பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 27, 2011

ஏழரை முடிந்து எட்டும் முடிந்தது! - சுபத்ரா

அக்டோபர் 27, 2011 தேதியோட இட்லிவடை கடை ஆரம்பித்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன! எனக்கு வலையுலகின் அறிமுகம் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான். இட்லிவடையின் கொ.ப.செ. அர்ஜூன் அம்மா அவர்கள் இவரைத் திட்டுவது போல் திட்டி இவரது பிரதாபங்களை எல்லாம் உலகிற்கு எடுத்து இயம்பியது மட்டுமல்லாமல் இவருக்கு “உலகப்பதிவர்” என்ற பட்டத்தையும் வழங்கிய அந்தப் பதிவிலிருந்தும் வேறு பல பழைய பதிவுகளிலிருந்தும் இட்லிவடையின் ‘புகழை’ அறிய நேர்ந்தேன்.2008-ல் ஒரு நாள் சிவனேயென்று புத்தகம் ஒன்றை நான் படித்துக் கொண்டிருந்த வேளையில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. கால் செய்தவர் நான் மிகவும் வியக்கும் மற்றும் மதிக்கும் நபர். திடீரென ஒரு விஜய் படத்தின் விமர்சனத்தை எனக்குப் படித்துக் காட்டினார். மிகவும் ரசிக்கும்படியாக இருந்த அந்த விமர்சனம் நம்ம இட்லிவடையோடது தான். ஆனந்தவிகடனின் அறிமுகத்தால் அவர் இ.வ.வைப் படிக்க நேர்ந்ததாம். அவர் அறிமுகப்படுத்தியதிலிருந்து நானும் இட்லிவடையின் ரசிகையாகி விட்டேன்! In fact, நான் ப்ளாகர் அக்கவுண்ட் உருவாக்கியதே இட்லிவடையில் பின்னூட்டமிடுவதற்காகத் தான் :-)

2003-லிருந்து இயங்கி வரும் இட்லிவடையைப் பற்றி ஒரு கத்துக்குட்டி / “L” போர்டு(நான் தான்) பேசுவதென்பது மிகைதான். இட்லிவடை யார்? யார்? என்று பரபரப்பாகப் பேசப்பட்டபோதும் வலையுலகப் பிரபலங்கள் பலர் ‘இவர் அவரா அவர் இவரா?’ எனச் சந்தேகிக்கப்பட்ட போதும் இட்லிவடை என்பது ஒருவரா இல்லை ஒரு க்ரூப்பா என மண்டை குழம்பிப் போனபோதும் எதற்கும் அசைந்து கொடுக்காமல் இன்றுவரை முகமூடியுடனே இருக்கிறார். இவருக்கு ஜி-டாக்கில் சாட் ரிக்வெஸ்ட் கொடுத்துப் பேச ஆரம்பித்த நேரங்கள் சுவாரசியமானவை. “நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க? என்ன படிச்சிருக்கீங்க? Puzzles-லலாம் ஆர்வம் இருக்கே, நீங்களும் என்னை மாதிரி மேத்ஸ் ஸ்டூடன்டா? உங்க வெப்சைட் டிசைனிங்/அப்டேட்ஸ் எல்லாம் பார்த்தா நீங்க ஒரு சாஃப்ட்வேர் ப்ரொஃபெஷனல் மாதிரி இருக்கே, அது உண்மையா? நீங்க அனானிமஸா எழுதிட்டு இருக்கீங்க, உங்ககிட்ட இந்தக் கேள்விகள் எல்லாம் கேட்கக் கூடாதா?” ன்னு பல கேள்விகளைக் கேட்டுப் பார்த்தாலும் “பொண்ண கைய புடிச்சி இழுத்தியா? என்ன கைய புடிச்சு இழுத்தியா?” ங்கிற மாதிரி “நீங்க என்ன வேணா கேட்கலாம், நான் சொல்றத தான் சொல்லுவேன். நான் அவனாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்” ன்னு அதே டயலாக்ஸ் தான்...

இந்த வருடம் மார்ச் மாதம் முக்கிய அறிவிப்பு – இட்லிவடை கைமாறப் போகிறது என்று ஒரு பதிவைப் போட்டு இவரது ரசிகர்களின் மொத்த கவனத்தையும் ஈர்த்தார். சீக்கிரமே அந்தப் பதிவு ஒரு உல்லுலாயீ...April Fool பதிவுனு சொல்லி இன்னொரு பதிவு போட்டுப் பலரையும் ஏமாற்றியும் விட்டார். இருந்தாலும் அந்தப் பதிவுகளுக்கு வந்த கருத்துகளைப் பார்த்துகூட வலையுலக மக்களுக்கு இட்லிவடையின் மேல் இருக்கும் அபிமானத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

இப்படியாகப்பட்ட இட்லிவடையில் சென்ற வருடம் தீபாவளி சமயத்தின்போது “இரண்டு கவிதைகள்” என்று பெயரிட்டு அதனை இ.வ.யில் பதிவிடுமாறு ஒரு ஆர்டிகிளை இவருக்கு மின்னஞ்சல் செய்து வைத்தேன். இரண்டே நாட்களில் அதனை வெளியிட்டுவிட்டார். ஆனால் மஞ்சள் கமெண்ட் தான் என்னை அழ வைத்தது :-) பின் ஒரு நாள் குஜராத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதலாமே என்று கேட்டு என்னை அழகான ஒரு கட்டுரையை எழுதவைத்தார். அதற்குப்பின் எனது ஆகாசவாணி அனுபவம் பற்றி நான் எழுதி அனுப்பிய கட்டுரையை ‘சுபத்ரா பேசுறேன்’ என்ற தலைப்புடனே வெளியிட்டு எனது ப்ளாகிற்கும் கன்னா பின்னாவென்று ஹிட்ஸ் எகிறவைத்தார். அப்புறம் நாஞ்சில் நாடனின் புத்தகம் பற்றிய ஒரு கட்டுரை..

இன்னொரு விஷயம் - இட்லிவடையில் ‘பானிபூரி சாப்பிடப் பிடிக்கும்’னு எழுதின ராசி. அதுல இருந்து பெப்டிக் அல்சர் வந்து அப்புறம் ‘பானிபூரி கடை பக்கம் தலைவச்சு கூட படுக்கக் கூடாது’னு டாக்டர் சொல்லிட்டார். (வடை போச்சே!) அதே மாதிரி ஐ.ஏ.எஸ்.க்குப் படிக்கிறேன்னு பயோடேட்டா போட்டதிலிருந்து அந்தப் படிப்பு எல்லாம் அப்படியே கிடப்பில் கிடக்குது. இந்த மாதிரி பின்விளைவுகள் பக்கவிளைவுகள் எல்லாம் ‘லைட்’ட்டாக இருந்த போதிலும் இட்லிவடையில் நான்குப் பதிவுகளே வெளிவந்த போதிலும் அதைப் படித்துவிட்டு எனக்கு வந்த வாசகர் கருத்துகளும் மின்னஞ்சல்களும் ஜி-டாக் அழைப்புகளும் இட்லிவடையின் அறிமுகத்தால் நான் ஏற்படுத்திக் கொண்ட நட்புகளும் மிகப்பல என்ற போதிலும் இந்தச் சம்பவம் என்னை மிகவும் ஆச்சர்யமூட்டியது!!


அகமதாபாத்தில் நான் பணிபுரியும் எனது வங்கியின் மண்டல அலுவலகக் கிளைக்கு தினமும் எண்ணிலடங்காத வாடிக்கையாளர்கள் வருகை புரிவர். எப்பொழுதாவது தமிழர்கள் வரும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி ஒரு நாள் தனது லோன் அக்கவுண்டைக் க்ளோஸ் செய்ய வேண்டி வந்திருந்து ஒரு அரைமணி நேரமாக என் முன் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது கோப்புகளைப் பார்த்து அவர் தமிழரா என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறு “உங்க பேர் சுபத்ராவா?” எனக்கேட்டார். நான் ஆச்சர்யப்பட்டவாரே “ஆமாம்” என்று பதிலளித்தேன். ஒருவேளை என் பெயரை ரெஃபரென்ஸ் கொடுத்து யாராவது இவரை என்னிடம் வரச் சொல்லியிருக்கக் கூடும் என்ற நினைப்புதான் எனக்கு மின்னல்வெட்டியது. ஆனால் எதிர்பாராத விதமாக அவர் “நீங்க தான் இட்லிவடையில் குஜராத்தைப் பற்றி எழுதியதா?” என அவர் கேட்டதும் அப்படியே.....ஷாக்காயிட்டேன் :-) அவர் இட்லிவடையைத் தொடர்ந்து படிப்பவர் எனவும் எனது அந்தக் கட்டுரையில் என்னைப் பற்றிய விவரங்கள் சில கொடுக்கப்பட்டிருந்த காரணத்தாலும் அலுவலகத்தில் அப்போது ஹிந்தியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த காரணத்தாலும் எனது முக அழகை(!) வைத்தும் ஒரு யூகம் செய்ததாக அவர் கூறினார். தனது மனைவியுடனும் குழந்தைகளுடனும் அறிமுகம் செய்து வைப்பதாகவும் தனது இல்லத்திற்கு வருமாறும் விசிட்டிங் கார்டைக் கொடுத்துச் சென்றார்.

இந்த விசித்திரமான சம்பவத்தை உடனே வந்து இவரிடம் பகிர்ந்து கொண்டால் ஒரு “:-)” அனுப்பினார். என்னவென்று கேட்டால், “இல்ல.. உண்மை வெளிவரும் போது இட்லிவடையோட சேர்ந்து சட்னி ஆகுறதுக்கு இன்னொரு ஆள் கிடைச்சிருச்சு”ன்னு சொன்னாரே பார்க்கலாம். அதிலிருந்து “இ.வ.வில் நீங்க எழுதுறீங்களே, அந்த ப்ளாக்ஸ்பாட் எழுதுறவர் யார்னு உங்களுக்குத் தெரியுமா?”ன்னு யாராவது என்னிடம் கேட்டால் “இட்லிவடையா, அது ஈரோடு பக்கம் சேலம் பக்கம் தூத்துக்குடி பக்கம் எங்கேயாவது இருக்கும். எனக்கு அந்த ஊரே தெரியாது”ன்னு எதையாவது உளறிவைத்துவிட்டு ‘எஸ்’ தான்!

இட்லிவடையைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. தமிழகம் மற்றும் இந்தியாவின் தற்போதைய அரசியல் நிலவரங்களை இவரது பதிவுகள் ஒவ்வொன்றாக நூல்பிடித்து நூல்பிடித்துப் படித்தே கற்றுக் கொண்டேன். குஜராத்தில் இருந்து கொண்டு தமிழ்நாட்டைப் பற்றிய சகலவிதமான அப்டேட்ஸையும் அங்கு இருப்பவர்களைவிட அதிகமாகத் தெரி்ந்துகொள்ள முடிகிறதென்றால் அதற்கு இ.வ. ஒரு முக்கியக் காரணம். குறிப்பாக, 2G, அன்னா ஹசாரே போன்ற பல.. சினிமா, அரசியல், புத்தகங்கள், நகைச்சுவை, செய்திகள், உதவி, பல வி.ஐ.பி.களின் அறிமுகங்கள், அவர்களின்/அவர்களைப் பற்றிய கட்டுரைகள், கார்ட்டூன்கள், புதிர்கள் என வெரைட்டியாக விருந்தளிப்பது இட்லிவடை. அதற்கு ஆதாரமாக இந்தத் தளத்தின் 22-லட்சத்தைத் தாண்டிய ஹிட்ஸையும் 2000-ஐ நெருங்கிக்கொண்டிருக்கும் ஃபாலோயர்களையும் ஒவ்வொரு பதிவிற்கும் வரும் கருத்துகளையும் சொல்லலாம்.

இட்லிவடை,
வலையுலகில் நீங்கள் யாரென்று அறிய இவ்வளவு க்யூரியாசிட்டியை ஏற்படுத்திய பின்னும் இன்னும் ‘தலைமறைவாகவே’ இருக்கும் உங்களது மன உறுதிக்கும், தொடர்ந்து இந்தத் தளத்தை சூப்பராக நடத்திவரும் உங்களது முயற்சிகளுக்கும், இதற்கு வரும் ஆட்சென்ஸ் வருமானங்களைத் தேவைப்படுவோருக்கு உதவிசெய்வதற்காகப் http://www.blogger.com/img/blank.gifபயன்படுத்திவரும் தங்களது நல்ல உள்ளத்திற்கும் உங்கள் வாசகர்கள் சார்பாக ஹேட்ஸ் ஆஃப்!

ஒன்பதாவது ஆண்டுக்குள் அடியெடுத்துவைக்கும் உங்களை வாழ்த்த வயதில்லை...வணங்குகிறேன் (என்ன ஒரு 59 வயசிருக்குமா?) :-)

V wish U, iVadai keep rocking..

சுபத்ரா
http://subadhraspeaks.blogspot.com/

ஒர் உண்மையை சொல்ல விரும்புகிறேன், உங்களை அலுவலகத்தில் சந்தித்தது நான் தான் !

40 Comments:

sathishvasan said...

வாழ்த்துகள் இட்லி வடை! எப்போ கல்யாணாம் ஆச்சு? சொல்லவேயில்ல:-)

dr_senthil said...

Cool.. Idly Vadai rocks..

kg gouthaman said...

ஒரு பாதி புரிகிறது. கடைசி பாதி ம் ஹூம் - ஒன்றும் புரியவில்லை. மஞ்சள் கமெண்ட் புரிந்த பாதியையும் புரியாமல் செய்துவிட்டது. ஆனால் புரியாத பாதி கொஞ்சம் புரிந்துவிட்டது.

BalHanuman said...

இட்லி வடையின் சேவை மேலும் பல வருடங்கள் தொடர வாழ்த்துகள்...

யதிராஜ சம்பத் குமார் said...

சுபத்ரா, உண்மைய சொல்லுங்க, நீங்கதானே இட்லிவடை?

Anonymous said...

இட்லிவடை மென்மேலும் வளர எம்முடைய ஆசிர்வாதங்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

நீச்சல்காரன் said...

இட்லிவடையை ஒரு முறை சந்தித்திருக்கேன். ரொம்ப அமைதியான சுபாவம். நல்ல பேசுனாரு. கடைசியிலே நூறு ரூபா கடன் வாங்கிட்டு போயிட்டாரு.

Anonymous said...

//ஒர் உண்மையை சொல்ல விரும்புகிறேன், உங்களை அலுவலகத்தில் சந்தித்தது நான் தான் !//

சரிதான். நான் இந்தியாவுல இருந்தப்போ என் கூட ’முருகன் இட்லிக் கடை’க்கு வந்து இட்லி வடை சாப்பிட்டதும் நீங்க தானே!

உங்க லொள்ளுக்கு அந்துமணியே தேவலாம் போல இருக்கே. இப்படியே லொள்ளு பண்ணிக்கிட்டிருந்தீங்கன்னு வைங்க, நான், யாருங்கறதச் சொல்லிப்புடுவேன். ஆமா :-(

அதாவது ’நான் யாருங்கறத’ச் சொல்லிப்புடுவேன்னேன். ஹி... ஹி... ;-))

- அநங்கன்

IlayaDhasan said...

வாழ்த்துக்கள் இட்லி அண்ட் வடை....

உனது விழி வலிமையிலே!

surya said...

menmaiyagavum ade samayam karasaramagavum ull I V kku vazhthukkal.

RA RA I V with more manjal comments

many many happy returns

surya said...

Best wish for I V
really a blog which touch mind & heart & manadhara srrikkavaikkum blog too with manjal comments

Erode Nagaraj... said...

யதி, இதென்ன புதுக் கதை? சுபத்ரா தான் இ.வ.வா!! அவர் ஏதோ, இருப்பவர்-இராதிருப்பவர் என்றெண்ணியிருந்தேன் :)

நல்ல கட்டுரை சுபா.

Erode Nagaraj... said...

அநங்கர்,
ஒங்க பேர அதகளங்கர்-ன்னு வெச்சுக்கோங்க. அத-களங்கர் இல்ல; அதகளம் - கர் :)

விச்சு said...

இட்லிவடை- நல்லாயிருந்துச்சு.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

வாழ்த்துகள் .. வளருங்கள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

அரசியல்வாதி ஆவது அப்படி ?

சுபத்ரா said...
This comment has been removed by the author.
middleclassmadhavi said...

வாழ்த்துக்கள்!

சுபத்ரா said...

@ Erode Nagaraj
Thank u :-)

Erode Nagaraj... said...

சுபத்ரா, ஸ்டீவ் பாதிப்பில் iPad iPhone iTems (ஊர்வசி, ரம்பா,மேனகா...) வரிசையில் இ.வ.வை 'iVadai' என்று சொன்ன நுகபிநி :P :D

cho visiri said...

//சுபத்ரா, உண்மைய சொல்லுங்க, நீங்கதானே இட்லிவடை?//

What? How can it be? If su;batrta is iv, how is it that a person would tell subatra that he would come to the residence of subatra with his(?) wife and children.

That yellow comment is really startling and confusing......

cho visiri said...

Happy Birthday to you......
Happy Birthday to you......
Happy Birthday - Happy Birthday
Happy Birthday to iv

Matangi Mawley said...

வாழ்த்துகள் இட்லி வடை!
Good work Subadhra!! :)

சுபத்ரா said...

@ இட்லிவடை

உங்க திருப்பணி மந்திரிக்கே இந்த நிலைமையா? போற போக்கைப் பார்த்தா நீங்களா வந்து “நான் தான் இட்லிவடை”ன்னு சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டாங்க போல :-)

அப்புறம், சொல்ல மறந்துட்டேன்.. காலையில உங்க வீட்டுக்கு வந்தப்போ மாமி தந்த காபி பேஷ் பேஷ் ;-)
( deleted comment posted again )

ஸ்ரீராம். said...

நான் சொல்லட்டுமா?

Dhas said...

//காலையில உங்க வீட்டுக்கு வந்தப்போ மாமி தந்த காபி பேஷ் பேஷ் ;-)//

So - IV is a MALE!!

jaisankar jaganathan said...

//வாழ்த்துகள் இட்லி வடை!
Good work Subadhra!! :)//

ரிப்பீட்டு

IdlyVadai said...

@ jaisankar jaganathan ரிப்பீட்டட் ஆடியன்ஸ் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் கமெண்ட் போடுவதில் ரீப்போட் ஆடியன்ஸை இப்ப தான் கேள்விப்படுகிறேன்.

தயவு செய்து நீங்க முதல் கமெண்ட் போடாதீங்க அப்பறம் நான் பதிவை திரும்ப போட வேண்டியிருக்கும்.

Anonymous said...

Best wishes by V.Senthilkumar

தமிழ் வண்ணம் திரட்டி said...

வாழ்த்துக்கள்

jaisankar jaganathan said...

செல்லீட்டீஙக் இல்ல இட்லி. இனிமே சொந்தமா கமெண்ட் போட்டு கலக்குறேன்

பாரதி மணி said...

நான் அனுப்பிய எல்லா கட்டுரைகளையும் பிரசுரித்து, எனக்கு பல வாசகர்களின் பாராட்டுகளையும், ‘ங்காத்தா.....இந்த ஆளு முஞ்சியே எத்தனெ நாளு பாக்குது?’என்று கமெண்ட் போட்ட நல்ல நண்பர்களையும் சம்பாதித்துத்தந்த இட்லிவடையை பாராட்டலாம் என்றால் சுபத்ரா-இ.வா. குழப்பம் தலையைச்சுற்றுகிறது!

எனக்கு இப்போது தான் ‘ஏழரை’!

இட்லிவடை ‘ரகசியம்’ வாழ்க!

பாரதி மணி

ரசிகன் said...

யோவ்வ்வ்.. ஐ.வி ராக்ஸ் போட்டதால ராக் படம் போட்டு அதுக்கு மேல இட்லிவடை தூக்கி வெச்சிருக்கியே..குசும்பு போகமாட்டேங்குத 59 வயசுலயும்?

மேடம் நீங்க சூப்பரா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க

ரசிகன்

எங்கள் ப்ளாக் said...

இட்லி வடையை நாங்க முன்பே கண்டுபிடிச்சோம்

Roaming Raman said...

வாழ்த்துகள் இட்லி வடை... வெளியூர் மற்றும் வீட்டில் இன்டர்நெட் இன்னும் செட் ஆகாததினால், தொடர்ந்து பின்னூட்டங்கள் எழுத முடியவில்லை.. சுபத்ரா போல, நானும் இட்லி வடைக்குத்தான் முதலில் பின்னூட்டமும், கட்டுரையும் எழுத ஆரம்பித்தேன்.. வலையுலகில் ரோமிங் ராமன் என்ற பெயர் தெரியக்(!!??) காரணம் இவ தான்.. முகம் தெரியாவிட்டாலும், சாட்டில் பேசுவதில் நல்ல பண்பாளன் அல்லது பண்பாளர் அல்லது பன்-பலர். (ஏதாவது பாராட்டி எழுதினால்தான் இவ பின்னூட்டத்தில் ஒரு பதில் எழுதுவார் என்பதற்காக பாராட்டவில்லை) -உங்கள் தொடர் சேவைகளுக்குப் பாராட்டுக்கள்.. மற்றும் இதயம் கனிந்த வாழ்த்துகள்..
அன்புடன்
-ரோமிங் ராமன்

Lakshmi said...

வாழ்த்துக்கள் இட்லி வடை.

Anonymous said...

எழுத்துப் பிழைகளே இல்லாத அட்டகாசமான பதிவு. ( sans yellow comment )

Congrats IV

- BALA

மடல்காரன். said...

சுவையான சுவைக்க கூடிய இட்லிவடை..
எட்டு எட்டா சேர்த்துக்கோ..
நீ எந்த எட்டில் இருக்கிற?
வாழ்த்துக்கள் இட்லிவடை.!

அன்புடன், கி.பாலு.

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ. ,

2008 ஜூலையில் நான் தயக்கத்துடன் ஒரு வலைத்தளம் ஆரம்பித்த போது, செப்டெம்பர் கடைசியில் 'கடந்த மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப் பட்ட வலைப் பூக்களில் சிறந்தவை' என்று எனதையும் இயக்குனர் சீமானுடையதையும் தட்டிக் கொடுத்துப் பாராட்டிய இட்லிவடையை என்னால் எப்படி மறக்க முடியும்? என்ன, கொஞ்ச நாட்களாகக் கடையில் சரக்கில் சூடு, காரம் கம்மியா இருக்கு, கவனிக்கவும்!

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.com

Erode Nagaraj... said...

//அப்புறம், சொல்ல மறந்துட்டேன்.. காலையில உங்க வீட்டுக்கு வந்தப்போ மாமி தந்த காபி பேஷ் பேஷ் ;-) //

சுபத்ரா உங்களுக்கு மட்டுமல்ல, நிறைய பேர்களுக்கு அவர்கள் இருவரையுமே தெரியும்.

http://www.flickr.com/photos/mcgillianaire/5189345592/