பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 09, 2011

வழக்குகளும் சமரசங்களும் !

'தீராத விளையாட்டுப்பிள்ளை' திரைப்படத்துக்கான வெளியீட்டு உரிமை பெறும் பிரச்சனையில், சக்சேனா மீது கே.கே.நகர் காவ‌ல்துறை‌யி‌ல் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிரச்சனைகளை ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு வெளியே தீர்த்துக் கொண்டதை அடுத்து, 2 வழக்குகளு‌ம் ‌நிராக‌ரி‌க்க‌ப்ப‌ட்டன. - ஆகஸ்ட் 2, 2011 செய்தி

கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் சினிமா வினியோகஸ்தர்கள் 2 புகார்களை கொடுத்தனர். இந்த வழக்குகளில் சக்சேனா கைது செய்யப்பட்டார். கோர்ட்டுக்கு வெளியே புகார்தாரர்களுடன் சமரசமானதை அடுத்து, இந்த 2 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் சக்சேனா மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அந்த 2 வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன.

முத்துக்குமுத்தாக என்ற படம் தொடர்பாக ராசு மதுரவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பட்டினப்பாக்கம் போலீசிலும், வல்லக்கோட்டை படம் தொடர்பாக டி.டி.ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசிலும், சிந்தனை செய் படம் தொடர்பாக அருள் மூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசாரும், மாப்பிள்ளை படம் தொடர்பாக ஹித்தேஷ் ஜபக் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோடம்பாக்கம் போலீசாரும் சக்சேனா மீது மோசடி மற்றும் மிரட்டல் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

கோர்ட்டுக்கு வெளியே இந்த பிரச்சினைகள் சம்பந்தமாக புகார்தாரர்களுடன் பேசி, சமரசம் ஏற்படுத்தியுள்ளதால் 4 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சக்சேனா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி சுதந்திரம் விசாரித்தார். இதுபோன்ற நிலையில் மனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்துள்ளது. எனவே அவரது மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று நீதிபதி உத்தரவிட்டார். - ஆகஸ்ட் 9, 2011 செய்திஇந்த வார சந்தேகம்! - சன் பிக்சர்ஸ் சக்சேனா மீதான மோசடி வழக்குகள் ஒவ்வொன்றாக நீதிமன்றத் துக்கு வெளியே சமரசமாகி, புகார்களையும் வழக்கையும் திரும்பப்பெறுவது நடந்து வருகிறது. எனக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றினார் என்ற புகாரைச் சொல்பவர், புகாரைக் கொடுத்ததும் தனக்கு வரவேண்டிய பணம் வந்துவிட்டது என்று சொல்லி வாபஸ் பெறுவது மட்டுமா நடக்கிறது? என்னை அறையில் அடைத்து வைத்து மிரட்டினார்கள். கொலை மிரட்டல் செய்தார்கள். குடும்பத்தையே அழிப்பதாக எச்சரித்தார்கள் என்றெல்லாம் புகார்களில் சொன்னதெல்லாம் என்ன ஆயிற்று? நீதிபதி அவற்றை விசாரிக்க வேண்டாமா? பணம் திரும்பி வந்துவிட்டால், மிரட்டல் குற்றமும் இல்லாமல் போய்விடுமா? மிரட்டல் குற்றமே பொய்க் குற்றச்சாட்டு என்றால், பொய்ப் புகார் கொடுத்து நீதிமன்ற நேரத்தை வீணடித்தவருக்குத் தண்டனை கிடையாதா? - ஓ-பக்கங்கள், ஞாநி

5 Comments:

kothandapani said...

கலாநிதி மாறன் சொல்லி தான் அனைத்தும் செய்தேன் என்று சக்சேனா சொன்னதெல்லாம் என்ன ஆச்சி. கலாநிதி ஏதோ விசாரணைக்கு வரபோவதாக சொன்னார்களே அதுவும் மறந்தாச்சா. சும்மாவா சொன்னார்கள் பணம் பாதாளம் வரை பாயும் என்று.

RedChipRobot said...

//என்னை அறையில் அடைத்து வைத்து மிரட்டினார்கள். கொலை மிரட்டல் செய்தார்கள். குடும்பத்தையே அழிப்பதாக எச்சரித்தார்கள் என்றெல்லாம் புகார்களில் சொன்னதெல்லாம் என்ன ஆயிற்று?//

கோர்டுக்கு வெளியே புகார்தாரர்கள் சக்சேனாவை பதிலுக்கு மிரட்டி, எச்சரித்தார்கள். எனவே, மிரட்டலுக்கு பதில் மிரட்டி விட்டதால், இரு தரப்பும் சமாதானமாகி விட்டனர். எனவே, இந்த வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்கின்றது. சக்சேனாவை சிறையிலிருந்து விடுவிக்க இந்த நீதி மன்றம் உத்தரவிடுகிறது. இனிமேல் அவர் சுதந்திரமாக எல்லாரையும் மிரட்டி பணம் வாங்கலாம்; வழக்கு என்று யாராவது கோர்டுக்கு வந்தால், வெளியில் பேசி சமரசம் செய்து கொண்டு விடுதலையாகி விடலாம்.

Ganpat said...

ஹரி கிரி அசெம்பிளி:

ஹரி (வயது ஐந்து):
அம்மா இங்க பாருமா! கிரி என் பொம்மையை பிடுங்கிண்டுடான்மா!

அம்மா அடுக்களையிலிருந்து:இரு இரு நான் வந்துன்டேருக்கேன்..

கிரி (வயது ஒன்பது):
டேய் இந்தாடா பொம்மை! அம்மாகிட்ட சொல்லாதேடா!!

அம்மா:ஹரி என்ன சத்தத்தையே காணோம்?என்ன ஆச்சு?

ஹரி:பரவாயில்லமா கிரி பொம்மைய திருப்பி கொடுத்துட்டான்

சுபம்

Priya said...

பணம் பத்தும் செய்யும்.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com

Anonymous said...

கருணாநிதி வீட்டு குழந்தைகள் எந்த பாடத்தில் படிகிறார்கள்