பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 30, 2011

காளகஸ்திக்கு போன குடும்பம்

நேற்று கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு காளகஸ்தி கோவிலில் ராகு-கேது தோஷ சர்ப்ப நிவாரண பூஜை நடத்த கருணாநிதி மகள் செல்வி முடிவு செய்தார். இதன்படி அவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார்.

முதலில் கருணாநிதி குடும்பத்தினர் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அங்கு வி.ஐ.பி. வரிசையில் சென்று ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காளகஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சென்றதும் செல்வி உள்ளிட்ட அனைவரும் மிருத்யுஞ்ஜெயலிங்கம் முன்பு அமர்ந்தனர்.


கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பெயர்களில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்தினர். இந்த தோஷ நிவாரண பூஜை முடிந்ததும் அவர்கள் கோவிலுக்குள் சென்று கருவறையில் உள்ள வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசுனாம்பிகா தாயாருக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி பெயர்களில் சிறப்பு பூஜை, அர்ச்சனை செய்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அதன்பிறகு அவர்கள் மிருத்யுஞ்ஜெயலியங்கம் அருகே சென்று வேத பண்டிதர்களிடம் சிறப்பு ஆசி பெற்றனர்.

காளகஸ்தி கோவிலில் கருணாநிதி குடும்பத்தினர் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்துவதை அறிந்ததும் பத்திரிகை புகைப்பட நிபுணர்கள் மற்றும் தனியார் டி.வி. வீடியோகிராபர்கள் அங்கு மின்னல் வேகத்தில் வந்தனர். தோஷ நிவாரண பூஜை நடத்திய செல்வி மற்றும் உறவினர்களை பத்திரிகை புகைப்பட நிபுணர்கள் படம் பிடித்தனர்.

அப்போது செல்வி புடவையால் முகத்தை மூடிக் கொண்டார். அவருடன் வந்தவர்கள் புகைப்பட நிபுணர்கள் போட்டோ- வீடியோ எடுக்ககூடாது என்று எச்சரித்தனர். ஆனால் அதையும் மீறி போட்டோ எடுத்தனர். இதனால் புகைப்பட நிபுணர்களுக்கும் கருணாநிதி குடும்பத்தினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையறிந்ததும் வேத பண்டிதர்கள் அங்கு ஓடிச் சென்று இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழி பெயர்களில் அவர்களது குடும்பத்தினர் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூன்று டவுட் :
1. தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டதா ?
2. அ.ராசாவுக்கும், தயாநிதி மாறனுக்கு ஏன் அர்ச்சனை செய்யவில்லை ?
3. பெரியார் என்ன தேடுகிறார் ?


53 Comments:

Suresh Kumar said...

//அ.ராசாவுக்கும், தயாநிதி மாறனுக்கு ஏன் அர்ச்சனை செய்யவில்லை ?

அதான் தினமும் கழக குடும்பம் வீட்டுல இவங்க ரெண்டு பேருக்கும் அர்ச்சனை நடக்குதே...இதை காளகஸ்தி போய் வேற பண்ணனுமா என்ன?

சீனு said...

3. பகுத்தறிவு.

Anonymous said...

மூன்று டவுட் :
//1. தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டதா ?//

ஆந்திராவுல, தமிழுக்கு என்ன வேலை ?

//2. அ.ராசாவுக்கும், தயாநிதி மாறனுக்கு ஏன் அர்ச்சனை செய்யவில்லை ?//

அவங்க ரெண்டு பேருக்கும் திரும்பத் திரும்ப தலைவரே அர்ச்சனை செய்திட்டு இருக்காரு ('அர்ச்சனைக்கு' பூஜை சம்பந்தம் இல்லாத அர்த்தமும் உண்டு)

//3. பெரியார் என்ன தேடுகிறார் ? //

அவரு வாழ்க்கையில நெறைய தப்பு செஞ்சிட்டாராம்....
அதற்கு பரிகாரம் தேடுறாரு..

இரா. சத்தியமூர்த்தி said...

ஹலோ பெரியார் என்ன சொன்னார்? பாம்பையும் பாப்பானையும் பார்த்தா முதல்ல பாப்பான அடி என்று சொன்னார். அதனால்தான் கலைஞர் ராகு கேது கோவிலுக்கு குடும்பத்த அனுப்பினார். அங்கதான பாம்பையும், பாப்பானையும் பக்கத்து பக்கத்துல பார்க்க முடியும்?

நன்றி!

மஞ்சளில்லாத கமெண்ட்:

“நாடகம் விடும் நேரந்தான் உச்ச காட்சி நடக்குதம்மா, வேஷம் கலைக்கவும் "ஓய்வு” எடுக்கவும் வேளை நெருங்குதம்மா”

பத்மநாபன் said...

திருந்த விட மாட்டிங்களே.....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

1. தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டதா ?
- உக்கும்! ஏவண்டி! இது நூக்கே பாக உன்னாவா?

தமிழ் பேசும் திருநள்ளாறு கோயில்-ல்லயே ரா.அம்மாள் சனீஸ்வர மந்திரம் சொன்னவங்க!:) ஸ்டேட் விட்டு ஸ்டேட் போயா தமிழ் அர்ச்சனை செய்யப் போறாங்க? விட்டா ஓட்டல் பீமாஸ்-ல்ல "இட்லிவடை" சாப்பிட்டாங்களா?-ன்னு கேப்பீங்க போல!:)

2. அ.ராசாவுக்கும், தயாநிதி மாறனுக்கு ஏன் அர்ச்சனை செய்யவில்லை ?
- பத்த வச்சிட்டியே பரட்டை! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

3. பெரியார் என்ன தேடுகிறார் ?

- பெரியாரின் தேடல் இந்தக் குடும்பத்தையும் தாண்டிய விரிந்த தேடல்! தயவு செய்து அதை நகைப்புக்கு உட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!

Unknown said...

கருணாநிதி குடும்பம் கோவிலுக்கு போகலைனாலும் தப்பு. கோவிலுக்கு போனாலும் தப்பா. இட்லி தீர்ப்ப மாத்தி சொல்லு

Erode Nagaraj... said...

கண நேர காட்சிப் பிழையில் காள-குஸ்தி என்று படித்தேன். :>

Surya said...

தலைவரோட குடும்பம் என்ன செஞ்சாலும் இப்படி மானாவாரியா திட்டுறீங்க. உங்களுக்கு இரக்கமே கிடையாதா? இப்படி எல்லாம் தலைவர் குடும்பமே போய் "பூஜை" செய்யறதெல்லாம் பார்ப்பனர்களால் வந்த வினை. வேற காரணம் ஒண்ணும் இல்லை. பாத்துக்கிட்டே இருங்க, முரசொலியில விலாவாரியா ஒரு கட்டுரை வரும்...எப்படி தலைவர் அந்த நாள்ளயே பெரியார் கை விரலிப் பற்றிக்கொண்டு பகுத்தறிவுப் பாதையில் நடந்தார்.... எப்படி "அவாள்" எல்லாரும் சேந்து அவரை ஒழிக்க சதி செய்கிறார்கள்...இட்லி வடை தள நிர்வாகிகளின் பூர்வீக குலம் கோத்திரம் என்ன...
இது எல்லாம் தேவையா உங்களுக்கு?

பாரதசாரி said...

இங்க கருணாநிதி கருணாநிதின்னு ஒரு மானஸ்தன தேடறார் பெரியார்

sathish (bengaluru) said...

1. தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டதா ?

சுப்பர் கமெண்ட்

Anonymous said...

1. தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டதா ?

தமிழ்தான் காட்டுமிராண்டி மொழியாச்சே, அதுல போயி அர்ச்சனை பண்ணுவாங்களா?

2. அ.ராசாவுக்கும், தயாநிதி மாறனுக்கு ஏன் அர்ச்சனை செய்யவில்லை ?

தயாநிதிக்குதான் வேண்டிய அளவுக்கு வண்டை வண்டையா கவிதாயினி அம்மா அர்ச்சனை பண்ணியிருப்பாங்களே, நாம வேற எதுக்குத் தனியாப் பண்ணனும்னு லூஸ்ல விட்டிருக்கலாம்.

3. பெரியார் என்ன தேடுகிறார் ?

ஒரு வேளை வெங்காயம் என்ன விலைன்னு மளிகைக் கடை லிஸ்ட்டுல தேடுறாரோ?

இ வ ரசிகன்

pongalvadai said...

உங்கள் டவுட்டுக்கு விடை
1. தமிழ்நாட்டு பார்டர் தாண்டினாலே திராவிட கொள்கைகள் எல்லாம் அம்பேல்தான்.
2. ஊழல்வாதியான ராஜா கண்டிப்பாக தண்டனை அனுபவிக்கவேண்டும் . நேர்மை சிகரங்களன கருணாநிதி ஸ்டாலின் தயாநிதி காப்பாற்ரபடவே
பிரார்த்தனை (கனிமொழிக்கு பிரார்த்தனை என்பதெல்லாம் டுப்பு)
3. வேறு என்ன .. கருணாநிதி குடும்பத்தில் அடுத்தது யார் திஹருக்கு போக போவது என்று .தான்

SUBBU said...

3.Thiraavidam

BalHanuman said...

மஞ்ச கமன்ட் வழக்கம் போல் சூப்பர்....

>>அ.ராசாவுக்கும், தயாநிதி மாறனுக்கு ஏன் அர்ச்சனை செய்யவில்லை ?
அ. ராசா கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவரா என்ன ?

>>பெரியார் என்ன தேடுகிறார் ?
கருணாநிதி என்ற ஒரு மானஸ்தனைத் தான். வேறு யாரை ?

Kannan said...

சில விஷயங்கள்.

1 . மு.க.விற்கு பூஜைகள் தேவை இல்லை. (திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, சிதம்பரம் தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி.)
2 . கனிமொழிக்கு பூஜைகள் தேவை இல்லை. என்ன பூஜை செய்தாலும், எதுவும் நடக்க போவதில்லை. மு.க. பூஜை தவிர்த்து.

Anonymous said...

என்னது.. விஷ பாம்புக்கே சர்ப்ப தோஷமா?

Anonymous said...

மஞ்சத் துண்டு ஊரைத் திருத்தி விட்டு குடும்பத்தை திருத்துவார்.காளஹஸ்தி என்ன தமிழ் நாட்டில் இருக்கிறதா,ஆணையிட்டால் தமிழில் மஞ்ச துண்டு புராணம் படிக்க.

கிரி said...

நான்கு பக்கமும் பிரச்சனை வந்தால் நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான்.. யாரோ கூற கேட்டது

Anonymous said...

Kalakhashi is in tamil nadu gov control, not andthra. Thats why you can see very worst management there compare to thirupathi.

Kayal said...

இந்த போலிகள் செய்யரதுக்கெல்லாம் பெரியார் என்ன செய்வாரு. அவர விட்ருங்க.....பகுத்தறிவு என்கிற போர்வையில்....இவரு பண்ண எத்தனையோ விஷயத்த பாத்தாச்சு....துண்டு ஒன்னே போதும்.....
எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா??

Anonymous said...

3. Periyar enna thedugirar ?

A. Karunanidhi ennum manasthanai thedugirar... thala valiyum pall vailiyum thanakku vanthathal thaan theriyum !!!

Anonymous said...

THANAKKU VANTHAAL THLAIVALIYUM KAALVALIYUM THERIYUM

suppamani

அஞ்சா நஞ்சன் said...

பெரியார் தேடுறது இருக்கட்டும்... நாங்க உம்ம 9 நாளா தேடினோமே ..எங்கே போனீர்?

Anonymous said...

பெரியார் என்ன தேடுகிறார் ? - Ithu mattum intha post-la ok..expecting some good posts from new idly vadai - SP

Giri Ramasubramanian said...

Anonymous said...

//ஆந்திராவுல, தமிழுக்கு என்ன வேலை //

மஞ்ச்சி ஜவாபு நைனா....

VENG said...

இட்லி வடையை ரெண்டு வாரமா காணோமே என்று பெரியார் தேடுரார் போல....

Anonymous said...

சாமி கும்பிடுவதும் கும்பிடாததும் அவரவர் இஷ்டம். அப்பா நாத்திகராக இருந்தால் பெண் கோவிலுக்கு போகக் கூடாதா என்ன? இந்த தனி மனித நம்பிக்கை விஷயங்களை செய்தியாக போடுவதும் அதை விமர்சனம் செய்வதும் மனசுக்கு உகந்ததாக தெரியவில்லை.

இளங்கோ said...

சட்டசபையில் நான் பாப்பாத்தி என்று சொன்னதைவிட காளஹஸ்திக்கு இவர்கள் செறது ஒன்றும் மோசம் இல்லை

Anonymous said...

/*சட்டசபையில் நான் பாப்பாத்தி என்று சொன்னதைவிட காளஹஸ்திக்கு இவர்கள் செறது ஒன்றும் மோசம் இல்லை*/

நாத்திகனாக காட்டிக்கொண்டு மஞ்சத்துண்டு போட்டுக்கறதும், யாருக்கோ வணக்கம் சொல்றது மாதிரி பிள்ளையாரை கும்பிட்டுப் போறதும், (மூட)நம்பிக்கையினால தஞ்சாவூர் கோயிலுக்குள்ள பின்வாசல் வழியா போறதும் கண்டிப்பா ஒரு பாப்பாத்தி தன்னை பாப்பாத்தின்னு ஒத்துக்கறதவிட நெஜமாவே மட்டமானது தான்.

Anonymous said...

DMK kodutha TV-yal avargale maati-kondanar. Parayan-Karunanadhi (when he refers பார்ப்பனர், I think we can refer him as parayan) solli tha, avan ponnu poirukku temple-luku.

BalHanuman said...

இவர்கள் செய்வதையெல்லாம் செய்து விட்டு கோவில் கோவிலாகச் செல்வது கடப்பாறையை முழுங்கி விட்டு சுக்குக் கஷாயம் குடிப்பது போல் உள்ளது.

இதுதான் பகுத்தறிவுக் குடும்பத்தின் லட்சணம்.

Anonymous said...

கருணாநிதி ன்னு ஒரு மானஸ்தன் முன்னாடி தி க லே இருந்தாரே அவரு இப்போ எங்கேன்னு தேடுரரோ பெரியார்?
சொந்த குடும்பத்தையே திருத்த முடியாத மு க, பகுத்தறிவு பேசி தமிழகத திருத்த போறாரா? "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே "

பத்மநாபன் said...

சாதி வன்மத்தோட சாடும் பொழுது ஆமாம் நான் பாப்பத்திதான் அதுக்கென்ன இப்போன்னு கேட்டுச்சு அந்தம்மா..அதுக்கப்புறம் தான... சமுக நீதி கண்ட வீராங்கணை பட்டம் கொடுத்தாரு தன்மானத்தளபதி...

அதுபோல ஐயாவும் தைரியமா சொல்லவேண்டியது தானே , பகுத்தறிவு ஊட்டிவளர்த்ததெல்லாம் இப்ப பாலாபிஷேகம் பண்ணிட்டுருக்குன்னு...

அப்பாதுரை said...

கருணாநிதி பூஜை செய்தாலோ கலந்து கொண்டாலோ இத்தனை சலசலப்புக்கும் அர்த்தம் உண்டு. அவருடைய கொள்கைகளை அவர் குடும்பத்தாரும் கடைபிடிக்க வேண்டுமா என்ன?

பதிவுக்கு விஷயம் எதுவும் கிடைக்கவில்லையென்றால் கலைஞர் குடும்பம் உங்கள் கையில் பூனையானதா? :)

Anonymous said...

//சாமி கும்பிடுவதும் கும்பிடாததும் அவரவர் இஷ்டம். அப்பா நாத்திகராக இருந்தால் பெண் கோவிலுக்கு போகக் கூடாதா என்ன? //

அப்புறம் என்ன எளவுக்கு சாமி கும்புடற மத்தவனைத் திட்டணும், கட்டுரை எழுதணும்? கேவலமாப் பேசணும்? அதுவும் அவனவன் இஷ்டம் தானே! தன்னோட ---- கழுவாதவன் அடுத்தவனுக்கு என்ன -----க்கு ஆலோசனை சொல்லணும்? பேசணும். இவனுக்குக் சொம்படிக்குறாணுங்களே அவனுங்களைச் சொல்லணும். நல்லா வருது வாயில எளவு .கருமம்

Anonymous said...

//கருணாநிதி பூஜை செய்தாலோ கலந்து கொண்டாலோ இத்தனை சலசலப்புக்கும் அர்த்தம் உண்டு. அவருடைய கொள்கைகளை அவர் குடும்பத்தாரும் கடைபிடிக்க வேண்டுமா என்ன? //


அப்புறம் என்ன --------த்துக்கு சாமி கும்புடற, தீமிதிக்கிற, நெத்தில பொட்டு வச்சிக்கிற அத்தனை பேரையும் கேவலமா பேசணும்? எழுதணும்? அதுவும் அவனவன் இஷ்டம்னு போக வேண்டியது தானே?

தன் வீட்டையே திருத்த முடியாதவன் எப்படி நாட்டைத் திருத்த முடியும்? பெரியார் பேரைச் சொல்லிப் பிழைக்கும் சந்தர்ப்பவாதிகள். போலிகள்.

Matra said...

3. Periyar enna thedugiraar ?.

Ans. Engey Draavidan ?

R.Gopi said...

காளஹஸ்தி கோவில்ல ஏதாவது விலை உயர்ந்த ஐம்பொன் சிலைகள் இருக்கிறதா, இருந்தால் பத்திரம்!!

Niroo said...

3. பெரியார் என்ன தேடுகிறார் ?

ஒரு வேளை வெங்காயம் என்ன விலைன்னு மளிகைக் கடை லிஸ்ட்டுல தேடுறாரோ?

//hehehehe

Surya said...

"அப்பாதுரை said...
கருணாநிதி பூஜை செய்தாலோ கலந்து கொண்டாலோ இத்தனை சலசலப்புக்கும் அர்த்தம் உண்டு. அவருடைய கொள்கைகளை அவர் குடும்பத்தாரும் கடைபிடிக்க வேண்டுமா என்ன? "

பிரச்சினை அதுவல்ல. நிச்சயமாக தான் விரும்பும் வண்ணம் வழிபாடு செய்ய செல்விக்கு உரிமை உண்டு. இதே கருணாநிதி தான் கட்சிக்காரர் ஒருவர் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார் என்று கண்டபடி ஏசினார் முன்னொரு காலத்தில். அவருக்கு அறிவு நாணயம் இருந்தால் அதே போல செல்வி செய்வது தவறு என்று இடித்துரைக்க வேண்டும். குறைந்த பட்சம் தனக்கு செல்வி செய்வதில் உடன்பாடு இல்லை என்று அறிக்கை விட வேண்டும். ஊருக்கு ஒரு நீதி தனக்கு ஒரு நீதி என்று தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று இவர் நடத்துவதுதான் பிரச்சினை.

Anonymous said...

adhuthan pakkutharivu.oorukkuthan eppavum ubadesam. ituthan kazakam.

Anonymous said...

adhuthan pakkutharivu.oorukkuthan eppavum ubadesam. ituthan kazakam.

gopu said...

டவுட்டுக்கு பதில்-1 : லட்சர்சனை, ஏன்னா லட்சம் கோடி தாண்டிடுச்சில்ல...
டவுட்டுக்கு பதில்-2 : அடுத்த வாரம் அவங்க குடும்பம் வரும். குடும்பம் குடும்பமா கொள்ளையடிச்சாங்க.. இப்போ குடும்பமா கோயிலுக்கு போறாங்க....
டவுட்டுக்கு பதில்-3 : "பகுத்தறிவு"ன்னு ஒன்னு இருந்தது அது எங்கன்னு தேடறாரு.......

gopu said...

.

R.Gopi said...

கலைஞர் கருணாநிதி இயற்றிய கவிதைகளிலேயே தலை சிறந்த கவிதை கனிமொழிதான் - கவிஞர் வாலி

velvetri.blogspot.in said...

இட்லி வடையில் வெங்காயம் எங்கே என்று தேடுகிறார்.

பெரியாரை முடிச்சு போட இந்த குடும்பம் எதற்கு?

Vasudevan S said...

Periyar avaraiye thedikondirukkirar.

Vasudevan S said...

Periyaar avaraiye thedikkondirukkirar.

Vasudevan S said...

Periyaar avaraiye thedikkondirukkirar.

Raviyasoiniya said...

Hi all, Rationalism is different and MK is different.In spite of criticising MK all of you are criticising rationalism like MK criticising Hiduism.

Anonymous said...

Wherever they go, their sin can not be cleared. Their curses will continue several generations.You know why? They demolished Jeeva samadhis of Hindu and Muslim priests/Mahans for the sake of road widening. They should have selected alternative routes.They did not do. What is the worst move is they mentally accepted encroachment by politicians , shop owners etc.