பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 22, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 23-8-2011

அன்புள்ள இட்லிவடை,
அன்னா பற்றி எது வேண்டும் என்றாலும் சொல்லலாம், கடைசியில் அன்னா சூப்பர் என்று பதிவுகளை முடிக்க தெரிந்துக்கொள்ளவும். முடிந்தால் அவர் ஆதரவுக்கு ஒரு குல்லா வாங்கி போட்டுக்கொள்ளவும். குல்லா என்றவுடன் தான் ஞாபகத்துக்கு வருது, டெல்லி ஜும்மா மசூதி இன் இமாம் புகாரி முஸ்லிம்களை அண்ணா ஹசாரே அவர்களின் ஜன லோக் பால் தொடர்பான உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள கூடாது என அறிவித்துள்ளார் .காரணம் அந்த போராட்டத்தில் "பாரத் மாதா கி ஜெய்" என்றும் "வந்தேமாதரம் " என்றும் இஸ்லாமுக்கு விரோதமாக கோஷம் எழுப்புவதால். நல்ல வேளை ஊழலுக்கு எதிராக என்று சொல்லவில்லை. எது எப்படியோ குல்லா விற்பனை டெல்லியில் அதிகமாகிவிட்டதாம்.

இன்று பிரதமர் மன்மோகன் சிங் அல்லது காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி ஆகியோரிடம் மட்டுமே லோக்பால் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன் என அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். இந்த அறிவுப்புக்கு பின் ஊழல் குறைந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. அதைவிட அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கும் விடை கிடைத்துவிட்டது.

இந்தப் போராட்டம் குறித்து சீனாவில் பாராளுமன்றம் கூடி முக்கிய விவாதம் மேற்கொண்டார்கள். இந்தியாவிற்கு எப்படி விலை குறைந்த விலையில் குல்லா அனுப்புவது என்று விவாதித்தார்கள். எவ்வளவு குறை சொன்னாலும், அன்னா முயற்சியைப் பாராட்ட வேண்டும்!


அடுத்த பாராட்டு தமிழ்நாடு காவல் துறைக்கு!. பல மாதங்களாக தமிழ்நாட்டு மக்கள் தூங்க முடியாமல் இருந்தார்கள். இனி நிம்மதியாகத் தூங்கலாம். வேற ஒன்றும் இல்லை, வடிவேலு சிங்க முத்து பிரச்சனை தீர்ந்துவிட்டது. வடிவேலு சிங்க முத்துவிடம் நிலம் வாங்கி ஏமாந்தார். ஆனால் விஷயம் என்ன என்றால் சிங்க முத்து வாங்கியதும் போலியாம். அதன் நிஜ ஓனர் வேற யாரோவாம். ஏமாற்றியவர்கள் கண்டு பிடிக்க முடியாது. ஏன் என்றால் அம்மா ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையா சொன்னது போல் அவர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு போய் விட்டார்கள். எது எப்படியோ தமிநாட்டில் ஒரு பெரிய பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.


இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று சந்தோஷம் அடைந்தால் அடுத்த பிரச்சனை வந்துவிட்டது. 'கோ' படத்தில் வாய்ப்பை இழந்த நடிகர் சிம்புவுக்கும், நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கும் நடிகர் ஜீவாவுக்கும் இடையே புகைச்சல் ஆரம்பித்திருக்கிறது. சிம்பு மறைமுகமாகச் சீண்ட, ஜீவா நேரடியாக பேட்டியில் "சிலம்பரசன் என்றைக்குமே எனக்கு நண்பராக இருந்ததில்லை. யாராக இருந்தாலும் நேரடியாக சவால் விட்டு மோதுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். அதை வரவேற்கலாம். ஆனால், பின்னால் மறைந்திருந்து குத்துவது ஆரோக்கியமான போட்டி அல்ல" என்கிறார். தல, 'இலை'ய தளபதி சண்டையைப் பார்த்த தமிழ்நாட்டு மக்களுக்கு இது எல்லாம் ஒன்றுமே இல்லை.

இவர்கள் சண்டையை எல்லாம் பார்த்தால் புதிய தலைமை செயலகத்தை மனநிலை மருத்துவமனையாக மாற்றிவிடலாம். புதிய தலைமை செயலகம் மருத்துவமனையாக மாற்றும் திட்டம் யாருக்கு வெற்றி? ஜெயலலிதாவிற்கா அல்லது கலைஞருக்கா? ராமர் சிவில் இஞ்சினீரிங் படிச்சு அவரு கையால தொட்டுத் தொட்டுக் கட்டிய பாலம் என்று கொஞ்ச நாட்கள் முன்னாடி சொன்ன முக தானே இப்போ ஒவ்வொரு செங்கலாக தொட்டுத் தொட்டுக் கட்டிய தரம் இல்லாத கட்டிடம் இது. டாக்டர்கள் ஊசி போட்டுச் சரி செய்துவிடுவார்கள் என்று நம்புவோமாக.

டாக்டர்கள் என்றவுடன் ராமதாஸ் பேசிய பேச்சு பற்றி சொல்லியே ஆகவேண்டும் "பா.ம.க. தனித்து போட்டியிடும் என்றதும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். இனிமேல் தனித்து போட்டி என்ற பேச்சில் மாற்றம் இல்லை" என்கிறார். காமெடிக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. சில நாட்களுக்கு விஜயகாந்த் எப்படி செயல்படுகிறார் என்ற கேள்விக்கு "வாட் வாட்" என்று மதுபானத்தின் பெயரை குறிப்பிட்டுக் கிண்டல் அடித்திருக்கிறார். அட, இவருக்கு எரிச்சலில் கூட எம்புட்டுக் காமெடி வருது. கேப்டன் பையன் நடிக்கும் படத்துக்கு வடிவேலு லெவலில் காமெடியன் தேடறார் என்று மாங்கா மருவிடம் யாராவது சொன்னாத் தேவலை.:-)

எதையும் பதுக்கி வைக்க முடியாது என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைத்த கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்கள் செப்டம்பரில் கிடைக்கும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். என்னவோ, மக்கள் சந்தோஷமா இருந்தாச் சரிதான்.


ஜெகன் மோகன் கூடச் சேர்ந்து மறைந்த அவர் அப்பாவும் ஊழலில் மாட்டிக்கொண்டு விட்டார் சிபிஐயிடம் ! காங்கிரஸ் எப்படி மாறிவிட்டது பார்த்தீர்களா? யார் என்ன எப்டிச் சொன்னாலும் அன்னா ஊழலை ஒழிச்சுட்டாறு. பாருங்க பத்துநாளா எந்த ஊழல் பற்றியும் பேச்சே இல்லை! :-)


இப்படிக்கு வாட் அடிக்கும்,
முனி

16 Comments:

Anonymous said...

முந்தைய பதிவில் கமெண்ட் மூலம் அண்ணா முயற்சியை சரி என்று நியாயப்படுத்தியவர்களை முனி என்கின்ற பெயரில் இட்லிவடை வெறி கொண்டு தாக்கி உள்ளது இம்முறை...

Anonymous said...

kadhal sandyava? iyyoo, ippave kannai kattuthe?

குரோம்பேட்டைக் குறும்பன் said...

எதையும் பதுக்கி வைக்க முடியாது? நமீதா(தானே அது?) படம் போட்டதற்கு என்ன விளக்கம்? அந்த விளக்கத்தைப் பதுக்கி வைத்துவிட்டீர்களே? (நான் சரியாத்தானே கேட்கிறேன்?)

jaisankar jaganathan said...

குரங்க படம் சூப்பர்

Priya said...

நல்ல பகிர்வு.
Thanks,
Kannan
http://www.ezdrivingtest.com

Anonymous said...

கட் காப்பி பேஸ்ட் தலைவா, வணக்கம். நல்ல சாப்பிடிருப்பியே. நீ என்னைக்கு சாக போற?

அன்னைக்கு இருக்கு என்னோட ஆட்டம்.

Anonymous said...

அன்னா டீம் ராஜீவை பேச்சுக்கு இழுப்பது ராஜ தந்திரமாக இருக்கலாம். வருங்கால பிரதமர் என்றும், ஊழல் குடும்ப வாரிசு என்றும் ராஜீவே பேச்சு நடத்தினால், ஜன் லோக்பால் க்ஷரத்துக்களில் எந்த எந்த அம்சங்களை எதிர்க்கிறார் என்று தெரிந்துவிடும். அது மட்டுமல்ல, மன் மோஹன் பிரதமரை லோக்பாலில் விஜாரிக்க ஆக்ஷேபிக்காத போது, மற்ற ஜால்ராக்கள் ஆடுவது, ராஜீவை நினைத்துக்கொண்டுதான். அதனால் ராஜீவின் நேரடி விவாதம் அன்னாவுக்கு தேவைப் படுகிறது.

அம்மாவின் திட்டம் புதிய சட்டசபை கட்டிடத்தை சூபர் ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரி ஆக மார்றுவது நல்ல ஆலோசனையின் பேரில் அல்ல என்பது என் அபிப்ராயம். (என்று அம்மா மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டிருக்கிறார்?) ஆஸ்பத்திரிக்கென்று தனியே டிசைன் செய்யப்பட்ட ப்ளான் அவசியம். இப்போதுள்ள கட்டிடத்தை மாற்றம் செய்ய எல்லாவற்றையும் இடிக்க வேண்டும். புதிய சர்விஸ் (எலெக்ட்ரிகல், water, hospital gases as Oxygen etc.) லைன்களெல்லாம் concealed installations ஆக்க நிறைய மாற்றங்கள் தேவைப்படும். இது சரியான முடிவல்ல. யாரேனும் கோர்ட்டுக்குப் போவார்கள்.

-ஜெ.

Jagannathan said...

பதுக்கி வைத்தாலும் பிதுங்கி வெளியே வந்துவிடும் என்கிறீர் - கருப்புப் பணத்தைத் தான் நானும் சொன்னேன்! விஷியை விரித்து காத்துக் கிடப்போம்! - ஜெ.

Jagannathan said...

பதுக்கி வைத்தாலும் பிதுங்கி வெளியே வந்துவிடும் என்கிறீர் - கருப்புப் பணத்தைத் தான் நானும் சொன்னேன்! விஷியை விரித்து காத்துக் கிடப்போம்! - ஜெ.

Anonymous said...

எதையும் பதுக்கி வைக்க முடியாது? நமீதா(தானே அது?) படம் போட்டதற்கு என்ன விளக்கம்? அந்த விளக்கத்தைப் பதுக்கி வைத்துவிட்டீர்களே? (நான் சரியாத்தானே கேட்கிறேன்?)

mk said...

போன பதிவில் வந்த பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல், ஜீவா சிம்புவை சொன்னது போல் பின்னாடி இருந்து குத்தும் பேடித்தனமாக இருக்கிறது இந்தப் பதிவு! இந்தக் கேடுகெட்ட வலைப்பக்கத்தை இவ்வளவு நாள் தொடர்ந்து வாசித்ததற்கு வெட்கப்படுகிறேன்.! காரி உமிழ்கிறேன்.. தூ

Anonymous said...

நல்ல ராஜ தந்திரி ஐயா நீர்! அண்ணாவைப் பற்றிய முந்தைய பதிவில் உங்களை பின்னூட்டத்தில் எதிர்த்தவர்கள் வாயை நமிதா படம் போட்டு அடைத்து விட்டீர்! போதாததற்கு இரட்டை அர்த்த விளக்கம் வேறு! எவனாவது அண்ணாவைப் பற்றி நினைப்பானா என்ன?

BalHanuman said...

நமீதா படமும் அதன் பக்கத்தில் உள்ள கமெண்ட்டும் உங்களுக்கே கொஞ்சம் ஓவர் ஆகத் தெரியவில்லை ?

kothandapani said...

குல்லா தேடும் மூனு குரங்குகளில் ஒன்னு நீங்க,இன்னொன்னு முனி , மூணாவது யாரு..........படம் போட்டு உள்ளீர்களே அந்த அம்மணியா.

BalHanuman said...

இட்லி வடையின் பார்வைக்கு....

விதவிதமான போஸ்கள் கொடுத்தும், பிரம்மாண்ட நடிகைக்கு தமிழில் நோ சான்ஸ். அதனால் மைசூர்பாகு பூமியில் மையம் கொண்டுவிட்டது பிரம்மாண்டம்!

(தகவல் உபயம்: ஜூனியர் விகடன்)

kumar2saran said...

எதையும் பதுக்கி வைக்க முடியாதுனு சொல்றதுக்கு ஏன் நமீதா?? மீண்டும் இளமை திரும்புதோ?