பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 31, 2011

கலைஞரின் இன்டைரக்ட் ஸ்பீச்

சில வாரங்களுக்கு முன் திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து 'உட்கட்சி ஜனநாயகம் இல்லை' என்று நேரடியாக குற்றம் சாட்டி பதவியிலிருந்து விலகினார் பரிதி இளம்பழுதி. மீடியாவில் கொஞ்சம் பாப்புலர் ஆன இவர் ராஜினாமா பற்றி ஜூவி, துக்ளக் போன்ற பத்திரிக்கைகள் கலைஞர் டெல்லி சென்றார் போன செய்தளுடன் இதையும் ஒரு பக்கம் கட்டுரையாக போட்டு குடும்ப டென்ஷனை அள்ளிக்கொண்டது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் பரிதி மிகச் சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவ, அப்பகுதி தி.மு.க. நிர்வாகிகள் சிலர்தான் காரணம் என்று அவர் புகார் கூறினார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு ஸ்டாலினின் ஆதரவு இருந்தது. தற்போது உள்ளாட்சித் தேர்தலில் சீட் பெற்ற பரிதி ஆதரவாளர்கள் சிலருக்கு எதிராக, அதே நபர்கள் ஐயம்பேட்டை வேலை செய்ததால், தலைவரிடம் நேரடியாகப் பரிதி புகார் செய்தார். கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்ட அந்த சிலர் உடனடியாக நீக்கப்பட்டனர். ஆனால், இரண்டே நாட்களில் ஸ்டாலின் தலையிட்டு, அவர்களை திரும்பவும் கட்சியில் சேர்க்க வைத்தார் என்று சொல்லப்படுகிறது. பரிதியிடம் ஒரு வார்த்தை மரியாதைக்கு கூட கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் "உட்கட்சி ஜனநாயகம் வாழ்க" என்று ராஜினாமா கடிதம் கொடுத்தோடு இல்லாமல், சில நாட்களுக்க்கு முன் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு பேட்டியும் கொடுத்தார். அதில் "...... திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து கூறலாம் என்று 4 முறை முயற்சித்தேன். ஆனால் அவர் என்னை சந்திப்பதை வேண்டுமென்றே தவிர்த்து விட்டார்.... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, என் பிரச்சனை உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அதை செய்வேன். இதுபோன்ற மனக்குமுறலோடு இருப்பவர்களுக்கு நிச்சயமாக தலைமை ஏற்பேன்...." என்று பத்திரிக்கையாளர்கள் முன் போட்டு உடைக்க கலைஞர் இன்று பொங்கி எழுந்துவிட்டார்.

யார் என்று நேரடியாக சொல்லாமல், ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டுவிட்டார் கலைஞர். இலக்கியம், நகைச்சுவை என்று பலர் பிரிவுகளில் இருக்கும் இந்த அறிக்கையை இட்லிவடை வாசர்களுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சியடைக்கிறேன்.

நமது கழகத்திற்கு தற்போது 62 வயதாகிறது. நமது கழகத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்படவுள்ளது. அதற்கு முன்பு புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் நீக்கல் ஆகிய பணிகளில் விரைந்து ஈடுபடுமாறு நமது பொதுச் செயலாளர் பேராசிரியர் அறிக்கை விடுத்துள்ளார். அந்தப் பணிகளை நீங்கள் விரைவில் மேற்கொள்ளவிருக்கிறீர்கள்.

என்னென்ன விமர்சனங்கள்? எப்படியெல்லாம் எழுதுகிறார்கள்? பேசுகிறார்கள்? அப்பப்பா? "குலைந்தது கட்சி! தொலைந்தது இனிமேல்! சீந்துவார் யாருமில்லை! சீராட்டும் பாராட்டும் பெறாமல் "சீ'' என்றிகழப்பட்டு, தெருப்புழுதியிலே சேர்க்கப்பட்டுவிடும்.

[ 'சீ' என்று அழைக்க காரணம் 'C' urrency தான். வேறு ஒன்றும் இல்லை

சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியவில்லை. அதையொட்டி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலே ஒரு மாநகராட்சியைக் கூடப் பிடிக்க முடியவில்லை. இடைத்தேர்தலிலோ வித்தியாசம் இரு மடங்காகி விட்டது. என்றெல்லாம் கூறி மாடகூடங்களில் இருந்து மமதையை மலையென மனத்தில் வளர்த்துக்கொண்டு, "வீழ்ந்தது கழகம், இனி எழவே முடியாது'' என்றெல்லாம் எக்காளமிடுகின்றனர்.

கழகம் பிறந்த காலந்தொட்டு இதனை அழிப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

யார் என்று தெளிவாக கூறவும். மாறன் பிரதர்ஸ், ராஜா, கனிமொழி, அழகிரி என்று யாரை கூறிகிறார் ?

துரோகச் சிந்தையினர் தம் சுக வாழ்வு ஒன்றை மட்டுமே மனதிலே கொண்டு, பெற்ற தாயின் வயிற்றை கூர்வாள் கொண்டு குத்திக் கிழிப்பதைப் போல செயலாற்ற முனைகின்றனர். கையிலே காசில்லா போது, கழகத்திற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக கழகத்தையே காட்டிக் கொடுக்க முயலுகின்றனர்.

ஆக கழகத்தில் சேர்ந்த பிறகு காசு பார்த்துவிட்டார்கள் என்ற உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார். துணை பொதுச்செயலாளரே இவ்வளவு காசு பார்த்துவிட்டால், கழக தலைவர், பொதுச்செயளாலர் எவ்வளவு சுருட்டியிருப்பார்கள் ?

துரோகத்தைத் தூள் செய்து பகையைப் புறங்கண்டு நீ தூக்கி உயர்த்தியிருக்கிற இரு வண்ணக் கொடியை காணும்பொழுதும், அந்தக் கொடியின் பட்டொளியில் 62 ஆண்டு கால இயக்கச் சரித்திரத்தைப் படிக்கும் பொழுதும், ஓரம்போகியார் எனும் ஒரு பெரும் கவிஞர் எழுதிய புறப்பாடல் ஒன்றை நான் உனக்கு நினைவுபடுத்திட விரும்புகிறேன். அந்தக் கவிஞர் எழுதிய பாடலில் இரண்டு நாட்டு மன்னர்கள் போரிடுகிறார்கள்.

போர் மூண்டுவிட்ட சமயத்தில் மன்னன் ஒருவன் உடனே களம்புகுமாறு வீரர்களுக்கெல்லாம் செய்தி அனுப்புகிறான். பகை சாய்க்கும் குறியுடன் பல பகுதிகளிலிருந்தும் வீரர்கள் வந்து கூடுகின்றனர். போர் தொடங்கி விடுகிறது. அந்தப் போரில் கலந்து கொள்ள ஓடோடி வரும் ஒரு வீரனை மட்டும் புலவர் ஓரம் போகியாரின் விழிகள் வட்டமிடுகின்றன. அவன் தேர்ப்படையிலோ, யானைப் படையிலோ, புரவிப்படையிலோ இடம்பெற்று அந்தக் களத்திற்கு வரவில்லை. தன்னந்தனியனாக, நூலரி மாலையை அணிந்து கொண்டு, கையில் ஓர் வாளுடன் காலாட் படை வீரனாக களத்திலே நுழைகிறான். கடும் போரிடுகிறான்.


அந்த வீரன்; காலாட்படை வீரன்; எதிரிப் படை வீரனை நோக்கிப் பாய்கிறான். பகைவனோ யானை மீது இருந்து போரிடுபவன். இவனோ பூமியின் தோளைத்தான் குதிரையின் முதுகெனக் கருதிக் கொண்டு வாள் சுழற்றுகிறான். அந்த வாள் வீச்சு, மாரிக்கால மின் வெட்டின் வீச்சு. யானை வீழ்கிறது. யானையை வீழ்த்திய அவன் வாளும் வளைந்து விடுகிறது. யானையின் மீதிருந்து விழுந்த வீரன், எழுந்து வந்து அவனைத் தாக்கி அழிப்பதற்குள் வாளை நிமிர்த்தியாக வேண்டும். என்ன செய்தான் தெரியுமா?

அவன் வாளை நிமிர்த்திக் கொள்ள உடனடியாக எந்த வசதியும் கிட்டவில்லை. எதிரியோ எழுந்து விட்டான். விரைவில் நெருங்கி விடுவான். பளிச்செனத் தோன்றியது ஒரு அரிய யோசனை அந்த மாவீரனுக்கு. கோணிய வாளை எடுத்தான் - அங்கே தன்னால் வீழ்த்தப்பட்டுக் கிடந்த யானையின் மத்தகத்திலே அந்த வாளை அழுத்தி நிமிர்த்துக் கொள்கிறானாம். அவனது வளைந்து போன வாளை நிமிர்த்திக் கொண்டான் என்பதைக் கண்டதும் எதிரிப்படையின் வீரன் எடுக்கிறான் ஓட்டம் - புறங்காட்டி ஓடுகின்ற அவனைப் பார்த்து அந்த வீரன் நகைக்கத் தொடங்கினான்.

ஓரம்போகியார் சித்தரிக்கும் அந்தத் திறன் மிகு தீரனாகத்தான் உன்னை - நமது கழகத்தை - நான் கருதுகிறேன். நான் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல நமது விரோதிகள் ரதங்கள் ஏறி வந்து நம்மைத் தாக்க முயலலாம். நமக்கெதிரான விமர்சனங்கள் யானைகள் மீது ஏறி வந்து நம்மை எதிர்க்கலாம். துரோகிகளோ குதிரைப்படை கொண்டு வந்து நம்மை நிலைகுலையச் செய்ய யத்தனிக்கலாம். நமது புறநானூற்றுப் புலவர் வியந்து பாராட்டிய வீரன் எதிரிப்படையை விரட்டியது போல, கொல்ல வரும் பகையை - தொல்லை தரும் துரோகத்தை நமது கழகம் வெற்றி கண்டாக வேண்டும்.

உட்கட்சி குழாயடி சண்டைக்கு எதற்கு புறநானூறு கவிதை ? அதுவும் யானை குதிரை எல்லாம் வருகிறது அவ்வளவு பெரிய சண்டையா இது ? . ஸ்சப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே

நாம் வெற்றியினைப் பெற்றிட உழைப்போம் - ஒற்றுமையோடு உழைப்போம் - ஓய்வில்லாமல் உழைப்போம் - உறுதியோடு உழைப்போம். கண்மணியாம் நமது கழகத்தை வளர்ப்போம். உறுப்பினர்களை அணி அணியாகச் சேர்ப்போம். புதிய வாக்காளர்களை பட்டியலில் இணைப்போம்.

தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., மிகப்பெரிய தோல்வி அடைந்ததற்கு, தன் கட்சித் தொண்டர்களே காரணம் என்று கலைஞர் சில மாதங்கள் முன் சொல்லியிருந்தார். ஆக இன்னும் நிறைய தொண்டர்களை சேர்த்து மேலும் தோல்வி அடைய அவர் எடுத்திருக்கும் முயற்சிக்கு யார் பொறுப்பு ? பொதுவாக இது போல ஒரு அறிக்கைக்கு பிறகு யாராவது நீக்கப்படுவார்கள். இன்னும் சில நாட்களில் பரிதி திமுகாவிலிருந்து நீக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது.

16 Comments:

மனசாட்சி said...

இந்த மனுசனை இன்னமும் நம்புவாங்கிறேங்க

வெளங்காதவன் said...

ஹா ஹா ஹா...

சரியான "போடு"

kg gouthaman said...

மீண்டும் களை கட்டுகிறது - இட்லி வடையில்.

Anonymous said...

ஹி..ஹி..

இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு

நானும் இந்த விளையாட்டுக்கு வரட்டா?

- அநங்கன்

Anonymous said...

idly vadai back to form:))

jaisankar jaganathan said...

அடுத்த தடவை கலைஞர் தான் முதலமைச்சர். அந்த அளவுக்கு ஜெயலலிதா ஆடுவாங்க. பாருங்க

ஏம்பா இட்லி இப்ப முதலமைச்சர் ஜெயலலிதா. அவங்கள பத்தி ஒன்னுமே போடலியே.ஏன்பா?

அமுதா கிருஷ்ணா said...

இன்னும் இந்த கதை வசனத்தை யார் நம்புவார்கள் என்ன எண்ணத்தில் இப்படி எல்லாம் அறிக்கை விட முடிகிறது.நாமெல்லாம் 7 அறிவு கொண்டவர்கள் என்றா?

Vijay said...

அன்று வைகோ இன்று பரிதி. History repeats

"என் ராஜபாட்டை"- ராஜா said...

தல கலக்குறிங்க .. மஞ்சள் பகுதிகள் ரகளை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

விஜய் படத்திற்க்கு தடை : ஜெ. அதிரடி

பெசொவி said...

//kg gouthaman said...

மீண்டும் களை கட்டுகிறது - இட்லி வடையில்.//

repeeeettttu!

thiru said...

// 'சீ' என்று அழைக்க காரணம் 'C' urrency தான். வேறு ஒன்றும் இல்லை
//

Not Currency -- its 'Crore'

Arun said...

ஹலோ இட்லி வடை . நீங்க துக்ளக் என்று சொன்னதும் ஞாபகம் வருது . இந்த வார துக்ளக் இதழில் (27-Oct-2011), ப.சிதம்பரம் அவர்கள் "DEAR Mr. Thuglak" பகுதியில் எழுதிய கடிதம் படித்தீர்களா ? அவர் ரொம்ப டென்ஷன் ஆயட்டார் போல இருக்கு

விஜயகாந்த் said...

மக்களே, மக்களே என்று விஜயகாந்த்தும், பிரேமலதாவும் ஊர் ஊராகப் போய்க் பிரச்சாரம் செய்தும் மக்கள் வாக்களிக்காமல் போனதற்கு முக்கியக் காரணங்களை ஆராய்வோம்.


1. முதலில் தேமுதிகவை மக்களுக்கான கட்சியாக, அதாவது மக்கள் கட்சியாக இன்னும் விஜயகாந்த் மாற்றவில்லை.


2.மக்களுக்கான போராட்டங்களை தேமுதிக முறையாக சரியான நேரங்களில் நடத்தத் தவறி விட்டது.


3. தனக்கென்று வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றே விஜயகாந்த் செயல்பட்டது.


4. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வர வேண்டும் என்ற மக்களின் அடிப்படை எதிர்ப்பார்ப்பை அவர் மதிக்கத் தவறி விட்டார்.


5. அதிமுகவையும், திமுகவையும் கடுமையாக சாடி வந்த விஜயகாந்த், மறுபடியும் அதிமுகவிதாமே கூட்டணி வைத்தது மக்களுக்கு பிடிக்கவில்லை.


6. சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு அமோகமான வாக்குகள் கிடைக்க திமுக மீதான மக்களின் கடும் அதிருப்தியும், கோபமுமே காரணம். அதை சரியாக கணிக்காமல் தன்னுடைய கூட்டணிதான் இந்த வெற்றிக்கு காரணம் என நினைத்தது.


7. திமுகவை விட மேலான கட்சியாக தேமுதிக உருவெடுத்த போதிலும், சரியான எதிர் கட்சியாக சட்டமன்றத்தில் செயல் படாதது.


8. நடக்கும் ஜெ தலைமையிலான ஆட்சி குறித்து ஒரு வருடம் கழித்தே பேசுவேன் என்று தெனாவெட்டாக விஜயகாந்த் பேசியது.


9. ஒரு எதிர்க்கட்சியாக பொறுப்பாக நடந்து கொள்ளாமல் இருந்தது.


10. யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பாக ஒரு நல்ல அங்கீகாரத்தை மக்கள் கொடுத்தும் கூட அதை சற்றும் பொருட்படுத்தாமல் தேமுதிக செயல்பட்டதால் தான் மக்கள் ஒதுக்கிதள்ளியுள்ளனர்.


தேமுதிக ஒரு பொறுப்பான மக்கள் கட்சி, மக்களாகிய நம் குரலே தேமுதிகவின் குரல், நமக்கான கட்சிதான் தேமுதிக என்ற நிலை வரும் போதுதான் அந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். அந்த ஆதரவும் நிரந்தரமாகும், அப்போதுதான் தேமுதிக உண்மையான மாற்றுக் கட்சியாக மாற முடியும் என்பதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உணர வேண்டும்.

பேயரசு said...

<< ஏம்பா இட்லி இப்ப முதலமைச்சர் ஜெயலலிதா. அவங்கள பத்தி ஒன்னுமே போடலியே.ஏன்பா? >>

அது ஆரிய மாயை ...!
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?
மகாகவி பாரதி அன்றே சொன்னார் : “பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்”
ஜெயலலிதாவின் குணத்த்தையெல்லாம் மாற்ற முடியுமா..?
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?

சி.தவநெறிச்செல்வன் said...

இட்லிவடை ஏன் பாமக -வேல்முருகன் விவகாரம் பற்றி எழுதவே இல்லை