பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, August 06, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 6-8-2011

மைடியர் முனி,
மவனே ரெண்டு மாசமா ஆளையே காணும்? நானும் அப்டி இப்டி கொஞ்சம் பிஸியா இருந்து விட்டேன். நீயென்ன மன்மோகன் சிங் போல பேசாமல் இருந்தாலே நன்றாக இருக்கும் என்று நினைத்து விட்டாயா? அவர் என்னடாவென்றால் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் முன் எல்லோருக்கும் டீ, காபி கொடுத்துவிட்டு, எல்லோரும் கேள்வி கேட்காதீங்க என்று தாஜா செய்துள்ளார். அப்படியும் ஒரு நிருபர் ஊழல் பற்றி கேள்வி கேட்டால் நீங்க என்ன செய்வீங்க என்று கேட்க "அவர்கள் ஊழலை பற்றி பேசினால் நானும் அவர்கள் ஊழலை பற்றி பேசுவேன்" என்கிறார். எல்லாம் தெரிந்து இருந்தும் ஏன் ஊழலைப் பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்குப் பதில் சொல்ல தெரியாமல் முழிக்கிறார்.பிரதமர் சுஷ்மா கேள்விக்கு எல்லாம் பயப்பட தேவையே இல்லை, அவர் பாராளுமன்றத்தில் டான்ஸ் ஆடினால் தான் பயப்பட வேண்டும்.

ராஜா என்னவோ இப்ப தான் பிரதமரை பற்றி நீதிமன்றத்தில் காட்டிகொடுத்துள்ளார் என்று பலர் நினைக்கிறார்கள். அவர் ரொம்ப நாளா நான் செய்தது எல்லாம் பிரதமருக்கு தெரியும் என்று தவராமல் எல்லாம் பேட்டியிலும் சொல்லி வந்துள்ளார். அப்ப எல்லாம் காங்கிரஸ்காரர்களும், பிரதமரும் ஒன்று வாய் திறக்காமல் இப்ப ஒப்பாரி வைக்கிறார்கள். இந்தக் கூட்டணி தொடரரும்வரை பிரதமர் எல்லா கேள்விக்கும் ஒரே ஒரு பதிலை சொல்லிவிடலாம் - கூட்டணி தர்மம்.பிரதமர் பேசினால் ஆச்சரியம், ஸ்ரீசாந்த் பேசாமல் இருந்தால் அது இன்னொரு ஆச்சரியம். அடிக்கடி பேசி பேசி வம்பில் மாற்றிக்கொள்ளும் ஸ்ரீசாந்த் இப்ப "Silence is the speech of the spiritual seeker. I am spiritual now" என்கிறார். இவர் 'Spritual' என்றால் பரவாயில்லை, ஆனால் கர்நாடாகாவில் எந்த கோஷ்டி முதலமைச்சராக வந்தாலும் உடனே ஒரு சாமியார் காலில் விழுந்துவிடுகிறார்கள். இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வருகிறார்களா அல்லது சாமியாருக்கா என்று தெரியவில்லை. பேசாமல் இந்த சாமியாரை கவர்னராக நியமித்துவிடலாம்.

எடியூரப்பா ராஜிநாமா செய்துவிட்டு நான் மக்களுக்கு என்னவெல்லாம் செய்தேன் என்று ஒரு பெரிய பேராசிரியர் போல பிரசங்கம் வேற செய்தார். இவர் குடும்பம் எவ்வளவு கொள்ளை அடித்தது என்று சொல்ல மறந்துவிட்டார். எடியூரப்பா எதிர் கோஷ்டியான ஜெகதீஷ் ஷெட்டாரும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 40 பேரும் முதல்வர் பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். பிஜேபி கட்டுக்கோப்பான கட்சி என்பது அந்த காலம். இப்ப பிஜேபி 'எக் புர்ஜி மாதிரி' ஆகிவிட்டது. எப்படியோ நியூஸில் மட்டும் இவருக்குப் பேர் வந்துவிடுகிறது. கலைஞர் பதவி இழந்ததும் குடும்பத்தாலே, எடியூரப்பா பதவி இழந்ததும் குடும்பாத்தாலே.

தற்போது தமிழ்நாட்டில் ஒருநாள் உண்ணாவிரதம் மாதிரி ஒரு மணி நேர கைது வைபவம் நடைபெறுகிறது. இதே மாதிரி சன் டிவி குழுவினர் கைதானால் ஸ்டாலின் மறியல் போராட்டம் செய்வாரா? தேர்தலில் தோல்வி என்பது சகஜம். போட்டிருக்கும் சட்டை கிழிந்து விடுவது போல’ என்கிறார் பேராசிரியர் அன்பழகன். ஆனால் கிழிந்தது சட்டை இல்லை ஜட்டி என்று தமிழக மக்களுக்கு தெரியும்.

தன்னுடைய ஆடை, அலங்காரம் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மீது பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானிகர் கோபம் அடைந்துள்ளார். இவர் போட்டுக்கொண்ட ஷூ, கோட், சுடிதார், வைர கம்மல், முத்துமாலை, டிசைனர் கண்ணாடி, டிசைனர் பேக் என்று செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள், மும்பை குண்டு வெடிப்பு பற்றி மறந்துவிட்டார்கள். பத்திரிக்கைக்கு ஹாட் என்றால் அது இது மாதிரி செய்திகள் தான்.

இன்றைய ஹாட் டாப்பிக் சோனியா காந்தி அமெரிக்கா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது தான். இந்தியாவில் ராஜிவ் காந்தி பெயரில் எவ்வளவோ ஆஸ்பத்திரிகள் இருக்கிறது ஆனால் அது எல்லாம் ஏழைகளுக்கு தான். நம் அரசியல்வாதிகளுக்கு அமெரிக்கா அல்லது லண்டன் ஆஸ்பத்திரிகள் தான். ஆனால் அதிமுக அமைச்சர் கருப்பசாமி. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனார். பண கஷ்டம் தான் காரணம். இதை கேள்விப்பட்ட ஜெயலலிதா அவருக்கு அப்போலோ மருத்துவனையில் சேர்க்க உத்தரவிட்டாராம். சோனியா காந்தி இந்த சந்தர்பத்தில் ராகுல் காந்தியிடன் காங்கிரஸ் பொறுப்பை கொடுத்துவிட்டார். கொஞ்ச நாளா ராகுல் பாதை யாத்திரை எல்லாம் செய்தது இதற்கு தான் போல. ஸ்டாலினை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.

சோனியா காந்தி அமெரிக்க பயணம் குறித்து சில உண்மையான ஜோக்ஸ் - காங்கிரஸ் தலைவர் சோனியா சுகவீனமாக இருப்பதால், தெலுங்கானா போராட்டத்தை அதன் தலைவர்கள் ஒத்திவைக்க வேண்டும் என ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசைய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே போல கலைஞர் பதிலுக்கு அன்னை நலம் பெறவேண்டி ஒரு தந்தியானும் அனுப்பிவிட்டார். ஷீலா தீக்ஷித் சோனியா வரும் வரை ராஜிநாமா செய்ய மாட்டார் இப்படி நாடே சோனியாவிற்கு காத்துக்கொண்டு இருக்கும். அன்னா கூட லோக் பால் உண்ணாவிருதத்தை ஒத்து வைத்தாலும் வைப்பார். பார்க்கலாம்.

இப்படி காங்கிரஸ் தினம் தினம் தினம் தினம் சந்திக்கும் தலைவலி காரணமாக தங்கபாலு ராஜினாமா கடிதம் கொடுத்து இரண்டு மாதங்களாகியும், தமிழக காங்கிரஸ் தலைமைக்கு வேறு ஒருவரை நியமிக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. இளங்கோவன் ஒரு பேட்டியில் அடுத்த காங்கிரஸ் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு " காங்கிரஸ் கட்சியை வளர்ப்பவராக இருக்க வேண்டும். திராவிடக் கட்சிகளுக்கு ஜால்ரா போடுபவராக இருக்கக்கூடாது" என்கிறார். நடக்கிற விஷயமா?

கலைஞருக்கு ஜால்ரா அடித்த ஜாப்ர்சேட் நிலமை இப்ப பாவமாக இருக்கிறது. கலைஞர் ஜாபர்சேட் பற்றி அறிக்கையில் "தற்போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றியவர்தான் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர்சேட், ஐ.பி.எஸ். அரசுக்கு எந்த அளவிற்கு உண்மையாக, விசுவாசமாக பணியாற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு அவர் பணியாற்றினார் என்பது உண்மை" என்று ஒரு போடு போட்டுள்ளார். ராஜாவை ஜெயிலில் போட்டால் தலித் என்பது, ஜாபர் சேட் மீது நடவடிக்கை எடுத்தால் இஸ்லாமியர் என்பது என்று கலைஞர் தான் எப்பவுமே ஒரே மாதிரிதான் என்று காட்டியுள்ளார். ஆனால் இந்த அறிக்கை எல்லாம் ஏனோ பரப்பரப்பாக பேசபடவில்லை.

இப்ப இண்டஸ்ட்ரியில் பரபரப்பு த்ரிஷா கல்யாணம் என்பது தான். ஏதோ ரெண்டு மாப்பிளைகள் ரெடியாம். அவர்களை ஒருவரை முடிவு பண்ணி அக்டோபரில் நிச்சயம் பிறகு அடுத்த வருஷம் கல்யாணம் என்று செய்தி போட்டு பத்திரிகைகள் காசு பாக்கின்றன. மாப்பிளைகள் ஜவுளி கடை புடவை மாதிரி ஆகிவிட்டார்கள். இன்று த்ரிஷாவே இப்டி சொல்லி இருக்காரு. "நான் திருமணத்துக்கு அவசரப்படவில்லை. அக்டோபரில் திருமண நிச்சயதார்த்தம் என தகவல் பரவியுள்ளது. அதில் உண்மை இல்லை. இப்போதைக்கு திருமணம் இருக்காது. எனக்கு மாப்பிள்ளையாக வருபவரை இதுவரை சந்திக்க வில்லை. சந்திக்கும்போது திருமணம் செய்வேன். என்னைப்பற்றிய திருமண வதந்திகள் உண்மையாக இருந்தால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன்." இன்னும் கொஞ்சநாளைக்கு ரசிகர்கள் சந்தோஷமா இருக்கலாம்.

லண்டனில் கிரிக்கெட் பால் அடிக்க தெரியாத இந்திய அணியை பார்த்து வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி - அமலாபால் தனுஷ் சேர்ந்து அடுத்த படம் நடிக்க போகிறார்கள். ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா டைரக்டு செய்யும் படத்துக்கு பெயர் `3'. ரசிகர்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தும் அமலாபால் மாதிரி லோக் பால் பாராளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்துகிறது. படம் ஓடுமா என்று தெரியாது ஆனால்
ஓடிக்கொண்டு இருந்த 2G வழக்கு இப்ப மெதுவாக நடக்க ஆரம்பித்திருக்கிறதாம். சில மாதங்களில் கனிமொழிக்கு ஜாமின் கிடைத்து அவர் கேபினெட் அமைச்சர் ஆகிவிடுவார் என்கிறார்கள். எப்படியோ செம்மொழிக்கு கேபினெட் அந்தஸ்து கிடைத்தால் சரி.

தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கைவரி விலக்கு கிடையாது என்று ஜெ சொல்லிவிட்டார். இனி தரமான படமாக இருந்தால் தான் வரிவிலக்கு என்று சொல்லிவிட்டார். இனி தமிழ் பட இயக்குனர்களுக்கு தலைவலி தான், அவர்களால் எப்படி முடியும் ?வடிவேலு ஜெயலலிதாவை சந்திக்க போகிறாராம். - இது எல்லாம் அரசியலில்...

14 Comments:

Anonymous said...

மகளுக்கு கேபினட் பதவி மட்டுமா?கேசை ஒன்றும் இல்லாமல் பண்ணிவிட்டு. அரசின் மீது மான நட்ட வழக்கு போட்டு, எவ்வளவு 2ஜி ஏலத்தினால் நட்டம் என்று சொல்லப்படுகிறதோ அதே தொகை நஷ்ட ஈடாக கிடைக்கும் வரை போராடுவார் மஞ்சத் துண்டு.

vsankar said...

Is it a state secret on the Sonia"s nature of illness?The timing of release of news on the surgery remains one wonder whether this is a diversionary tactics in the wake of release of CAG report on the Commonwealth games.

R. Jagannathan said...

1.. எதியூரப்பா தரிசித்த சாமியார் கவர்னர் பொறுப்புக்கு தகுதியாகத்தான் தெரிகிறார் - கண், காது , கை, கால் ஒன்றும் வேலை செய்யாது என்று படுகிறது.
2.. கலாநிதி மாறன் கைதானால் ஸ்டாலின் ஜெயிலுக்க்ப்போய் அவரைப் பார்ப்பார். நேற்றுக் கூட அப்பாவின் அட்வைஸ் படி வீரபாண்டியைப் பார்த்துவந்தார்!
3.. ஹீனா கௌர் புர்கா அணிந்து வந்திருந்தால் மீடியா இப்படி ஜொள்ளியிருக்குமா?
4.. அமைச்சர் 5 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்பத்திரியே துவங்கலாம் (ரஜினி ஆஸ்பத்ரி கட்ட்ப் போவதுபற்றி முனிக்கு தெரியாதா?)
5.. தரமான தமிழ் படங்கள் பற்ரி கவலைப் படவேண்டாம் - தெய்வத்திருமகள் போல் ஒரிஜினல் படங்கள் எடுக்கப்படும்.
- ஜெ.

R. Jagannathan said...

ஐயா முனி, ராமதாஸ் இனி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும், அதை நிரூபிக்க தீக் குளிக்கட்டுமா, கீழே குதிக்கட்டுமா என்று கேட்டது உம்ம காதி விழவில்லையா? தினமலர் டாட் காமில் பின்னூட்டங்களைப் பார்க்கவும் - எத்தனைபேர் பெட்ரோல், தீப்பெட்டி தர க்யூவில் நிற்கிறார்கள்! - ஜெ.

jaisankar jaganathan said...

வடிவேலு ஜெயலலிதாவை சந்திக்க போகிறாராம்

இது தாம்பா நிஜ காமடி

SathyaPriyan said...

திரு. இட்லி வடை,

ஒரு வேண்டுகோள் விடுத்து இந்த எனது பதிவை இட்டுள்ளேன். எனது தளத்தை விட தங்கள் தளத்திற்கு பார்வையாளர்கள் பல மடங்கு அதிகம் என்பதால் தங்கள் தளத்தில் இதனை பதிவாக இட்டால், பலரை இந்த வேண்டுகோள் சென்றடையும்.

http://sathyapriyan.blogspot.com/2011/08/appeal.html

செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.

இவன்,
சத்யப்ரியன்.

BalHanuman said...

>>தேர்தலில் தோல்வி என்பது சகஜம். போட்டிருக்கும் சட்டை கிழிந்து விடுவது போல’ என்கிறார் பேராசிரியர் அன்பழகன். ஆனால் கிழிந்தது சட்டை இல்லை ஜட்டி என்று தமிழக மக்களுக்கு தெரியும்.

சூப்பர்... இது அன்பழகனின் உளறல் நேரம்....

Thomas Ruban said...

சோனியா அடிக்கடி வெளிநாடு போகிறார் எதுக்கு? இதுவரைக்கும் எத்தனை தடவை வெளிநாடு போய் இருக்கார்? என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டியிருக்கிரார்கள்.
இனி யாரும் கேட்க முடியாது!!!

Roaming Raman said...

அய்யோ... இட்லி வடையாரே.... கொஞ்சமாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பார்க்கக் கூடாதா? ஏகப்பட்ட சொதப்பல் கட்டுரை..
சோனியா காந்தி நிரந்தரமாக குடும்பத்தோடு இந்தியாவை விட்டுச் சென்று விட்டால் கொஞ்சமாவது இந்த தேசத்துக்கு நல்லது நடக்கும்..

சன் டிவிக்காக போராட அவர் என்ன பைத்தியமா? ஸ்டாலின் ஒருவேளை போராட்டம் நடத்த வாய்ப்பே கொடுப்பதில்லை என்று வேண்டுமானால் போராடலாம் போலிருக்கிறது...

//பதில் சொல்ல தெரியாமல் முழிக்கிறார்.பிரதமர் //

அதான் இந்த ஆட்சியின் லக்ஷணம் என்று தெரியாதா என்ன? ராம் தேவ் கறுப்புப் பணம் பற்றி கேள்வி கேட்டால், உன் சொத்து என்ன- எப்படி என்றுதானே கேள்வி கேட்டு, அடித்து (நிஜமாகவே) உதைத்தது!! பதிலில்லா ஆட்சி நடக்கிறது... கேள்விக்குப் பதில் எதிர்க் கேள்விதான்... பதில் கிடையாது! கூடுதலாக இலவச உதை,,, அடி உண்டு...

ஆனாலும் அந்த த்ரிஷா
ஃபோட்டோ சூப்பர்... கிறுக்கி இருப்பது என்னவெல்லாம் என்று போட்டி கூட வைக்கலாம்- முனி கட்டுரையைச் சொன்னேன்!

-ரோமிங் ராமன்

Thomas Ruban said...

இதை திறந்து பார்த்தால் மயக்கம் அடைந்து விடுவீர்கள்..
http://2.bp.blogspot.com/-TuKTbaE2yUM/Tj6eOlEJBNI/AAAAAAAADt0/XFYfxLs1QFM/s1600/11.jpg

Palanivel Raj G said...

இது மாதிரி ஜாதி மத பிரிவினையை தூண்டியும், மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்துமே இதுவரை முதல்வர் நாற்காலியை அடைந்தார் என்பது இவரை ஆரம்ப காலத்தில் இருந்து கவனித்து வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்!!!

Priya said...

"வடிவேலு ஜெயலலிதாவை சந்திக்க போகிறாராம்".
சூப்பர் காமெடி.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com

jagannathan said...

பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும் சம்பளம் எண்பதாயிரம் .அவர்களுக்கு தரும் சலுகைகள் http://nagfans.com/forum/showthread.php/36406-Parliament-Canteen-s-Menu-கார்டு படித்து பாருங்கள்.இவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

jagannathan said...

இந்த நாட்டில் இதுவரை நடந்த ஊழல்கள் தொகுப்பு இதோ .தண்டனை பெற்றவர்கள் உண்டோ ,நாம் அனைவரும் ஹசரய்க்கு ஆதரவு தெரிவுக்கவேண்டும் The monetary value of the Scams committed since 1992 are as follows:-
1992 — Harshad Mehta Scam was worth Rs 5000 Crores.
1994 — Sugar Import Scam was worth Rs 650 Crores.
1995 — Preferential Allotment Scam was worth Rs 5000 Crores.
1995 — Yugoslav Dinar scam was worth Rs 400 Crores.
1995 — Meghalay Forest Scam was worth Rs 300Crores.
1996 — Fertilisers Import Scam was worth 1300 Crores.
1997 — Sukhram telecom Scam was worth Rs 400 Crores.
1997 — Lavalin Power project Scam was worth Rs 374 Crores.
1997 — Bihar Land Scam was worth 1200 Crores
1997 — C R Bhansali stock scam was worth Rs 1200 Crores.
1998 — Teak Plantation Scam was worth rs 8000 Crores.
2001 — UTI Scam was Rs 4800 Crores.
2001 — Dinesh Dalmia Stock Scam was worth Rs 596 Crores.
2001 — Ketan Parekh security scam was worth Rs 1250 Crores.
2002 — Sanjay Agarwal Home Trade Scam was worth Rs 600 Crores.
2003 — Telgi Stamp paper Scam was worth Rs 172 Crores.
2005 — IPO Demat Scam was worth Rs 146 Crores.
2005 — Bihar food relief Scam was worth 17 crores.
2005 — Scorpene submarine Scam was worth Rs 18,978 crores.
2006 — Punjab’s city centre project scam
2006 — Taj Corridor Scam was worth 175 Crores.
2008 — Pune Billionaire Hasan Ali tax default scam was worth Rs 50,000 crores.
2008 – Satyam Scam was worth Rs 10.000 Crores.
2008 — Army Ration Pilferage Scam was worth Rs 5000 crores.
2008 — 2G Spectrum Scam was worth Rs 60.000 Crores.
2008 — State Bank of Saurashtra Scam was worth Rs 95 crores.
2008 — Illegal money in Swiss Bank is worth Rs 71,00,000 Crores.
2009 — Jharkhand Medical equipment scam was worth Rs 130 Crores.
2009 — Rice export scam was worth Rs 2500 crores.
2009 — Orissa Mine scam was worth Rs 7000 crores.
2009 — Madhu Koda scam was worth Rs 4000 crores.
2010 – IPL fraud involving swine called Lalit Modi option was worth?
2010 — Commonwealth Games loot is worth?

The total monetary worth of the Scam committed since 1992 in India is worth more than around Rs 1,00,00,000 crores (One Crore Crores).