததற்கு சந்தோஷம். நான் உட்பட, எல்லோரும் எல்லா விஷயத்திலும் வரும் கருத்துக்களை படித்து தன் கருத்து தவறாயிருந்தால் மாற்றிக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். (இல்லாவிட்டால், நமக்கும், ஆடு/மாடு - தப்பு தப்பு, ஒரு ஃப்ளோவில் வந்துவிட்டது - கலைஞர் / ஜெயாவிற்கும் என்ன வேறுபாடு?)

3.. தி மு க வின் கூடங்குளம் எதிர்ப்பு தீர்மானம் கை விடப் பட்டது பற்றி ஞானி கலைஞரிடம் நேரடியாக பதில் பெற்று வெளியிடலாமே? கலைஞர் தான் தினம் அறிக்கை வெளியிடுகிறாரே!) இதில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது, கலைஞர் அரசியல் வாதி!பிறகு இந்த கேள்வியே எழாது!

4.. சீமான் அமெரிக்கா சென்ற பிறகு திருப்பி அனுப்பப்பட்டாரா! இங்கேயே விசா மறுத்திருக்கலாமே? (ஜோக்: ஒரு நீரோடையில், தடை செய்யப்பட்ட பகுதி என்று தெரியாமல் ஒரு பெண் குளிக்க ஆயத்தமாக உடைகளை கழற்றியபின், காவலர் தடுத்தாராம். ஏன் முன்னரே தடுக்கவில்லை என்று பெண் கேட்டதற்கு, உடைகளை கழற்ற தடை இல்லை என்று பதில் வந்ததாம்!)

5.. ஆண்டியும் போண்டியும் ஜெயாதான் குழிகளை தோண்டியதாகச் சொல்லவில்லையே..ஹி..ஹி..!

6. என்னையா கவர்ச்சி காட்டிவிட்டார்கள்? அதான் கால்களை நெருக்கமாக வைத்துக்கொண்டு கையாலும் மானத்தைக் காத்துக்கொள்கிறார்களே? பிறகும் என்ன தடையாம் - கேட்டுச் சொல்லும்!

-ஜெ.

Anonymous said...

anna samadhiyilum MGR samadhiyilum eriyum 24 hours deepam (by wasting gas) pakuthu arivu? murali

ராவணன் said...

//கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாமல் உற்பத்தி தொடங்கப்போகும் நேரத்தில் போராட்டம் நடத்துவது மிகப்பெரிய தவறு//

FUKUSHIMA அணு உலை விபத்து எப்போ நடந்தது ? கூடன்குளம் அணுமின் நிலையம் ஆரம்பிக்கும்போதா அல்லது மிக சமீபத்திலா ? GERMANY 2020 க்குள் அணு உலைகளை மூடி விட முடிவெடுத்துள்ளதாமே உண்மையா ?

ஏழாம்அறிவு said...

சீமானை திருப்பி அனுப்பி நல்ல காரியம் செய்தார்கள்.

Anonymous said...

உங்களைப் போன்றவர்களுக்கு நடிகையின் தொடையும் ஒரு சமூகத்தின் எதிர்காலமும் எப்பொழுதுமே ஒன்றுதான்.......

ஜில்பாத்ரி said...

ஹைய்யோ அனானி. சமூகத்தின் எதிர்காலம் என்பது கனவு. நடிகைகளின் தொடை நிஜம். அவைகளினால்தான் சமூகத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப் படுகிறது என்பது இ.வ க்கு நன்கு தெரியும் என்பதால் அண்ணன் இ.வ ஆற்றும் தொண்டினை பாராட்டுங்கள்