பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 24, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 24-10-2011

அன்புள்ள முனி,

நீண்ட நாட்களுக்கு பிறகு கடிதம் எழுதுகிறேன் என்று கோபப்பட வேண்டாம். "பிரதமருக்குக் கடிதம் எழுதினால் மட்டும் மீனவர் பிரச்சினை தீர்ந்து விடாது" என்று ஜெயலலிதாவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார் கலைஞர். மகள் டெல்லியில் இருக்கிறார் என்றால் மாசா மாசம் டெல்லி ஓடும் கலைஞர் தமிழர்களுக்குப் பிரச்சனை என்றால் பிரதமருக்குத் தந்திதான் அனுப்பினார் என்பது அவருக்கும் மறந்து விட்டது போல, சிதம்பரத்தின் கஜினி வியாதி மாதிரி.

அடுத்த கடிதம் ஞாநி கலாமுக்கு எழுதியது.

அப்துல் கலாமுக்கு

வணக்கம்.

கூடங்குளம் அணு உலை தொடர்பாக மக்களின் அச்சத்தைப் போக்க உங்களை அங்கே மத்திய அரசு அனுப்பப்போவதாக செய்திகள் வந்திருக்கின்றன.

தயவுசெய்து நீங்கள் போகவேண்டாம். உங்கள் மனசாட்சிக்குத் தெரியும் - அணு உலைத் தொழில்நுட்பம் என்பது பாதுகாப்பானது அல்ல என்பது. உங்களுக்கு நேரடியாகவே தெரியும் கல்பாக்கத்திலும் இதர உலைகளிலும் என்னென்ன விபத்துகள் நடந்தன, அவை எப்படி மூடி மறைத்து மழுப்பப்பட்டன என்பதை விஞ்ஞான ஆலோசகராக நீங்கள் அறிவீர்கள்.

குடியரசுத்தலைவர் பதவியில் இருந்தபோதும் இப்போதும் குழந்தைகளைச் சந்திக்கிறீர்கள். உற்சாகப்படுத்துகிறீர்கள். கனவு காணச் சொல்கிறீர்கள். அது போதும். அத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். கூடங்குளம் மக்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. அமைதியான அணு ஆபத்து இல்லாத வாழ்க்கைக் கனவு அது. அதைக் குலைத்துவிடாதீர்கள்.

நீங்கள் இலக்கிய ரசிகர். “நல்லது செய்தலாற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்கிறது இலக்கியம். நீங்கள் இதுவரை என்ன நல்லது செய்தீர்களோ தெரியவில்லை. தயவுசெய்து கெட்டதைச் செய்துவிடாதீர்கள்" என்கிறார்.

ஞாநியின் கருத்து சரியா தவறா என்று யாராவது படித்தவர்கள் விளக்குவார்கள். ஆனால் ஞாநியுன் கடித Tone நன்றாக இல்லை. ஞாநியுடம் கொஞ்சம் Maturity எதிர்பாக்கிறேன்.

அணு உலையினால் பாதிப்பு வரும் என்று ஞானி போன்றவர்கள் கூவுவதை விட அதிக பாதிப்பு முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் எடியூரப்பாவுக்கு. லோக் ஆயுக்தா போலீசார் நில அபகரிப்பு வழக்கில் அவரைக் கைது செய்ய, உடனே அரசியல்வாதிகளுக்கு உடனே வரும் நெஞ்சு மற்றும் குஞ்சு வலி எல்லாம் எடியூரப்பாவைத் தாக்கி ஐசியூவில் ஏசியில் சொகுசாக இருக்கிறார். முதலமைச்சர், போலீஸ் கமிஷனர் எல்லாம் வந்து பார்த்து குசலம் விசாரித்திருக்கிறார்கள். ஜாமீன் கிடைக்கும்வரை இனி கர்நாடகாவில் பல நாடகங்கள் அரங்கேறும்.

அத்வானி ரத யாத்திரையை கர்நாடக பக்கம் திருப்புவாரா என்று பல யூகங்கள் வந்துக்கொண்டு இருக்கிறது. ரதம் பெங்களூரில் ஓடும் என்று இன்று சொல்லிட்டாறு அத்வானி. மெட்ரோவே ஓடுகிறது, ரதம் ஓடாமலா ? முன்பே எடியூரப்பாவை பிஜேபியை விட்டு அடித்து துரத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாவம் அத்வானிக்கு வயசாகிவிட்டது, எடியூரப்பாவையே ஒன்று செய்ய முடியாதவர் எப்படி பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்குவார். எது எப்படியோ அத்வானியின் ரதத்தைப் பஞ்சர் ஆகிவிட்டார் எடியூரப்பா.

நோயைத் தீர்க்கும் டாக்டர்கள் முதலில் தாங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அதே போல ஊழலை ஒழிக்கப் போவதாகக் குரல் குடுப்பவர்கள் முதலில் தங்கள் நேர்மையைச் சோதித்துக்கொள்ளவேண்டும். அன்னாவின் ஊழல் ஒழிப்பு உண்ணாவிரதத்தில் ஆட்டம் போட்ட கிரண்பேடி இப்போது விமானத்தில் கட்டணம் குறைந்த வகுப்பில் பயணம் செய்துவிட்டு, உயர் வகுப்புக் கட்டணத்தை வசூலித்து விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அப்படி வசூலித்த பணம் ஏழைகளுக்கு என்று சொன்னாலும், நேர்மை இல்லாமல் சம்பாதித்த பணம் என்ற வகையில் அது ஊழல் ஆகாதா? அருமை அன்னாவும் அவரோட தம்பிகளும் என்ன சொல்லப் போறாங்க?

ஸ்டீவ் ஜாப்ஸ் பாராட்டுக்குரியவர்தான், ஆனால் அவர் மறைந்த சில நாட்களிலேயே புற்று நோயில் இறந்த டென்னிஸ் ரிச்சிக்கு மீடியாவின் கவனம் கிட்டவில்லை. ஏனோ சின்ன வயதில் இந்தியா வந்தார் என்ற ஒரு காரணத்துக்காக "இந்தியாவிலி​ருந்து வந்த ஆப்பிள்" என்று தேடி கண்டுபிடித்து எழுதுகிறார்கள்.

லிபிய அதிபராக இருந்து மக்களாலும், புரட்சிப் படையினராலும் தேடி கண்டுபிடித்து, விரட்டப்பட்டு வீழ்த்தப்பட்ட மும்மர் கடாபியின் மரணக் காட்சிகள் மனிதர்கள் ஆப்பிள் யுகத்திலும் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. எல்லோரிடமும் துப்பாக்கியும், அவர்களை வழி நடத்த சரியான தலைவரும் இல்லாமல், நாடு கடாபி போல வீழ்ந்துவிடும் என்று நினைக்கிறேன்.

முன்பு விகடனில் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்து வெளியிட்ட ஜோக்குக்கு ஆசிரியரை ஜெயிலில் அடைத்தார்கள். ஆனால் இன்று புதுவை அமைச்சர் கல்யாணசுந்தரம் திண்டிவனத்தில் 10-ஆம் வகுப்புத் தனித்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளார். இத்தனைக்கும் இவர் கல்வி அமைச்சர்!. கடந்த 2 வாரத்துக்கு மேலாக சட்டசபை அலுவலகத்துக்கு வரவில்லை. பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக எல்லோரும் நம்பினார்கள். ஆனால் நேற்று காலை அவர் சட்டசபை அலுவலகத்துக்கு வந்தார். வழக்கம்போல அலுவல்களை கவனித்தார். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அவரை சந்தித்து விட்டு சென்றனர். M .A எக்ஸாம் எழுத போனவரைப் போய் காணம்னு போலீஸ் தேடியிருக்கிறது. எப்படி இருந்தாலும் கல்வி அமைச்சர் நினைத்திருந்தால் டாக்டர் பட்டமே வாங்கியிருக்கலாம். போயும் போய் SSLC பரீட்சைக்கு இப்படி செய்துள்ளார் என்று நினைக்கும் போது அவர் அமைச்சராக ஏன் ஒரு எம்.எல்.ஏவாக இருப்பதற்கே கூட தகுதி இல்லை.

கனிமொழிக்கு விரைவில் ஜாமின் கிடைத்துவிடும் என்று தெரிகிறது. ஆனாலும் இந்த வருடம் விடுமுறை தினம் ஜெயிலில்தான் என்று கோர்ட்டு முகவின் நேற்றைய எல்லா சந்திப்புகளையும் சிபிஐயின் கரிசனத்தையும் மீறி ஆப்பு அடித்து உள்ளது. கலைஞர் டிவிக்கு தான் தீபாவளி போன்ற நல்ல நாட்கள் கிடையாதே!. அவர்களுக்குப் பல வழிகளிலும் கோடிக்கணக்கில் திருட்டுப் பணம் வரும் நாட்கள் எல்லாம் தீபாவளிதான்!.


3 நிமிடத்தில் படித்து முடிக்க வேண்டிய பதவி பிரமாணத்தை கவர்னர் சொல்லி முடிப்பதற்குள் கடகடவென்று 1.5 நிமிடத்தில் வாசித்து அரங்கத்தையே கலகலப்பாக்கினார் அமைச்சர் கருப்பசாமி. பதவி ஏற்பு முடிந்தவுடன் குடுகுடுவென்று இளைஞன் போல் துள்ளி குதித்து ஓடியதை பார்த்த எல்லோரும் சிரித்தனர். அவர் சில நாட்களுக்கு முன் மரணம் அடைந்தது பலரை வருத்தப்பட செய்திருக்கிறது.

எல்லோருக்கும் ஒரு நல்ல செய்தி. தீபாவளி அன்று வேலாயுதம் விமர்சனமும், அதற்கு அடுத்த நாள் 7ஆம் அறிவு விமர்சனமும் இட்லிவடையில் வரும். எல்லாம் டிக்கெட் கையில் இருக்கும் தைரியம்!

தீவாவளி மலர் விமர்சனம்: விகடன் - மூன்று மாத ஆனந்த விகடனை "ஒன்றாக" சேர்த்து பைண்ட் செய்திருக்கிறார்கள்.

கல்கி - மங்கையர் மலர், கல்கி, கோகுலம் பத்திரிக்கையை "ஒன்றாக" சேர்த்து பைண்ட் செய்திருக்கிறார்கள்.

சங்கராமன் கொலை குற்றத்துக்கு பிறகு பொதுவில் காஞ்சி மடாதிபதிகளின் மூன்று பேரின் படங்களை யாரும் போட முன்வருவதில்லை, அதுவும் "ஒன்றாகிவிட்டது"


கடைசி கோட் : "ஒரே ஒரு ஆணோட விமர்சனங்களுக்காக மத்த ஆண்களோட பாராட்டுக்களைத் தியாகம் பண்ணத் துணியறவங்களுக்கு கல்யாணம் என்ற முடிவு சரி. இப்போதைக்கு ஐ'ம் நாட் ரெடி - மல்லிகா ஷெராவத்.


பெங்களூரு கோர்ட்டில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெறவும், உலக அமைதிக்காகவும் ஸ்ரீரங்கத்தில் ராஷ்ட்ரப்ருத் ஹோமம் நடந்துள்ளது. அடிக்கடி முனி கடிதம் எழுத இதே போல் யாராவது ஹோமம் செய்வார்களா?

13 Comments:

Sukumar said...

Hi,

Since our population is increasing day by day we have no other option other than atomic power plants which can produce more energy and cater our day to day needs.

But, we need to have safety measure built in to mitigate the risk. But as we have seen in Japan and Russia no one can build such mechanism against natural disaster.

Combined with this we also need to worry about the selfish and lethargic people in our country who will not do their job properly.

According to me we shouldn't build such power reactors but we have no choice now.

Waiting for your deepavali film reviews...

Anonymous said...

aaaaawh......yawn....

Murali

jaisankar jaganathan said...

//அடிக்கடி முனி கடிதம் எழுத இதே போல் யாராவது ஹோமம் செய்வார்களா?//

நான் பண்ணுறேன் இட்லி. எல்லாம் உனக்காக

Vijayashankar said...

ஏனுங்க முனி, உங்களுக்கு இப்போ திருஷ்டி பத்தி நம்பிக்கை வந்திருக்குமே. எப்படி எல்லாம் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள், சிரித்தார்கள் கருப்பசாமியை பார்த்து! ( காஸ்மிக் எனர்ஜி )

நீங்க ஏன் இன்னும் அப்பா அம்மாக்களின் இன்ஜீநீரிங் / மெடிகல் கனவு தொந்தரவு பற்றி எழுதவில்லை. இன்னும் அது தான் கேரியரா? வேறு தொழிலில் யாரும் சோபிக்கவில்லையா?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
மகள் டெல்லியில் இருக்கிறார் என்றால் மாசா மாசம் டெல்லி ஓடும் கலைஞர் தமிழர்களுக்குப் பிரச்சனை என்றால் பிரதமருக்குத் தந்திதான் அனுப்பினார் என்பது அவருக்கும் மறந்து விட்டது
//
உண்மைதான்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

தீபாவளி வாழ்த்துகள்

இன்று என் வலையில்
இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

Damodar said...

// எல்லோரிடமும் துப்பாக்கியும், அவர்களை வழி நடத்த சரியான தலைவரும் இல்லாமல், நாடு கடாபி போல வீழ்ந்துவிடும் என்று நினைக்கிறேன்.//

Well Said !!!

kothandapani said...

அணு உலைக்கூடம் கட்டி முடித்து ஏறக்குறைய commission ஆகும் வரை சும்மா இருந்து விட்டு ஞானி போன்ற அறிவாளிகள் இப்போது கூவுவது வியப்பாக உள்ளது...உள்நோக்கம் உடையதோ என்றும் தோன்றுகிறது.

R. Jagannathan said...

ஞாநி அவர்களுக்கு அவர் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது. இருந்தும் கலாம் மிக அதிகமான பேர்களால் மதிக்கப்படுவது நிச்சயம். அவர் கூடன்குளத்திற்கு ஆதரவாகப் பேசினாலும் உண்மையை மறைக்க மாட்டார். அணு உலைகளுக்கான அபாயங்கள், இது வரை நடந்த விபத்துகள் இவற்றை கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றே தெரிவிப்பார். உலகின் மின் தேவைக்கு அணு உலைகள் அவசியம் இந்த காலக் கட்டத்தில். உருப்படியான மாற்று வழிகள் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

‘ நெஞ்ஜு வலி, குஞ்ஜு வலி..’ முனிக்கும் மெசூரிட்டி வேண்டுமோ!

கருப்பசாமியின் வேகமான பதவி ஏற்ப்பும், ஓட்ட நடையும் தனக்கான நாட்கள் கொஞ்ஜம் தான் என்று அவருக்குத் தெரிந்ததனால் தானோ?

கலைஞருக்கு தீபாவளி கிடையாது, தீப ஒளி உண்டு! (பார்க்க கலைஞர் டி வி !)

நேர்மையில்லாமல் சம்பாதித்த பணம் சரியில்லை தான். ஆனாலும் நாய் விற்ற காசு குறைக்காது. இன்றைய ந்யூஸ் படி அந்த பணத்தை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தவர்களுக்கு திருப்ப நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இன்னும் சமாதானமாகவில்லை என்றால், இதைக் கூட மற்றவர்கள் செய்யவில்லை என்பதை நினைத்துப் பாருங்கள். அதிகப்படி பணத்தை தன் கணக்கில் போட்டுக்கொள்ளவில்லை என்பதே பாராட்டுக்குரியது - என்னைப் பொருத்த வரையில்.

- ஜெ.

Anonymous said...

அம்மா தாயே! ஆறு மாசம் ஆயாச்சு என்ன ஆச்சு.
தடையற்ற மின்சாரம்
பசுமை வீடு,
லேப்டாப்,
ஆடு, மாடு,
கோழி,
மிக்சி, கிரைண்டர்,
என்ன ஆச்சு?
அம்மாவின் ரசிகர்கள் எங்கே போனார்கள்?

மின்சாரம் பெற அம்மா தீவிர முயற்சி என்றும் குஜராத்திலிருந்து ( விமானத்தில்!!!) வருதுன்னும் தேர்தல் வரை சொன்ன தினமலர் இப்போது மின்சாரத்தை மறந்தது ஏன்
?

Anonymous said...

மத்திய அரசிடம் கை ஏந்தி வாங்கி தருகிறேன் என்பதற்கு அம்மா ஏன்?
மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வாங்க அம்மா ஏன்?

அணு மின்சாரம் நமக்கு வேண்டாம் என்று சொல்ல அம்மாவுக்கு பயம்.
( பெங்களுருக்கு / முச்சா போகவே பயம்)

BalHanuman said...

>>சங்கராமன் கொலை குற்றத்துக்கு பிறகு பொதுவில் காஞ்சி மடாதிபதிகளின் மூன்று பேரின் படங்களை யாரும் போட முன்வருவதில்லை, அதுவும் "ஒன்றாகிவிட்டது"

மனதை வருந்த வைக்கும் உண்மை...

சுழியம் said...

அப்துல் கலாமுக்கே அணு உலை பற்றி அட்வைஸ், நெஞ்சு குஞ்சு எனக் கழக ஸ்டைலில் தரம்தாழ்ந்த நடை, வரிக்கு வரி அபத்தம்....

என்ன ஆச்சு இட்லிவடை குழுவினருக்கு ? :(

ரிச்சி மறைந்தது பற்றி ஏதோ ஒரு நல்ல தளத்தில் கட்டுரை வராதது ஏன் என்று கேட்பது, முனி கடிதம் எழுதத் தனக்கு யாராவது ஹோமம் செய்யுங்கள் என்று கெஞ்சுவது ...

தீபாவளி சமயம் என்பதால் முனிக்கு யாரோ சாராயம் படையல் வைத்து இருக்கிறார்கள். ஃபுல்லாக ஏற்றிக் கொண்டு மப்பில் உளறு உளறு என்று உளறி இருப்பதைக் காணும்போது பாவமாக இருக்கிறது. :(

போதை உச்சிக்கு ஏறி இட்லிவடையின் இலையில் வாந்தி வாந்தியாய் வார்த்தைகள்.

.