பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 22, 2011

சிதம்பர ரகசியம்

எல்லாம், எல்லாருக்கும் தெரியும்! என்ன ஏதேனும் பகவத் கீதை வ்யாக்யானம் போல் தெரிகிறதா? இல்லை, ஸ்பெக்ட்ரம் ராசா, இப்பிரச்சனையில் சிக்கிய நாள் முதலாகக் கதறும் மூன்று வார்த்தைகள் இவை. இதன் அர்த்தம் சமீபமாக இரண்டு நாட்களாகத்தான் முழுமையாக வெளி வரத் துவங்கியுள்ளன. இம்முறை சிக்குபவர் முன்னாள் நிதியமைச்சரும், இந்நாள் உள்துறை அமைச்சருமான, சிவகங்கைச் சீமான், ப.சிதம்பரம்.

நமத்துப் போன பட்டாசு திடீரென பெரும் சத்தத்துடன் வெடிப்பது போல இப்பிரச்சினை வெடித்துள்ளது. கடந்த மார்ச் மாதம், நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகத்திற்கு எழுதியுள்ள பதிநான்கு பக்கக் கடிதத்தில், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால், இரண்டாம் அலைக்கற்றை ஊழல் நடைபெறாமல் தடுத்திருக்க முடியும் என்று எழுதியிருக்கிறது, எழுதியவர் ஒரு மூத்த அதிகாரி; இக்கடிதம் தற்போதைய நிதியமைச்சர் ப்ரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குப் பிறகுதான் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல். அதாவது ப்ரணாப் எழுத சொல்லி அதிகாரி எழுதினார் என்று கூட வைத்துக்கொள்ளலாம்.

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் ஸ்வாமி, உச்சநீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதாவது, 2G அலைக்கற்றை விவகாரத்தில் விலை நிர்ணயம் செய்வது தொடர்பான பிரச்சனையில், ராசா, மற்றும் சிதம்பரம் ஆகிய இருவரும் சேர்ந்தே செயல்பட்டுள்ளனர். விலை நிர்ணயம் ராசாவால் மட்டும் தனித்து எடுக்கப்படட் முடிவு அல்ல, எனவே சிதம்பரத்தையும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் என்பதே சாமியின் மனுவினுடைய நோக்கம்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு இதனைக் கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், இது உச்ச நீதிமன்றத்தின் வரையறைக்குள்ளேயே வராது, ஆதலால் இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று ஒரு போடு போட்டது. தவிர, சாமி இதே போன்றதொரு மனுவை கீழ் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ள படியால், இவ்விஷயம் முற்றிலும் சிபிஐயின் சிறப்பு நீதிமன்றத்தாலேயே முடிவெடுக்கப் பட வேண்டிய ஒன்று; இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்பது சிபிஐ தரப்பு வாதம். மத்திய அரசின் அணுகு முறையும் அதுவே.

சாமியின் வாதப்படி, கீழ் நீதிமன்றத்தில் தாம் தாக்கல் செய்துள்ள மனுவிற்கும், தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கும் மனுவிற்கும் யாதொரு தொடர்பும் அல்ல; கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 2G அலைக்கற்றை வழக்கில் சிதம்பரத்தையும் ஒரு கூட்டு சதியாளராகச் சேர்க்க வேண்டும் என்றே கோரியுள்ளேன், அவர் மீது சிபிஐ விசாரணை கோரவில்லை. அதனால் அதற்கும் இதற்கும் தொடர்பில்லை என்று வாதாடினார். எதிர்பார்த்தவாரே, உச்ச நீதிமன்றம் சிபிஐ யின் வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் கீழ் நீதிமன்றத்தில், தாம் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு வலு சேர்க்கும் விதமாக ஸ்வாமி, மார்ச் மாதத்தில் நிதியமைச்சகத்திற்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒரு கடிதப் போக்குவரத்தைத் தாக்கல் செய்தார். அதுதான் மேற்கூறிய கடிதம். இக்கடிதம் பற்றி சிதம்பரம் கருத்தேதும் தெரிவிக்க மறுத்து விட்டார். ப்ரணாப் நேரடியாக கருத்தேதும் தெரிவிக்காவிடினும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகத்தான் அக்குறிப்ப்ட்ட கடிதம் வெளியாகியுள்ளது: ஊழல்வாதிகளைத் தோலுரிக்க இச்சட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று அர்த்தம் தொனிக்கும்படியாக ஒரு கருத்தைப் ப்ரணாப் வெளியுட்டுள்ளது இன்னமும் வேடிக்கை. சில மாதங்களுக்கு முன்னர் நிதியமைச்சகத்தை, உள்துறை அமைச்சகம் கண்காணிப்புக் கேமராக்கள் வாயிலாக வேவு பார்க்கிறது என்ற பிரச்சனை வெடித்தது. அதன்பிறகு பிரணாப் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று மறுத்த பிறகு அமுங்கிப் போனது. இப்போது அது எதற்காக என்பது தெளிவாகிறது. ப்ரணாப் - சிதம்பரம் இடையிலான இதுகாறும் இருந்த பனிப் போர், இப்போது முற்றி சந்தைக்கு வந்து விட்டது என்றே கொள்ளலாம்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்; இங்கு கூத்தாடி யாரென்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. சந்தேகமே இல்லாமல் திமுகதான். ஏற்கனவே திமுகவின் ராசாவும், கனிமொழியும் இவ்விவகாரத்தால் சிறையிலிருக்கும் நிலையில், மூன்றாவதாக தயாநிதி மாறன் பதவியிழந்தார். இந்நிலையில் திமுக தரப்பு சிதம்பரத்திற்கெதிரான இக்கடிதத்தை, ராசாவிற்கும், கனிமொழிக்கும் சாதகமாக எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என யோசிக்கத் துவங்கியிருக்கிறது. அதாவது சிதம்பரத்தின் அனுமதியுடன்தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனை செய்யப்பட்டுள்ளது; இதில் ராசாவின் தவறு ஏதுமில்லை என்று நீதிமன்றத்தில் ராசாவின் சார்பாக வாதாட இது வழி வகுக்கும். ஆனால் கனிமொழிக்கு இது எவ்வகையில் உதவுமென்பது தெரியவில்லை. கலைஞர் டிவிக்கு 216 கோடி ரூபாய் லஞ்சப்பணம் வந்த வழக்கில்தான் கனிமொழி முக்கியக் குற்றவாளி. அது ஸ்வான் டெலிகாம் மூலமாகப் பெறப்பட்ட பணம்; ஸ்வான் டெலிகாம் 2G ஒதுக்கீட்டின் மூலம் லாபமடைந்த நிறுவனங்களில் ஒன்று. சிதம்பரம் மீதான இந்தக் கடிதம், அதற்குத் தொடர்பில்லாத கனிமொழி விவகாரத்தில் எப்படி உதவ முடியும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

பிரதமரையும், சிதம்பரத்தையும் நீதிமன்றத்திற்கு சாட்சியாக அழைப்பேன் என்று சில வாரங்கள் முன்பு ராசா நீதிமன்றத்தில் முழங்கியது; 2G வழக்கில் தயாநிதி மாறன் பெயர் இடம் பெறக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிற மூன்றாவது குற்றப் பத்திரிக்கை தாக்கலாவதில் ஏற்படுகிற தாமதம்; ஏர்செல் சிவசங்கரன் விவகாரத்தில் சிபிஐ தாம் முன்பு கோர்ட்டில் கூறியதற்கு முற்றிலும் மாறாக தயாநிதி மாறனுக்கு நற்சான்றிதழ் வழங்கியது போன்றவை அனைத்திற்கும் முழுமுதற் காரணம் ஏன் என்ற கேள்விக்கு இந்த நிதியமைச்சகத்தின் கடிதப் பரிமாற்றம்தான் பதிலாக இருக்க முடியும். அதனால்தான் சிதம்பரத்தைக் காப்பாற்ற மத்திய சர்க்காரும், சிபிஐயும் இவ்வளவு மெனக்கெடுகின்றன. சிதம்பரம் சிக்கினால், வேறொருவரும் சிக்குவார் என்பதே அதற்குக் காரணம்!

ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதென தி.மு.க., காங்கிரஸ் எடுத்துள்ள முடிவுக்கு பிறகும், திருச்சி இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஆதரிக்குமா என்று கலைஞரிடம் கேட்டதற்கு "எனக்கு தெரியாது" என்ற கலைஞர் பதில் எல்லாம் வைத்து பார்க்கும் போது 2G வழக்கில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம்.

Closed Chapter என்று சிதம்பரம் எழுதிய கடித்தை பார்த்தும் கண்டுக்கொள்ளாமல், மன்மோகன் சிங் எப்படி பிரதமராக நிடிக்கிறார் என்பது பெரிய ஆச்சரியம்.

சிபிஐக்கு முன்பு இருந்த வேகம் இப்போது குறைந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நாளில் ராசாவும் க்வாட்ரோச்சி போல அன்னையின் ஆசியுடன் வெளியே வந்துவிடுவார் என்று தோன்றுகிறது. அவர் ஜெயிலில் இருந்த நாட்களுக்கு அவருக்கு நஷ்ட ஈடாக அரசு பணம் கொடுத்தாலும் ஆச்சரியப்பட கூடாது.

16 Comments:

RedChipRobot said...

//ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்; இங்கு கூத்தாடி யாரென்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. சந்தேகமே இல்லாமல் திமுகதான்.//

நீங்க திருடர்கள் முன்னேற்ற கழகம் தான் கூத்தாடின்னு சொல்றீங்க. ஆனா, சிலதுங்க இன்னும் சுப்ரமணியம் சுவாமிதான் கூத்தாடின்னு சொல்லிக்கிட்டு அலையுதுங்க.

சுவாமி போன்ற நாட்டுப்பற்று கொண்டோரின் single-minded focus தான் இந்த 2G அலைக்கற்றை ஊழல் இந்த அளவிற்கு முன்னேறி இருப்பதற்கு காரணம். சிதம்பரத்தின் திகார் வாசம் அடுத்த வாரம் முடிவு செய்யப்பட்டு விடும். ஆனா, அதற்கு பிறகு மாட்டப்போகிரவரை காப்பாற்ற ஊழல் காங்கிரஸ் எந்த முயற்சிக்கும் தயாராக இருக்கும்.

எனவே, சுவாமி அவர்களின் பாதுகாப்பை இப்போதிலிருந்தே பலப்படுத்த வேண்டி அரசாங்கத்தை நிர்பந்தப்படுத்துவது நாட்டுப்பற்று கொண்ட நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

Anonymous said...

Really surprising ,How come swamy alone get all these info. prior to anybody else?
He is not even an MP OR have any member in any assembly.

But, this is good for country.
"Many days thief, one day caught ;)"

R. Jagannathan said...

இனிமேல் எதற்கும் ஆச்சரியப் படமாட்டோம். எதுவேண்டுமானாலும் நடக்கும் இந்தியாவில் என்பது ஜகப் பிரசித்தம்.
ஆனால் இனிமேலும் யாராவது சுப்ரமண்யம் ஸ்வாமியை ஜோக்கராக நித்தரித்தால் அதைவிட நன்றிகெட்ட தனம் / அநியாயம் வேறு கிடையாது. - ஜெ.

Madhavan Srinivasagopalan said...

//ஆனால் இனிமேலும் யாராவது சுப்ரமண்யம் ஸ்வாமியை ஜோக்கராக நித்தரித்தால் அதைவிட நன்றிகெட்ட தனம் / அநியாயம் வேறு கிடையாது.
- ஜெ. //

அம்மாவே இப்படி சொல்லிட்டாங்களா ?

Anonymous said...

Any one can get any information by filing RTI , thats how it came into light.

Just that it needs regular follow up and some influence too if a general public files an RTI officials dont even bother to reply with in the stipulated time

Anonymous said...

"காரைக்குடி கள்வன்" - பாகம் 27

சிங்கி,
மனமோகன மமமியா
அரணாக இருக்கையில்
ஆராலென் செய இயலும்
காரைக்குடி கள்வனை?!

Kannan said...

"Closed Chapter என்று சிதம்பரம் எழுதிய கடித்தை பார்த்தும் கண்டுக்கொள்ளாமல், மன்மோகன் சிங் எப்படி பிரதமராக நிடிக்கிறார் என்பது பெரிய ஆச்சரியம்."

எல்லாம் அரசியல்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

cho visiri said...

//சிதம்பரம் சிக்கினால், வேறொருவரும் சிக்குவார் என்பதே அதற்குக் காரணம்!//


Please tell the other person, too, for, I am a heart patient and hence I do not sustain suspense any more. Please let the cat out of the bag. Is it Lion or Gold or Kindness ? (yes, you are right.The English terms for the Hindi names are used by me)?

Veluran said...

An old version: Pranab was away from the National Scene due to expression of ambition that he would be A Successor to Indira Gandhi when he was flying with Rajiv from Kolkatta on the news of assasination of Mrs. Gandhi. He got the chance ONLY after Rajiv`s exit. Further more he came Pioneer Finance Minister ( after him Manmohan)who presents the Budjet has NO VOTING Power for being a Rajya Member.I am supporting PC. This is yet another hurdle to STOP a Tamilian to become PM as it was done for Mooppanar by our " Ulaga Tamilargalin Kappalar " As on date Pranab is Executive PM and he is trying to become PACCA and this context these affairs to be noticed. This is would be precedent that a over looked Subordinate`s note when later become a Correct one , the Adminstrater will be hel responsible

Anonymous said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் அப்பா !!

Anonymous said...

செப்டம்பர் 25 2011 முதல் நாள் ஒன்றுக்கு 100 SMS மட்டுமே அனுப்ப முடியும் என்று ஏர்டெல் சொல்கிறதே?
உண்மையா என்ன?

Prakash said...

2G வழக்கில் ஆதாரம் எதுவும் இல்லாமல் சிபிஐ குழப்பம் ...

எப்படி ஆதாரம் இருக்கும் ? எந்த தவறாவது நடந்திருந்தால் தானே ஆதாரம் இருபதற்கு....மூன்று குழப்பங்களை பார்க்கலாம்

சிபிஐ குழப்பம் : 1

குறைந்த விலைக்கு 2G லைசென்ஸ் வாங்கிய நிறுவனங்கள், அவற்ற்றை மிகபெரிய விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தன. அந்த கொள்ளை லாப தொகைக்கு 2G லைசென்சை ராஜா நேரடியாக விற்றிருகவேண்டும் என்று, ஷேர் விற்பனை மற்றும் FDI போன்றவற்றின் அடிப்படை தெரியாமல் குபீர்கள் பொங்கினார்கள்...எதோ சந்தையில் ஒரு பொருளை 10 ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்று 90 ரூபாய் லாபம் என்ற ஒரு மொக்கையான அடிப்படையில் இந்த விவகாரத்தையும் குபீர்கள் அணுகினார்கள்...

2G லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் எதுவும் equaty ஷேர் (ப்ரோமோட்டர் ஷேர்) விற்கவில்லை. முதலீட்டு மூலதனத்தை உயர்த்திக்கொள்ள, சட்டபடியான வெளிநாட்டு நேரடி முதலீடிற்கான வழிமுறையில் ஷேர் விற்பனை செய்து தங்களது முதலீட்டு மூலதனத்தை உயர்த்தி கொண்டுள்ளன. இது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒன்று. இதை தெரியாமல் குபீர்கள் பொங்கினார்கள்..

"No sale of promoter's equity has been taken place. This was only (infusion) of an additional capital through FDI. It does not amount to divesting of promoter's equity,"

"companies can raise additional capital which come through FDI by divesting their equity."

All such transactions were legal in nature as only transfer of above 49% shares needs regulatory approvals the present law permits an FDI upto 76% in telecom companies.

http://www.dnaindia.com/india/report_2g-scam-govt-defends-equity-sale-to-foreign-entities_1475166

சிபிஐ குழப்பம் : 2

கட்டுமான நிறுவனங்கள் வங்கியில் தவறான முறையில் கடன் வாங்கி 2G லைசென்ஸ் பெற்றதாய் குற்றம்சாட்டினார்கள்...வங்கிகளும் இதில் சம்பந்தம் இருப்பதாய் குபீர்கள் பொங்கினார்கள்..

இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் மேற்கூறிய குற்றசாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை, கடன் கொடுக்கப்பட்டது விதிகளுக்கு உட்பட்டதுதான் என்று சிபிஐ சொல்லியிருபதாக செய்தி.

CBI closes probe into banks' role in 2G spectrum scam

Sources in the investigating agencies said they had "not found any irregularity in banks giving loans to those companies which got 2G spectrum licences during A Raja's tenure in 2007-2008".

http://timesofindia.indiatimes.com/india/CBI-closes-probe-into-banks-role-in-2G-spectrum-scam/articleshow/10058553.cms

சிபிஐ குழப்பம் : 3

கிராஸ் ஹோல்டிங் வைத்து நிறுவனங்கள் தவறாக 2G லைசென்ஸ் பெற்றதாய் எழுந்த குற்றசாட்டுக்கும் ஆதாரம் இல்லை..

லூப் டெலிகாம்இல் எஸ்ஸார் கிராஸ் ஹோல்டிங் (மறைமுக பங்கு) வைத்து 2G லைசென்ஸ் பெற்றதாய் வந்த குற்றசாட்டும் தவறு..

Essar didn't violate rules: Law ministry

CBI's case was that when Essar was a major telecom player, Loop Telecom -- controlled by its associate Khaitan group -- had been allotted spectrum in breach of eligibility conditions.

The MCA took a second look at the Essar-Loop corporate link and reiterated its earlier stand that "the documents of the companies examined do not substantiate 'associate' relationship between Essar group and Khaitan group".

The additional input from law ministry has now left CBI's prosecution department, which weighs evidence to decide if a case is fit for filing of chargesheet, in a dilemma.

http://timesofindia.indiatimes.com/india/Essar-didnt-violate-rules-Law-ministry/articleshow/10058745.cms

Prakash said...

2G loss? Government gained over Rs 3,000 crore: TRAI

2G லைசென்ஸ் வழகியத்தில் எந்த இழப்பும் இல்லை, மாறாக அரசுக்கு சுமார் 7000 கோடி லாபம் கிடைத்துள்ளது

2G லைசென்ஸ் வழகுவதில் 1.76 லட்சம் கோடி இழப்பு என்று டெலிகாம் துறையில் அடிப்படை புரிதல் இல்லாத ஆடிட்டர் தயாரித்த அறிக்கையை நம்பிய படித்த அறிவு ஜீவிகள் இப்போது, அந்த துறையில் நிபுணத்துவமும், அறிவும் பெற்ற வல்லுநர் குழுவை கொண்டு TRAI அளித்துள்ள அறிக்கையை குறித்து ஒரு பேச்சையும் காணோம்..

TRAI அறிக்கை படி, 2G லைசென்ஸ் வழகியத்தில் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை, மாறாக உபயோகபடுத்தாமல் இருந்த 2G அலைகற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு சுமார் 7000 கோடி லாபம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது...அவற்றை ஏல முறையில் விற்பனைசெய்யவும் எந்த பரிதுரையையும் செய்யவில்லை என்று TRAI தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு பிடிக்காதவர்கள் குறித்து எந்த செய்திவந்தாலும் ஆதாரம் இல்லை என்றாலும், பொய் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடும் அவாள் ஊடகங்கள்,அவற்றை உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே நம்பும் மக்கள் கூட்டமும் ,இந்த முக்கியமான செய்தியை குறித்து ஒரு மூச்சையும் விடகாணோம்...

எப்படி விடுவார்கள், ஊடகங்களும், சிலரும் சேர்த்து ஊதி ஊதி பெரிதாக்கிய 2G பலூன், வெகு சீகிரமாக ஒன்றுமில்லாமல் ஆகபோகிறது...ஆனால் இதற்கும் இந்த கும்பல் எதாவது ஒரு சப்பை கட்டு கட்டுவார்கள்.

இவர்கள் ஆதாரம் இல்லாமல் ஒரு குற்றசாட்டை கூறுவார்களாம். சிபிஐயும்,கோர்ட்டும்,இல்லாத ஆதாரத்தை கொண்டு தண்டனையை கொடுக்கவேண்டும் என்று கூச்சல் இடுவார்கள்...

http://economictimes.indiatimes.com/news/news-by-industry/telecom/2g-loss-government-gained-over-rs-3000-crore-trai/articleshow/9891650.cms

Prakash said...

விரைவில் செயலிழகபோகும் மற்றும் ஒரு சிபிஐயின் 2G குற்றசாட்டு....

2G ஸ்பெக்ட்ரத்தின் விலை மற்றும் ஏலம் கூடாது என்ற முடிவுகளை ராஜாதான் தனியாய் ஒற்றை ஆளாய் எடுத்தார் என்ற குற்றசாட்டும் விரைவில் முடிவுக்கு வரும்.

வருகின்ற செய்திகள், ராஜா இந்த விஷயங்களில் அப்போதய நிதி அமைச்சர் சிதம்பரம், இந்த விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் தலைவர் பிரணாப் மற்றும் பிரதமர் அலுவலகம் போன்றவர்களின் அனுமதி பெற்றுதான் முடிவெடுத்து இருக்கிறார் என்று உறுதிபடுத்துகின்றன...

இதைத்தான் ராஜாவும் முதலில் இருந்தே கூறிவருகிறார், 2001-10 பத்து ஆண்டிற்கான தொலைதொடர்பு கொள்கையும், TRAIயும் (இன்டிபென்டென்ட் ஆதாரிட்டி) , 2G ஸ்பெக்ட்ரத்தை ஏல முறையில் விற்க சொலவில்லை, ஸ்பெக்ட்ரமும் வருமானத்திற்கான வழிமுறை இல்லை என்று தெளிவாய் குறிபிட்டு உள்ளன... அந்த பத்தாண்டில் தொலைதொடர்பை பரவலாக்கவும், தொலைபேசி கட்டணத்தை குறைபதுவுமே முக்கிய குறிகோளாக இருந்தது...

இது அனைவர்க்கும், முக்கியமாக காங்கிரஸ்சுக்கு நன்றாகவே தெரிதிருந்தும், இந்தனை அமைதியாக இருபதற்கும், வெளிபடையாக இந்த 2G விவகாரத்தில் அரசின் நிலையை கூறாமல், கோர்ட்டிலும், சிபிஐ விசாரணையும் இழுத்துக்கொண்டு இருபதற்கு என்ன காரணம்...

திமுகவை எந்த வழியிலாவது பழிவாங்க காங்கிரஸ் நினைகின்றதா ?

IlayaDhasan said...

ஹைலைட் பண்ண மேட்டரு சூப்பர்

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்

Anonymous said...

/*எனவே, சுவாமி அவர்களின் பாதுகாப்பை இப்போதிலிருந்தே பலப்படுத்த வேண்டி அரசாங்கத்தை நிர்பந்தப்படுத்துவது நாட்டுப்பற்று கொண்ட நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.*/

எமர்ஜென்சி நேரத்திலேயே இந்திராவுக்கு தண்ணி காட்டிவிட்டு பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக முழங்கியவர் சுப்பிரமணியசாமி. அந்த ஆளு கோமாளி மாதிரி இருந்து கொண்டு செய்வது எல்லாம் திகிலூட்டுவதாக உள்ளது.