பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 16, 2011

சி.பி.ஐயின் கடமை உணர்ச்சி !

சி.பி.ஐ 2009ல் விசாரித்து வெளியிட்ட விவரங்களை ஜெயலலிதா மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் குருமூர்த்தி எழுதினார். இதை கண்டு தயாநிதி மாறன் அவதூறு வழக்கு கூட போட்டர். எங்கே தங்கள் மீது அவதூறு வழக்கு போடுவார்களோ என்று பயந்து நீண்ட தயக்கத்திற்குப் பிறகு தயாநிதி மாறன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதியின் பெயர் வெளியாகி சுமார் நான்கு வருடங்களுக்குப் பிறகு சிபிஐ இந்த சோதனை நடத்தியிருப்பதிலிருந்தே, விசாரணை எந்த லட்சணத்தில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை சொல்லும். சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் விசாரணை என்ற ஒரே காரணத்திற்காகவே சிபிஐ இச்சோதனையை நிகழ்த்தியிருக்கக் கூடும். தவிர, மாறன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் கூறிய பிறகே சிபிஐ இச்சோதனையை நிகழ்த்தியிருப்பதால், மாறன் வீட்டில் எதுவும் கிடைத்திருக்காது. நவராத்திரி சமயம் என்பதால் போகும் போது வெற்றிலை பாக்கு, சுண்டல் கொடுத்திருப்பார்கள்.

இச்சோதனைகளைப் பற்றி இன்னொரு தகவலும் (வதந்தியும்) உலவுகிறது. அதாவது, சோதனைகள் தயாநிதியை குறிவைத்து நடத்தப்படுவதாக நம்பப்பட்டாலும், உண்மையில் இது சன் டிவி தொடர்பான பணப் பறிமாற்றங்கள் மற்றும் கலாநிதியைச் சிக்க வைக்கப்படுவதற்கான சோதனைகளே என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் சோதனையின் போது சிபிஐ அதிகாரிகளுடன் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பொறியாளர்களும் உடன் இருந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. தயாநிதியின் போட் கிளப் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகத்திற்கு தொலைபேசி இணைப்பு கொடுத்தது தொடர்பான சோதனைகளாக இருக்கலாமெனவும் தெரிகிறது. இதற்கேற்றாற்போல், சென்ற வாரம் சிபிஐ, சென்னை டெலிகாமிடமிருந்து, அக்குறிப்பிட்ட தொலைபேசி இணைப்பு தொடர்பான விவரங்களைக் கோரியிருந்தது குறிப்பிடத் தக்கது.

இம்மாதம் பதினெட்டாம் தேதி கனிமொழியின் ஜாமீன் மீதான விசாரணை நடைபெறவிருக்கிறது. இச்சமயம் சிபிஐ கனிமொழியின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்காது எனத் தெரிகிறது. அதாவது அவர் ஒரு பெண்ணென்ற அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் ஜாமீன் வழங்கலாம் சிபிஐ நினைக்கிறதாம். 2G ஸ்பெக்ட்ரத்திற்கு சமாதி கட்டும் பணிகள் கனிமொழியின் ஜாமீனிலிருந்து துவங்கலாம்.

மாறன் சகோதரர்கள் வீடுகளில் சோதனை நடத்தியதன் மூலம் சி.பி.ஐ. தனது கடமையைச் செய்திருக்கிறது - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இது காமெடி அல்ல செய்தி !

5 Comments:

R. Jagannathan said...

சி பி ஐ மாறன் வீடுகளில் ரெய்ட் செய்து ஒரு வாரத்திற்குப் பின் பதிவு போடுகிறீர்கள்; சி பி ஐ யிடம் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை இங்கு லோகல் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் கேஸ்களைவிட அதிகம். அதனால் 4 வருடங்களுக்குப் பின்தான் இந்த ரெய்டை செய்தது. உங்கள் தாமதத்தைவிடவா சி பி ஐ தாமதம் பெரிது?!

வேறு ஒரு பதிவர் எழுதியிருப்பது போல் எல்லாவற்றையும் ‘ சாமி ‘ பார்த்துக்கொண்டிருக்கிறார்! - ஜெ.

குரோம்பேட்டைக் குறும்பன் said...

எல்லாவற்றையும் 'சாமி' பார்த்துக் கொண்டிருக்கிறார் - என்றாலும், அந்த சாமிக்கே துப்பு கொடுத்து, அவரை அடிக்கடித் தூண்டி விட்டுக் கொண்டிருப்பவர், மன் மோகன் சிங் தானோ என்று திரும்பத் திரும்பத் தொன்றிக்கொண்டிருக்கின்றது. இத்தாலியக் குடும்பக் கொள்ளையைத் தடுக்க அவர் (சிங்) மறைமுக முயற்சிகள் செய்கிறாரோ என்ற சந்தேகம்.

ConverZ stupidity said...

//இதற்கேற்றாற்போல், சென்ற வாரம் சிபிஐ, சென்னை டெலிகாமிடமிருந்து, அக்குறிப்பிட்ட தொலைபேசி இணைப்பு தொடர்பான விவரங்களைக் கோரியிருந்தது குறிப்பிடத் தக்கது//

மெகா மலையை குழில புதைக்கும் போது கூட ஒரு பாறையையும் போட்டு புதைக்கிறது ஒன்னும் புதுசில்ல...

செவி வழிச் செய்தி said...

அட கடவுளே!!

இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா ...

ConverZ stupidity said...

கனிமொழியி தீபாவளி ரிலீஸ் ???