பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, July 24, 2011

வெளியில் வராத செயற்குழுத் தீர்மானங்கள்

செயற்குழு கூட்டத்தில் பேசிய கருணாநிதி பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கப் போவதாய் சொல்லியிருக்கிறார். பூஜ்யத்திலிருந்து மைனஸ் பக்கம் தி.மு.க போனால் தமிழ்நாட்டுக்கு நல்லது.

இன்று கலைஞர் டிவியில் மூன்று பேப்பரை வைத்துக்கொண்டு பரபர என்று உப்பு சப்பு இல்லாத தீர்மானங்களை ஒரு பத்திரிக்கை நிருபர் படித்துக்கொண்டு இருந்தார். இன்றைய கூட்டத்தில் வெளிவராத தீர்மானங்கள் கீழே...

1. 'அண்ணா' உருவாக்கிய லோக்பாலில் பிரதமரையும் சேர்க்க வேண்டும்.
2. கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி எல்லோரும் இனிமேல் ஒரே ஹோட்டலில் தான் தங்குவார்கள்.
3. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு கருணாநிதிதான் பெரிய மற்றும் இளைஞர் அணித் தலைவர்.
4. இனி அழகிரி சொல்லிக்காமல் ஓட மாட்டார்.
5. திமுக இருக்கும் வரை அன்பழகன்தான் நம்பர் 2.
6. வாரிசு அரசியல் என்பது கலைஞர் குடும்பத்தில் இருக்கலாம். ஆனால் இது மற்ற திமுகவின் அடுத்த கட்டத் தலைகளுக்குப் பொருந்தாது.
7. மாறன், ராசா பதவிகள் யாருக்கும் கிடையாது. ஏன் என்றால் அவர்களை போல ஊழல் செய்யும் அளவுக்கு யாரும் பயிற்சி அடையவில்லை.
8. சட்ட மன்றத்தில் மட்டும்தான் வெளிநடப்பு என்றில்லை. பொதுக் குழுவிலும் செய்யலாம்.
9. வேற கட்சியில் இருந்தாலும் வீரமணிதான் திமுகவின் நிரந்தர/ஆஸ்தான செய்தித் தொடர்பாளர்.
10. கனிமொழி வெளியே வரும் வரை காங்கிரஸுடன் கூட்டணி கண்டிப்பாகத் தொடரும்.
யார் முதலில் மஞ்சத் துண்டு வாங்கிப் போட்டுக் கொள்கிறாரோ அவருக்குதான் தலைவர் பதவி என்று ஒரு வதந்தி பரவ அழகிரி கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் மஞ்சள் துண்டு வாங்க போய்விட்டதாக செய்தி.
கூடவே இருந்த ஸ்டாலின் முருகன் மாதிரி அப்பா துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு தலைவரானார் என்று செய்தி இப்போ வரை வரலை. :>

31 Comments:

Ganpat said...

இந்த செய(ல)ற்(ற) குழு கூட்டத்தில் வெளியில் வராத,ஆனால் எல்லாருக்கும் புரிந்த ஒரே தீர்மானம்:
நாங்க ஜென்மத்திற்கும் திருந்தமாட்டோம்!
தி.மு.க=திருத்த(வே)முடியாத கழகம்.

Suresh Kumar said...

தலைவரோட அடுத்த படம் எப்போ வருது, அத சொல்லுங்க முதல்ல.
அடுத்ததா தலைவர் எப்போ உண்ணாவிரதம் இருக்க போறாரு.
அடுத்ததா எப்போ சோனியாவுக்கு எஸ்.எம்.எஸ். / ஈமெயில் அனுப்ப போறாரு?
அடுத்ததா எப்போ மத்திய அரசில் இருந்து விலக போவதாக பூச்சாண்டி காட்டுவார்?
இந்த ராஜினாமா ராஜினாமா அப்படின்னு சொல்லுவாங்களே, அது எப்போ நடக்கும்?

சுபத்ரா said...

//யார் முதலில் மஞ்சத் துண்டு வாங்கிப் போட்டுக் கொள்கிறாரோ அவருக்குதான் தலைவர் பதவி என்று ஒரு வதந்தி பரவ அழகிரி கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் மஞ்சள் துண்டு வாங்க போய்விட்டதாக செய்தி.
கூடவே இருந்த ஸ்டாலின் முருகன் மாதிரி அப்பா துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு தலைவரானார் என்று செய்தி இப்போ வரை வரலை. :>//

:))))))))))))))))))

kothandapani said...

மேலும் சில தீர்மானங்கள்
1. கனிமொழியை மீட்போம் (இதுதான் கச்சதீவை மீட்போம் என்று தவறாக வெளிவந்துள்ளது)
2. காங்கிரேச்சிடம் இருந்த பெறப்பட வேண்டிய இரு துறைகள்... ஒன்று தொலைதொடர்பு துறை ... அடுத்து புதிதாக சிறைத்துறை

BalHanuman said...

>>கூடவே இருந்த ஸ்டாலின் முருகன் மாதிரி அப்பா துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு தலைவரானார் என்று செய்தி இப்போ வரை வரலை.

முருகன் மாதிரியா ? பிள்ளையார் மாதிரியா ?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கூடவே இருந்த ஸ்டாலின் முருகன் மாதிரி அப்பா துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு தலைவரானார்//

பிள்ளையார் மாதிரி-ன்னு இருக்கணும்! :)
இட்லி வடையின் மஞ்சள் கோடு-லயே தப்பு வரலாமா?:))

ஆனாலும் உங்க முருக பக்தி கண்டு, உள்ளூர மிக்க மகிழ்ச்சி!:)

Anonymous said...

இன்னும் சில தீர்மானங்களை விட்டு விட்டீர்களே:
சோமாலி கொள்ளைக்கரர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பர்னாலவுக்கு நிரந்தர கவர்னர் பதவி
தரப்படவேண்டும்.
மஞ்சள் துண்டு போடாதவர் முதல்வராக இருக்கக்கூடாது.
ஆங்கிலம் படிக்காவர் லஞ்சம் வாங்கினால் தப்பில்லை --மணா

Dhas said...

மு.க வுக்கு பக்கத்தில் ஸ்டாலின்! அதற்கு அப்புறம்தான் அழகிரி மேடையிலேயே! (Look photo) இப்டி குறிப்பால அடுத்த தலைவரை உணர்த்தியதால் "அழு" கிரி அதிருப்தி. பாதியிலேயே மதுரைக்கு சென்றுவிட்டார்! ஹி ஹி ..

Lan said...

yellow comment is super duper.

ஷண்முகா said...

"திமுக இருக்கும் வரை அன்பழகன்தான் நம்பர் 2"

அப்போ எப்பவும் அன்பழகன் நம்பர் 2 தான், தலைமை யாராக இருந்தாலும்.

R.Gopi said...

10 பாயிண்டுகளை தொடர்ந்து 11-வது நச் பாயிண்ட் இதோ :

கருணாநிதி இன்னமும் 20 வயது இளைஞர் போல் துள்ளி குதித்து கொண்டு தான் இருக்கிறார்... ஆகவே, அவரே நிரந்தர ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் டீம் கேப்டன்... (ஆல்வேஸ் நம்பர் 2 அன்பழகன்...)

R. Jagannathan said...

கொன்னுட்டீங்க!

ஸ்டாலின் தம்பி என்பதால் முருகன் என்று எழுதிவிட்டீர்கள்!

அழகிரி வெளிநடப்பு செய்ததால் ஸ்டாலினுக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்கவில்லையா?

ஆம்பூர் பிரியாணியைப் பற்றி எழுதாமல் விட்டு விட்டீர்களே!

ஜெ.

mariappan sarawanan said...

அண்ணா போதுங்கண்ணா,

இனி ஜெவை எழுதுங்கண்ணா. முடியலை

அம்பலத்தார் said...

நகைச்சுவையுடன் கருத்துக்களைச் சொல்வதற்கு உமக்கு நிகர் நீர்தானய்யா

shamimanvar said...

உப்புச்சப்பில்லாத தீர்மானங்களுக்கு பதிலாக காரச்சட்னியைப் போன்ற தீர்மானங்கள் எழுதிய இ.வ.க்கு பாராட்டுக்கள்!

லெமூரியன்... said...

:) :) :) :) :) :) :)

Anonymous said...

http://equitableeducation.blogspot.com/

Anonymous said...

ஆமாம். கருணாநிதி தெர்தல் தோல்விக்குக் காரணம் பார்ப்பான்கள் என்றார் 15 அட்களுக்கு முன்ப். இப்போது தோல்விக்குக் காரணம் நான்தான் என்கிறார்.
அப்ப்டியானால் இவரும் தன்னைப் பார்ப்பான் என்று சொல்லிக்கொள்கிறரா? ( ”நான் மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோதே “பூணூல் போடு: என்று அழுது அடம் பிடித்திருக்கிறேன்” என்ற அறிக்கையை எதிபார்க்கலாமா? -- கபாலி

Anonymous said...

அம்மாவின் அவலங்கள்

1. எதையும் சொன்னதை செய்ய முடியவில்லை.
2. மின்சாரம் வானத்திலிருந்து குதிக்கவில்லை.அதே மின்சார வெட்டு.
3. பள்ளி திறந்து இரண்டு மாதங்களாகியும் மாணவர்களுக்கு புத்தகம் தர முடியவில்லை
4. அதே செய்யின் திருட்டு.செயின் திருடர்கள் அம்மாவை(!!!) பார்த்து ஆந்திரா ஓடிவிட்டார்கள் என்று சொல்லிய அடுத்த நாளே பழ கருப்பையா வீட்டில் செய்யின் திருட்டு.
5. பெட்ரோல்,கேஸ் விலை உயர்வு.
6. பேருந்து கட்டணம் உயர்த்த முடியாமல், டீசல் வாங்க வங்கி கடன் வாங்க வேண்டிய அவலம்.

வஜ்ரா said...

//
திமுக இருக்கும் வரை அன்பழகன்தான் நம்பர் 2
//

டாக்டர் ஈவில் என்ற கதாபாத்திரத்துக்கு எப்பவுமே முதல் அடியாள் நம்பர் 2. கண்ணில் கடல் கொள்ளையன் போல் பிட் துணி கட்டிக்கொண்டு வருவான் இந்த நம்பர் 2.

சுழியம் said...

சும்மா.

R.Gopi said...

எக்கட எக்கட மஞ்சத்துண்டு உந்தோ, அக்கட அக்கட பகுத்தறிவு உந்தி....

mohan baroda said...

yenna idly vadai sarakku illaiya varathirku ore oru matterthan varuthu illai mavattta aal illaiya

Anonymous said...

pesama unnoda pera ippadi maathikkoda naaye. ammavoda vadai. ithuthaan unnaipola ava kundiya kaluvi kudikkiravanukku ellam sariyaana peru. poda parathesi, eluthuraanam masura. ava vanthu ennaththa kilichiputta, naathari. moodikkitu po.

Anonymous said...

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=283492

தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியது பா.ம.க

Anonymous said...

அம்மாவின் அவலங்கள் தொடர்ச்சி

1. மின்சார கட்டணத்தை ஏற்றாமல் புது மின் நிலையங்களை தொடங்க யாரும் முன்வர மாட்டார்கள் என்று தெரிந்தும், நியாயமான மின் கட்டண உயர்வுகளை எதிர் கட்சியாக இருந்த பொது எதிர்த்து விட்டு இப்போது தடுமாற்றம்.
2. புது பேருந்துகள் விடுவதற்கும் டீசல் வாங்குவதற்கும் இப்போதுள்ள கட்டணம் போதாது என்று தெரிந்தும் நியாயமான பேருந்து கட்டண உயர்வுகளை எதிர் கட்சியாக இருந்த பொது எதிர்த்து விட்டு, இப்போது தடுமாற்றம்.
3. மக்கள் சினிமாவுக்கும் போனுக்கும் தாரளமாக செலவிடும்போது அத்தியாவசிய பொருட்களை இலவசமாக் தருவது அவர்களை தெண்ட செலவு செய்ய உக்குவிக்கும் என்பது தெரிந்தும் இலவசம் தருவது.
4. மக்களுக்கு தேவையான தரமான கலவி அரசு பள்ளிகளில் தந்தால் தனியார் பள்ளி முதலைகளுக்கு திண்டாட்டம் என்பது தெரிந்தும் பாமர மக்களுக்கு துரோகம் செய்ய நினைப்பது.

Anonymous said...

அம்மாவின் அவலங்கள்-3:
இனிமேல் புது-ரோடு, புது-பாலம், புது- மேம்பாலம், புது-அரசு கட்டிடங்கள், புது- பேருந்துகள். புது-(சமச்சீர்) புத்தகங்கள் அனைத்தும் மக்களுக்கு கானல் நீர்தான். பாமர மக்களுக்கு சீனாவில் செய்யப்பட்ட படு மோசமான பொருட்கள் ( ஆறு மாதம் வராத )மற்றும் ஆடு, மாடு,பன்னி மற்றும் கோழி .

Viji said...

செத்த பாம்ப எத்தன நாளைக்கு தான் அடிப்பீங்க...
come to the current politics
என்ன பயமா..?

Viji said...

செத்த பாம்ப எத்தன நாளைக்கு தான் அடிப்பீங்க...
come to the current politics
என்ன பயமா..?

shamimanvar said...

pesama unnoda pera ippadi maathikkoda naaye. ammavoda vadai. ithuthaan unnaipola ava kundiya kaluvi kudikkiravanukku ellam sariyaana peru. poda parathesi, eluthuraanam masura. ava vanthu ennaththa kilichiputta, naathari. moodikkitu po.
தமிழ் வாழ்க! தமிழை வளர்க்கும் அழகான வார்த்தைகள் என்ற தலைப்பில் தமிழில் பிஎச்.டி முடித்தவரா நீங்கள்?

Anonymous said...

hello Mr.Anonymous
Your words are beautiful. Your vocabulary in tamil language is commendable. Keep it up. Ungakittenyirunthu intha madiri niraiya ethirparkiren. What else I can expect from you.