பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 29, 2011

ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவக்கான எடியூரப்பா

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று இருந்த எடியூரப்பா இன்று பிஜேபிக்கு ஒரு அவமான சின்னமாக விளங்குகிறார். அ.ராசா செய்த ஊழலை காட்டிலும் இவர் செய்த ஊழல் மிக மோசம். ராசா திமுகவிலிரிந்து வந்தவர் ஊழல் செய்தால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, ஆனால் இவரோ ஆர்.எஸ்.எஸ் என்று தன்னை சொல்லிக்கொள்கிறார்.

ரொம்ப நாள் கழித்து பிஜேபி தென் இந்தியாவில் அடியெடித்து வைத்தது. ஒழுங்காக ஆட்சி அமைக்க வேண்டியவர் தற்போது காங்கிரஸே தேவலாம் என்று சொல்லும் அளவிற்கு லூட்டி அடித்திருக்கிறார்.

கர்நாடகத்தில் சிலகாலமாக நடந்து கொண்டிருந்த கூத்து ஒருவழியாக முடிவுக்கு வரும்போல் தெரிகிறது. தன் ராஜிநாமாவிற்கு இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார், நிச்சயம் பி.ஜேபியை இரண்டாக உடைத்துவிடுவார் என்று நம்புகிறேன். பாவம் அத்வானி பாகிஸ்தான் தீவரவாதிகளையும், மன்மோகன் சிங் என்ற சாதுவையும் தான் மைக் பிடித்து விளாசுவார் ஆனால் எடியூரப்பா போன்றவர்களை கை கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டு இருப்பார்.

சில நாட்களுக்கு முன், முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான கர்நாடக லோகாயுக்தா அமைப்பு, கர்நாடக அரசில் சுரங்கத் தொழிலில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டது. இதில் முன்னாள் முதல்வர்களான குமாரஸ்வாமி, தரம்சிங், மற்றும் தற்போதைய முதல்வர் எதியூரப்பா ஆகியோர்கள் தவறிழைத்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ரெட்டி சகோதரர்கள் கோலோச்சிய சுரங்கத்துறையில் பல முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியிருப்பினும், முதல்வர் எதியூரப்பா பதவி விலகவில்லை; விலகும்படியாக வற்புறுத்தப்படவும் இல்லை. காரணம், அவர் சார்ந்திருந்த லிங்காயத்து சமூகத்தின் ஓட்டுக்கள் மற்றும் கட்சி மேலிடத்திலேயே அவருக்கு சுஷ்மா ஸ்வராஜ் போன்ற இரண்டாம்கட்டத் தலைவர்களிடமிருந்த செல்வாக்கு. ஆனால் தற்போது ஊழலுக்கெதிரான போராட்டம் என்பதைக் கையிலெடுத்திருக்கும் பாஜகவுக்கு, ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள எதியூரப்பாவைப் பதவியில் வைத்துக் கொண்டே போராட்டம் நடத்துவதென்பது, மடியில் பூனையைக் கட்டிக் கொண்டு சகுனம் பார்த்த கதையாக இருந்து வந்தது.

இந்நிலையில் சென்ற வியாழக் கிழமையன்று இது தொடர்பாக பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு கூடி விவாதம் செய்தது. ஏற்கனவே எதியூரப்பா தொடர்பாக பல நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் நடந்திருந்தாலும், அவையெல்லாம் திமுக செயற்குழு போலவே எந்த உறுதியான முடிவும் எட்டப்படாமல், வெண்டைக்காய் ரசவாங்கி போலவே முடிந்திருந்தன.

ஆனால் இம்முறை, பாஜக உறுப்பினர்கள் பலர் எதியூரப்பா பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கட்சித் தலைவர் நிதின் கட்கரியிடம் முறையிட்டதால், இப்பொழுது முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டுமென பாஜக மேலிடத்திலிருந்து எதியூரப்பாவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், எதியூரப்பாவும் அதற்கிணங்கி ராஜிநாமாவை ஆளுனர் பரத்வாஜிடம் இவ்வாரம் அளிப்பாரென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு மாற்றாக கர்நாடக பாஜகவின் தலைமைப் பதவியை எதியூரப்பா எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் சிதம்பரம், மன்மோகன் சிங்கை கேள்வி கேட்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தற்போது எடியூரப்பாவை பதவி விலக அவர் காலில் விழுந்து கேட்டுக்கொண்டுள்ளது. எடியூரப்பா ஊழல் செய்திருந்தாலும், இதுவும்தேச துரோகமே!


நம்மால் செய்ய முடிந்தது ஒரு நடை திருப்பதிக்கு போய்விட்டு வரலாம். எடியூரப்பாவும் அதை தான் செய்கிறார்.

10 Comments:

Erode Nagaraj... said...

1. Arun Shourie changes his relationship status to 'Single' from 'In a Relationship with BJP' :) #modern politics

2.BJP to Sonia and Karuna: So far it belonged only to you two-ji, now the "Scam is Mine"

3.The desire and lust for money results in a kinda toxic feeling, generating the "kick" in 'kickbacks' and end up in a
tag-sick feeling bringing back-kicks.

4.illegal money and the island are inseparable. A.Raja-Mauritius and Yeddyurappa at Mauritius. #Ex-Y-Zip

jaisankar jaganathan said...

பிஜெபி காமடி?

cho visiri said...

At last, the end of the story has arrived. Edy has gone, at last.

vsankar said...

vote bank politics prevailed over value based politics

அப்பு said...

எந்த அரசியல் வாதியாக இருந்தாலும் ஊழல் செய்வது வழக்கம்தான். இதில் ஆச்சரியப் பட என்ன இருக்கிறது? தன்னை ஆர். எஸ். எஸ். என்று சொல்லிக் கொள்ளுகிறவர் யோக்கியராக இருக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் ஒன்று இருக்கிறதா. அல்லது ஆர். எஸ். எஸ். எல்லாம் காங்கிரஸ் காரர்களை விட மேலானவர்கள் என்று ஏதாவது இருக்கிறதா என்ன. எவன் ஆட்சியில் அதிக நாட்கள் நீடிக்கிராரோ அவருக்கு ஊழல் ஆசை தானாய் வந்து விடுகிறது.

Anonymous said...

Nammal Mudinthathu....Thiruvanathapuram Padmanaba swamy kovilukku polamnu ninaikkiren..

Anonymous said...

வர வர இட்லிவடை வலைத்தளம் போர் அடிக்க ஆரம்பித்து விட்டது. தினமும் ஒரு பதிவாவது இருக்க வேண்டும். அதுவும் இல்லை. பிறரை விட்டு இந்த வலைத்தளத்தில் எழுத சொல்லி உங்களது தரத்தையும் குறைத்து கொண்டு விட்டீர்கள். இப்படியே போனால் வாசகர்கள் வேறு வலைத்தளத்துக்கு போக வேண்டியது தான். இட்லி வடை சூடாக இல்லை என்றால் கடையில் வியாபாரம் எப்படி நடக்கும்? யோசியுங்கள்.

சுழியம் said...

//..பாவம் அத்வானி பாகிஸ்தான் தீவரவாதிகளையும், மன்மோகன் சிங் என்ற சாதுவையும் தான் மைக் பிடித்து விளாசுவார் ஆனால் எடியூரப்பா போன்றவர்களை கை கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டு இருப்பார்...//

அபத்தம்.

லோக்பாலுக்குப் பிரச்சினை வந்தபோது ஹெக்டே சந்தித்தது அத்வானியைத்தான். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தைரியமாகச் செயல்படு என்று அத்வானி அளித்த ஊக்கத்தின் விளைவுதான் இந்த ரிப்போர்ட்.

ஏதேனும் உளறிக்கொட்ட வேண்டும் என்று முடிவில் இருக்கிறீர்கள் போல.

எட்டியூரப்பா ஒரு ஆர்.எஸ்.எஸ்காரராக இருப்பதால்தான், அமைதியாக ரிஸைன் செய்தார். செல்லாக்காசான நம்மூர் தங்கபாலுகூட ஆர்ப்பாட்டம் நடத்தி பிரச்சினைகள் பண்ணினார்.

முதன்முதலாக ஒரு கட்சி, ஊழலுக்கு எதிராகத் தனது கட்சித் தலைவர்களையே தூக்குகிறது. அதைப் பாராட்டத் தோன்றாமல், மீடியா ஒப்பாரியோடு நீங்களும் ஒப்பாரி வைக்கிறீர்கள்.

Anonymous said...

Neither AIADMK nor BJP better than DMK & Congress. They are politicians grabbing government's treasure - which is poor's tax money.

- Anbu

Priya said...

எல்லாம் அரசியல்.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com