பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 31, 2011

மங்காத்தா - FIR

அஜித்தின் ஐம்பதாவது படமான மங்காத்தா பெண் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளுடன் இன்று திரைக்கு வந்துள்ளது. அஜித்துக்கு வாழ்த்துகள்.

ரவுடிகளின் கூட்டத்தில் சிக்கிய இன்னொரு ரவுடியை காப்பாற்றும் 'தமிழ்' போலீஸ் அதிகாரியாக வருகிறார் அஜித். (போலீஸ்) தொப்பையுடன் வந்தாலும் எவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறார் பார் என்று தியேட்டரில் பின் பக்கம் கமெண்ட் வந்ததையும் பொருட்படுத்தாமல் எல்லா ரவுடிகளையும் கை,கால், துப்பாக்கி என்று போட்டுத் தள்ளிவிடுகிறார். ஓப்பனிங் சீனில் இது கூட செய்யவில்லை என்றால் எப்படி ?
தல சும்மா சொல்லக்கூடாது 'தள தள' என்று இருக்கிறார்.கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாகக் கொண்ட சீரியஸான படம் என்று நினைக்கும் போது "என்னென்னவோ செய்றோம், இதை செய்ய மாட்டோமா?" புகழ் ப்ரேம்ஜி வந்தவுடன் படம் காமெடியாகிறது. பிறகு படம் கடைசிவரை காமடியாகவே போகிறது. இத்தனைக்கும் படத்தில் வரும் அனைவரும் சுடப்பட்டு இறந்துவிடுகிறார்கள்.

படம் ஆரம்பித்துக் கொஞ்ச நேரத்தில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் வந்த பின் படம் கொஞ்சம் சூடு பிடிக்கிறது. கொடுத்த காசு வீண் ஆகவில்லை என்று நினைக்கும் போது, வழக்கம் போல படம் வலு இழந்து, ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தமிழ் நாட்டின் 'குடும்ப' படம் என்பதாலோ என்னவோ அடிக்கடி தல "மணி...மணி.... மணி.." என்று வசனம் பேசுகிறார். ( தியேட்டரில் "மணி உன்னை தாம்பா தல அடிக்கடி கூப்பிடுகிறார்" என்று திரும்பவும் பின்பக்கத்திலிருந்து கமெண்ட்).

படத்தில் பல கெட்ட வார்த்தைகளைச் சென்சார் ஊமையாக்கியுள்ளது. இடைவேளையின் போது அஜித் தன் திட்டத்தைச் சொல்லும் போது, நம்மளையும் அறியாமல் அதை உபயோகிக்க வேண்டும் போல இருப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.

இசை சில இடங்களில் ஆறுதலாக இருக்கிறது. பல இடங்களில் இறைச்சலாக இருக்கிறது.

த்ரிஷா தான் படத்தில் ஹீரோயின். ஏன் என்றால் அவர் தான் தலயுடன் ஒரு டூயட் பாடுகிறார்!. ஐபிஎல் சூதாட்டம் என்று வருவதாலோ என்னவோ, (தோனி புகழ்) லட்சுமிராயும் படத்தில் வந்துவிடுகிறார். சொல்ல மறந்துவிட்டேன் ஆண்டரியா சில காட்சிகளில் வருகிறார்.

படத்தில் ஒரே ஆறுதல் திரைக்கதை ஆனால் அதை நம்பியே படம் வெற்றி பெற முடியாது என்பதைக் காட்டுகிறது இந்த படம்.
Ocean Eleven போன்ற படம் என்று நினைத்து ஏதோ எடுத்துச் சொதப்பியிருக்கிறார்கள்.

இட்லிவடை மார்க் 50/100 ! ( தலயின் ஐம்பதாவது படம் என்பதால் இந்த மார்க் )


மங்காத்தா படம் தியேட்டர் 'உள்ளே' இருக்கும் போது, நீங்க 'வெளியே' இருந்தால் வெற்றி உங்களுக்கு, இல்லை என்றால் அஜித்துக்கு. முடிவு உங்கள் கையில் !

படத்தில் ஒரு காட்சியில் விஜய் படம் தியேட்டரில் ஓடுகிறது, அதற்குக் கைத்தட்டல் வருகிறது. வேலாயுதத்தில் சந்திப்போம் !

இன்றைய செய்தி: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, மகள் அஞ்சுக செல்வி மற்றும் பேரன், பேத்திகள் உள்பட 8 பேர் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்பட வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். துரை தயாநிதி இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்றாலும் அதற்கும் இந்த செய்திக்கும் சம்பந்தம் இல்லை

34 Comments:

Avinash said...

தூ!

jaisankar jaganathan said...

உங்களை தவிர எல்லோரும் படத்தை பாராட்டுறாங்க ஏன்?

நொந்த தமிழன் said...

படம் மொக்கை இல்லை...நீங்கள் கிறுக்கி இருப்பதுதான் மிகவும் மொக்கை.'தல'யின் 50ஐ வசைபாடிய உங்களுக்கு தண்டனையாக 'தளபதி'யின் 50ஐ(சுறா) 50 தடவை பார்க்க கடவாய் என்று சபிக்கிறேன்.

சதீஷ் மாஸ் said...

அருமையான படம்... விமர்சனமும் கூட....

Anonymous said...

before movie release ajith gave one interview; Rajni is my god. Whether his fans support this movie?

Movie hit or flop?

Check the public opinion

http://www.youtube.com/watch?v=WcQpry3I6Ow

R. Jagannathan said...

என்னமோ ரொம்ப பிசியாக இருப்பதால் தொடர்ந்து ப்ளாக் எழுதுவதில்லை என்று இருந்தேன். தல படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ போனது மட்டுமின்றி சுடச் சுட விமர்சனமும் எழுதும் அளவுக்கு டைம் வைத்திருக்கிறீர்கள்.
தொப்பையுடன் ‘தொள தொள’ என்று தானே இருந்திருக்க வேண்டும் - எப்படி தள, தள? (அது த்ரிஷாவுக்குத் தான் பொருந்தும்!)
சரி, சரி - நக்கீரன் டாட் இன் -லிருந்து விஜயின் வேலாயுதம் மதுரை போஸ்டர்களைப் போட்டு கம்மென்டவும். - ஜெ.

BalHanuman said...

ஜகந்நாதன் ஸார்,

உங்கள் லாஜிக் கூடத் தான் இடிக்கிறது. 'தள தள' எப்படி த்ரிஷாவுக்குப் போய் பொருந்தும் :-)

Anonymous said...

மங்காத்தா படம் தியேட்டர் 'உள்ளே' இருக்கும் போது, நீங்க 'வெளியே' இருந்தால் வெற்றி உங்களுக்கு, இல்லை என்றால் அஜித்துக்கு. முடிவு உங்கள் கையில் !
# sariyana comment

Philosophy Prabhakaran said...

மங்காத்தா – THIS IS MY F**CKING REVIEW
http://philosophyprabhakaran.blogspot.com/2011/09/this-is-my-fcking-review.html

seenuraajoo said...

ஜகந்நாதன் ஸார்,

உங்கள் லாஜிக் கூடத் தான் இடிக்கிறது. 'தள தள' எப்படி த்ரிஷாவுக்குப் போய் பொருந்தும் :-)

Thala Thala=Lakshmi Rai!
Balhanumaanji, am i right?

Bragi said...

உங்கள் நிலமைய நினைச்சா ரொம்ப பரிதாபமா இருக்கு சார். இப்படி உண்மைய சொல்லி மாட்டிகிட்டேங்களே!!!!

Narayan. said...

This is my Short Bullet Review straight on their head!

http://www.nswamy.com/dawn/2011/entertainment/movies/mankatha-review/

Subramanian said...

Dear IV,

Your comments are very apt. Ajit lost his sheen long back. He no longer has the capacity to choose decent stories and is now signing only based on banner or director.Watching this movie is a waste of time and money. If we stay for some more time in the theatre there is a good chance that we will also get shot like all the characters in the movie :)

Subramanian said...

Dear IV,

Your comments are very apt. Ajit lost his sheen long back. He no longer has the capacity to choose decent stories and is now signing only based on banner or director.Watching this movie is a waste of time and money. If we stay for some more time in the theatre there is a good chance that we will also get shot like all the characters in the movie :)

நல்லூரான் said...

நல்ல விமர்சனம்...நில மோசடி வழக்கில் சிக்குபவர்களை, நாள் முழுதும் இப்படத்தைப் பார்க்க வைக்கலாம்...அப்படி ஒரு கலைப் படைப்பு..கலைத் தாயின் 'தல' வலி.. 200 Rs நஷ்டம்..

கார்த்தி கேயனி said...

என்னங்க இப்படி சொல்றீங்க

Anonymous said...

உங்களை தவிர எல்லோரும் படத்தை பாராட்டுறாங்க ஏன்?

kothandapani said...

மங்காத்தா .......... சூப்பரான கதை , திருப்பங்கள் கொண்டது. மொத்த பணத்தையும் ஒரே கொள்ளையனே எடுத்து சென்று விடுவானோ என்று அனைவரும் எதிர் பார்க்க திடீர் திருப்பம். அனைவருக்கும் காதில் பூ சுடிவிட்டு இன்னொரு கொள்ளையன் திடீர் என்ட்ரி. முடிவில் இரண்டு பேரும்
கொள்ளை பணத்தை கூறு போட்டு கொள்கின்றார்கள். தயாநிதி முதலில் வெளியிடுவதாக சொல்லி கடைசியில் கலாநிதியும் கலந்து கொண்டதை
கதை நினைவு படுத்துவதகா யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.

pongalvadai said...

சிகரட் பிடிப்பது போல் நடிக்கக்கூடாது என்று ரஜினியை பாடா படித்திய அன்புமணி அண்ட் கோ. என்னே பண்ணிக்கொண்டு உள்ளார்கள். அஜித் படம் பூரா சிகரட் கையாகவே உள்ளாரே. அட்டாக் பாண்டி அண்ட் கோ தான் உள்ளே உள்ளதே இன்னுமா பயம் போக வில்லை

Anonymous said...

u r already commented it is an kudumba padam from that i can guess ur mark,next time may vijay act in cloud nine banner what is ur mark 0

Anonymous said...

Pathetic review ... i had good respect for your site ... now it is gone .. review without substance ...

Acting is nothing to do with physique ... vitta blog elutha kuda 6 pack venum solluvinga pola ...

for giving such a disgrace review .. the loss is only for u ....

Flim is already a mega hit ...

having read ur blog for more than year now .. it seems this one is the worst ....THU .... good luck ...

BalHanuman said...

@Kothandapani

>>மங்காத்தா .......... சூப்பரான கதை , திருப்பங்கள் கொண்டது. மொத்த பணத்தையும் ஒரே கொள்ளையனே எடுத்து சென்று விடுவானோ என்று அனைவரும் எதிர் பார்க்க திடீர் திருப்பம். அனைவருக்கும் காதில் பூ சூடிவிட்டு இன்னொரு கொள்ளையன் திடீர் என்ட்ரி. முடிவில் இரண்டு பேரும்
கொள்ளை பணத்தை கூறு போட்டு கொள்கின்றார்கள். தயாநிதி முதலில் வெளியிடுவதாக சொல்லி கடைசியில் கலாநிதியும் கலந்து கொண்டதை
கதை நினைவு படுத்துவதகாக யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.


அருமை. அருமை. உங்களுக்கு லொள்ளு ரொம்ப ஜாஸ்தி. மிகவும் ரசித்தேன்....

BalHanuman said...

@seenuraajoo

எங்கேயோ போயிட்டீங்க.... நான் என்ன சொல்ல :-)

Anonymous said...

This is a f*****g Review. Either you have seen the movie with Pre-decided motion or you dont have a basic sense of movie watching.

-Citizen

Anonymous said...

Dear Anonymous @ September 03, 2011 8:47 AM,

why tension? you were reading the blog for just over a year? why this build up? As if you were reading it for the past 10 years!!! THU. good look.

Anonymous said...

ya film is not too bad....50%good ,,,,50% boring like ajith talk before interval....

dont tell that sura film == punishment

both the actors are having lot of movies like this Alwar,Vilu,Paramasivam,Vettaikaran...

And not a good competitors or entertainers like SUPER STAR and ULGANAYAGAN...

Anonymous said...

Film is already a Mega Mega hit. Don't ever review Rajini, Ajith, Vijay movies like they are participating in Oscar ceremony.They are always entertainers and always acting in commercial movie only. As a commercial movie, MANKATHA is good and Ajith does a good performance. He breaks the tamil cinema long lasting HERO image that too in his 50th movie. HERO SHOULD BE GOOD ONE AND DOING GOOD TO PEOPLE. This movie is going to be a trend setter.

Krishnan said...

This is one of the best film in Tamil cinema of this journal. I really disappointed that IV and others's poor review and understanding of the film.

Sorry Guys!

ந.லோகநாதன் said...

Overall, Movie is good ..

Elamparuthi said...

its a f***ing review...i think its a good movie...

Anonymous said...

yar da review eluthunadhu....??? eludhum podhu moolaya mollaila vachitiya..??? box office collections eh pathiya...??? vandhtan review eludha... idly vadi ooosi pochu

Anonymous said...

though this movie was copied from english movies, its still watchable. Its a good attempt in tamil movies. Need to appreciate Ajith for acting in negative subject without worrying about image.

Anonymous said...

You looks like Vijay fan... so only your not saying its a good movie... Everyone says its good movie... If you don like dont try to black the movie....

Kannan said...

அருமையான விமர்சனம்,படம் சூப்பர்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com