பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 26, 2011

வேலாயுதம் - FIR

விஜய் பற்றி எவ்வளவு நக்கல் ஜோக்ஸ் வந்தாலும் மக்களுக்கு அவர் மேல் இன்னும் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. கில்லி மாதிரி இன்னொரு படம் வராதா என்று மக்கள் ஜாலியாக ஒரு படம் பார்க்க இன்றும் ஏங்குகிறார்கள். அந்த நம்பிக்கையை விஜய் 75% பூர்த்தி செய்திருக்கிறார்.

தங்கை செண்டிமெண்டுடன் கந்தசாமி, அந்நியன் இரண்டையும் கலந்துக்கட்டி அடித்திருக்கிறார்கள். முதல் காட்சி "பாக்கிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில்.." என்று போடும் போது பக்கத்தில் இருப்பவரிடம் "சார் இது வேலாயுதமா ? இல்லை ஏதாவது விஜயகாந்த் படமா ?" என்று கேட்க அவரும் "எனக்கும் சந்தேகமா தான் சார் இருக்கு" என்றார்.தீவிரவாதிகளுக்கு இந்திய அரசியல்வாதியுடன் (ஹோம் மினிஸ்டர்) தொடர்பு என்ற அதே ஃபார்முலா!. விஜய் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு சென்று சண்டை போட்டால் கூட இருக்கும் கிராமத்து மக்கள், சந்தானம், தங்கை, இரண்டு ஹீரோயின், போலீஸ் என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு போக முடியுமா ? செலவு என்ன ஆவது அதனால் தீவிரவாதிகள் சொந்த செலவில் (இவரை தேடி சென்னை வந்து) சூனியம் வைத்துக்கொள்கிறார்கள்.

விஜய் ஓபனிங் சீன் அருவாளுடன் வந்து ரயில் சீட் போடும் அந்த காமெடி - சூப்பர், அண்ணன் தங்கை பாசத்தை காண்பிக்க அவர் கோழி பிடிக்கும் காமெடி, பிறகு சீட்டு கம்பெனியில் போட்ட பணத்தை எடுக்க சென்னை வருவது, அவர் பணத்தை லவுட்ட சந்தானம் போடும் பிளான் என்று படம் முழு மூச்சு காமெடியாக மாறுகிறது. சும்மா சொல்லக்கூடாது ஜாலியாக போகிறபோக்கில் சந்தானம் பேசும் வசனங்கள் படத்துக்கு பலம். கடைசியில் அவர் "ஏம்பா இதை மூன்றாவது சீனிலேயே சொல்லியிருக்க கூடாதா ?" என்று அவர் விஜயிடம் கேட்பது அக்மார்க் சந்த(தா)னம் காமெடி.

பத்திரிகையாளரான ஜெனிலியா வேலாயும் கதாபாத்திரத்தை கொண்டு வர காமெடியுடன் அதிரடி சரவெடியாக மாறுகிறது படம். ஹன்சிகா முறை பெண்ணாக டினோபால் போட்ட உடம்பை அடிக்கடி காண்பிக்கிறார். இவர் கிராமத்து பெண்ணாம் :-)

சினிமா வில்லன் என்றால் என்ன செய்வார் ? பாம் வைப்பார், கள்ள நோட்டு அடிப்பார், பெண்கள் வியாபாரம் செய்வார், சீட்டு கம்பெனி நடத்தி மக்களின் பணத்தை ஏமாற்றுவார் இல்லை ரயிலை கவுப்பார். இந்த பட வில்லன் பயங்கிரம் இவை எல்லாவற்றையும் செய்கிறார்!. பாம் வைக்கும் வெளிநாட்டு தீவிரவாதி யாராக இருந்தாலும் அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற நியதிப்படி இந்த படத்திலும் அவர்களேதீவிரவாதிகளாக வருகிறார்கள். அவரை சப்போர்ட் செய்ய குங்கும போட்டு இட்டுக்கொண்டு ஒரு மந்திரி வந்தால் சமய உணர்வு பாதிக்கப்படாது என்ற ஃபார்முலாவை தவறாமல் இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார்.

விளையாட்டு போட்டிக்கள் நடக்கிறதோ இல்லையோ, மக்களை கூட்டி சினிமா டான்ஸ் ஆட மற்றும் படத்தில் சினிமா ஹீரோ மக்களை கூட்டி பிரசங்கம் செய்ய நேரு விளையாட்டு அரங்கம் என்று ஃபார்முலாபடி இந்த படத்திலும் கடைசியில் வருகிறது. ஏனோ முகமூடி போட்டுக்கொண்டு வரும் போது அந்நியன் ஞாபகம் வருகிறது.

சந்தானத்தின் 'குசு' வசனத்துக்கு பிறகு "உங்களால் ஓசாமா பின்லேடனை கூட காப்பாத்த முடியலை, ஆனால் கசாப்பை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்" என்று போலீஸ் பேசும் வசனம்.

மசாலா படத்துக்கு உண்டான கேமரா, இசை என்று படம் சரியான எண்டர்டெயினர். தியேட்டர் காரர்கள் நினைத்தால் இன்னும் கொஞ்சம் சரியாக படத்தை எடிட் செய்யலாம்.
கொடுத்த காசுக்கு ஏமாற்றவில்லை. குடும்பத்துடன் ஜாலியாக பார்க்கலாம், விஜய்யை கிண்டல் பண்ணலாம்.


சிக்ஸ் பேக் ஃபீவர் விஜயையும் தொற்றுக்கொண்டு விட்டது. கடைசியில் உடம்பை முறுக்கேற்றி சண்டை போடுகிறார். எதற்கு இதெல்லாம் மிஸ்டர் விஜய் ? ஆறாம் அறிவை ஆப் செய்துவிட்டு பார்க்கும் எங்களுக்கு நீங்கள் கெமிக்கல் ஃபேக்டரியை நோக்கி ஓடும் ரயிலை சடன் பிரேக் போட்டு நிறுத்தும் காட்சி ...உங்களுக்கும் ஒரு பிரேக் தான்.


இட்லிவடை மார்க் - 6/10

முதலில் "Thanks Jaya TV" என்று வருகிறது :-)

நாளை ஏழாம் அறிவு விமர்சனம்

28 Comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

happy diwali

ராகுல் said...

படம் ஹிட்

சுழியம் said...

//தீவிரவாதி யாராக இருந்தாலும் அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற நியதிப்படி இந்த படத்திலும் அவர்களேதீவிரவாதிகளாக வருகிறார்கள். //

அவர்களது மத உரிமைகள் மற்றும் மதக் கடமைகளைப் பற்றி இட்லிவடை வெளிப்படையாகப் பேசுவது சரியல்ல. இது நேரு கண்ட சிக்யூலரிச நாடு.


.

nila said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்... ஏழாம் அறிவு FIR காக ரொம்ப ஆவலா காத்திருக்கேன்... என்னிக்கு படம் இண்டர்நெட்ல வருதோ அன்னிக்குத்தான் பார்க்க முடியும்... அவ்ளோ தூரத்துல இருக்கேன் :(

ஜெயக்குமார் said...

//தீவிரவாதி யாராக இருந்தாலும் அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற நியதிப்படி இந்த படத்திலும் அவர்களேதீவிரவாதிகளாக வருகிறார்கள். //

:-)) செக்யூலரிசம் நாட்டில் இருக்கோ..இல்லையோ.. சினிமாவில் மட்டும் தவறாமல் கடைப்பிடிக்கப் படுகிறது.

அப்ப விசய் இனி நாலுபடம் குப்பையாக் கொட்டுவாரே..

Anonymous said...

Wow! great!! Velayudam padam pathutu uyiroda vandadum illama vimarsaname ezhuditingale!! What a miracle!!!

Anonymous said...

Another sura. SURA-II.
Try something different thalapathy.

கார்த்தி கேயனி said...

அப்போ படம் ஹிட்

Anonymous said...

This movie will be a hit because of 7aam Arivu!!!!!

மோகன் குமார் said...

Thanks for the review Haran Prasanna.

Krishnan said...

Anonymous said...
Wow! great!! Velayudam padam pathutu uyiroda vandadum illama vimarsaname ezhuditingale!! What a miracle!!!

-------------

It's a medical miracle :-))

jaisankar jaganathan said...

அணிலோட படம் ஹிட்டா?

கிருபாநந்தினி said...

பார்க்கலாமா, வேணாமா? அத்தச் சொல்லுங்ணா!

R. Jagannathan said...

சொந்த செலவில் தீவீரவாதிகள் சூன்யம் வைத்துக்கொண்டார்களோ இல்லையோ, நீங்கள் வைத்துக்கொண்டது தெரிகிறது.

ஆஃப்கனிஸ்தான் தீவீரவாதி முஸ்லீமாக இல்லாமல் க்ருஸ்துவனாகவா இருப்பான்? குங்குமப்பொட்டு ஹோம் மினிஸ்டராக எட்டியூரப்பாவைக் கற்பனை செய்தேன். அவர் பொருத்தமாயிருந்திருப்பாரோ?

விஜய்யை கேலி பண்ணலாம் என்று எழுதிவிட்டு அவர் பேசிய பன்ச் டயலாக் ஒன்றையும் எழுதவில்லையே?

-ஜெ.

Avinash Srinivasan said...

படத்தில் விஜய்க்கு பால்காரன் கேரக்டர். அந்த வேலையைத் தவிர மத்த எல்லாமும் செய்கிறார்.
முதல் பாதி (காமெடி) - 3.5/5.
மீதி படம் (மசாலா) - 2/5.

raja said...

paavam vijay.. avarum jeyikattumey..

திருமயிலை எங்க ஊரு ... said...

நல்ல விமர்சனம் ..... உடனே படத்தை பார்க்கவேண்டியதுதான்.

திருமயிலை எங்க ஊரு ... said...

நல்ல விமர்சனம் ..... உடனே படத்தை பார்க்கவேண்டியதுதான்.

தமிழ்வாசி - Prakash said...

விமர்சனத்தை நம்பி பார்க்கலாமா?

Anonymous said...

ઐયો ઐયો ! ઇન્થાલા અદાક્કા આરુમે ઈલ્લયા
કવીથીનું સોલ્લી ઇપ્પીડી એલ્લારું કાઝ્હુથ્થયુંમ અરુક્કારાને

Anonymous said...

happy diwaliபடம் ஹிட்அவர்களது மத உரிமைகள் மற்றும் மதக் கடமைகளைப் பற்றி இட்லிவடை வெளிப்படையாகப் பேசுவது சரியல்ல. இது நேரு கண்ட சிக்யூலரிச நாடு.தீபாவளி நல்வாழ்த்துக்கள்... ஏழாம் அறிவு FIR காக ரொம்ப ஆவலா காத்திருக்கேன்... என்னிக்கு படம் இண்டர்நெட்ல வருதோ அன்னிக்குத்தான் பார்க்க முடியும்... அவ்ளோ தூரத்துல இருக்கேன் :( :-)) செக்யூலரிசம் நாட்டில் இருக்கோ..இல்லையோ.. சினிமாவில் மட்டும் தவறாமல் கடைப்பிடிக்கப் படுகிறது.

அப்ப விசய் இனி நாலுபடம் குப்பையாக் கொட்டுவாரே.. Wow! great!! Velayudam padam pathutu uyiroda vandadum illama vimarsaname ezhuditingale!! What a miracle!!!

Another sura. SURA-II.
Try something different thalapathy.

அப்போ படம் ஹிட் This movie will be a hit because of 7aam Arivu!!!!! Thanks for the review Haran Prasanna.Wow! great!! Velayudam padam pathutu uyiroda vandadum illama vimarsaname ezhuditingale!! What a miracle!!!அணிலோட படம் ஹிட்டா?பார்க்கலாமா, வேணாமா? அத்தச் சொல்லுங்ணா!சொந்த செலவில் தீவீரவாதிகள் சூன்யம் வைத்துக்கொண்டார்களோ இல்லையோ, நீங்கள் வைத்துக்கொண்டது தெரிகிறது.

ஆஃப்கனிஸ்தான் தீவீரவாதி முஸ்லீமாக இல்லாமல் க்ருஸ்துவனாகவா இருப்பான்? குங்குமப்பொட்டு ஹோம் மினிஸ்டராக எட்டியூரப்பாவைக் கற்பனை செய்தேன். அவர் பொருத்தமாயிருந்திருப்பாரோ?

விஜய்யை கேலி பண்ணலாம் என்று எழுதிவிட்டு அவர் பேசிய பன்ச் டயலாக் ஒன்றையும் எழுதவில்லையே?-------------

It's a medical miracle :-)) படத்தில் விஜய்க்கு பால்காரன் கேரக்டர். அந்த வேலையைத் தவிர மத்த எல்லாமும் செய்கிறார்.
முதல் பாதி (காமெடி) - 3.5/5.
மீதி படம் (மசாலா) - 2/5.paavam vijay.. avarum jeyikattumey..நல்ல விமர்சனம் ..... உடனே படத்தை பார்க்கவேண்டியதுதான்.விமர்சனத்தை நம்பி பார்க்கலாமா?

Anonymous said...

விமர்சனத்தை நம்பி பார்க்கலாமா?

Anonymous said...

விமர்சனத்தை நம்பி பார்க்கலாமா?

dr_senthil said...

Raja saves Vijay

Anonymous said...

good entertainer from Vijay

R. Jagannathan said...

// Anonymous said...
ઐયો ઐયો ! ઇન્થાલા અદાક્કા આરુમે ઈલ્લયા
કવીથીનું સોલ્લી ઇપ્પીડી એલ્લારું કાઝ્હુથ્થયુંમ અરુક્કારા ?? இது இன்னாங்கோ? தீவுளி ஸ்வீட்டா? இல்ல, விஜய்யை திட்டி எழுதின போஸ்ட்டா? இல்ல, வைரமுத்துவின் பையன் எழுதின ஆஃப்ரிகன் மொழி பாட்டா? - ஜெ.

R. Jagannathan said...

ஷா ருக் கானை எப்போ கிழிக்கப் போறீங்க? - ஜெ.

NO said...

அடாவடி அண்டாகாகசும்களுக்கு அடிபணியாததால் அணிலாகிப்போன அறிவாளி!!!

Vijay/Velayudham Review http://nonono-no-no.blogspot.com/