பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 28, 2011

மினி முனி - 28-09-2011

அன்புள்ள மினி முனிக்கு வணக்கம்,

கடந்த சில மாதங்களாக இட்லிவடைக்கு விநோத வியாதி பிடித்திருக்கிறது, அதனால் அடிக்கடி அப்டேட் செய்ய முடிவதில்லை. அதனால் முனியை சுறுக்கி மினி முனி...எனக்கு பிடித்திருக்கும் வியாதி போல இப்ப காங்கிரஸாரை கடந்த இரண்டு மூன்று தினங்களாக ஒரு வியாதி தாக்கியுள்ளது. அதென்னவென்றால், தற்செயலாக ஏதேனும் கேமராவையோ, அல்லது மைக்கையோ கண்டால் தாமாகவே, எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, இல்லை என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். தூக்கத்திலும் இதையே ஜெபித்தபடிதான் உள்ளனர். பிரதமர் முதல் காங்கிரஸின் கடைநிலை தொண்டர் வரை இந்நோய் பீடித்துள்ளது. காரணம், சிதம்பர ரகசியம் வெளிப்பட்டதுதான்.

மத்திய உள்துறை அமைச்சகம் பொழுது போகாமல், பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. அதாவது, அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நடவடிக்கை எடுத்திருந்தால், 2G ஊழல் நடைபெறாமல் தடுத்திருக்கலாம் என்பதே அக்கடிதத்தின் சாராம்சம். இக்கடிதத்தை உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலை அதிகாரி ஒருவர் எழுதியிருந்தாலும், அது அப்போதைய உள்துறை அமைச்சர் ப்ரணாப் முகர்ஜியின் பார்வை/அனுமதிக்குப் பிறகே அனுப்பபட்டுள்ளது. இதில் இன்னொரு விஷயம், ஒரு அமைச்சகத்தின் அதிகாரியொருவர், அத்துறை அமைச்சரின் ஆட்சேபணையையும் மீறி, பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்ப முடியாது என்பது நடைமுறை விஷயம். இது சாதாரண பாமரனுக்குக் கூட எளிதில் விளங்கும். ஆனால் இந்த முழு பூசணிக்காயைத்தான் சோற்றில் மறைக்க காங்கிரஸ், சிபிஐ துணையுடன் படாத பாடு பட்டு வருகிறது. சல்மான் குர்ஷித் என்ற மகான் சட்ட அமைச்சராக இருக்கிறாராம். அவர் "அமைச்சர் பார்த்தார்" என்றால் அதனை அனுமதித்தார் என்று சொல்ல முடியாது என்கிறார். சரியான "காமெடி பீஸ்"

இஞ்சி சாப்பிட்ட .... போல இருந்த ப்ரணாப் முன்பு இது தொடர்பாக பேசவே மறுத்தவர் இப்போது தினம் ஒன்றாகக் கூறி வருகிறார். லேட்டஸ்டாக, ஒரு வல்லுனரின் கருத்தை அறிந்த பிறகே, இக்கடிதம் தொடர்பாக பேச முடியும் என்றிருக்கிறார். சொன்னதோடு நில்லாமல், அன்றிரவே சோனியாவைச் சந்தித்துப் பேசியும் இருக்கிறார். சோனியாதான் அவர் கூறிய வல்லுனர் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதில் ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு விஷயத்தைச் செய்யுமுன்பு, அது சரியா தவறா என வல்லுனர் அபிப்ராயத்தை அறிவது முறையா, அல்லது செய்த பிறகு அத்தவறை எப்படி சரி செய்வது என்று வல்லுனர் கருத்தை அறிவது முறையா?

ப்ரணாப் தவிர, தற்போதைய உள்துறையமைச்சர் சிதம்பரமும் சோனியாவை தனியாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார். வேடிக்கை என்னவெனில், இருவரும் ஒருவர் பின் ஒருவராகப் போய் சோனியாவிடம் பேசியுள்ளனர். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையுமில்லை என்று கூறும் காங்கிரஸாரிடம், ஏன் இவ்விருவரும் ஒன்றாக சோனியாவைப் பார்க்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலில்லை. வெளியே வந்த ப்ரணாப் யாரும் கேட்காமல் "சிதம்பரம் நல்லவர், வல்லவர் அவர் பெரிய தூண், நல்லவர்" என்று பிதற்றுகிறார். இப்பொழுது கடைசியாக பிரதமர்தான் முடிவெடுக்க வேண்டும், அதுவரை இதில் எதுவும் சொல்வதற்கில்லை என்று ப்ரணாப் சொல்லி விட்டார், என்னவோ அமைச்சரவை முடிவுகளை பிரதமரே எடுப்பது போல.

இக்கடித விவகாரத்தை மையமாகக் கொண்டு, சிதம்பரத்தை விசாரிக்க வேண்டுமென சுப்ரமணிய சாமி கோர்ட்டில் வாதாடி வருகிறார். ஆனால் வேடிக்கையாக சிபிஐ, சிதம்பரத்தை விசாரிக்கவே முடியாது; எங்களுக்கு யாரை விசாரிக்க வேண்டுமென யாரும் உத்தரவிட முடியாது; சிபிஐ ஒரு தன்னிச்சையான அமைப்பு என்று சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி வருகிறது. அதாவது சிதம்பரத்தை விசாரிப்பது இவ்வழக்கை தாமதப் படுத்துமாம்! முன்பு போஃபர்ஸ் விவகாரத்தில், க்வாட்ரோக்கியை இந்தியா கொண்டு வருவதில் ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி, அவ்வழக்கிற்கு சிபிஐ சமாதி கட்டியது. இப்போது சிதம்பரத்தை விசாரிப்பதால் ஏற்படப்போகும் தாமதத்தை கணக்கில் கொண்டு, இவ்விவகாரத்திற்கு சமாதி கட்ட சிபிஐ எத்தனிக்கிறது. சுப்ரீம் கோர்ட் இவ்விவகாரத்தில் என்ன சொல்லப் போகிறதென்பது இன்று தெரியும்.

இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டிய பிரதமர், சிதம்பரத்தின் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் (இவர் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்று யாராவது சொன்னால் நல்லது) இதனைக் கேட்டு சிதம்பரம் கலக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஏனெனில், பிரதமரிடமிருந்து ஏற்கனவே இவ்வாறு சான்றிதழ் பெற்ற ராசா இன்று என்ன கதியிலிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

நேற்றைய முன்தினம் கூகிளுக்குப் பிறந்த தினமாம். அதில் தேடிக் கண்டுபிடிக்க இயலாத விஷயம் ஒன்று உண்டு என ட்விட்டரில் பேசிக் கொள்கிறார்கள். அது மன்மோகன் சிங்கின் முதுகெலும்பாம்.

முதுகு பற்றி பேசிய பிறகு ... அதை பற்றி பேசவில்லை என்றால் சிலர் கோபித்துக்கொள்ளுவார்கள். நல்லி குப்பு சாமிக்கும் இலக்கிய மேடைக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவர் இலக்கியவதிகளுக்கு பின்னாடி பிடிக்காத மதிரி அதாவது அவர்கள் போட்டுக்கொள்ளுவதற்கு ஏற்றவாறு ஜூன்ஸ் தயாரித்துள்ளார். முதல் கஸ்டமர் பா.ரா தான்!. தற்போது Flying Machine கம்பெனி கொடுத்த விளம்பரத்தால் சோனாவிற்கு ஆதரவு தெரிவித்த மகளீர் அமைப்புக்கள் இந்த விளம்பரத்துக்கு எதிரிப்பு தெரிவித்து போராட போகிறார்களாம். FM ஜூன்ஸ் கம்பெனி பா.ராவை அனுக போவதாக பேசிக்கொள்கிறார்கள்.

சோனியா காந்தியை டி.ஆர்.பாலு ஏன் சந்தித்தார் என்று கலைஞர் விளக்கம் அளித்துள்ளார் "சோனியா காந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தோழமைக் கட்சி என்ற முறையில் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி தந்தி கொடுத்தேன். பின்னர் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோதும் வாழ்த்து தெரிவித்தேன். இப்போது நலம்பெற்று திரும்பியிருக்கிறார்.

எனவே, தமிழன் என்ற முறையில் அந்தப் பண்பாட்டோடு அவர் உடல் நலம் பற்றி விசாரிக்க டி.ஆர்.பாலுவை அனுப்பியிருந்தேன்"

என்ன தான் பெரிய ஆளாக இருந்தாலும், கபடி விளையாட போனால் யார் காலையாவது பிடிக்க வேண்டும். அது தான் வீரம் !

இப்படிக்கு,
மினி இட்லி

11 Comments:

Thomas Ruban said...

ஒரே கல்லிலே ரெண்டு மாங்கா!!!?

நம்முடைய இந்நாள் நிதியமைச்சரும், முன்னாள் நிதியமைச்சரும்
டெல்லிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான பெண்ணும், அவளது சூப்பர்பவர் பாட்டியும் அமர்ந்திருந்தனர். கொஞ்ச நேரத்திலேயே நமது இந்நாள் நிதியமைச்சர்க்கும், அந்த யுவதிக்கும் இடையில் பார்வை பரிமாற்றங்கள் தொடங்கியது. இந்நாள் நிதியமைச்சர் அவளை எப்படியாவது மடக்கி ரெண்டு வருஷத்துக்கு ஓட்டனும் என நினைத்தார் அதேபோல் முன்னாள் நிதியமைச்சரும் நினைத்தார். சிறிது நேரத்தில் ரயில் ஒரு குகைப் பாதையில் நுழைந்தது. உள்ளே மையிருட்டு. அப்பொழுது ஒரு முத்தமிடும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு அறை விழும் சத்தமும் கேட்டது.

ரயில் சிறிது நேரத்தில் குகைப் பாதையிலிருந்து வெளி வந்த பொழுது, நால்வரும் அவரவரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

பாட்டி மனதிற்குள் நினைத்தார், சூப்பர்பவர் நான் ஒருத்தி இருப்பதை மதிக்காமல் " என் பேத்திக்கு முத்தம் கொடுக்கிறானே படவா! அந்த ஆளுக்கு ஆனாலும் ரொம்ப திமிரு.ஆனாலும் என் பேத்தி பரவாயில்லை. உடனே அவனை அறைஞ்சுட்டாள்."

முன்னாள் நிதியமைச்சர் மனதிற்குள், "இந்த ஆளுக்கு இப்படி முத்தம் கொடுக்கற அளவுக்கு தைரியம் இருக்கும்னு தோனலையே!! ஆனாலும் அதற்காக அந்த பெண் என்னை அறைஞ்சிருக்க வேண்டாம்!!!"

அந்த பெண், "அந்த ஆளு எனக்கு முத்தம் கொடுத்தா, நம்ம பாட்டி அவனை ஏன் அறைஞ்சாங்க !!!"

நம்முடைய இந்நாள் நிதியமைச்சர் என்ன நினைச்சார் தெரியுமா? "வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே. பின்னே சும்மாவா? ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு!, தன்னொட எதிரி முன்னாள் நிதியமைச்சயையும் அறையவும் நீண்ட நாள் பகையை தீர்த்துக்கொள்ள வாய்ப்பும் கிடைக்குமா என்ன?

கார்த்தி said...
This comment has been removed by the author.
கார்த்தி said...

நீங்கள் இப்படி சொல்லுகிறீர்கள்..ஆனால் பத்ரி சேஷாத்ரி ராசா, கனிமொழி மேல் தவறு இல்லை என்று கூறுகிறார்..அவர்களை சிறையில் வைத்திருப்பது தவறு என்றும் கூறுகிறார்..பார்க்க http://thoughtsintamil.blogspot.com/2011/09/2.html

R. Jagannathan said...

போதுமையா இந்த 2G சலம்பல். இன்னும் கொஞ்ஜநாள் அவ்வள்வுதான். வேறு விஷயம் வந்துவிடும், இதை மீடியாக்கள் மறக்கும். நாமும்! உ-ம்: சோனா எல்லோரையும் கேனையனாக்கிவிட்டு, வழக்கை வாபச் வாங்கிவிட்டு வெளி நாட்டுக்குப் போகிறாராம். போலிஸ் கமிஷனர் மற்றும் பலரின் நேரத்தை வீணடித்ததற்கு அவருக்கு கிடைத்ததில் கொஞ்ஜம் வெட்டிவிட்டு போகச்சொல்லுங்கள். எங்க தொட்டானோ, என்ன கொடுத்தானோ?
-ஜெ.

projectdevendhra said...

http://www.change.org/petitions/dismiss-and-convict-police-who-executed-paramakkudi-massacre

Anonymous said...

டெல்லி: 2007ம் ஆண்டு நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 1.76,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுவதில் உண்மையில்லை என்று தெரிகிறது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் ரூ. 2,645 கோடி மட்டுமே என்று இந்திய தலைமைத் தணிக்கை அதிகாரி அலுவலகத்தைச் (Comptroller and Auditor General -CAG) சேர்ந்த மூத்த ஆடிட்டர் ஒருவர் கணக்கிட்டுள்ளார்.

ஆனால், அதை புறம் தள்ளிவிட்டு, நஷ்டம் ரூ. 1.76,000 கோடி என்று அறிக்கை தந்துள்ளால் தலைமைத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய்.

இது தொடர்பாக தலைமைத் தணிக்கை அதிகாரி அலுவலகத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆவணங்களில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக தணிக்கைத்துறையின் (தபால் மற்றும் தொலைத் தொடர்புப் பிரிவு) ஆடிட்டர் ஜெனரலான ஆர்.பி.சிங் தான் மதிப்பீடு செய்துள்ளார். அவர் தனது மதிப்பீட்டின்படி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் ரூ. 2,645 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அறிக்கை சமர்பித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் இந்த அறிக்கையை சிங் தயாரித்துள்ளார். இதில் நாட்டின் பண வீக்கத்தையும் மனதில் கொண்டு, நஷ்டத்தை மதிப்பீடு செய்தார் சிங்.

ஆனால், அவரது அறிக்கையை நிராகரித்துவிட்டு நாட்டுக்கு ரூ. 1,76,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தலைமைத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய் தானாகவே தகவல் வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் ராய், ஸ்பெக்ட்ரம் நஷ்டக் கணக்கை மிகவும் உயர்த்தி தவறான தகவல் தந்த விவரம் இப்போது வெளியாகிவிட்டது. இவர் எந்தக் கணக்கை வைத்து நஷ்டத்தை இவ்வளவு தூரம் அதிகரித்துச் சொன்னார் என்பது தெரியவில்லை என்று ஆர்.பி.சிங் கூறியுள்ளார்.

இது குறித்து தலைமைத் தணிக்கை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் முடிவு செய்துள்ளது.

senthilkumar said...

மத்திய உள்துறை அமைச்சகம் பொழுது போகாமல், பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. It should be Finance ministry not home ministry

Anonymous said...

எந்த்தரோ தொங்கலு
அந்தரிக்கி நா ஆவேசமுலு!...
ஹர்ரர்ர்ர்ர்..........

kggouthaman said...

// இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டிய பிரதமர், சிதம்பரத்தின் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் (இவர் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்று யாராவது சொன்னால் நல்லது) இதனைக் கேட்டு சிதம்பரம் கலக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஏனெனில், பிரதமரிடமிருந்து ஏற்கனவே இவ்வாறு சான்றிதழ் பெற்ற ராசா இன்று என்ன கதியிலிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.//

அது!

kggouthaman said...

எந்தரோ மகா தொங்கலு -- அந்துரு வேஷதாரிலு!

Anonymous said...

//மத்திய உள்துறை அமைச்சகம் பொழுது போகாமல், பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. அதாவது, அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நடவடிக்கை எடுத்திருந்தால், 2G ஊழல் நடைபெறாமல் தடுத்திருக்கலாம் என்பதே அக்கடிதத்தின் சாராம்சம். இக்கடிதத்தை உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலை அதிகாரி ஒருவர் எழுதியிருந்தாலும், அது அப்போதைய உள்துறை அமைச்சர் ப்ரணாப் முகர்ஜியின் பார்வை/அனுமதிக்குப் பிறகே அனுப்பபட்டுள்ளது. //

இட்லிவடைக்கு விநோத வியாதி பிடித்திருக்கிறது, அதனால் அடிக்கடி அப்டேட் செய்ய முடிவதில்லை. தப்பு தப்பா பதிவும் போட நேரிடுகிறது.....
-ஜெகன்