பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 22, 2011

ஏர்டெல் சூப்பர் சிங்கர் - 3 யாரு ?

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-3 நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று வரும் செப்.23ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது. இதை நேரடி நிகழ்ச்சியாகவும் ஒளிப்ரப்ப விஜய் டிவி முடிவு செய்துள்ளது. சத்யபிரகாஷ், பூஜா, சாய்சரன், சந்தோஷ் ஆகிய நான்கு பேரும் இறுதிச்சுற்றில் மோத இருக்கிறார்கள்.

உங்கள் ஓட்டு யாருக்கு அல்லது யார் சூப்பர் சிங்கர் என்ற பட்டத்தை வெல்ல போகிறார்கள் ?

சைடில் ஓட்டு பெட்டி !


எனக்கு தெரிந்து ஏர்டெல் சூப்பர் சிங்கர் - திவ்யா தான் :-)

12 Comments:

Roaming Raman said...

பிரத""""மா""""ராக மோடி: இந்த வாக்குப் பெட்டிக்கு எப்படியப்பா இவ்வளவு வோட்டு வந்தது ?? சமச்சீர் கல்வியில் படிச்சீரா என்ன! பிரத"மா"ராக!! கண்றாவி... சரி பண்ணித் தொலையும்!!

:::::::::சரி பண்ணும் வரை விடமாட்டேன் இட்லி வடை... இது இவ மீதுள்ள மரியாதையால்:::

-ரோமிங் ராமன்

சூனிய விகடன் said...

இந்தத் தடவை என்னோட ஓட்டு 49 - ஓ..வுக்குத்தான்.....எந்தப் பாடகர் ..பாடகியுமே மனதைத்தொடவில்லை .....எதோ ஸ்கூல் பங்ஷனில் பாடுவது போல் சவ சவ என்றுள்ளது....பாடல்களின் தரத்தை விட நோயாளி அம்மா.., சீக்காளி அப்பா என்கிற மாதிரி சிம்பதி கிரியேஷன் .... நம்ம ராஜேந்தர் அண்ணனின் அரட்டை அரங்கம் எபெக்ட் தான் வருகிறது...

விஜய் டிவியின் இந்த சூப்பர் சிங்கரை நான் மறந்துட்டேன்....நீங்க வேணா பாருங்க..

திவ்யாவைக்கூட ஒழுங்கா விடாம அப்பப்ப கடத்திர்றாங்க......என்னமோ போங்க....

அல்கா அஜித்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.....என்ன ஒரு குரல்....

வாழ்க அல்கா

Madhavan Srinivasagopalan said...

இதுதான் இப்போ ரொம்ப தேவை..
போப்பா.. போயி புள்ள குட்டிய படிக்க வெய் பிரயோஜனப்படும்..

Vinoth said...

Vijay Super Singer 3 winner may be 'Sai Charan'!, final show is just an eye wash for public. Do you really think he deserved to be a wildcard winner?!

Sh... said...

நான் சில நாட்களாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன், ஒரு உண்மையான, நேர்மையான தீர்ப்பு தருவதில்லை எனத் தோன்றுகிறது. என் ஓட்டு என்னமோ சத்யாவிற்குத் தான். ஏனோ பூஜாவின் பாடல்கள் மனதைத் தொடுவதில்லை - அவருக்கு versatility இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அவருக்கு ஒரு தனி இடம் இந்த போட்டியில் இருப்பதாகத் தெரிகிறது. அதனால் அவரே வெற்றி பெறுவாரோ என்னமோ? மக்கள் வாக்கு சாய் சரணுக்குத் தான் என நினைக்கிறேன்.

Anonymous said...

அட பாவிங்களா? சத்யா ஒரு மலையாளி என்பது தெரியாதா? இட்லி வடையில் சத்யாவிற்கு தான் நிறைய ஓட்டு விழுந்திருக்கு ! நாம் திருந்த மாட்டோம். அவனுங்க என்ன தான் நம்மை அடிச்சாலும் அவனுங்களை தலையில் தூக்கி வச்சிட்டு ஆடுவோம்

Kannan said...

விஜய் டிவியின் இந்த சூப்பர் சிங்கரை நானும் பார்த்தேன்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Sudhar said...

இதுல யாரு மலையாளியோ அவங்க தான் ஜெயிப்பாங்க

balaji said...

சூப்பர் சிங்கர் ப்ரோக்ராமில் சந்தோஷ் எப்படி செலக்ட் ஆனான் ?
இவனை விட திறமையான பல பேர் இருக்கும் பொது ?

இவர்கள் TRP rating ஏறுவதற்கு முடிந்த அளவுக்கு இவர்களே இந்த ப்ரோக்ராம்மை உசுபேத்தி கொள்கிறார்கள்


இதில் ஏதோ உள் குத்து உள்ளது
இவனை தேர்வு செய்ததில் இருந்து எனக்கு இந்த ப்ரோக்ராம்மே பாக்க பிடிக்க வில்லை

இவனுக்கு பதிலாக Srinivas – SS 04 அல்லது Danyashree – SS 06 அல்லது Maalavika – SS 08 தேர்வு செய்திருக்கலாம்

கடைசியில் இங்ககேயும் அரசியல் செய்து விட்டார்கள் !!!

இரா. சத்தியமூர்த்தி said...

என்னை பொறுத்தவரை சூப்பர் சிங்கரின் வீக் பாயிண்ட் இந்த பெண் திவ்யாதான். அவரின் வாழைப்பழ குரலும், கத்தலும் சகிக்கமுடியாத தொல்லை. அடுத்த முறை இவரும் இல்லாமல், இன்னொரு கத்தல் உபத்ரவியான திவ்யதர்ஷ்ணியும் இல்லாமல் யாராவது நல்ல பெண்மணியோ இல்லை கோபிநாத்தோ இல்லை சிவகார்த்திகேயனோ வந்தால் நன்றாக இருக்கும்.

Anonymous said...

As GV Prakash said " The real winner of the final is Satya Prakash". They fixed the results!!!!.

Vinoth said...

My guess is right! As I commented on Sep 22, Grand finale is just an eye wash to public, Vijay TV showed mercy to Sai Charan. I believe Sathya deserved to title winner due to his versatile singing & voice. A high end drama played by Vijay TV :)