பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 15, 2011

தெய்வத்திருமகன்/ள் - FIR


இன்று இந்தப் படம் பார்க்க வேண்டும் என்று அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டுப் போனதற்குக் காரணம் அடிக்கடி விக்ரம், விஜய் டிவியில் ஜூலை 15 இந்த படம் ரிலீஸ் என்று குழந்தை போல சொல்லிக்கொண்டே இருந்ததுதான்..

ஒன்றும் தெரியாமல் கோர்ட்டில் சுற்றிக்கொண்டு இருக்கும் மனநலம் குன்றிய விக்ரமிடம் சந்தானம், அனுஷ்கா கோஷ்டி செய்யும் காமெடி நல்ல தொடக்கம். "சென்னைலயே ஸ்வெட்டர் போட்டுட்டு சுத்தறான்னா இவன் எவ்வளவு பெரிய பணக்காரனா இருப்பான். ஏஸிலயே வளர்ந்தவன் போல" போன்ற வசனங்கள் சிரிக்க வைக்கின்றன.மனவளர்ச்சி குன்றிய ஒருவருக்கு எப்படி குழந்தை பிறக்கும் என்ற கேள்வி நம் மனதில் எழுதவதாலோ என்னவோ "சம்பவம் என்று ஒன்று நடந்தால், சம்பந்தபட்ட இரண்டு பேருல ஒருத்தர் விவரமாய் இருந்தால் போதாதா?" என்ற வசனத்தை M.S.பாஸ்கர் கூட்டாளிகள் அடிக்கடி பேசிக்கொள்கிறார்களோ என்னவோ. விக்ரமையும் அவர் மனைவியும் சந்தேகப்படும் காட்சிகள் கொஞ்சம் முகம்சுளிக்க வைக்கிறது, கதைதான் நன்றாக இருக்கிறதே, பிறகு எதற்கு இந்த மாதிரி காட்சிகள்? S.M.பாஸ்கருக்கு- விக்ரமுக்கும் விரோதம் வரவழைக்க எவ்வளவோ உத்திகள் இருக்கிறது.

விக்ரமின் ஃபிளாஷ் 'நிலா, நிலா' என்று சொல்லிக்கொண்டிருக்க, என்ன என்பதை ஃபிளாஷ்பேக் கொண்டு கதை சொல்லுகிறார்கள். சாதாரண வேகத்தில் போய்க்கொண்டு இருந்த கதை விக்ரமை ஏமாற்றிவிட்டு காரிலிரிந்து இறக்கிவிட்டு "வண்டியை எடுப்பா" என்று சொன்ன பிறகு வேகம் பிடிக்கிறது.


கோர்ட்டில் அதிக ஃபிரில் வைக்காத கோட், கருப்பு கண்ணாடி அணிந்துகொண்டு, காட்டுக்கத்தல் கத்தாமல், அமைதியாக வாதாடுகிறார். அடிக்கடி ஒரே மாதிரி கோர்ட் செட்டைப் பார்ப்பதினாலோ என்னவோ 2G கேஸ் நடக்கும் இடமோ என்று நமக்கு சந்தேகம் வரத்தான் செய்கிறது.

"கதை சொல்லப் போகிறேன்" பாடலில் ரஜினியின் ராணா படத்தில் வருவது போல் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் குழந்தைகளுக்கு பிடிக்கும், ஆனால் படத்தின் கதையோட்டத்தை கட்டாயம் பாதிக்கிறது.

இசை G.V.பிரகாஷ், சில இடங்களில் இளையராஜா சாயல் தெரிகிறது. குறிப்பாக 'பா' படத்தில் வரும் அந்த தீம் மியூஸ்க் போல விக்ரம் - குழந்தை சந்திக்கும் இடங்களில், மற்றும் சில இடங்களில் வரும் நிசப்தம். படத்துடன் சேர்ந்த இசை.

ஒளிப்பதிவு, பல இடங்களில் நன்றாக இருக்கிறது, மழையை மணி மணியாக எடுக்கத் தெரியும் என்பதற்காக விக்ரம் அனுஷ்கா மழைக் காட்சி தேவையில்லாத ஒன்று. அதுவும் மனவளர்ச்சி குன்றிய ஹீரோவாகவே இருந்தாலும் படத்தில் வரும் பெண்ணுடன் டூயட், மழைப்பாட்டு பாடவில்லை என்றால் அப்பறம் எப்படி அவர் தமிழ் ஹீரோ ஆவார் ? You too Vikram?

விக்ரமின் குழந்தையாக வரும் சின்னக் குழந்தை விக்ரமுக்குப் போட்டியாக நடிக்கிறது. கூடிய சீக்கிரம் ஹார்லிக்ஸ், பிஸ்கெட், ஏன் துணி சோப் விளம்பரத்திலும் ஒரு ரவுண்ட் வரும்.

சில காட்சிகளில் நிஜமாகவே கொஞ்சம் கண்கலங்க வைக்கிறார்கள், அவைதான் இந்தப் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் காட்சிகள்.

கடைசியாக கோர்ட்டில் வரும் அந்த ஐயங்கார், ஐயர் வக்கீல் அடிக்கும் கமெண்டரி பற்றி சொல்லவில்லை என்றால், அடுத்த வேளை புளியோதரை கிடைக்காது :-) அதனால் அவர்களையும் பற்றி ஒரு வரி !

படத்துக்கு மார்க் - 7/10

கொசுறு: இந்த படத்தின் பெயர் தெய்வத்திருமகனா ? அல்லது தெய்வத்திருமகளா ? என்று மக்கள் குழம்பி போய் உள்ளார்கள். இந்த தலைப்பை வைத்து வீன் பிரச்சனை வேண்டாம் என்றுதான் தலைப்பை மாற்றினோம் என்கிறார் இதன் இயக்குனர் விஜய். ஆனால், அவர்களுடைய நோக்கம் தலைப்பு அல்ல பிரச்சனைதான். என் வீட்டு முன்பு ஆர்பாட்டம் செய்ய வந்தவுடனேயே நான் தலைப்பை மாற்றி விடுகிறேன் என்று கூறிவிட்டேன். அப்படியும் வந்துட்டோம் சார். அதனால கொஞ்ச நேரம் ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு போயிடுறோம்" என்று சொல்லியிருக்கிறார்கள் ஆர்பாட்டக்காரர்கள்!


கொஞ்சம் சினிமா, கொஞ்சம் டிராமா போல இருந்தாலும், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்!


21 Comments:

kggouthaman said...

சினிமா விமரிசனங்களில் நீங்க இதுவரை அளித்த அதிகப்படியான மார்க் 7/10 என்றுதான் ஞாபகம். இதை விட அதிகம் எந்தப் படத்திற்காவது கொடுத்திருந்தால் சொல்லவும்.

சந்திரமௌளீஸ்வரன் said...

நாசரின் க்ளோசப் படத்தை போடத் தெரிந்த உமக்கு அனுஷ்காவின் க்ளோசப் கிடைக்கலையா. உம்மோடு நான் இனி பேசப் போவதில்லை

Guru said...

அது S.M. பாஸ்கர் இல்ல M.S. பாஸ்கர்..
முழுதும் படித்து விட்டு வருகிறேன்.

Venkatraman said...

This is a remake of "I am Sam" but i will still want to see for Vikram

Venkatraman said...

This is a remake of the film "I am SAM"...still wanted to see for Vikram

Citizen said...

Arumai

Santhappan சாந்தப்பன் said...

தானைத்தலைவி அமலா பால், போட்டோ போடாத இட்லிவடை-க்கு வன்மையான கண்டனங்கள்!!

Anonymous said...

"எந்திரன்" மாதிரி இருக்கா சார் ?

Anonymous said...

This seems to be a remake of i am sam.
I dont want to see this, mainly for Vikram.

I might see the comedy parts for Santhanam though.

cant stand vikram as 5yr old. trailer was irritating enough.

R.Gopi said...

// kggouthaman said...
சினிமா விமரிசனங்களில் நீங்க இதுவரை அளித்த அதிகப்படியான மார்க் 7/10 என்றுதான் ஞாபகம். இதை விட அதிகம் எந்தப் படத்திற்காவது கொடுத்திருந்தால் சொல்லவும்//

கௌதமன் சார்... உங்களுக்காக பயாஸ்கோப் பலராமன் முன்பு அளித்த மதிப்பெண் விபரங்கள், இதோ :

பயாஸ்கோப் பலராமன்
யுத்தம் செய் 8.51
எந்திரன் 8.5
பையா 4.5/10
அங்காடி தெரு 6/10
ஈரம் 6/10
3 இடியட்ஸ் /10
திரு திரு துறு துறு 5.5/10
Avatar 7/10
The Escapist 5.5/10
The Kingdom 6.0/10

எந்திரன், யுத்தம் செய், 3 இடியட்ஸ் இவை மூன்றும் 7-க்கு மேல் ஸ்கோர் செய்த படங்கள்...

நல்லூரான் said...

இட்லி வடை விமர்சனத்தை நம்பிப்
படத்திற்குச் செல்வது கொஞ்சம் risk தான்...
முன் அனுபவம்: ஆயிரத்தில் ஒருவன்
so be careful readers!!!
:)

majakarthi said...

Sir, Thanks for Giving 7 marks, but i give marks following

Vikram - 8.90
Vijay (Director) - 8.88
Nila (sara)- 8.60
Anushka - 6.25
Santhanam - 7.60
G.V.Prakash - 6.65
Amala PAL - 6.00
M.s. Baskar - 6.38
Nasar - 6.25

So Total - 65.51

65.51 out of 10

Anonymous said...

I am sam copy . crab .

Newyorker said...

SUCKS!

Anonymous said...

IV, Can you pls confirm if it is the remake of "I am Sam"?

anushka shetty said...

very nice review. i heard the film is too good like it deserved 200/100 but your review is neatly written. any chance it looks the original film???

how is anushka shetty?

Jagannathan said...

//So Total - 65.51

65.51 out of 10//
I read it as 65.51 out of 100, then read it correctly.There are 9 persons evaluated - persumably on a scale of 1 - 10. So the total can be 65.51 out of 90!

ATVOC Blog said...

Poetic drama in the first half with Nirav Shah capturing picturesque beautiful locations of Ooty and the second half legal battles mixed with decent comedy lead by santhanam. GV's background music cool and nice situational songs throughout by NAAMuthukumar. Director A.L.Vijay of Madrasapattinam scores it again! One of those rare movies one can watch with 3 generations.

Anonymous said...

Irritating... can't stand Vikram in this movie!! I think he should stop acting in Bala movies and go back to Directors like Dharani and Hari to get back to normalcy!!

Saving grace : Anushka, Santhanam and Nasser

Kalpanavinay said...

Its a nice film to see.....The Cute little girl acting is very nice......

meyyappanram said...

super review boss