பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 05, 2011

கல்மா"டீ"


சில வாரங்களுக்கு முன் ஞாநி கல்கியில் எழுதியது...

“திஹார் சிறையில் ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடத்தில் வாடிவிடும். அப்படிப்பட்ட இடத்தில் கனிமொழி இருக்கிறார்.”

தி.மு.க தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “அதே ஜெயில்ல தானே, ராசா மூணு மாசமா இருக்காரு? அவுரு வாடமாட்டாரா ? ராசாவுக்காக நீங்க இப்பிடி உருகலியே?

தவிர திஹார் சிறையைப் பத்தி நாங்களும் எல்லா பேப்பர்லயும் படிக்கறோம் தலைவா. ருச்சி சிங்குன்னு ஒரு பத்திரிகை நிருபர். அந்தம்மாவை உளவாளின்னு சொல்லி திஹார்ல போட்டாங்க. ஆறு வருஷம் கழிச்சு நிரபராதின்னு விடுதலை பண்ணிட்டாங்க. அவங்க திஹார் ஜெயிலப் பத்தி எழுதியிருக்காங்க, படிங்க.

‘வி.ஐ.பி. கைதிகள் மணிக்கணக்கில் அதிகாரிகளின் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம். மற்ற பெண் கைதிகள் அவரவர் சிறை அறைகளுக்கு அனுப்பப்பட்ட பிறகும் இவர்கள் அங்கேயே பொழுதைப் போக்கலாம். வி.ஐ.பி. கைதிகள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் அறைக்குத் திரும்பலாம். திஹார் ஜெயில் ஒரு ரிசார்ட்டைப் போல வசதியானது. அதற்கு ஒரு விலை உண்டு, அவ்வளவே. நீதிமன்றத்துக்கு விசாரணைக்குச் செல்லும்போது பியூட்டி பார்லரிலிருந்து வருபவர்களைப் போல பெண் கைதிகளை பளபளவென்று பார்க்கமுடியும்.’

அதுமட்டுமில்ல, தலைவா. வீட்டு சாப்பாடு உண்டு. தவிர கேண்டீன்ல தினசரி 200 ரூபாய்க்கு இட்லி, வடை, தோசை, சாக்லெட் எல்லாம் வாங்கிக்கலாம். கனிமொழிக்கு டி.வி, ஃபேன், தவிர அவங்க கேட்டுக்கிட்டபடி அவங்களுக்கு மேற்கத்திய கழிப்பறை தனியா தடுப்பு ஸ்கிரீன், டவல் ஸ்டாண்டோட குடுத்துருக்காங்கன்னு பேப்பர்ல போட்டிருக்குது. ஜெயலலிதாவுக்கு நீங்க மூட்டைப்பூச்சியோட கம்பளி குடுத்தமாதிரி எதுவும் குடுக்கல.”

தற்போது லேட்டஸ்ட் கல்மாடிக்கு டீ கொடுத்தவர் சஸ்பெண்ட் என்பது தான்.

ப்ரிட்டிஷ் ராஜ்யத்தில் சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் அந்தமானின் செல்லுலர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இப்போது இத்தாலிய காங்கிரஸ் ராஜ்யத்திலும் நான்கு பேர் அந்தமான் செல்லுலருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுவும் ஒருவகை தண்டனைதான் என்றாலும், இவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடியதற்காக அங்கு அனுப்பப்படவில்லை, சிலரை சிறையில் சுதந்திரமாக இருக்க விட்டதற்காக.

ஐக்கிய ஊழல் கூட்டணியின் இரண்டாவது பகுதி ஆட்சிக்காலத்தில் இதுவரை வெளிவந்துள்ள ஊழல்களில் இரண்டாமிடம் பெற்றுள்ள காமன்வெல்த் ஊழல்களின் சூத்ரதாரியாகக் கருதப்படுபவர் சுரேஷ் கல்மாடி. இனிமேல் இவரை இனிமேலும் காபந்து செய்தால் ஆட்சி செலுத்துவது கடினம் என்ற மிகவும் கட்டாயமான சூழலில், இவர்மேல் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து திஹார் சிறையில் அடைத்துள்ளது.

இந்நிலையில் திஹார் சிறைவாசிகளின் நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் நோக்கில், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் திஹார் சிறைக்கு முன்னறிவிப்பின்றி விஜயம் செய்துள்ளார். அப்போது, சுரேஷ் கல்மாடி சிறை அதிகாரி ஒருவரின் அறையில் மிகவும் சுதந்திரமாகச் சிரித்துப் பேசியபடி, டீ, பிஸ்கட் மற்றும் இதர ஸ்நாக்ஸ் வகையறாக்களை வகை தொகையின்றி வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாராம். இது சிறை விதிகளின்படி அத்து மீறல் என்பதால், கல்மாடிக்கு டீ கொடுத்து உபசரித்த அதிகாரிகள் நால்வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது. தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட அந்நால்வரும் அந்தமான் செல்லுலர் சிறைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வெளியில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தவர் சிறையிலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட முயன்றதால் வந்த வினை இது என்றாலும், அந்த நீதிபதி சுத்த விவரம் தெரியாதவராக இருப்பார் போலும். வெறுமனே டீ கொடுத்ததற்காக அந்தமானுக்கு மாற்றல் என்றால், தமிழக புழலில் நிகழும் வைபவங்களுக்காக அங்கிருக்கும் அதிகாரிகள் எங்கெங்கெல்லாம் மாற்றப்படுவர்? வாரமிருமுறை அரசாங்கமே அசைவ விருந்து போடுகிறது, தவிர சிறைக்குள் பல சட்டவிரோதமான வியாபாரங்களும் அமோகமாக நடக்கிறதென்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இருக்கவே இருக்கு அண்ணா பிறந்த நாள்... இதற்கு என்ன செய்வது?

 

கல்மாடிக்கு சலுகை கொடுத்தவருக்கு, தண்டனை என்றால் ராசா, மாறன், கல்மாடி என்று ஒரு பெரிய ஊழல் கூட்டத்தை தன் அரசாங்கத்தில் அமைச்சர்களாக வைத்துக்கொண்டு அவர்களுக்கு வக்காளத்து வாங்கியவருக்கு என்ன தண்டனை ?

14 Comments:

Suresh Kumar said...

ஊழலை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் திமுக சிறை நிறைப்பு போராட்டம். சில நாட்களில் மாறனும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர் அறிக்கை விட்டு ரொம்ப நாள் ஆச்சு. யாராவது பேட்டி எடுங்களேன் ப்ளீஸ்.

Anonymous said...

ennomo ponga
yellam avan ivan seyal

Anbudan
BalaM

R.Gopi said...

//ராசா, மாறன், கல்மாடி என்று ஒரு பெரிய ஊழல் கூட்டத்தை தன் அரசாங்கத்தில் அமைச்சர்களாக வைத்துக்கொண்டு அவர்களுக்கு வக்காளத்து வாங்கியவருக்கு என்ன தண்டனை ?//

நியாயமா பார்த்தா கழுவில் ஏற்றணும்... இப்போ தான் அது முடியாதே!!

Anonymous said...

அந்தமான் இந்தியாவில்தான் இருக்கிறது. சுதந்திரப்போராட்ட கைதிகளை 'அந்தமானுக்கு' அனுப்பினார்கள் பிரிட்டிசார் என்பதும் அந்தமானுக்கு சுதந்தர இந்தியாவைல் ஒரு போலிசு அதிகாரி பணி மாற்றம் செய்யப்பட்டார் என்பதும் வெவ்வேறானவை

சுதந்திரப்போராட்ட வீரர்களை நாடுகடத்தி யது அவர்கள் உள்ளாட்டில் இருந்து கலகமூட்டுவதைத் தவிர்க்க அப்போதைய‌ அரசாங்கம் அந்தமானைப் பயன்படுத்தியது. வேறெதற்கும் பயன்படுத்தவில்லை.

இன்று அந்தமான் நிக்கோபர் தீவுகள் இந்தியவின் ஒரு மானிலம் (யு.டி). அதன் போலிசு, மற்றும் சிவில் அதிகாரிகள் 'டெல்லி, புதுச்சேரி'. மிசோராம், மணிப்பூரோடு சேர்ந்த பணியாளர்கள். ஒரு டெல்லி போலிசு அதிகாரி, புதுச்சேரிக்கேஒ, அந்தமானுக்கோ, மணிப்பூருக்கோ, மிச்சொராமுக்கோ மாற்றப்படலாம். அதேமாதிரி, ஒரு அந்தமான் போலீசு அதிகார் மேற்சொன்ன மானிலங்களுக்கு மாற்றப்படலாம். அப்படி மாற்றப்படுவது தண்டனையல்ல இட்லி வடை.

IPS and IAS of these states are combined cadre. Therefore, officers are transfered between these States and such transfers are not punishment transfers; they are administrative transfers. However, an officer whose family is settled in Delhi and whose children are studying there, may treat the transfer to A&N islands as unwanted, so he s reluctant to go.

ஒருவேளை டெல்லி வாழ்க்கை வசதி நிறைந்தது என்றவர்கள் அதைத் தண்டனையாகக் கருதலாம். ஆனால் அந்த்மான் வாழ்க்கையை விரும்பும் அதிகாரி டெல்லி வாழ்க்கையை வெறுக்கலாம். நம்மவூரில் இருந்து டெல்லிக்கு மாற்றலாகப்போவோர் திரும்பவர உடனே மனுக்கொடுக்கிறார்கள். டெல்லியை விட நம்ம பட்டி உயர்ந்ததா இல்லை.

In a case of transfer, an officer - a bengali - was transferred from AN to Delhi. The Islands have sizable bengali and tamil spking populations settled there for centuries. The said officer was born and brought up there; and got into local civil service. On his elevation to IAS, he was posted to Delhi. Because, as long as u remain as a local civil service, u can continue in ur home state.

This officer cd not like, and understand and adjust to the life in Delhi full of pollution and selfish citizens. He committed suicide in his pragati vihar hostel.

திகார் ஜெயில் அதிகாரியை அந்தமானுக்கு மாற்றியது தண்டனை அன்று. அவர் கல்மாடி விசயத்தில் நடைபெறவிருக்கும் விசாரணையக்கெடுத்துவிடக்கூடாதென்பதற்காகவே மாற்றப்பட்டிருக்கிறார். விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரே அவருக்கு தண்டனை வழங்கப்படும்.

He shd not tamper or influence persons in the investigation. So, he has been transferred. His punishment will come only after the investigation is proved his guilt.

Anonymous said...

//ராசா, மாறன், கல்மாடி என்று ஒரு பெரிய ஊழல் கூட்டத்தை தன் அரசாங்கத்தில் அமைச்சர்களாக வைத்துக்கொண்டு அவர்களுக்கு வக்காளத்து வாங்கியவருக்கு என்ன தண்டனை ?//

அந்தமானுக்கு விரட்டி விடலாமா ?

லெனின் மாரிமுத்து said...

கல்மாடீயை விடுங்கள். இங்கே கிடப்பதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை கதையாக “தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !” என்று இந்துத்துவ கும்பல் கோசம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கனிமொழி, கருநாநிதி, செயலலிதா என்று உருப்படியான விசயங்களைப் பற்றி இவர்கள் எப்போது கவலைப்படப் போகிறார்கள் ?

“தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !” http://www.tamilhindu.com/2011/07/why_ambedkar_converted_to_buddhism-09/

Anonymous said...

கல்மாடியைப் பற்றி ஒரு தகவல் பலருக்கு தெரியாதிருக்கலாம். டில்லியில் குதுப் மினாருக்கு அருகில் சட்ட விரோதமாக் நைட் கிளப் நடத்திய அழகுக்கலை பெண்மணி பீனா ரமணியின் பார்ட்னர் இவர். டில்லியில் முக்கியமான பகுதியில் BISTRO என்ற உணவு விடுதியும் இவர்களுடையது.
குதுப் மினார் கிளப்பில்தான் ஜெஸ்ஸிகா லால் என்ற பெண்மணியை ஒரு V I P யின் பிள்ளை சுட்டுக் கொன்று விடுதலை ஆனான். இன்றைய காங்கிரஸ் என்ற பானை சோறில் கல்மாடி ஒரு பருக்கை!-- கபாலி

Anonymous said...

இந்துத்துவ கும்பல் கோசம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். "

Marimuthu

இளையராஜாவை ஆக்கத்துடிக்கிறார்கள் போலும். அவர் ஒரு தலித்து. அவர்தான் திருவாசகம், தேவாரம்னு போய்க்கொண்டிருக்கிறார்.

அவரை சங்காராச்சாரியாக்கிவிட்டால், மதிமாறன் போன்றோர் பதிவுலகத்தை விட்டு ஓடி விடுவார்கள்.

தலித்துகள் கேட்பது மடத்தில் பதவியல்ல. தரமான கல்வி, வேலைவாய்ப்பு, அதனால் வரும் நல்ல வாழ்க்கை. இவை மடத்தில் கிடைக்குமா?

ஒருத்தன் சங்காரச்சாரியாகி விட்டால், எல்லா தலித்துகளுக்கும் வாழ்க்கை வந்து விடுமா ? வரவே வராது.

மடங்கள் நான்கு சுவர்களுக்குள்ளே முடங்குபவை. வாழ்க்கை அச்சுவர்களுக்கு வெளியேதான் இருக்கிறது.

இஃது ஒரு சூழ்ச்சி. தலித்துகள் ஏமாறக்கூடாது

Anonymous said...

லெனின் மாரிமுத்து!

இட்லி வடை டாட் காமையும் ஹிந்து டாட் காமையும் சரியாகப் புரியாமல் வந்து எழுதுகிறீர்கள்.

இட்லி வடை அரசியல்.
ஹிந்து டாட் காம் இந்து மதத்தை வளர்க்கவே.

அந்த டாட் காம் ஆட்கள் (ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன், மலர் மன்னன்) என்ன நினைக்கிறார்கள் என்றால், இந்து மதத்தில், குறிப்பாக தமிழ்நாட்டில் நிலவும் மதத்தில், தொன்று தொட்டு வரும் 'பார்ப்பன ஆதிக்கம்' இம்மதத்தை விரிவுபடுத்த முட்டுக்கட்டையாக இருக்கிறது.

முற்காலத்தில் இது அவ்வளவு பிரச்சினையாகத் தெரியவில்லை. பார்ப்பனர்கள் தமிழகத்திலேயே கோயில் குளம் என்று இருந்தார்கள். இன்று அவர்கள் வாழ்க்கை வசதி என்றும் தமிழகத்தை விட்டு அப்பால் போய் திரவியம் தேடி வசதியான வாழ்க்கை வாழ விரும்பியதாலும், மற்றும், இந்து எதிர்ப்பாளர்களுக்கு பார்ப்பன கோயில் ஆதிக்கம் ஒரு வசதியான எதிர்க்கும் கருவியாகி, அவர்கள் தீண்டாமையை வருணாசிரத்தின் வழியாகக் காட்டி இம்மதம் தலித்துகளை விலக்குகிறது என்று பிரச்சாரம் செய்து தம்மதததை கீழ்த்தட்டு மக்களிடையே, குறிப்பாக தலித்துகளிடையே, பெருக்கி வெற்றி கண்டு வருகிறார்கள்.

இதை எதிர்னோக்கும் வண்ணமாக, இந்து.காம் அம்பேத்கரைப் புகழ்கிறது. மட்டுமா? அசைவ உணவு உட்கொள்வதை இந்து மதம் தடைசெய்யவில்லை என்றும் தலித்துகளும் பார்ப்ப்னரும் எந்தவிதத்திலும் ஒருவருக்கொருவர் குறைந்தவரோ கூடியவரோ இல்லையென்றும் சாதிகள் என்பதே இம்மதத்தில் கிடையாதென்றும் சொல்கிறது.

எனவேதான், தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்க முனைகிறார்கள். தலித்துகளில் இளையராஜா போன்ற பிராக்டிஸிங் சைவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் வர எவரும் தடைசொல்ல முடியாது. இந்து டாட்காம் சிதம்பரம் தீட்சிதர்களுக்கு எதிராக ஆறுமுகசாமியை ஆதரிக்கிறது.
They also support Karunanithi's act of making dalits as archakaas. In that respect, they support Periyaar.

இட்லி வடையின் வேலை கருனானிதி, கனிமொழி, மாறன் என்றுதான். His canvas is limited to politics

அவர்கள் வேலை, மிசுனோரிகள், மௌலானாக்கள், இசுலாமியத்தீவிரவாதம் என்று போகும். The canvas of Hindu.com is limited to Hindu religion and its spread and survival among Tamil population.

R.Gopi said...

கொலை கொலையாம் முந்திரிக்கா... நிறைய நிறைய சுத்தி வா... கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்... கோபாலபுரத்துல கண்டுபிடி...

இரா சத்தியமூர்த்தி said...

கலைஞருக்கு தன் மகள் உள்ளே இருக்கும் பொழுதுதான் ஜெயில் பக்கம் போகவே நேரம் கிடைத்தது. அப்பொழுது கிடைத்த தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதை தவறாக எண்ணக் கூடாது. தவிர ராஜா அடைபட்டது குளிர்காலத்தில். கனிமொழி அடைபட்டது கோடையில். அதனால்தான் கலைஞருக்கு கனியின் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ என்ற ஐயம் எழுந்துவிட்டது! :)

LIC MEENAKSHI SUNDARAM said...

you are always against DMK are you have any guts to critize jaya govt?

Anonymous said...

Why need to fight for sankara madam
Start your own madam.
Once well established the starter will be Adhi Sankarar pf that madam that is all very simple

vsankar said...

erigira kollhigalhil endha kollhi nalla kollhi?