பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 13, 2011

ஆலமர பிள்ளையாருக்கு அதிர்ஷ்டம்: கலைஞர்

கேள்வி: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோவிலை திருப்பணி செய்யப்போவதாக அறிவித்து ரூ.18.5 லட்சம் அதற்காக செலவிட ஜெயலலிதா ஆணை பிறப்பித்திருக்கிறாரே?


கலைஞர் பதில்: ஓமந்தூரார் வளாகத்திற்குள் தி.மு.க. அரசு புதிய தலைமைச்செயலகம் கட்டியது என்பதற்காக அந்த இடத்தை மாற்றியதோடு மட்டுமல்லாமல் அதுபற்றி நீதியரசர் தங்கராஜை கொண்டு விசாரணை ஆணையமும் அறிவித்திருக்கிறார். அது மாத்திரமல்லாமல், அந்த இடத்தின் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டுமென்பதற்காக, ஆலமர பிள்ளையாருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான ஆலமர பிள்ளையார்கள் மழையிலும் வெயிலிலும் வாடிக்கொண்டிருக்கும்போது கருணாநிதி புதிய தலைமைச்செயலகத்தைக் கட்டிய காரணத்தால், அங்கேயுள்ள ஆலமர பிள்ளையாருக்கு திருப்பணி செய்ய அம்மையார் ஆணை பிறப்பித்திருக்கிறார் போலும்.

யாரை நக்கல் அடிக்கிறார், பிள்ளையாரையா ? அல்லது அம்மையாரையா ?

9 Comments:

shamimanvar said...

இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் வக்கணையா பதில் சொல்லுவார்...அடுத்தவங்களை விமரிசிக்கிறபோது தன்னையும் நினைச்சுக்கணும்...2ஜி பத்தியும் 'கலை' வாரிசு கைது பத்தியும் மட்டும் கேட்டுட்டா நீலிக்கண்ணீர் வடிப்பார்...உனக்கொரு பொண்ணிருந்து...மனுநீதிச்சோழனைப்படிச்சிருக்கவே மாட்டார் போலிருக்கு இந்த இலக்கியவாதி!

shamimanvar said...

அந்த அம்மா இவர் சொன்னதுக்காக ஒடனே ரோஷப்பட்டுக்கிட்டு தலைமைச்செயலகத்தை மாத்தப்போறாங்களாக்கும்...கோயிலைப் புதுப்பிச்சாலாவது அதிகாரதுஷ்பிரயோகம் செய்து கட்டிய கட்டிடத்தை அடிக்கடி பாத்துப்பாத்து அவரும் அவர் குடும்பத்தாரும் செய்த அட்டூழியங்களை மறக்காமலிருக்கட்டும் மக்கள் என்று நினைத்திருக்கலாம்...

Surya said...

"யாரை நக்கல் அடிக்கிறார், பிள்ளையாரையா ? அல்லது அம்மையாரையா ?"
இட்லி-வடைக்கு என்ன ஆயிற்று இப்படி ஒரு கேள்வியைக் கேட்க? என்னதான் ஒரு துக்கத்தில் மு.க. இருந்தாலும், "அவாள்", அல்லது "இந்துக் கடவுள்" அல்லது "அம்மையார்" என்றால் கேலியும் கிண்டலும் மடை திறந்தால் வெள்ளம் போல் வருமே அவரிடமிருந்து! பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல இந்த மூன்றுமே இந்த "மேட்டரில்" சேர்ந்து வந்துள்ளது. அப்புறம் கேட்க வேண்டுமா மு.க.வின் கிண்டலுக்கும் கேலிக்கும்? ஒரு திருவிளையாடல் தருமி ஸ்டைல் கேள்வி பதில். பதில் சொல்பவர் மு.க.

கேள்வி: கிண்டலும் கேலியும்?
பதில்: "அவாள்" மற்றும் அம்மையார் பற்றி பேசுகையில்

கேள்வி: முக்கலும் முனகலும்?
பதில்: திகார் ஜெயில் நினைவுக்கு வருகையில்

கேள்வி: பிக்கலும் பிடுங்கலும்?
பதில்: துணைவியார் மனைவியார் ஞாபகம் சேர்ந்து வருகையில்

கேள்வி: ஓட்டுப் போடாத தமிழனை?
பதில்: சோற்றாலடித்த பிண்டம் என்று திட்டுவேன்.

கேள்வி: ஓட்டுப் போட்ட தமிழனிடம் ?
பதில்: உள்ள கடைசி கோமணத்தையும் உருவிக் "குடும்பத்திற்குக்" கொடுத்து விடுவேன்

R. Jagannathan said...

Surya's dialogues are very enjoyable and true! - R.J.

Kannan said...

ஆகையினால், பிள்ளையார் வாடும் இடமெல்லாம் நாங்கள் புதிய தலைமை செயலகத்தை கட்டுவோம் என்று அடுத்த தேர்தலுக்கு வாக்கு அளிக்கிறோம். - மரசொலி, கனிசொலி, மற்றும் பிற.

Surya said...

திருவிளையாடல் தருமி ஸ்டைல்: மு.க வுடன் ஒரு உரையாடல் part II பதில் அளிப்பவர் மு.க.

கேள்வி: சூடும் சுரணையும் ?
பதில்: உடன்பிறப்புகளுக்கு இல்லாத வரை எனக்கென்ன மனக்குறை?

கேள்வி: மானாட மயிலாட?
பதில்: செம்மொழியாம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு என் சிறு காணிக்கை

கேள்வி: சொந்த புத்தியும் சுய சிந்தனையும் ?
பதில்: நம் கட்சிக்காரர்களுக்குத் தேவை இல்லை என்று அன்றே சொன்னார் பெரியார். அதுவே இன்றும் என் கருத்து.

கேள்வி: ஊடலும் கூடலும் ?
பதில்: முன்னொரு சமயம் மூவரை எரித்ததும் பின்னர் கண்கள் பனித்து இதயம் நனைந்ததும்

கேள்வி: இலங்கைத் தமிழர் நலன் ?
பதில்: நான் தேவைப்படும் போதெல்லாம் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்

கேள்வி: உறவுக்குக் கையும் உரிமைக்குக் குரலும்
பதில்: பிணக்கு தீர்ந்ததும் பேரனுக்குக் கை கொடுத்தாலும் மந்திரி பதவிக்கு "மால்" வாங்குவது (அதாங்க, தயாளுவுக்குக் கொடுத்த அறநூறு கோடி) என் உரிமை.

கேள்வி: சண்டையும் சச்சரவும் ?
பதில்: தி.மு.க. போன்ற ஜன நாயகக் கட்சியில் சகஜம்தான். ஆனால் சண்டைக்கு இரு புறமும் குடும்ப உறுப்பினர் இல்லா விட்டால் தீர்த்து விடுவோமில்ல!

கேள்வி: சிங்காரச் சென்னை என்பது ..?
பதில்: என்றும் தமிழர்க்கு அந்தக் கனவு நிரந்தரமாக நிலைத்திட நான் சென்ற பின்னும் தம்பி ஸ்டாலின் முயற்சிப்பார்

கேள்வி: ராகு கேது தோஷம் என்று சொல்றாங்களே...
பதில்: மூட நம்பிக்கையின் முடை நாற்றம்!

கேள்வி: அப்ப உங்க மகள் காள ஹஸ்திக்குச் சென்று பூஜை நடத்தியது...
பதில்: அன்றிலிருந்து இன்று வரை எனக்கு தமிழர் பற்றித்தான் கவலை. என் குடும்ப உறுப்பினர் பற்றி என்று நான் கவலைப் பட்டுள்ளேன்?

கேள்வி: அறிவு நாணயம் என்பது
பதில்: என் இளவல் வீரமணி அடிக்கடி சொல்லும் வார்த்தை. ஆனால் அது எங்களைப் போன்றோருக்கு என்றுமே தேவை இல்லை.

Harish said...

சூர்யா...சூப்பர்..அப்படியே திருடர்களின் முழு திருவிளையாடல் வசனங்களை build பண்ணுங்க..படிக்க நல்லாயிருக்கும்

R.Gopi said...

”தல”...

அவர் வீட்டார் மேல் தூசி பட்டால் கூட கண் கலங்கி கண்ணாடியை கழட்டி துடைத்து மாட்டி, பேட்டி கொடுப்பார்...

//யாரை நக்கல் அடிக்கிறார், பிள்ளையாரையா ? அல்லது அம்மையாரையா ?//

அவர் வீட்டாரை தவிர அனைவரும் அவருக்கு தூசி தான்... ஆகவே... அவர் பிள்ளையாரையும், அம்மையாரையும் சேர்த்தே நக்கல் அடிக்கிறார்... பொழுது போகலியே.. இந்த மாதிரி ஏதாவது இத்துப்போன வேலையாவது பண்ணலாம்னு தான்..

Anonymous said...

Surya's part-II is a collation of dharmi style and mu.ka's style (kELviyum nAnE, pathilum nAnE). part-I is truly dharmi style!! vaazhththukkaL...