பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 12, 2011

முகுல் ராய் பிரபலமான விபத்து!

முன்பொரு காலத்தில், திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் ரயில்வே மந்திரியாக இருந்த போது, தமிழகத்தில் அரியலூரில் நிகழ்ந்த ரயில் விபத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று, பதவி விலகினார். பின்னாளில், நேருவிற்குப் பிறகு சாஸ்திரி அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் சில சமரசங்கள் செய்து கொண்டதைத் தாளாமல், ரஷ்யாவின் தாஷ்கண்டிலேயே உயிர் நீத்தார்.

ஒரு முடி நீத்தாலும் உயிர் துறக்குமாம் கவரிமான். அது போன்ற கவரிமான்களைக் கண்ட அரசியல் பாரம்பரியம் நம் பாரதத்தினுடையது. ஆனால் இன்றைய நிலை அப்படியே தலைகீழ். மந்திரி சபை மாற்றம் என்பதை ஏதோ கல்யாணம் போல மீடியாக்கள் கொண்டாடுகிறது. இவருக்கு என்ன மார்க் அவருக்கு என்ன மார்க் யார் ரயில்வே மந்திரி, யார் தலை உருளும் என்பது தான் தற்போது செய்தி. யார் நமக்கு என்ன செய்ய போகிறார்கள் என்று - மூச்.

பெற்ற மக்கள், கட்டிய மனைவி என அனைவரும் ஊழலுக்காக சிறை செல்ல வேண்டியிருப்பினும், அவர்களுக்கு பதிலாக என்ன பதவி தருவீர்கள் என இழவு வீட்டில் இயன்றதைச் சுருட்டிய கதைதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பிரணாப் முகர்ஜி சென்னையில் கலைஞரை சந்தித்த போது ராசா, மாறனுக்கு பதில் யாருடைய பெயர் என்று கேட்க அதற்கு கலைஞர் கனிமொழி ( அதாவது அவர் ஜெயிலிலிருந்து வெளியே வந்த பிறகு) என்று பதில் சொல்ல பிரணாப் முகர்ஜி பயந்துக்கொண்டு கால் நடையாகவே டெல்லிக்கு போகலாமா என்று யோசித்தாராம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் இரண்டாவது அத்யாயத்தில் ரயில்வே மந்திரியாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த செல்வி மமதா பானர்ஜி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற வேளை என்ன முகூர்த்தமோ? தொடர்ந்து ரயில் விபத்துக்கள்; எண்ணற்ற உயிரிழப்புகள். ஆண்டுதோறும் ரயில்வே பட்ஜெட் என்ற பெயரில், ரயில்வே பாதுகாப்பு, விபத்துத் தடுப்பு சாதனங்கள் என பல்லாயிரக்கணக்கான கோடி மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்படுகிறது. ஆனாலும் மற்றொருபுறம் ரயில் விபத்துக்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. பாதுகாப்பிற்கென்று ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போகிறது? அல்லது முறையாகச் செலவிடப்பட்டும், நடைமுறைப்படுத்தப்படும் விதம் சரியில்லையா? உலகின் இரண்டாவது பெரிய ரயில்வேயைக் கொண்டுள்ள பாரதம், உலகில் அதிக ரயில் விபத்துக் காவுகளை வாங்கியதில் முதன்மையாக உள்ளது.

சமீபத்திய நிகழ்வாக, நேற்றைய தினம் இரு கோரமான ரயில் விபத்துக்கள். ஒன்று உத்திரப் பிரதேசம் ஃபதேபூர் மாவட்டத்தில், கல்கா எக்ஸ்பிரஸ்; மற்றொன்று அஸ்ஸாமில். ஒரே நாளில் நிகழ்ந்த இவ்விருவேறு விபத்துக்களில் சுமார் 80 உயிர்கள் போய்விட்டன. ஏற்கனவே மமதா தலைமையில் குறட்டையில் ஆழ்ந்திருந்த ரயில்வே அமைச்சகம், அவர் கையை விட்டு பிரதமர் கைக்குச் சென்றவுடன், ஆழ்ந்த குளிர்கால உறக்கத்தில் ஆழ்ந்து விட்டது.

மமதா மேற்கு வங்க முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், ரயில்வே அமைச்சகம் பிரதமர் வசம் போய்விட்டது தற்காலிகமாக, ஆனாலும், மினிஸ்டர் ஆஃப் ஸ்டேட் ஃபார் ரயில்வேஸ் என்று கூறப்படும் பதவியை திரிணமூல் காங்கிரஸ் தன்வசமே வைத்துள்ளது. அதன் பொறுப்பில் இருப்பவர் முகுல் ராய் என்ற மஹானுபாவர். இவ்விரு விபத்துக்களும் நடைபெற்று 48 மணி நேரமாகியும், இத்துறை சார்ந்த அமைச்சராக இருக்கும் இவர், இன்னும் விபத்து ஸ்தலத்தைச் சென்று பார்வையிடவில்லை. ஸ்தலத்தைப் பார்வையிட்டு, வார்த்தை ஜோடனைகளால் வருத்தப்படுவதென்பது காலம் காலமாக பின்பற்றப்படும் மரபாயினும், அதைச் செய்யத தவறியதோடு மட்டுமல்லாமல், நான் ஏன் போக வேண்டும் என்ற ரீதியில் பேசி வருகிறார் முகுல் ராய். நான் என்ன ரயில்வே துறைக்கு கேபினட் மந்திரியா? பிரதமர்தானே அத்துறைக்குப் பொறுப்பு? அவர் என்னிடம் போகச் சொல்லவில்லை....இதுதான் இவர் கூறிய பதில். காலையில் **** வந்தால் கூட இவர் பிரதமரை கேட்டுவிட்டு தான் போவார் என்று நினைக்கிறேன்.

தவிர, நான் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறேன், தேவைப்பட்டால் போவேன் என்கிறார். இதுதான் ரயில்வே அமைச்சகத்தின் லட்சணம். இதே முகுல் ராய் ஓட்டுப் பொறுக்குவதற்காக ஆயிரமாயிரம் மைல்கள் ஆகாய மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் பயணப்பட்டார். இப்போது பதவி வந்ததும், நான் ஏன் போக வேண்டுமென்கிறார். இதற்கு திரிணாமூல் காங்கிரஸும் ஜால்ரா அடிக்கிறது. எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் சீறுகின்றன. மீடியாக்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்.

இவ்வளவு கூத்தும் நடந்த பிறகு, ஸ்தலத்தைப் போய்ப் பாருங்கள் என்று பிரதமர் மென்மையாகக் கூறுகிறார். அவரைப் பாவம் என்ன சொல்வது? இது ஒன்றுதான் அவருக்குக் கவலையா? தெலங்கானா எம்பிக்கள் ராஜிநாமா செய்வேன் என்று அடம் பிடிக்கிறார்கள். இந்நேரத்தில் திரிணாமூல் காங்கிரஸைப் பகைத்துக் கொண்டால் என்னாவது? மமதாவுக்கு மத்தியில் அரசியல் செய்வது வெறும் பொழுது போக்கு. நான் போகிறேன் என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாரானால் என்னவாகும் மத்திய அரசின் கதி? நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எவ்வளவு செலவாகும்?? இதெல்லாம் எண்ணிப் பார்த்துதான், போய் பாருங்கள் என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார் பிரதமர். அவரால் தன்னிச்சையாக, யாரிடமும் அனுமதி வேண்டாமல் செய்ய முடிந்தது, அனுதாபம் தெரிவிப்பது ஒன்று மட்டுமே. அதைச் செவ்வனே செய்து விட்டார்.

உயிர் நீத்த 80 அப்பாவிகளின் சவங்கள் மீது திரிணாமூல் காங்கிரஸும், மத்திய காங்கிரஸ் சர்க்காரும் சடுகுடு ஆடிக் கொண்டிருக்கிறது. எதிர்கால விடிவெள்ளி, தியாகத் திருவிளக்கின் தவப் புதல்வர் இதையெல்லாம் கேட்பாரா என்றால் அதுவுமில்லை. கூட்டணிக் கட்சியாயிற்றே! மமதாவைக் கேட்பதை விட மாயாவதியை எதிர்ப்பது அவசியமல்லவா? இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலமாவது பதில் சொல்லுமோ இல்லை அதுவும் பிரதமர் போல் மெளனமாக இருக்குமோ??


பிரதமர் செய்ய வேண்டியது - அடுத்த பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் போது பாராளுமன்றத்தில் இருக்கும் கேண்டீனில் இருக்கும் தின்பண்டத்தில் ஊக்க மருந்து கலந்து எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். நம் எம்.பிக்கள் எங்கே போகிறார்களோ இல்லையோ நிச்சயம் கேண்டீன் பக்கம் போவார்கள். ஊக்க மருந்து உட்கொண்ட பிறகாவது ஓடி ஓடி உழைப்பார்களா என்று பார்க்கலாம்.


17 Comments:

Dhanalakshmi said...

nalla padhivu..........

vsankar said...

This shows the standard of governance.Instead of chucking him out from the groupe of ministers,the PM has been magnanimous enough to provide him alternate portfolio.Thanks to coalition compulsions.

வழிப்போக்கன் said...

அரியலூர் விபத்தின்போது தி.மு.க. போட்ட கோஷம்: "ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?". நினைவு இருக்கிறதா?

Anonymous said...

//இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலமாவது பதில் சொல்லுமோ இல்லை அதுவும் பிரதமர் போல் மெளனமாக இருக்குமோ??//

Brilliant but heart wrenching...

jaisankar jaganathan said...

//வழிப்போக்கன் said...
அரியலூர் விபத்தின்போது தி.மு.க. போட்ட கோஷம்: "ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?". நினைவு இருக்கிறதா?//

ரிப்பீட்டு

BalHanuman said...

மிக அருமையான பதிவு. இட்லி வடை
back to form.

தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்த சாஸ்திரி எங்கே ?

மனசாட்சியையும் தேச நலனையும் அடகு வைத்து விட்ட இந்த கேவலமான ஜன்மங்கள் எங்கே ?

நீச்சல்காரன் said...

அவர் ராஜ்ய சபா உறுப்பினர் என்பதால் ஓட்டுக்காகக் கூட பயணித்திருப்பார் என சொல்லமுடியாது

Madras said...

What is gonna if he goes and see the place? Nothing.

I wish the next government, either BJP or Congress, should get majority.

Alliance politics sucks!

kothandapani said...

ரயில் விபத்து எப்படி நடந்தது ஏன் நடந்தது ..நடக்காமல் இருக்க என்ன பண்ணலாம் என்று விவாதிக்க வேண்டிய மீடியாக்கள் என்ன பண்ணுகின்றன...
முகுல் ராய் விபத்து நடந்த இடத்திற்கு போகவில்லை என்று பெரிதாக விவாதம் பண்ண வைத்ததே ஒரு பெரிய ராஜதந்திரம். இவர் போய் பெரிசா என்னகிழிக்க போகின்றார் ... வெகு விரைவில் கலைஞர் டிவி க்கு கொடுத்தது கடன்தான் என்று கனிமொழி
விடுதலை ஆகி , தொலை தொடர்பு துறை மந்திரியாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகின்றது. இதைத்தான் பிரணாபும் கலைஞரிடம்
சொல்லி சென்று இருப்பார் போலும் .

சுழியம் said...

இந்த விபத்தின்போதும் ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் முன்னிலையில் நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.

சேவை மட்டுமே நோக்கம் என்பதால் மீடியாவிற்குப் போகக்கூடாது என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடாக இருக்கிறது. அதனால், அவர்களின் இந்தச் செயல்கள் பற்றி எந்த மீடியாவிலும் வரவில்லை. அப்படியே தெரிந்தாலும், பீசெக்கு மீடியாக்கள் அதை மறைத்தும் விடுகின்றன.

ஆர்.எஸ்.எஸ் தலைமையிடம் இருந்து உத்தரவு வருவதற்கும் முன்பாகவே சுயசேவகர்கள் தாமாகவே இந்த சேவையை ஆரம்பித்துவிட்டார்கள்.

வருடம்தோறும் பாரத ரத்னா அவார்ட் யாருக்காவது கொடுக்கப்பட வேண்டும் எனில், அது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத்தான்.

தகவல்கள் கீழே:

http://samvada.org/2011/news/rss-swayamsevaks-at-rescue-operation-dur...

Kalka Mail Accident: *RSS Swayamsevaks took part in rescue operation*


Monday July 11, 2011 : By Ram Madhav http://ram-madhav.blogspot.com/


A pleasant surprise awaited us yesterday. We were all at the all-India
meeting of the Prant Pracharaks (Provincial Organisers) of the RSS. This
meeting was held at a far off North Eastern town of Tinsukia. The meeting
was being held at a very serene and scenic school complex of the Vivekananda
Kendra. This one was one of the oldest schools started by the Kendra in the
North East
[image: 343519802.jpg]

சுழியம் said...

We were cut off from the rest of the country and the world for the duration
of the meetings. There were about 175 of us - all the senior functionaries
from the RSS and several important full-time organisers from various
like-minded organisations like the VHP, BMS, ABVP, Vanvasi Kalyan Ashram,
Vidya Bharati and the BJP.
North East wakes up early. By 4 in the morning you would witness daybreak.
Sun sets off early too, latest by 6 in the evening. Ideally Bharat should
have two or three time zones like the US. At least the East and North East
Bharat should have a +1 hour time zone from the rest of the country. That
would save a lot of energy and time for this region.
We were completely cut off from the developments in the rest of the country
not only due to the distance and allied factors like occasional poor mobile
network coverage etc but also due to the intense deliberations taking place
on various important issues and plans being drafted for future campaigns. It
is normal with Sangh functionaries because of the back-to-back nature of the
meetings and the insistence upon diversionless attention on the work at
hand.

சுழியம் said...

It is natural that in such a scenario we would miss the news about a tragic
accident like the one happened to the Delhi-bound Kalka Mail on 10 July
morning. It had apparently happened at around noon on that day. However I
was alerted by an NDTV mobile alert when I turned it on at around 2 pm. Our
session was to commence soon. So I rushed to locate the Prant Pracharak of
Kanpur with the news. The accident area falls in his province. Somehow I
couldn't find him before the start of the session.
Finally at 3.30 pm we could meet. I told him to activate our Swayamsevaks
near the accident place as also the other nearby paces for necessary help to
the affected passengers. It was a ghastly accident. Two general compartments
were very badly mangled. We got the information that at least 60 people have
died and hundreds injured. What appalled us was that till 4 pm the Railway
Accident Relief train had not reached the site of the accident although it
was just a 4-hour normal train run time away at Allahabad. It speaks volumes
about the inefficiency of our system.
What made us feel satisfied was that the RSS Swayamsevaks were already there
at the site of the accident for several hours helping the railwaymen and
other security personnel. They were there at the railway station near the
dead bodies. They were there in hospitals where the injured have been
transported. They were there even in Kanpur attending to the seriously
injured.

சுழியம் said...

Our phone went to the key functionary in Kanpur. He was so busy that he
could barely speak to us for a minute; he was rushing to the hospital where
several injured had arrived. He had already asked a number of Swayamsevaks
to reach there anticipating need for blood and other help. We tried for the
district secretary of the organisation in the affected area. It took a
while, series of phone calls back and forth, to locate him. For several
hours he was busy organising relief at the site along with more than hundred
Swayamsevaks. Lastly we tried to reach out to the local head of the
organisation, a doctor by profession. He told us that he was busy attending
to the injured people in his own hospital as dozens of them had arrived.
Should we not feel happy? Here is a voluntary group of socially-conscious
individuals which is in full force attending to the victims. They didn't
wait for the orders to come from above in the command structure, which in
this particular case is far removed from the event. They didn't even bother
to inform the so-called higher ups. Only thing that occupied their thoughts
at that moment was perhaps the duty to help the suffering passengers.
Contrast this with the delays in the response of the Government machinery.
It happens mostly because of the command structure.
By evening it was all over in the news. For a change the TV channels were
showing visuals (which they would normally avoid by turning their cameras
away) of Swayamsevaks involved in the relief activity. True to their
intrusive style they managed to interview a couple of Swayamsevaks also.
Ideally we would have expected our Swayamsevaks to avoid media bytes etc in
such situations. But sometimes the intrusive style of the media becomes too
much and one or two end up in minor violation of that fine line of the
organisational culture.
I am writing this not to suggest that only Swayamsevaks respond in such
times of calamity. Many other socially conscious individuals too do. But the
Swayamsevaks enjoy a distinct advantage. They are mentally better trained
and equipped due to their RSS background to respond to such situations.
Also, they have an organisational structure to maintain orderly management
of such otherwise chaotic situations. Perhaps the military enjoys this
advantage besides the Sangh. Thirdly and most importantly the RSS has a
network that can handle all the needs in such situations - doctors, blood
donars, helpers, transport, food, security. You name it and you have people
in the organisation who can be immediately put to work. This network of
inspired individuals is what the RSS has created as an asset for the
country.
They will be there wherever and whenever required. I am reminded of the day
after the police crackdown on Baba Ramdev's Satyagraha camp at the Ramlila
Maidan in Delhi. At 5 in the morning on 5 June I saw more than 200
Swayamsevaks at the Jhandewala HQ of the organisation in Delhi. They were to
disperse in various directions - to railway stations, hospitals, public
parks - to extend help to the victims of the Police brutality. While all the
leaders were busy making statements here was a band of young men which was
silently scouting the streets of Delhi and helping the victims.
In the true tradition of the RSS, of course.
__._,_.___

vsankar said...

no wonder anything can happen in this shameless coalition of mutual convenience.

BKK said...

ஊக்க மருந்து சாப்பிட்டு ஊக்கமா ஊழல் பண்ணுவாங்க

மடல்காரன் said...

"ஊக்க மருந்து ஊழல்" - க்கு வழிவகுக்கும்..
மக்களின் மனமும் எண்ணமும் மாறவேண்டும்..
ஊழல் இல்லாத அரசாங்கமும் ஊழல் செய்யாத அரசியல்வாதியும் இந்தியாவில் இல்லை என்பது நம் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
-கி.பாலு

Anonymous said...

தி.மு.க.அரியலூர் விபத்தின் பொது போட்ட கோஷம் அப்போது ரயில்வே துணை அமைச்சராக இருந்த திரு.ஒ.வி.அழகேசனுக்கு எதிராக.(காபினெட் அமைச்சர் திரு சாஸ்திரி பதவியைத் துறந்த பிறகும்)
கோஷம்:"அழகேசா நீ ஆண்டது போதாதா மக்கள் மாண்டது போதாதா"
---பணிவரையன்