பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 08, 2011

ராசாவை ஓவர்டேக் செய்த பத்மநாபஸ்வாமி


ஒரே நாளில் திருப்பதி வெங்டேசப் பெருமாளையும், பொற் கோயிலையும் ஏன் அ.ராசாவையும் ஓவர்டேக் செய்த பெருமை திருவனந்தபுரம் அனந்தபத்மநாபஸ்வாமியையே சேரும்.

கடந்த ஒருவார காலமாக திருவனந்தபுரம் அனந்த பத்மநாபஸ்வாமி கோவில்தான் அனைத்து பத்திரிக்கை மற்றும் செய்திச் சானல்களின் தலைப்புச் செய்தி. இந்திய மீடியாக்கள் மட்டுமல்லாது நியூயார்க் டைம்ஸ், பிபிசி அமெரிக்க மற்றும் ப்ரிட்டிஷ் மீடியா ஜாம்பவான்களும் திருவனந்தபுரம் கோவிலைப் பற்றிச் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. டைம் மாகஸின், அதன் எடிட்டோரியல் டீமில் ஒருவராகப் பணிபுரியும், திருவனந்தபுரம் தொகுதியின் எம் பியான சர்ச்சைப் புகழ் சஷி தரூரின் மகனான இஷான் தரூரை இக்கோவில் தொடர்பான விஷயங்களுடன் வருமாறு பணித்து கேரளத்திற்கு அனுப்பியுள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது அங்கே? பல நூறு ஆண்டுகளாகப் பூட்டியிருந்த கோவிலின் பாதாள அறைகளுக்குள் இருக்கும் தங்கப் புதையல்தான்.
கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாகப் பூட்டப்பட்டுக் கிடந்த அறைகள், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்குப் பின் திறக்கப்பட்டுள்ளது. பூட்டப்பட்டுள்ள அறைகளில் இருக்கும் பொக்கிஷங்களைப் பட்டியலிட்டு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு, அதற்காக ஏழு பேர் கொண்ட ஒரு பெஞ்சையும் நியமித்துள்ளது உச்சநீதி மன்றம். கிணறு தோண்டப் பூதம் கிளம்பிய கதையாக குவியல் குவியலாக தங்க, வைர, நவரத்ன ஆபரணங்கள் வந்து கொண்டே இருக்கின்றனவாம். மொத்தமுள்ள ஆறு அறைகளில், இதுவரை ஐந்து அறைகள் திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு அறையின் கதவு உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. தவிர அது மிகுந்த பாதுகாப்புடன் பல பூட்டுக்களைக் கொண்டுள்ளதாகவும், தவிர அக்கதவு முழுவதும் பாம்பினுடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலத்த பாதுகாப்புடன் கூடிய கதவாக இருப்பதால், மற்ற ஐந்து அறைகளைக் காட்டிலும் அதிக மதிப்பிலான பொக்கிஷங்கள் அவ்வறையில் இருக்கலாமென்றும், பாம்பின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதால், ஏதேனும் பிராணாபாயம் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவுவதால் அவ்வறை இதுவரை திறக்கப்படவில்லை. தவிர எல்லாமே பாதாள அறைகளாக இருப்பதால், அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக, நகைகளை மதிப்பிடும் பணி சற்றே மந்தமாகியுள்ளதென்றாலும், இதுவரை பட்டியலிடப்பட்டுள்ளவற்றின் இன்றைய மொத்த சந்தை மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் கோடிகள் முதல் சுமார் ஐந்து லட்சம் கோடிகள் வரை இருக்கலாம் என பல்வேறு ஹேஷ்யங்கள் நிலவுகின்றன. பெயர் குறிப்பிட விரும்பாத கோவிலைச் சேர்ந்த அதிகாரி கூறுகையில், இப்பொக்கிஷங்கள் கிடைத்துள்ளதன் மூலம், பத்மநாபஸ்வாமி உலகின் மிகவும் பணக்காரக் கடவுளாகியுள்ளார் என்கிறார்.

கேரள முன்னாள் தலைமைச் செயலர் ராமச்சந்திரன் நாயர் குறிப்பிடுகையில், கேரளக் கோவிலில் கிடைத்துள்ள அனைத்துப் புதையலும் கோவிலுக்கே சொந்தமென்றும், அதில் ஒரு நயா பைசாவிற்குக் கூட அரசாங்கமோ, மற்ற எவருமோ உரிமை கொண்டாட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அரச பரம்பரையச் சேர்ந்த மஹராஜாவே கோவிலின் அறங்காவலர் மற்றும் கோவில் சொத்துக்களின் அதிகாரப் பூர்வ நிர்வாகி என்றும், மற்ற எவரும் இப்புதையல் தொடர்பான விஷயங்களில் தலையிட முடியாதென்றும் கூறியுள்ளார்.

இவ்விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே மெளனம் காத்துவந்த கேரள அரசாங்கமும் தனது மெளனத்தைக் கலைத்து, அனைத்து பொக்கிஷங்களும் கோவிலின் உடைமை என்றும், அவையனைத்தும் கோவிலிலேயே பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளது. ஆனாலும் இப்பொக்கிஷங்கள் தொடர்பான வேறு சர்ச்சைகள் எழாமல் இல்லை. இதில் மிகவும் வேடிக்கையாக, காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி, கோவிலில் கிடைத்துள்ள பொக்கிஷங்கள் அனைத்துமே கறுப்புப் பணம், அவையனைத்தும் அரசாங்கத்தைச் சேரும் என்று ஒரே போடாகப் போட்டுள்ளார். கேரளாவின் ஆளுங்கட்சியும் காங்கிரஸ் என்பது குறிப்பிடத் தகுந்தது. ஆயினும் அதன் கருத்து இவருடன் முரண்படுகிறது.

எனினும் இந்த சர்ச்சை தொடர்பாக இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட் வசமே உள்ளது. சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள எழுவர் குழு இப்பொக்கிஷங்களை ஆய்வு செய்து, அதன் மொத்த சந்தை மதிப்பை நிர்ணயித்து கோர்ட்டாரிடம் அறிக்கை சமர்ப்பித்த பிறகு, இவற்றில் இறுதி முடிவெடுக்கப்படுமெனத் தெரிகிறது. இதனிடையே கோவிலின் சொத்துக்களின் உரிமை தொடர்பான பல ஹேஷ்யங்கள் உலவுவதால், திருவாங்கூர் சமஸ்தான இளவரசர், தவிர அரச பரம்பரையினர் அச்சொத்துக்களில் ஒரு நயா பைசா உரிமை கூட கோரப் போவதில்லை எனவும், அவையனைத்தும் அனந்தபத்மநாபருக்கே சொந்தமெனவும், ஆகவே ஆறாம் எண் அறையைத் திறக்கக் கூடாதென்றும் உச்சநீதி மன்றத்தில் இடைக்காலத் தடையுத்தரவு பெற்றுள்ளார். கோர்ட்டும் இதனை அனுமதித்து, தடையுத்தரவு வழங்கியுள்ளதோடு மட்டுமல்லாமல், பொக்கிஷங்களை மதிப்பிடும் அதிகாரிகள் அவை தொடர்பாக பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கக் கூடாதென்றும், பொக்கிஷங்களின் மதிப்பீடு அனைத்தும் வீடியோ படமெடுத்து ஆவணப்படுத்தப்பட வேண்டுமென்றும் உத்தரவு வழங்கியுள்ளது.

தற்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் மஹாராணியும், மஹாராஜா உத்ராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவினுடைய சகோதரி மகளுமான லக்ஷ்மி பாய் குறிப்பிடுகையில், கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளவற்றை புதையல் என்று சொல்வது தகாதென்றும், அவையனைத்து பக்தர்களால் அவருக்குக் காணிக்கையாக்கப்பட்ட சொத்துக்கள் என்றும் கூறியுள்ளார். இக்கோவிலுக்கு ராஜ ராஜ சோழன் மற்றும் விஜயநகரச் சக்ரவர்த்தி க்ருஷ்ண தேவராயர் போன்றோர் காணிக்கைகள் செலுத்தியுள்ளதற்கான ஆவணங்கள் உள்ளன.

இந்நகைகளில் பேர்பாதியை ஏற்கனவே திப்பு சுல்தான் கொண்டு போய்விட்டதாக ஒரு தியரி சொல்லப்படுகிறது. இது எவ்வளவு உண்மை என்று விளங்கவில்லை. மீதமுள்ள நகைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற நோக்கில் கோவிலின் பாதாள அறைகளுக்குள் மூட்டை மூட்டையாகக் கட்டிப் பாதுகாக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. பிரிட்டிஷ் ராஜ்யம், திப்பு சுல்தான் போன்ற சிங்கங்கள் வாயிலிருந்து தப்பிய புதையல்கள், இப்போது புலி வாயில் அகப்பட்ட கதையாக, மத்திய அரசுக்கே சொந்தம் என சில காங்கிரஸார் வானத்திற்கும் பூமிக்குமாகக் குதிக்கின்றனர். கறுப்புப் பணமாம். இது அவர்கள் கையில் கிடைத்தால் என்னவாகுமென்று சொல்லியா தெரிய வேண்டும்? முன்னர் மதுரை உலகத் தமிழ் மாநாட்டில் காட்சி படுத்துகிறேன் பேர்வழி என்று அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கொண்டு போன திருவரங்கம் கோவில் நகைகள் பாதி எங்கு போயின என்றே தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இவையெல்லாம் பொதுக் காரியத்திற்கு செலவழிக்கப்பட வேண்டுமென கி.வீரமணி திருவாய் மலர்ந்தருளியுள்ளார். பெரியார் விட்டுச் சென்ற இவர் வசமுள்ள சொத்துக்களைக் கூடத்தான் தர்மத்திற்குச் செலவழிக்கலாம். ஆனால் இவரோ தனது மகனை அதற்கு வாரிசாகப் போட்டுள்ளார். இதெல்லாம் அவரிடம் யார் கேட்பது?

- யதிராஜ்


இந்த கோவில் தமிழ் நாட்டில் இருந்தால், கோபாலபுரம் அல்லது சி.ஐ.டி காலனி வழியாக மொட்ரோ ரெயில் சுரங்கப்பாதை தோண்ட ஆரம்பித்திருப்பார்கள்.


41 Comments:

Suresh Kumar said...

தலைவர் குடும்பத்தினரின் வீட்டு கதவுகளை திறக்க சொன்னால் என்னன்ன கிடைக்குமோ? ஒரு வேளை பத்மநாதன் சுவாமியையும் மிஞ்ச கூடிய அளவுக்கு கூட பணம் கிடைக்கலாம்...யாராவது பெட்டிஷன் போடுங்கப்பா...திறந்திருவோம்...

Madras said...

This all go to Government. Money should be used to feed poor and educate them.

No use if this sit in the cage in the name of god.

P.S: the validating officer might have looted few kg's of gold

VG said...

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது......

VG said...

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது......

skm said...

@Madras

There is an adage in Tamil ‘Kovil soththu kula naasam”.

First of all anyone toying with the idea of using this wealth to be distributed to people, must know what happens to
(1) the ones who think so,
(2) who really do so and
(3) who finally enjoy that.

The one who loots or steals and uses the wealth of the Temple will have his lineage terminated within 3 generations.
He will lose his wealth in this birth itself and will be born in ‘paamara yoga’ – in utter destitution.
Look at the way Karunanidhi’s family is running around to do propitiations. Would that help?

How much of public money and even temple money they would have enjoyed illegally?
In this age of Kali, the re-actionary karma would be manifest within one’s life time.

All the 3 category people (mentioned above) who get involved in using that wealth would be born with chronic ulcer of the stomach, chronic breathing and lung problems and incurable skin diseases in their next birth.

The male lineage will stop after 3 generations and those born after the 3rd generation will be born with defective organelle system.

- excerpt from http://jayasreesaranathan.blogspot.com

Guru Prasath said...

@Sureshkumar: An suitable photo for your message. http://www.humanistassociation.org/wp-content/uploads/2010/10/imageK-R2.jpg

R Sathyamurthy said...

திருவனந்தபுரம் கோவில் சொத்து பற்றி அடியேனின் நச் பதிவு http://www.Sathyamurthy.com ல் படிக்கலாம்

ராமுடு said...

This should be kept as monument. May be we can construct a museum inside temple and the revenue from museum can be used for temple activity. This should not be given to the Temple authority OR to the state Govt OR Central Govt. But congress won't leave as it is..

ConverZ stupidity said...

//இந்த கோவில் தமிழ் நாட்டில் இருந்தால், கோபாலபுரம் அல்லது சி.ஐ.டி காலனி வழியாக மொட்ரோ ரெயில் சுரங்கப்பாதை தோண்ட ஆரம்பித்திருப்பார்கள்.//

கரீட்டு தோஸ்து

ஸ்ரீராம். said...

அன்னியப் படைஎடுப்பிலிருந்து தப்பியாச்சு...இப்போது அரசாங்கப் படையெடுப்பை எப்படி சமாளிப்பது...!

மஞ்சள் கமெண்ட் மஞ்சள் கமெண்ட்தான் !

kggouthaman said...

யதிராஜ்! வாங்க, வாங்க - ரொம்ப நாளைக்கப்புறம் எழுதியிருக்கீங்க. லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்துருக்கீங்க. கடைசி பாரா மிகவும் அருமை.

சீனு said...

தமிழ் நாட்டுல இருந்திருந்தா 'திருடனுங்க' காலி பன்னியிருப்பானுங்க...

பத்மநாபன் said...

இங்க இருந்திருந்தா சாமியை எல்லாம் மிஞ்ச விட்ருப்போமா என்கிறார் ஒரு கழக கண்மணி...

ரசிகன் said...

குரங்கு கையில் கிடைத்த பூமாலை தான்!

Kannan.S said...

//This all go to Government. Money should be used to feed poor and educate them.

No use if this sit in the cage in the name of god. //


The government is already collecting money for poor and education in the form of TAX & EDUCATIONAL CESS...

Still, we have poverty in India... :(//P.S: the validating officer might have looted few kg's of gold//

If you are a validating officer, how much will you loot ??

Answer please..

good said...

மாணமிகு வீரமணி யின் அறிக்கையை படித்தீர்களா

Chandramouli said...

There was an interesting discussion in Win TV on the temple treasure. SV Sekar, Dr Hande and Jayaraman all supported that the treasure should be handled by the Trustees of the temple in whatever manner they deem fit - like in Thirupathi, for temple activities and also public welfare.

R.Gopi said...

//இந்த கோவில் தமிழ் நாட்டில் இருந்தால், கோபாலபுரம் அல்லது சி.ஐ.டி காலனி வழியாக மொட்ரோ ரெயில் சுரங்கப்பாதை தோண்ட ஆரம்பித்திருப்பார்கள். //

யாருக்கு தெரியும்... இப்போ கூட கோபாலபுரத்து க்ரூப்ல யாராவது அங்க இருந்து தோண்ட ஆரம்பிச்சு இருப்பாங்க...

aramasami7@gmail.com said...

what about meivalisali

ramasami said...

whatabout ourmeyvalissali

Rajan said...

அப்படியே போயஸ் கார்டனுக்கு ஒரு மோனோ ரயில் டிராக்.....

Anonymous said...

ஏதாவது இத்தாலிக் கம்பேனி கோயிலுக்கு "செக்கூரிட்டி" குடுக்குறோம், கோயில மராமத்துப் பண்ணுறோம்னு வந்து கூடாரம் போடாம இருக்கோணும். சுரங்கப் பாதை, மோனோ ரயில்னு இல்லாம டைரக்ட்டா ஃளைட் சர்வீஸ் விட்டுருவானுவ.

Shri Hari said...

அறிவு கெட்ட தனமான ஒரு தலைப்பு, ஊழல் வியாதியை கடவுளுடன் ஒப்பிட்டு எழுதியதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.

தவிர, ஒரு பழமொழி உண்டு, எய்தவனை விடுத்து அம்பை நொந்து என்ன பயன் என்று.

எய்தவன் / எய்தவள் ஜன்பாத்திலும், கோபாலபுரத்திலும் இருக்கும் பொழுது ராசாவை மட்டும் திட்டுவது எந்த விதத்தில் நியாயம்.

Roaming Raman said...

///மிகவும் வேடிக்கையாக, காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி, கோவிலில் கிடைத்துள்ள பொக்கிஷங்கள் அனைத்துமே கறுப்புப் பணம், அவையனைத்தும் அரசாங்கத்தைச் சேரும்//
காங்கிரஸ் கும்பலைப் பொருத்தவரை, அரசாங்கம் என்பது டெல்லி தி.ம.ராணி மற்றும் காங்கிரஸ் & கூட்டணி அமைச்சர்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
(பாத்தீங்களா? காங்கிரஸ் பத்தி எழுதினாலே "எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று ஆட்டோமேட்டிக்காக வருகிறது!)
--ரோமிங் ராமன்

Roaming Raman said...

///மிகவும் வேடிக்கையாக, காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி, கோவிலில் கிடைத்துள்ள பொக்கிஷங்கள் அனைத்துமே கறுப்புப் பணம், அவையனைத்தும் அரசாங்கத்தைச் சேரும்//
காங்கிரஸ் கும்பலைப் பொருத்தவரை, அரசாங்கம் என்பது டெல்லி தி.ம.ராணி மற்றும் காங்கிரஸ் & கூட்டணி அமைச்சர்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
(பாத்தீங்களா? காங்கிரஸ் பத்தி எழுதினாலே "எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று ஆட்டோமேட்டிக்காக வருகிறது!)
--ரோமிங் ராமன்

Anonymous said...

நம்மை சுரண்டிவர்களான வெள்ளையர்கள் 100 பேர் கொண்ட குழு போட்டு யோசிப்பானுங்கன்னு நினைக்கின்றேன்!!

"ஒரு வட போச்சே"!!

Suresh Ramasamy said...

Yellow comment super!!

Anonymous said...

Title of the article is hurting. Plese dont compare THE GREAT LORD and andimuthu rasa even in the tiltle. Nextly dont underrate yourself by bringing the likes of Manish tiwari,abishek singhvi etc in the matter. Their arguments do not dseve even to be quoted as they are mental cases working for their Italy madam for the daily crumbs thrown at them. They are paid rabid barkers .

ConverZ stupidity said...

// good said...
மாணமிகு வீரமணி யின் அறிக்கையை படித்தீர்களா//

மானம்கெட்ட தனமா இருந்துச்சு..

சுழியம் said...

இந்த விலையுயர்ந்த காணிக்கைகளை ஒளித்து வைக்கக் காரணம் “திப்பு சுல்தான்” எனும் மத வெறியன்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுவது “திப்பு சுல்தான்” ஒன்றும் மதசகிப்புத் தன்மை உள்ள அரசன் இல்லை எனும் உண்மை.

ஆனால், அவன் பெயரைச் சொன்னால் உதைப்பார்கள் என்று பயந்து போய் மாலிக் காபூர் என்று தமிழ்ச் சேனல்களில் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மலப்புழுக்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

Jagadeesan R said...

//How much of public money and even temple money they would have enjoyed illegally?
In this age of Kali, the re-actionary karma would be manifest within one’s life time.//

Exactly!

BalHanuman said...

@good
>>மாணமிகு வீரமணி யின் அறிக்கையை படித்தீர்களா ?

On a related note,
டோண்டு ராகவன் கேள்வி பதில்....

நெத்தியடியாக கேள்வி கேட்பதில் வீரமணியை மிஞ்ச யாராலும் முடியாது. சமீபத்தில்
அவர் ஒரு கேள்வி கேட்டார் விடுதலை பத்திரிக்கையில். "திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் பாதாள அறைகளில் கோடி கோடியாக தங்கமும் ரத்தினங்களும் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டுமாம்! பணவீக்கத்தை சரி செய்ய அரசு பயன்படுத்திக் கொள்ளுமா?" இவ்வளவு வக்கணையாகக் கேள்வி கேட்கும் இவர் பெரியார் டிரஸ்ட் பெயரால் அனுபவிக்கும் ஆயிரம் கோடி ரூபாய் சொத்திலிருந்து இது வரை ஒரு பைசா கொடுத்து இருக்கிறாரா அரசுக்குப் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த? நிறைய சாதாரண அமெரிக்க குடிமக்கள் அரசின் வெளி நாடு கடன் சுமை குறைக்க தாமாகவே நன்கொடை அளிக்கின்றனராமே?

பதில்: பத்மநாதசாமி கோவில் அறைகளில் அரசர்கள் அக்காலகட்டங்களில் பல நோக்கங்களுக்காக சேமித்திருக்கலாம். ஆனால் இப்போது அவை கோவில் சொத்துகள். அவற்றை முறையாக கணக்குபடுத்தி இந்து கோவில்களுக்காக (பல இந்து கோவில்களின் சொத்துகளை தீயவர்கள் கையகப்படுத்தியதால் பூஜைகள் கூட சரிவர நடப்பதில்லை) செலவழிப்பதுதான் முறை.

மற்றப்படி வீரமணி கனவிலும் செய்யத் துணியாத காரியங்களையெல்லாம் அவரிடமிருந்து எதிர்பார்ப்பது வீண்.

Kumbudren Saami said...

கட்டுரை அருமை

இன்று இரவு சன் தொலைகாட்சியில் 10.30 மணிக்கு நிஜம் நிகழ்ச்சியில்
"ஸ்ரீ ரங்கம் புடையல்"

மீடீயாவிற்கு நல்ல தீனி. . .

====================================
நண்பர்களே
விணோதமான ஒரு கட்சி நம் தமிழ் நாட்டில் உருவாகி உள்ளது
அது என்னவென்று நீங்களே பாருங்கள்

Kumbudren Saami said...

http://cutting-boy.blogspot.com/2011/07/blog-post_1411.html

கட்டாயம் இதை பார்க்கவும்

Anonymous said...

Please do not connect God with andimuthu raja , he is a criminal . and do not deserve any connection to this ..

Jayadev Das said...

\\கறுப்புப் பணமாம். இது அவர்கள் கையில் கிடைத்தால் என்னவாகுமென்று சொல்லியா தெரிய வேண்டும்?\\ அது நிஜமாவே கறுப்புப் பணமா மாறி சுவிஸ் வங்கிக்குப் போய் விடும். ஹா...ஹா..ஹா...

\\பெரியார் விட்டுச் சென்ற இவர் வசமுள்ள சொத்துக்களைக் கூடத்தான் தர்மத்திற்குச் செலவழிக்கலாம். ஆனால் இவரோ தனது மகனை அதற்கு வாரிசாகப் போட்டுள்ளார். இதெல்லாம் அவரிடம் யார் கேட்பது?\\ ஹா.....ஹா....ஹா.... ஊருக்குத்தான் உபதேசம்.

\\இந்த கோவில் தமிழ் நாட்டில் இருந்தால், கோபாலபுரம் அல்லது சி.ஐ.டி காலனி வழியாக மொட்ரோ ரெயில் சுரங்கப்பாதை தோண்ட ஆரம்பித்திருப்பார்கள்.\\ நச்!!

Anonymous said...

Title is in bad taste.

Tiruvaazhi said...

rm veerappan kondu ponathai innamum gyaabagam vaithu ezhuthiamaikku nandri.migavum vilaimathikka mudiaatha maragatha attigai,sivappu vairangalaal aana kaathukaapu pontra ariya vagaigalai duplicate seitha rm veerappan seithi intralavum ninaivil ullathaa???

Subramanian said...

உழுதவன் கஞ்சிக்கு நிற்க.. நாட்டின் செல்வங்களையெல்லாம் வைரமாகவும்,நகைகளாகவும் சேர்த்து வைத்து அதையும் பாதாளத்தில் வைத்து பூட்டி வைத்து,கடவுளின் பெயரால் மக்களை மடையர்களாக்கிய மார்த்தாண்ட மன்னனுக்கும்,சுவிஸ் வங்கியில் பணம் சேர்க்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் எந்த வித்யாசமுமில்லை...

Shri Hari said...

சுப்ரமணி ஏன் இவ்வாறு அறிவ்ய் கெட்ட தனமாக பேசுகிறீகள். இவை அனைத்தும் பல மன்னர்கள் மற்றும் மக்களால் கோயிலுக்கு வழங்கப்பட்டது. இதை கொள்ளை அடிக்க வேண்டும் என்றால் கோயிலிலா பூட்டி வைத்து இருப்பார்கள். உங்கள் அறீவை பார்க்கும் பொழுது நீங்கள் இங்கு இருக்க வேண்டிய மனிதரே இல்லை.

Anonymous said...

இதே மாதிரி புதையல் கிறிஸ்துவ அல்லது இஸ்லாமிய கோவில்களில் இருந்து கண்டுபிடித்தால் நாட்டுக்கு சொந்தம் என்று சொல்வார்களா ?
மக்களுகாக செலவு செய்ய அனுமதிபர்களா??