பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 09, 2011

அவசரக் கூட்டமும், நிதானமான காங்கிரஸும்

10.06.2011 அன்று மாலை 4.30 மணி அளவில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் அண்ணா அறிவாலயம், முரசொலை மாறன் வளாகத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறும். உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

- நன்றி முரசொலி


இது முரசொலியில் வந்த அறிவிப்பு. தொடர்ந்து கனிமொழி ஜாமீன் மனு ஆடி தள்ளுபடி மாதிரி எல்லாம் நீதிமன்றங்களிலும் தள்ளுபடி செய்யப்படுகிறது. அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுக்க போகிறார். நிச்சயம் அதை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்யும் என்று எதிர்ப்பார்கலாம்.

கலைஞர் ஏற்கனவே 'கூடா நட்பு', 'கனிமொழி கைதுக்கு மத்திய அரசு தான் காரணம்' என்று வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார். அ.ராசாவுக்கு தான் மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்றி நீரா ராடியாவிடம் கனிமொழி பேசியதற்கும் மத்திய அரசுக்கு கூட சம்பந்தம் இல்லை என்று கலைஞர் மறந்துவிட்டார்.

கலைஞர் செய்ய கூடியது இது தான் - காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுவது அல்லது மத்திய அமைச்சர்களை வாபஸ் பெற்று வெளியிலிருந்து ஆதரவு தருவது. இதில் எந்த முடிவு என்றாலும் காங்கிரஸுக்கு நல்லது தான். இரண்டுமே என்றால் இன்னும் நல்லது. கொஞ்ச நாளாவது நிம்மதியாக இருக்கலாம். இவர்கள் கூட்டும் கூட்டத்தை காங்கிரஸும் சரி மீடியாவும் சரி அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. தேர்தல் முடிந்து 'சாக்கடையின் துர்நாற்றம் இப்போது வீசுகிறது,அடுத்து சந்தனம் மணக்கும்' என்று கலைஞர் அறிக்கை விட ஆரம்பித்துவிட்டார்.

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவார் என்பது போல லேட்டஸ்டாக சிக்கியுள்ளார் தயாநிதி மாறன். சிவசங்கரன் வாக்குமூலம், தனது வீட்டில் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தயாநிதி மாறன் பயன்படுத்தினார் என்ற சிபிஐ குற்றச்சாட்டும் அவருக்கு எதிராக அமைந்துள்ளது. கலைஞர் தயாநிதி மாறனுக்கு வந்துள்ள பிரச்சினை அவரே சந்திப்பார் என்று ஜகா வாங்கியுள்ளார். டெல்லியில் திஹார் சென்றால் போய் பார்க்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

இது எல்லாம் கூட காமெடி இல்லை ஆனால் அன்னா, ராம்தேவ் உண்ணாவிருதம் பற்றி ஒரு அறிக்கை விட்டுள்ளார் கலைஞர் அது தான் டாப் - "லோக்பால், லோக் அயுக்த், ஊழல் எதிர்ப்பு, உண்ணாவிரதம் என்றெல்லாம் பேசுப்படுகின்ற இந்த நேரத்தில் திமுக அரசு 1973-ஆம் ஆண்டே இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என்பதை உலகிற்கு நினைவூட்ட விரும்புகிறேன்" என்கிறார்


லோக்பால் என்பதை ஆவின் பால் என்று நினைத்து பேசியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.


13 Comments:

Suresh said...

நாளைக்கு தலைவர் விஆர்எஸ் வாங்கிக்கப் போகிறார். ஸ்டாலின் தலைவர் ஆவார். காங்கிரஸ் கூட்டணி தொடரலாம். ஆனா அழகிரி இந்த மீட்டிங்க்கு வருவாரா?

Anonymous said...

//லோக்பால், லோக் அயுக்த், ஊழல் எதிர்ப்பு, உண்ணாவிரதம் என்றெல்லாம் பேசுப்படுகின்ற இந்த நேரத்தில் திமுக அரசு 1973-ஆம் ஆண்டே இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என்பதை உலகிற்கு நினைவூட்ட விரும்புகிறேன்"//

அப்புறம் எப்படி சர்க்காரியாவில் ஆரம்பித்து இத்தனை ஊழல்களைச் செய்ய முடிந்தது. இந்தச் சட்டமெல்லாம் சும்மா பம்மாத்து என்பதை அவரே பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார்.ஆக இது போன்ற சட்டத்திற்கும் ஊழல்களுக்கும் சம்பந்தமில்லை என்கிறார்.

வாழ்க ஜனநாய்கம்

Sathish Kumar said...

மஞ்ச கமெண்ட் சூப்பர் !!!

Anonymous said...

////லோக்பால் என்பதை ஆவின் பால் என்று நினைத்து பேசியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.////

இருக்கும். இருக்கும். வயசான மனுஷர் இல்லையா பாவம். ஆனா அவருக்கு “பசு, பாப்பான்”ன்னாலே பிடிக்காதே. ஒரு வேளை ’சைபால்’ன்னு நினைச்சிருப்பாரோ என்னமோ...

என்னமோ ஏதோ.. விடுங்க. நாளைக்குத் தெரிஞ்சிடும் எல்லாம். மூக்கைப் பொத்திக்கிட்டு, காதைத் திறந்து வச்சுக்கோங்க எல்லோரும். சில ரகசியங்கள் அம்பலமாகப் போவுதாம்.

பத்மநாபன் said...

முதல் அரசு பால் விளம்பரம் என விட்டு விட்டேன் .. கடைசியில் மஞ்ச கமெண்ட்டை பார்த்தவுடன் தான் வெடிச் சிரிப்போடு படம் புரிந்தது...

Shri Hari said...

கருணாநிதியின் இந்த நிலையை பார்க்கும் பொழுது எனக்கு ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது.

“குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது”

கூடிய விரைவில் இதே போன்ற அர்த்தம் உள்ள பாடலை இத்தாலிய மொழியில் சோனியா ஆண்டனா மானியோ பாடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அந்த நாளுக்காக ஆவலுடன் எதிர் பார்க்கும் ஒரு சராரரி தமிழன்.

M.SANKAR said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Mr.Sankar's comment is not in good tast for the standad of Idly Vadai; I hope the same would be removed soon

SUPPAMANI

Anonymous said...

Iyyo Pavam , Vadai Poche

Anonymous said...

கூடா நட்பு:
ராஜா- ராடியா
கனி - ராடியா
கனி - ராஜா
ராஜாத்தி - டாடா
ராஜா - பால்வா

BalHanuman said...

மஞ்ச கமெண்ட் சூப்பர்... பேஷ்! பேஷ்!! ரொம்ப நல்லா இருக்கு...

kothandapani said...

எத்தினி வாட்டி அடிச்சாலும் DMK சிரிச்சினே இருக்கே எப்படி--- வடிவேலு சகவாசமா. எப்படி இருந்த DMK இப்படி ஆயிடுச்சே ......

venkat said...

Vadivelu's presence has created the same syndrome to DMK... For any matter, KK refers to his own history only he can quote and No one else in his own party remembers such incidents. Basically, the current DMK leaders can't survive without a post...Can any one get the info out on how many days in the last 1 year, these central DMK ministers attend Delhi offices? If we dig, the fraud in current regime, one can arrest immediately these ministers based on recent activties.