பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 15, 2011

லேட்டாக கோபப்பட்ட தமிழர்கள்

சென்னையில் SRM பல்கலைக்கழக நிகழ்ச்சில் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க உதவி துணைத் தூதரான மவுரின் சோவ் என்பவர் தன் இந்தியா அனுபவங்களை பேசும் போது இப்படி பேசினர் "20 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பதற்காக இந்தியா வந்த நான், டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரெயிலில் சென்றேன். 24 மணி நேரத்தில் போய் சேர வேண்டிய இடத்தை 72 மணி நேரமாகியும் அந்த ரெயில் போய் சேரவில்லை. இந்த பயணத்தின் போது எனது சருமம் தமிழர்களை போல கறுப்பாகவும், அழுக்காகவும் மாறிவிட்டது" என்ற பேச்சுக்கு பலத்த கண்டங்கள் வந்துள்ளது.

ஏன் ஒபாமாவே கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் தானே என்ற கேள்விகளும். இந்த நிகழ்ச்சியில் இதை பேசிய போது வட மாநில மாணவகள் கை தட்டி சிரித்ததாகவும், தமிழர்கள் மேடையிலும், அரங்கத்திலும் சும்மா இருந்தார்கள் என்றும் செய்தி வந்திருக்கிறது.

ஜெயலலிதா, ராமதாஸ், திருமா போன்றவர்கள் இந்த செய்தியை பார்த்துவிட்டு அறிக்கை விடுவதற்கு காத்துக்கொண்டு இருக்காமல், அந்த மேடையிலேயே அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி செய்தால் அமெரிக்காவில் வேலை கிடைக்காதோ என்று தமிழர்கள் சும்மா இருந்திருப்பார்கள்.

24 மணி நேரத்தில் போக வேண்டிய ரயில் 72 மணி நேரத்தில் போய் செர்ந்ததை பற்றியும், ரயில் கழிப்பறை பற்றியும், ஒழுங்காக குளிக்காமல், சுகாதாரம் பற்றிய விழிப்பு உணர்வு போன்றவற்றை பற்றி எல்லாம் பேசாமல், எருமை மாடு போல வாழும் நாம் சும்மா 'கருப்பு' 'அழுக்கு' என்று சொன்னவுடன் கண்டனம் தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம் ?

இன்றைய பாரத் மேட்ரிமோனியை பார்த்தால், 'நல்ல சிகப்பு அழகுடன் இருக்கும்' பெண்கள் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் பலரை என்ன சொல்லுவது ?

சூர்யாவும் ஷ்ரேயாவும் சிகப்பழகு க்ரீம் விளம்பரத்தில் வந்தால் ஒரு வாரம் பூசுக்கொண்டு கண்ணாடி முன் நிற்பது எந்த வகையில் அடங்கும் ?

எது எப்படியோ அடுத்த தேர்தல் அறிக்கையில் இதை சாக்காக வைத்துக்கொண்டு பெண்களுக்கு "ஃபேர் அண்ட் லவ்லியும்" ஆண்களுக்கு "ஃபேர் அண்ட் ஹான்ட்சம்" கிரீம் இலவசமாக வழங்க முடிவு செய்யலாம். இரண்டும் அமெரிக்க தொழில்நுட்பத்துடன் செய்யப்படுகிறது என்றால் தமிழர்கள் இரண்டு டியூப் வாங்கி பூசிக்கொள்ளுவார்கள்.

எதை பூசிக்கொண்டாலும், ஏன் அதிலேயே குளித்தாலும் ஒன்று ஆகாது என்று சிவாஜி படத்தில் நம்ம ரஜினி சாரே நமக்கு சொல்லியும் புத்தி வரவில்லை என்றால் என்ன செய்வது ?எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் !

15 Comments:

jaisankar jaganathan said...

சுதந்திர தின வாழ்த்துகள்

அவரு கறுப்புன்னு சொன்னா பரவாயில்லை. அழுக்கான கறுப்புன்னு சொல்லிட்டாரே. அதான் கோபம்

Anonymous said...

மனிதன் ஆசைபடுவது வேறு அவனின் அடிப்படை விஷயங்களை , உரிமைகளை இழிவு படுத்தி பேசுவது வேறு ..எல்லா விஷயங்களும் , எல்லா கேலி பேச்சுகளும் ஒன்றல்ல ..அமெரிக்க பிரதிநிதி பேசியது சக மனிதனையை நேசிக்க கற்றுக்கொள்ளவில்லை , .... உலகில் எல்லா போர்களும் , போராட்டங்களும் ' நாடு வல்லரசாக வேண்டும் என்று நடத்தப்படவில்லை '..தங்களுடைய அடிப்படை உரிமைகள் , உணர்வுகள் நசுகியதால் நடத்தப்பட்டன .
சக மனிதனை (எந்த மதம் , ஜாதி யாக இருந்தாலும் ) ' இட்லி வடை பதிவர்கள் ' நேசிக்க கற்றுகொண்டிருந்தால் இப்படி பட்ட கட்டுரையை எழுதியிருக்க மாட்டார்கள் ....

லெமூரியன்... said...

துக்கமான இந்த கருப்பு தினத்தை கொண்டாடும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...!

R. Jagannathan said...

என்னமோ கோபம். ஆனால் உணர்ச்சி வசப்பட்டு எழுதியிருக்கிறீர்கள். என்ன சொல்ல வந்தீர்கள் என்றுதான் புரியவில்லை. மவுரின் சோவை கண்டித்தாற் போல் தெரியவில்லை. தமிழன் கருப்புத்தான், அழுகுத்தான் அதனால் தான் சிவப்பழகு க்ரீமுக்கு அலைகிறான் என்கிறீர்கள். அதுதானே! - ஜெ.

Anonymous said...

அய்யோ!! அய்யோ!! இந்த
அனானி அண்ணாவுக்கு அங்கதம் விளங்கவில்லையே !

”அநங்கன்” எழுதிய அஞ்சு கட்டுரைகளை படிக்க கடவுக! என்று சபிக்கிறேன்

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

//சக மனிதனை (எந்த மதம் , ஜாதி யாக இருந்தாலும் ) ' இட்லி வடை பதிவர்கள் ' நேசிக்க கற்றுகொண்டிருந்தால்....//
இதோ சகமனிதன்>>>> அதெப்படி இட்லிவடை பதிவர்கள் என்று(பன்மையில்!!) என்று முடிவெடுத்தீர்?? அப்படியானால் இட்லி வடை ஒருவரல்ல என்று சொல்ல வருகிறீர்களா?? எப்படியோ எங்களை(நிஜமாகவே plural) அழைத்ததற்கு நன்றி..
சகமனிதன்- உங்களில் ஒருவன்...

சுபத்ரா said...

இ.வ.க்கும் அனைவருக்கும் இனிய சுதந்தரதின நல்வாழ்த்துகள்!

Palanivel Raj G said...

Still Karuna has not give independence day wishes to all... What the reason behind it???

H1B டமிளன் said...

தமிழருங்க லேட்டாவாச்சும் கூவுனாங்க.

மத்த விஷயங்களப் பத்தி நீங்க வாயத் தொறந்தீங்களா பாஸு?

ஏன் உங்க ஜி.சிக்கு ஆப்பு வந்திரும்னு பயமா?

எங்கள் ப்ளாக் said...

//எப்படியோ எங்களை(நிஜமாகவே plural) அழைத்ததற்கு நன்றி..//

Priya said...

பதிவுக்கு நன்றி.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com

Bragi said...

உண்மை தான். உங்களின் கருத்துக்களை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். நம் மக்கள் வெள்ளைத் தோல் மோகம் கொண்டவர்கள். இதை சிருவர் பட(காமிக்) புத்தகத்திலிருக்கும் திருடனிலிருந்து, கல்யாண பெண்களின் விருப்பம் வரை காணலாம். இது தானொ என்னவோ தெரியவில்லை, நாம் ஆங்கிலேயரிடம் மிக பணிவோடு பல ஆண்டுகள் அடிமையாய் இருந்தோம்.

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ. ,

இது கொஞ்சம் சிக்கலான விஷயம்! சிவப்புத் தோல் மோகம் என்பது இந்தியா முழுவதுமே இருக்கிறது. (தமிழர்களிடம் சற்றே அதிகம் போல் ஒரு தோற்றம் உள்ளது ). வட இந்தியர்களில் ஆதிக்க வகுப்பினர் தவிர மற்றவர்கள் நிறம் மட்டாகவே இருந்த போதும், ஏதோ தமிழன் உலக மகா கறுப்பு என்பது போல் கிண்டலடிக்கும் பழக்கம் இருக்கிறது. (பார்க்க மெஹ்மூதின் பழைய இந்திப் படங்கள் / பாடல்கள்). ஏதோ ஒரு காமெடி நிகழ்ச்சியில் ஒரு ஆள் கேட்கிறான் " பேர் அண்ட் லவ்லி அவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால் இந்நேரம் பூரா மதராஸ் ஸ்ரீநகர் ஆகியிருக்காதா ?" .ஆடியன்ஸ் பெரிய ஜோக்கைக் கண்டு விட்டாற் போல் சிரிக்கிறார்கள்!

ஆனால் ஒரு அமெரிக்க தூதரகப் பெண்மணி இது போல் மேடையில் பேசுவது அப்பட்டமான அநீதி! ரயில் லேட்டாகப் போனதை சாக்காக வைத்து ஒட்டு மொத்த தமிழ் இனத்தையே அவமானப் படுத்தியது கண்டிப்பாக ' Racist remark' தான் ! அந்தப் பல்கலையைச் சேர்ந்த சிலர் இதை நியாயப் படுத்த முயற்சிப்பது அதை விட அநியாயம்! பாரதியார் சொன்னது போல்தான் இதைப் பார்க்க வேண்டும். 'ஆயிரம் உண்டிங்கு ஜாதி! எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?!'

நன்றி!

சினிமா விரும்பி

கலிபோர்னியாக் காதலன் said...

//"20 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பதற்காக இந்தியா வந்த நான், டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரெயிலில் சென்றேன். 24 மணி நேரத்தில் போய் சேர வேண்டிய இடத்தை 72 மணி நேரமாகியும் அந்த ரெயில் போய் சேரவில்லை. இந்த பயணத்தின் போது எனது சருமம் தமிழர்களை போல கறுப்பாகவும், அழுக்காகவும் மாறிவிட்டது"//

தங்கள் ஊரைப் பற்றிய விமர்சனம் என்பது உறைக்காது தமிழர் கருப்பென்றதும் கரவொலி எழுப்பிய வட இந்திய மண்டூகங்கள் பற்றி ஏதேனும் சொல்வது இ.வ?

R.Gopi said...

ஓஹோ....

சுதந்திர தின வாழ்த்து சொல்றதுக்கு இப்படி கூட கொளுத்தி போடலாமா?