பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 20, 2011

குல்லா போட மறுத்த மோடி

மோடி உண்ணாவிரத பந்தலில் இஸ்லாமிய மக்கள் வந்ததை பெரிய நியூஸாக போட காங்கிரஸுக்கும் ராகுலுக்கும் கொஞ்சம் பயம் வந்துவிட்டது என்பது உண்மை. ராகுல் குடிசைகளுக்கு போய் டீ குடித்தது வீணாகிவிடுமோ என்று பயப்படுகிறார்கள்.

நேற்று சொல்லி வைத்தது போல் குஜராத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த தர்கா ஒன்றின் இஸ்லாமிய மத குருவான செய்யத் இமாம் என்பவர் நேற்று உண்ணாவிரத மேடையில் ஏறினார். தமது ஆதரவாளர்களுடன் சென்று மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இஸ்லாமியர்கள் தலையில் அணியும் "குல்லா" ஒன்றை அவரிடம் அளித்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த மோடி, தாம் அதை அணிய மாட்டேன் என்றும், அதற்கு பதிலாக சால்வை ஒன்றை அணிவிக்குமாறும் கேட்டார்.அதன்படியே அவரும் சால்வையை அளிக்க,அதனை மோடி பெற்றுக்கொண்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் கூறிய இமாம் "குல்லாவை மோடி ஏற்க மறுத்தது எனக்கு அவமானமல்ல; அது இஸ்லாத்திற்குதான் அவமானம்!"

இது எப்படி இஸ்லாத்துக்கு அவமானம் ? முஸ்லீம்கள் குல்லா அணிவது அவர்கள் மத சம்பந்தப்பட்டது. தமிழகத்தில் குல்லா அணிந்து கஞ்சி குடித்து நியூஸ் பேப்பருக்கு போஸ் கொடுக்கும் திராவிட மதசார்பற்ற போர்வையை போர்த்திக்கொள்ளும் நடிகர்களை பார்க்கலாம். இதே குல்லா வழங்கிய நபருக்கு யாராவது திருநீர் அல்லது குங்குமம் கொடுத்தால் அணிந்துக்கொள்ளுவாரா ? அப்படி மறுத்தால் அது மதசார்பின்மை ஆகிவிடுமா ? மோடி மறுத்ததை ஏதோ தீவிரவாதிகள் குண்டு வைத்து நாசம் செய்ததை காட்டிலும் பெரிய குற்றம் போல மீடியாக்கள் செய்தி போடுவதில் உள்நோக்கம் உள்ளது. அவர்களுக்கு ராகுல் காந்தி தான் பிரதமாராக வர வேண்டும் என்று விருப்பம்.

ஜின்னா ஒரு மதசார்பற்ற தலைவர் என்று பிதற்ற மோடி ஒன்றும் அத்வானி இல்லை. இஸ்லாத்தின் அடையாளமான குல்லாவை மறுத்து மத அடையாளம் இல்லத சால்வையை பெற்றக் கொண்ட மோடியின் செயலை இட்லிவடை பாராட்டுகிறது.

44 Comments:

Anonymous said...

இதே இட்லிவடைதான் சில மாதங்களுக்கு முன் மத்திய அமைச்சர் அகமது லட்சுமி உருவம் பொதித்த குத்து விளக்கை ஏற்ற மறுத்தபோது கரித்து கொட்டியது. அது சரி. தானாடாவிட்டாலும் தன் பூணூல் ஆடுமல்லவா?

IdlyVadai said...

எனக்கு திரும்பவும் பூணூல் போட்ட அனானி - சில மாதங்கள் இல்லை சில வருஷங்கள் முன். தொடர்புடைய பதிவுகள் இங்கே
http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_14.html

http://idlyvadai.blogspot.com/2009/12/3-12-2009_2863.html

இதில் எங்கே நான் கரித்து கொட்டியிருக்கிறேன் ?

Anonymous said...

இவன் குல்லா போட்டால் தான் இஸ்லாத்துக்கு அவமானம்

Anonymous said...

தானாடாவிட்டாலும் தன் பூணூல் ஆடுமல்லவா?

சிவ சதீஸ் said...

என்னுடன் பழக்கம் உள்ள ஒரு இஸ்லாமிய நண்பர் சொன்னார் " நாங்கள் யாரயும் வணக்கம் என்று சொல்ல மாட்டோம் ".அப்படி இஸ்லாமில் சொல்ல கூடாது என்கிறார் .
இரண்டு மாதம் முன்பு ஒரு இமாம் டெல்லி யில் சொன்னார் " பாரத மாதாவுக்கு ஜெ " என்று எந்த முஸ்லிம் மதம் சார்ந்தவரும் சொல்ல கூடாது என்று ...


மோடி யின் செயல் பாராட்ட தக்கது .

சிவ சதீஸ் said...

என்னுடன் பழக்கம் உள்ள ஒரு இஸ்லாமிய நண்பர் சொன்னார் " நாங்கள் யாரயும் வணக்கம் என்று சொல்ல மாட்டோம் ".அப்படி இஸ்லாமில் சொல்ல கூடாது என்கிறார் .
இரண்டு மாதம் முன்பு ஒரு இமாம் டெல்லி யில் சொன்னார் " பாரத மாதாவுக்கு ஜெ " என்று எந்த முஸ்லிம் மதம் சார்ந்தவரும் சொல்ல கூடாது என்று ...


மோடி யின் செயல் பாராட்ட தக்கது .

Anonymous said...

இதுக்கு வேகமா ரிப்ளை பண்ணும் இட்லிவடை பரமக்குடி இன அடக்குமுறைப் பற்றி வாய்திறபதில்லையே....

okyes said...

குல்லா என்பது இஸ்லாம் மார்க்கத்தில் இல்லாதது. ஐவேளை இறைவனைத் தொழுபவரே முஸ்லிம். இஸ்லாமியன் என்பதற்கான ஒரே வெளிப்படையான அடையாளம் ஐவேளை இறைவனைத் தொழுவது மட்டுமே; குல்லா அல்ல.

Anonymous said...

மோடி ஒரு கேடி,பிரதமரா வந்து விட்டால் இந்தியாவே அதோகதி,அவர் உண்ணாவிரதமே கபடமான ஒரு சதி. ஆனாலும் மோடிய தூக்கி வச்சுகிட்டு பூணூல்கள் எப்படி ஆடுதுகள்.நடத்துங்கள்.

Anonymous said...

இது
தினமலர் செய்தி போல "திடுக்"!
கொஞ்சம்
தீப்பொறி ஆறுமுகம்
எழுதியது போல "இருக்"!
இட்லி,
எப்போதிலிருந்து
அந்துமணி ஆனாய் நீ?

ark said...

Ayya Anonymous, don't try to escape and divert the topic.Do any muslim have any mark on their forehead.

Mr.Modi is right and shows that he is a true secularist and not pretending like others

பெசொவி said...

இங்கே வந்து வெறுப்பை உமிழும் அனானிகளுக்குநீங்கள் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் மோடியைப் போல் ஒரு சிறந்த முதலமைச்சர் இந்த இந்தியாவில் காண முடியாது. அது மட்டுமல்ல மற்ற சிலரைப் போல் (பாஜகவினர் உள்பட) வெளிவேஷம் போடத் தெரியாதவர் அவர். அவர் இந்தியாவின் பிரமதர் ஆனால் அது பிரதமர் பதவிக்குத் தான் பெருமையே தவிர அந்தப் பதவியினால் மோடிக்கு பெருமை கூடப் போவதுமில்லை, குறையப் போவதுமில்லை.

Anonymous said...

modi ah vidunga. namma idly vadai yaen ipdi oosi pona vada madri aayiduchu

ConverZ stupidity said...

மஞ்சள் கமெண்ட் நச்; உண்மையும் கூட.

அடுத்தவங்களோட நம்பிக்கைகளை மதித்து அவர்களுக்கு இடையுறு செய்யாமல் இருந்தால் போதும்; அவர்கள் நம்பிக்கை/பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

Anonymous said...

ஏன், ஒரு மரியாதைக்கு வாங்கி ஒரு நிமிடம் அணிந்தால் குறைந்து போய்விடுவாரா? இவ்வளவு சகிப்புத்தன்மை அற்ற ஆளை இந்தியா மாதிரிப் பரந்த, பலதரப்பட்ட மக்கள் வாழும் நாட்டுக்குப் பிரதமராக ஆக்க முடியுமா?

அந்தமட்டும் இப்படித் தன் சுய அடையாளத்தைக் காட்டியதைப் பாராட்டவேண்டும். இதுவே நமக்கு எச்சரிக்கை.

Anonymous said...

என்னய்யா இன்னும் காண்டு கஜேந்திரனோட அருவெறுப்பான ஜால்ரா சத்தம் கேட்க காணோமே!

Princess said...

If Modi becomes our PM Prime Minister .. India's future will be great...

Anonymous said...

மோடியின் செய்கை பாராட்டுக்குரியது. இட்லிவடை சொன்னதுபோல் ஒரு இஸ்லாமிய அமைப்பின் தலைவருக்கு குங்குமம் வைத்தால் ஏற்றுக்கொள்வார்களா? இஸ்லாமிய ஜமாத் அவர்களை ஒதுக்கி வைத்துவிடும்.
உண்மையான இஸ்லாமிய எதிர்ப்பை செய்வது காங்கிரஸ்தான். மாவோய்ஸ்ட்களையும், மததீவிரவாதத்தையும் வளர்த்து பாஜக மேல் பழியை சுமத்து அந்த கிழட்டு காங்கிரஸ்தான்.

சாத்தான் பரம்பரையின் கடைசி வாரிசான ராகுல் காந்தி என்ற குட்டிச்சாத்தானை ஒழித்துக்கட்டுங்கள். நாட்டில் மதநல்லிணக்கம் தானாக வரும்.

Anonymous said...

கூட்டம் கூட்டமாய் முஸ்லிம்களை கொலைசெய்ய உற்சாகமூட்டியதும், பொருளாதாரத்தை சூறையாட ஆலோசனை வழங்கியதும் நரேந்திரமோடியின் நேரடி உத்தரவுகளே! மேலும், முஸ்லிகளை கொலை செய்தவர்களையும், அவர்களை கற்பழித்தவர்களை பாராட்டி பாதுகாப்பும் அளித்ததும் இந்த நரேந்திர மோடியே தான்.

மட்டுமல்லாமல் மூன்று நாட்களுக்குள் எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள். அதற்கு பிறகு சட்டம் ஒழுங்கை நான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்று ஆலோசனையை வழங்கியது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆனாலும் மூன்று நாட்களுக்குள் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராமல் 2 மாதத்திற்கும் மேலாக இனப்படுகொலையை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Anonymous said...

intha kamnaatiyai hang

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

இதெல்லாம் ஒன்றுமே இல்லை! எலெக்‌ஷன் தேதி நெருங்க நெருங்க ’ராவுல் சப்போர்ட் ஃப்ராடு மீடியா’ இன்னும் பலமாக முடுக்கி விடப்படும்!

விநாசகாலே விபரீதபுத்தி!

அ.மு.செய்யது said...

// நீங்கள் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் மோடியைப் போல் ஒரு சிறந்த முதலமைச்சர் இந்த இந்தியாவில் காண முடியாது//

3000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்ட போது "இந்துக்கள் முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கட்டும்" என்று அமைதியாக வேடிக்கைப் பார்த்து ரசித்த இந்த மோடியைப் போல கண்டிப்பாக ஒரு முதலமைச்சரைப் பார்க்க முடியாது தான்.

2002 உச்சநீதிமன்றமே மோடியின் அரசு மீது நம்பிக்கை இழந்து விட்டதாக சாடியது.

// வெளிவேஷம் போடத் தெரியாதவர் அவர்//

ஆஹா....வாயில விரல வச்சாக்கூட கடிக்கக் தெரியாத இந்த பச்சக் கொழந்த தான்,

குஜராத் கலவரத்துல ஒரு முஸ்லிம் பெண்மணியின் கருவுல இருக்க கொழந்தைய சூலத்தால குத்தி கொல்றதுக்கு காரணமா இருந்துச்சாம்.

நல்லூரான் said...

நேற்று தினமணி நியூஸ்... அம்பத்தூர் கிறித்தவ பள்ளியில் பூ , பொட்டு வைத்து வந்த சிறுமியை அவமதித்தார் ஆசிரியை.
தூக்கில் தொங்கினாள் மாணவி..

வாழ்க பாரதம்! வளர்க மதசார்பின்மை!! ..

jaisankar jaganathan said...

//இதே குல்லா வழங்கிய நபருக்கு யாராவது திருநீர் அல்லது குங்குமம் கொடுத்தால் அணிந்துக்கொள்ளுவாரா ?//
சரியான கேள்வி இட்லிவடை. ஒன்னுசொன்னாலும் சூப்பரா சொன்னீங்க

jaisankar jaganathan said...

பொசாவி விட்டா மோடிக்கு ரசிகர் மன்றமே வச்சுடுவார்போல இருக்கு

jaisankar jaganathan said...

//குஜராத் கலவரத்துல ஒரு முஸ்லிம் பெண்மணியின் கருவுல இருக்க கொழந்தைய சூலத்தால குத்தி கொல்றதுக்கு காரணமா இருந்துச்சாம்.//

ஆதாரமே இல்லாம ஏன் குற்றம் சொல்லுறீங்க

okyes said...

oh! ark!! don't u see any mark on the forehead of any Muslim? If so, u didn't see all Muslim. Please go & see r research the qualities of Muslim and u'll find. But mark is not only a quality of Muslim. Don't believe me; research freely.

Anonymous said...

Edhuvae modi kulla aninthu kondal endha ulagam enna sollum.. Edho eppadi.. Modiyin pagal veshaem muslimkal kolla pduvathai vetikai partha modi endru adhae muslimgalin kullavai aninthu ematrukirar... makalae namabthirgal entha nayavanchagam modiyai .. endru than sollum..

Kulla aninthu velivesham endru peyar vanguvadhaivida.. kulla aniya maruthathu nalla mudivu..

Modi pondra oru nalla nirvagiyai endha media kootam ninralum esum utkarnthalum esum.. Manickam

R. Jagannathan said...

I second your opinions 100%. I registered very similar comments in NDTV site, but they didn't publish it for reasons unknown.
The main problem is that the Modi-haters are extremely deaf in not hearing the arguments on the post-Godhra happenings and forgetful of
Godhra train massacre. - R. J.

Anonymous said...

அ.மு.செய்யது,

\\ஒரு முஸ்லிம் பெண்மணியின் கருவுல இருக்க கொழந்தைய சூலத்தால குத்தி கொல்றதுக்கு காரணமா இருந்துச்சாம்.\\

Dont spread the wrong information in the public information.

Supreme court itself investigated this so called murder. it concluded their there is no such information happened.

you are speaking as if Modi have done all this non -sense. More than 250 Hindus and 60 muslims got killed int he police firing. Do you know the reason for this?

Any idea about incident happend in kashmir? There more than 1000 of Hindu leaders protest against this incidant?

Can u show me the ten muslims who protest against the killing of more than 5000 Hindus in kashmir? More than 100000 people are leaving like refugee in kashmir? Do you know why? All happend because of faraq abdulla. Is any so called leader condemn this?

not even a single person arrested / killed in Kashmir. But more than 250 Hindus and 60 Muslims got killed in the police firing. He as CM has done his best to safe gaurd the people. you can blame him for all. He is not the God to protect every one.

it all started because of sabarmathi express... Till now nobody condumn this activity... 60 people got burnt alive...

Roaming Raman said...

பிரதமாராக மோடி: இந்த வாக்குப் பெட்டிக்கு எப்படியப்பா இவ்வளவு வோட்டு வந்தது ?? சமச்சீர் கல்வியில் படிச்சீரா என்ன! பிரத"மா"ராக!! கண்றாவி... சரி பண்ணித் தொலையும்!!

-ரோமிங் ராமன்

எஸ்.கே said...

அனானி போன்ற முட்டாள்களுக்கு நரேந்திர மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதுகூட தெரியாது. எங்கும் எதிலும் பூணலைத் தேடி அலையும் ஒரு கூட்டம் தமிழ் வலையுலகில் அலைகிறது..!

எஸ்.கே

Anonymous said...

appuram ennaa masuruku muslimkalai vandhe matharamnu sollnumnu solreenga???

Anonymous said...

/இதே குல்லா வழங்கிய நபருக்கு யாராவது திருநீர் அல்லது குங்குமம் கொடுத்தால் அணிந்துக்கொள்ளுவாரா ?//
perfect punch...

Ganpat said...

மோடி,மொரார்ஜி,சோ போல சில கொள்கைகளை மூர்க்கத்தனமாக பின்பற்றுகிறார் என கருதுகிறேன்.இது அவர் எதிரிகளுக்குத்தான் சாதகமாக அமையும்.இமாம அளித்த குல்லாவை சில நிமிடங்கள் அணிந்து கொள்வதில் எந்த குற்றமும் இல்லை.பல அனாவசிய விவாதங்களை அது தவிர்த்திருக்கும்.
மோடி எதிர்ப்பாளர்கள் தூங்குவது போல நடிப்பவர்கள் அவர்களை மீது யானையை ஏற்றினாலும் முழித்துக்கொள்ள மாட்டார்கள்.
எருமை மாட்டிற்கு ஆண்குழந்தை பிறந்தது எனும் வதந்தியை நம்பி,பல்லாயிரக்கணக்கான விழுப்புரம் மாவட்டம் மக்கள் தத்தம் மகன்களுக்கு சாந்தி கழித்துள்ளனர்.
http://epaper.maalaimalar.com/2192011/epaperimages/2192011/2192011-md-hr-6/161924218.jpg

இவர்கள்தான் நாளை ஓட்டுப்போட்டு அரசையும் ேர்ந்தெடுப்பவர்கள்.
எனவே நமக்கு தலைவராக ஒரு எருமை வரும் வாய்ப்புத்தான் அதிகம்.

லெமூரியன்... said...

Anonymous said...
இவன் குல்லா போட்டால் தான் இஸ்லாத்துக்கு அவமானம்

மிக சரி.
இசுலாம் மார்க்கம் வீரத்திற்கு பெயர் பெற்றது..!
எந்த சிந்தி மன்னனாலும் அமைக்க முடியாத இந்திய பேரரசு இசுலாமியர்களால் மட்டுமே அமைக்க
முடிந்தது..!
அவர்கள் எதற்கு இந்த வெறிநாய்க்கு குல்லா
போடா வேண்டும்???
வீர வம்சத்தில் வந்த கூட்டம் இப்படி புத்தி இழந்து போனது சற்று வருத்தமே..!

Anonymous said...

மூன்று நாட்களா? அன்றைக்கே இரவு மத்திய ராணுவம் வந்து இறங்கிவிட்டது.அது february மாதம் என்பதனை மாத்திரம் நினைவில் கொள்ளுங்கள். அந்த மாதத்தில் 28 தேதிகள்தான் உள்ளன. மோதி ஒன்றும் 3 நாளைக்குள் உங்கள் ஜோலியை முடித்துக்கொள்ளுங்கள் பிற்பாடு நான் பார்த்துகொள்ளுகிறேன் என்று ஒன்றும் சொல்லவில்லை. இதை சிங்கால் அவர்களே எடுத்து சொல்லியிருக்கிறார்கள்
அடுத்து முதல் தேதி(மார்ச் மாதம்) என்பதால் குழம்பி போயுள்ளீர்கள்

Anonymous said...

//குஜராத் கலவரத்துல ஒரு முஸ்லிம் பெண்மணியின் கருவுல இருக்க கொழந்தைய சூலத்தால குத்தி கொல்றதுக்கு காரணமா இருந்துச்சாம்.//

This and other stories are fiction written by likes of Arundirty Roy, Teesta Setalvad and other fraudsters and proven as false news.

-Desabhimani

Anonymous said...

can this stupid anonymous answer a simple question...


what were u doing when muslims declared that they wont sing national anthem or say vanthe matram...


enna pudingitu irunthe?

If Modi had committed all the crime u said then why people elected him again...


u r a perfect example of brain washed muslim...

we really pity you..

¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...

அது சரி. தானாடாவிட்டாலும் தன் பூணூல் ஆடுமல்லவா?

அது சரி, இதில் யார் பூணல்; மோதி இல்லை, அத்வானியும் இல்லை, கட்காரியும் இல்லை; இதில் பூணல் ஆடுவத்ற்கு ஒன்றுமில்லையே!

இரா. சத்தியமூர்த்தி said...

ஒரு குல்லாவுக்கு இத்தனை அமளியா? இஸ்லாம் தலைவர் மோடிக்கு குல்லாய் போட நினைத்தது இவராவது வந்து சிறுபான்மையினருக்கு போலி மதசார்பினர் போடும் குல்லாய் நிறுத்தட்டும் என்று நினைத்து இருக்கலாம். (குல்லாய் போடுவதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும். இதை பற்றி ஒரு விளக்கமான பதிவு இங்கே

Anonymous said...

ஏன் ஏதாவது ஒரு இமாம்'க்கு விபுதி குங்குமம் கொடுத்தால் விட்டுக்கொல்வார்களா..

hayyram said...

///குஜராத் கலவரத்துல ஒரு முஸ்லிம் பெண்மணியின் கருவுல இருக்க கொழந்தைய சூலத்தால குத்தி கொல்றதுக்கு காரணமா இருந்துச்சாம்.//


தம்பி சைய்து கொஞ்சம் அ.மு.செய்யது ..காங்கிரஸ் மீடியா காரங்களும் கொலைகாரக்கூட்டங்களும் அவுத்துவுடுற பொய்யை அப்படியே பேசக்கூடாது. கொஞ்சம் இதையும் படிச்சிப் பாரு.


http://hayyram.blogspot.com/2011/07/blog-post_14.html

Baskar Perumal said...

Modi may have been straightforward in refusing the skull cap. But his fasting proves he is no different from others. Just trying to hide himself behind masks. Thats all.