பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, July 17, 2011

நீயா ? நானா ?

ராசா இருக்கும் திஹார் சிறையின் பக்கத்து ரூம் காலியாக இருக்கிறது. "யாருமே எதிர்பார்க்காத ஒரு நபர் இங்கே கூடிய சீக்கிரம் வர போகிறார்" என்ற பேச்சு அடிபடுகிறது, யாராக இருக்கும் என்று ஸிபிஐயே குழம்பிபோய் உள்ளது. இதற்கு இடையில் சாதுவாக இதுவரை இருந்த ஸ்டாலின் தன்னை வாரிசாக நியமிக்கும் படி கலைஞருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் என்று தெரிகிறது.


இப்போது காங்கிரஸ் திமுக இடையிலான கசப்பான உறவைப் பற்றிய பேச்சுக்களை விட
, திமுகவினுள்ளே நடக்கும் உறவுப் பூசல்கள் பற்றிய பேச்சுக்கள்தான் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி இவர்களிடையே நடக்கும் பூசல்களால் கட்சியே காணாமல் போனாலும் ஐயமுருவதற்கொன்றுமில்லை.

சென்ற வாரம் மதுரையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அழகிரி, திமுகவின் தேர்தல் தோல்விக்குக் குடும்ப அரசியல்தான் காரணம் என வெளிக் கட்சியினர் பேசுவதை விட, திமுகவினரே அதிகம் விமர்சிப்பது தம்மை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்துவதாகத் தெரிவித்திருந்தார். தவிர இனி மதுரையில் திமுக சார்பாக நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சியாயினும், அதற்கான போஸ்டர்கள் மற்றும் ஃப்ளக்ஸ் போர்டுகளில் அண்ணா மற்றும் கலைஞர் படம் தவிர வேறு எந்தக் குடும்ப உறுப்பினர்களின் படமோ, பெயரோ இடம்பெறக் கூடாது என்றும், தமது அபிமானிகள் மிகவும் விரும்பினால் மட்டும் தன்னுடைய படத்தை இடம்பெறச் செய்யலாமென்றும் கூறியிருந்தார். இவ்வாறு இதுநாள் வரை இலை மறைவு காய் ம்றைவாக இருந்த பூசல் அன்று வெளிப்படையாகவே தெரிய வந்தது.

இந்நிலையில், வரும் 23 ஆம் தேதியன்று கோவையில் நடைபெறவிருக்கின்ற திமுகவின் பொதுக் குழுக் கூட்டத்தைத்தான் அனைத்துக் கட்சியினரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். திமுகவின் குடும்ப அரசியல் மற்றும் கருணாநிதியின் அடுத்த அரசியல் வாரிசாக கட்சியை வழிநடத்தப் போவது யார் போன்ற மில்லியன் டாலர் கேள்விகளுக்கு 23 ஆம் தேதி பதிலாக அமையும் என்பது அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பு.

ஒருபுறம் அழகிரி ஆதரவாளர்கள், எங்கள் அண்ணன் ஒன்றும் அரசியல் அரிச்சுவடி அறியாதவர் அல்ல; அவரை தாழ்த்திப் பேச யாரையும் அனுமதிக்க முடியாது; அப்படிப் பேசுபவர்கள்க்குத் தகுந்த பதில் 23 ஆம் தேதி பொதுக்குழுவில் கொடுப்போம் என்று பேசி வருகின்றனர்.

அழகிரி ஆதரவாளர்கள் தங்கள் தலைவருக்கே கட்சியை வழிநடத்தும் அதிகாரம் கிடைக்குமென ஒருபுறம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலையில், ஸ்டாலின் ஒருபுறம், தனது இளைஞர் அணி மற்றும் தமக்கு மிகவும் நெருக்கமான கட்சியின் அதிகார மையங்கள் மூலம் கட்சித் தலைமைக்கு, குடும்ப அரசியல் மற்றும் 2G அலைக்கற்றை ஊழல் மற்றும் அதைத் தொடர்ந்த கைதுகளே தேர்தல் தோல்விக்குக் காரணம் போன்றவற்றை வலியுறுத்தி கடிதங்கள் எழுதுமாறு பணித்து வருகிறாராம். இதன் மூலம் கட்சி அரசியலில் விரும்பத்தகாதவர்களை ஓரங்கட்டிவிடலாம் என்பது ஸ்டாலினின் கணக்கு.

சென்ற வாரம் கலைஞரிடம் ஸ்டாலின் விவாதம் செய்த போது உட்கட்சி அரசியலில் அழகிரியின் போக்கு பற்றியும், அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் பங்கு பற்றியும் திரும்பியுள்ளது. இவ்விஷயத்தில் தந்தைக்கும் தமையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவருமே அறிவாலயத்தை விட்டு கோபமாகக் கிளம்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. நேரே வீட்டிற்குச் சென்ற கருணாநிதியிடம், அவரது மகள் செல்வியும், அழகிரி பற்றிப் புகார் தெரிவிக்க, கோபத்தின் உச்சிக்கே சென்ற கருணாநிதி, மூட்டை முடிச்சுகளுடன் மாமல்லபுரத்திற்குக் கிளம்பிச் சென்று விட்டாராம்.

அழகிரி மற்றும் ஸ்டாலின் போன்ற இருவர் தரப்பிலிருந்துமே கருணாநிதி மிகுந்த நெருக்கடியில் இருப்பதாகத் தெரிகிறது. கட்சித் தலைமைப் பொறுப்பை சீக்கிரமே ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டுமென அவர் தரப்பும், கருணாநிதியே தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டுமென அழகிரி தரப்பிலிருந்தும் கருணாநிதிக்கு கடுமையான நெருக்கடிகள் வருவதாகத் தெரிகிறது.


கட்சியின் தலைமைப் பதவிக்கு நடக்கும் குடுமிப் பிடிச் சண்டைகளுக்கு நடுவே இரு முக்கிய மாவட்டச் செயலாளர்களின் ராஜினாமா கட்சிக்கு மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் கோவை பொதுக்குழு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.


ஸ்டாலினின் ஆணைப்படி எழுதப்படவுள்ள கடிதங்களில் இரண்டு முக்கியமான விஷயங்கள் வலியுறுத்தப்படுமாம். ஒன்று கட்சியில் குடும்ப ஆதிக்கம் மற்றொன்று தேர்தல் தோல்விக்கு முழுக் காரணம் 2G ஊழல் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் ஆகியன.

ஸ்டாலின் ஆறு பக்க ரகசிய கடிதத்தில் காங்கிரஸ் எப்படி திமுகவை ஓரம்கட்டியது என்ற தகவல் 23 தேதி ஹைலைட் என்று பேசிக்கொள்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸுக்குப் போட்டியாக பல அணிகள் உருவெடுத்து திமுக முன்னோற்றம் அடைந்திருப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது. திமுகவில், இன்று நீயா ? நானா என்ற போட்டி அதிகரித்துள்ளது, தவராமல் இன்று 9 மணிக்கு விஜய் டிவி பார்க்கவும்.

16 Comments:

மனசாட்சி said...

நல்ல செய்தி தான் - விஜய் டிவி பார்த்துட்டு வரேன்

middleclassmadhavi said...

ஏனோ முகலாய பரம்பரை ஞாபகம் வருகிறது!!

Ganpat said...

//மதுரையில் திமுக சார்பாக நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சியாயினும், அதற்கான போஸ்டர்கள் மற்றும் ஃப்ளக்ஸ் போர்டுகளில் அண்ணா மற்றும் கலைஞர் படம் தவிர வேறு எந்தக் குடும்ப உறுப்பினர்களின் படமோ, பெயரோ இடம்பெறக் கூடாது ....//

கண் கெட்ட பிறகு,மக்கள், சூரிய நமஸ்காரம் செய்து பயனில்லை.

கண் கெட்ட பிறகு,சூரியனே மக்களுக்கு நமஸ்காரம் செய்வதும் பயனில்லை.

Anonymous said...

தி மு க சங்கர மடம் அல்ல - வாரிசு என்று யாரையும் அறிவிக்க. தி மு க ஓர் அரசியல் இயக்கம். அதில் தலைவரின் பிள்ளைகள் என்கிற ஒரே தகுதியில், யாரையும் வாரிசாக அறிவித்துவிட முடியாது. பொதுக்குழு கூடி, அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும்.

Anonymous said...

தி மு க சங்கர மடம் அல்ல - வாரிசு என்று யாரையும் அறிவிக்க. தி மு க ஓர் அரசியல் இயக்கம். அதில் தலைவரின் பிள்ளைகள் என்கிற ஒரே தகுதியில், யாரையும் வாரிசாக அறிவித்துவிட முடியாது. பொதுக்குழு கூடி, அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும்.

Anonymous said...

கூட இருந்து விளக்கு பிடிச்சு பாத்த மாதிரி எழுதி இருக்கீங்க? இத்தகவல்களுக்கு ஏதாவது ஆதரம் உண்டா? ஏதாவது பாப்ஸ் பத்திரிக்கைல வியாபாரத்திற்காக வந்த சய்தியை காப்பி பேஸ்ட் பண்ணியிரிக்கீங்க. இந்த பொழ்ப்புக்கு .. வேணாம்.. அது ப்ளட் மாத்தமுடியாது

Madhavan Srinivasagopalan said...

//பல அணிகள் உருவெடுத்து திமுக முன்னோற்றம் அடைந்திருப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது//

நாற்றமென்றால் வாசனை...
இது துர்நாற்றமோ ?

ChamathuSiva said...

Kasi trip would be a long way to go compared to that of Mamallapuram, Isn't it?

மாய உலகம் said...

என்னேரமும் மனசு உறுத்திக்கிட்டேர்ர்ர்ருக்குமே.....

balu said...

let him go to kasi yathra

basheer said...

தீர்ந்ததா அரிப்பு?

Muthu said...

அனானிகளுக்கு ரொம்பவே வலிக்குதே என்ன விஷயமாம் ?

"தி மு க சங்கர மடம் அல்ல - வாரிசு என்று யாரையும் அறிவிக்க. தி மு க ஓர் அரசியல் இயக்கம். அதில் தலைவரின் பிள்ளைகள் என்கிற ஒரே தகுதியில், யாரையும் வாரிசாக அறிவித்துவிட முடியாது. பொதுக்குழு கூடி, அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும்."

கொஞ்சம் லேட்டா போச்சு. இல்லைன்னா தெய்வத்திருமகள்-ள எம்.எஸ்.பாஸ்கர் பல்ல காட்டி சிரிச்சதுமே அழ ஆரம்பிக்கிற நிலாகிட்ட இந்த வசனத்த சொல்லி ரொம்ப நேஏஏஏஏஏரத்துக்கு சிரிக்க வெச்சிருக்கலாம்.

ஆனாலும் நீங்க ரொம்ப லேட் அனானி.

balu said...

oozh vinai vandhu ouruthudu

வலையகம் said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

shamimanvar said...

நாலும் நடந்து முடிந்தபின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா...அப்பவும் தெரியலேன்னா என்ன செய்யறது, தலையில அடிச்சுக்கறதத் தவிர...

sivaprakash said...

You are putting most of the posts from Anandha Vikatan. If anyone from AV this will be repeated news so please different post like your own posts