பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 16, 2011

அந்த ...

சிங்கப்பூர் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன நடிகர் ரஜினிகாந்த்,நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார். தற்போதுதான், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "உங்களின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்' என்றார். அத்துடன் ரஜினி குணமடைந்து, விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், "நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, ஜெயலலிதாவிடம் கூறினார். வெற்றி பெற்றதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இன்னும் ஒன்றரை மாதங்களில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே சென்னையில், ரஜினிகாந்த் சிகிச்சை பெற்ற போது, முதல்வர் ஜெயலலிதா நலம் விசாரித்ததை நினைவு கூர்ந்து, லதா ரஜினிகாந்த்தும் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பழைய பஞ்ச டையலாக் - தமிழ் நாட்ட அந்த ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாது - ரஜினி

36 Comments:

Anonymous said...

பழைய பன்ச் டயலாக் போடுவது தவ்று. அன்றைய நிலயில் அது சரி.,,-கபாலி

Anonymous said...

ஒரு காலத்தில் இவரையே அரசியலுக்கு இழுத்து,CM ஆக்க பலர் முயற்சித்தனர்.
நல்ல வேளை தமிழகம் தப்பியது!

tharun said...

ஒரு நடிகனை வச்சுடு ஒரு ஆட்சியை கூட மாற்றலாம் போல் இருகே

tharun said...

ஒரு நடிகனை வச்சுடு ஒரு ஆட்சியை கூட மாற்றலாம் போல் இருகே

tharun said...

ஒரு நடிகனை வச்சுடு ஒரு ஆட்சியை கூட மாற்றலாம் போல் இருகே

Anonymous said...

ஒரு நடிகனை வச்சுடு ஒரு ஆட்சியை கூட மாற்றலாம் போல் இருகே

Gayathri said...

Rajini sir, neengaluma?!!

R.Gopi said...

//தமிழ் நாட்ட அந்த ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாது - அது நேற்றைக்கு”...

"நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' - இது இன்னிக்கு//

R.Gopi said...

//தமிழ் நாட்ட அந்த ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாது - அது நேற்றைக்கு”...

"நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' - இது இன்றைக்கு//

R.Gopi said...

//சிங்கப்பூர் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன நடிகர் ரஜினிகாந்த்//

ஆஹா.... இட்லிவடை தலைவர் எப்போ டிஸ்சார்ஜ் ஆவார், உங்க வேலைய எப்போ ஆரம்பிக்கலாம்னு இருந்தீங்களா?.... இப்போ சந்தோஷமா?

ConverZ stupidity said...

//நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, ஜெயலலிதாவிடம் கூறினார்//

சும்மா சும்மா இந்தாளு வாய குடுத்துது முதுகை புன்னாக்கிகிரதுல எக்ஸ்பெர்ட்-ன்னு நினைக்கிறேன்.

jaisankar jaganathan said...

// தமிழ் நாட்ட அந்த ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாது//

பஞ்ச் சூப்பர்

Anonymous said...

மனிதாபிமான மனிதர் வாழ்க வளமுடன்

- RAMesh

Anonymous said...

மஞ்சள் கமெண்டுக்கான மகத்துவத்தை கெடுத்து விட்டதே!
வர வர கலைஞர் பேச்சு மாதிரி வள வள கமெண்ட் ஆகிடுச்சு.

இரா. சத்தியமூர்த்தி said...

ரஜினி நடந்து முடிந்த கதை. ஜெ. தொடங்கிய பிரச்சினைக்கு வருவதே சரி!

சுபத்ரா said...

//தமிழ் நாட்ட அந்த ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாது//

:)))))))))

இரா சத்தியமூர்த்தி said...

இது புதுசு!

”எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்... உடம்பை பாத்துக்கங்க! - கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி”

எல்லா பக்கமும் ஃபோன் செய்யராரப்பா, இவரு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவவரு”

ம.க.: குசேலனை நம்பி அரசனை கைவிட வேண்டாம்.

Sathish Kumar said...

Idly Vadai comments----oru thadava comment potta pala thadava comment potta madhiri :)

Thanga mudiyala

Anonymous said...

மடியில் கனமிருந்தால் வழியில் பயம் தானே! இவரைப் போன்றவர்களெல்லாம் தன் நிலையில் மாறுவதே இல்லை - நேற்றும் இன்றும் ஆள்பவரே நண்பர்! இருங்க, வடிவேலுவும் வருவார்! - ஜெ.

R. Jagannathan said...

மடியில் கனமிருந்தால் வழியில் பயம் தானே! இவரைப் போன்றவர்களெல்லாம் தன் நிலையில் மாறுவதே இல்லை - நேற்றும் இன்றும் ஆள்பவரே நண்பர்! இருங்க, வடிவேலுவும் வருவார்! - ஜெ.

R. Jagannathan said...

Read this also -

" DMK sources say the actor consoled the former Chief Minister about his electoral losses. "You've seen many ups and downs. Don't worry about anything. Take care of your health," Rajinikanth is reported to have said. " - R.J.


Read more at: http://www.ndtv.com/article/india/now-rajinikanth-calls-karunanidhi-to-say-dont-worry-112653?cp

Anonymous said...

Kaa kaaa kaaa kaaa...O sorry rajini aaa...

avinash said...

இது ரஜினி சொன்னதாக ஜெ. வெளியிட்டிருக்கும் அறிக்கையா? அல்லது ரஜினி தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையா?

Anonymous said...

அம்மா ஆட்சியில் முப்பது நாட்கள்.

1. தினம் பத்து தாலி அறுப்பு(திருட்டு)
2. தினம் திருட்டு(விதவிதமாக)
3. நாக்கை அறுத்தல் நாலாயிரம் ரூபாய்
4. சுண்டு விரலை வெட்டினால் ஆயிரம் ரூபாய்
5. தினமும் பத்து தனியார் மற்றும் அரசு பஸ் குட்டிக் கரணம்
6. பள்ளி உண்டு ஆனால் புத்தகம் மற்றும் பாடம் கிடையாது.
7. வீடு உண்டு ஆனால் இப்போது கிடையாது.
8. தேர்தலில் வெல்ல வீம்புக்கு ஆயிரம் இலவச அறிவிப்பு.
ஆடு, மாடு, கோழி,மிச்சி கிரைண்டர் காத்தாடி.
9. இப்போது மத்திய அரசிடம் பல ஆயிரம் கோடிக்கு பிச்சை எடுப்பு.
10. மேட்டூர் ஆணை திறப்பு அந்நாள் தண்ணீர் வராது.
11. 200 கோடி ரூபாய்க்கு புத்தகங்களை எரித்து விட்டு 400 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் அச்சடிப்பு.

12. மக்கள் பணம் பாழ்.

13.மின்சார உற்பத்தி எவ்வளவு அதிகரிப்பு?

14.மத்திய மின் நிலையங்கள் உற்பத்தி தொடங்க தாமதம் அதனால் மின்சாரம் பற்றாகுறை . ஜெயா ஒப்புதல் வாக்கு மூலம்.ஜெயா ஆரம்பித்த( ????????) திட்டங்கள் எங்கே போயின ?அவர் ஒதுக்கிய (??????) பணம் எங்கே?

இதை முன்னமே சொன்ன
குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும்.

இலவசங்களை எதிர்த்த பத்திரிக்கை மற்றும் மீடியாக்கள் எங்கே?

Anonymous said...

He didnt have guts to say this when MK was ruling. Thank god he didnt enter in to politics. He can only talk punch(er) dialog in movies but in real life he is a coward and selfish fellow.

Ananth said...

/*ஒரு நடிகனை வச்சுடு ஒரு ஆட்சியை கூட மாற்றலாம் போல் இருகே*/

அது சரி அதுக்கு ஏன்பா நீ இவ்வளவு தடவ கமெண்ட் போடற?? ;-)

Ananth said...

/*நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது'*/

எனக்கு என்னமோ தலைவர் இத சொல்லலன்னு தோணுது.

கிருபாநந்தினி said...

ரஜினியின் பழைய பஞ்ச் டயலாகைப் போட்டு அவரைக் கவுத்திட்டதா கனவு காணாதீங்க. வேற வழியில்லாம, ஏதோ ஒரு நம்பிக்கையில, ஒருத்தர் கிட்டேர்ந்து தப்பிக்கலாம்னு இன்னொருத்தருக்கு மாத்தி மாத்தி ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்கிற தமிழக ஜனங்க பாவம், பஞ்ச் டயலாக் அடிக்கலே! அதைத்தான் ரஜினி சார் பிரதிபலிச்சிருக்காரு. இட்லி சரியா வேகலீங்ணா!

Anonymous said...

Apparently, after talking to the present chief minister, Rajini telephoned the former Tamil Nadu CM Karunanidhi and asked him to take care of his health.

"You've seen many ups and downs. Don't worry about anything. Take care of your health," the South superstar reportedly said to Karunanidhi over phone.


Ithuku enna sollaringa?

குரோம்பேட்டைக் குறும்பன் said...

ரஜினி எனக்குக் கூட ஃபோன் செய்து, நான் வோட்டுப் போடாததால், தமிழக மக்கள் காப்பாற்றப் பட்டனர் என்றும், அதற்கு நன்றி என்றும் கூறினார்!

Bala Oru Kanini Engineer said...

<> the original dialogue is ஜெயலலிதா ஆட்சிக்கு மறுபடியும் வந்தால் தமிழ் நாட்ட அந்த ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாது

Anonymous said...

//சும்மா சும்மா இந்தாளு வாய குடுத்துது முதுகை புன்னாக்கிகிரதுல எக்ஸ்பெர்ட்-ன்னு நினைக்கிறேன்.//

Rajini's salary - 24 Crores

IV reader's avg salary < 1,00,000

I am sure Rajini will care abt IV comments.

Poi pullakuttiya padikka vaingada!

Anonymous said...

anne idly jaya aniku ketavanga than
ini nalavangala nadathukanumnu apdi solrathu thapa? ela jaya thirunthavey kudathunu solrengala
elutha onum ilina anaa,avaana,eluthu nanga vetiyathan irukom comment potrrom

Anonymous said...

anne idly jaya aniku ketavanga than
ini nalavangala nadathukanumnu apdi solrathu thapa? ela jaya thirunthavey kudathunu solrengala
elutha onum ilina anaa,avaana,eluthu nanga vetiyathan irukom comment potrrom

vignaani said...

ஒன்று: அன்று அவ்வாறு சொன்ன பொது கலைஞர் ஆட்சி அதை விட மோசமாக இருக்கும்
என்று எதிர்பார்க்கவில்லை. (தமிழக மக்கள் எண்ணமும் அவ்வாறே இருந்தது.). பின்பு எதிர்பார்ப்பு தவறு என்று உணர்ந்தபின் எண்ணம் மாறுவது தான் இயற்கை. இதில் அதிசயம் ஒன்றும் இல்லை.
இரண்டு: தமக்கு நல்லது இல்லை என்றால் ஊருக்கே நல்லது இல்லை என்று நினைப்பது மனித குணம். காங்கிரஸ் தனக்கு ஆபத்து என்றால் நாட்டுக்கே கேடு என்று அலறும் (ராமதேவ், ஹஜாரே உண்ணாவிரதம்.) தனக்கு ஆபத்து என்றால் தமிழுக்கு ஆபத்து என்று அலறுவது தமிழ் இனத்தலைவர் .
அதே போல் அம்மையார் மீண்டும் வருவது தமக்கு நல்லது இல்லை என்று எண்ணிய ரஜினி, நாட்டுக்கே கேடு என்று அலறி இருக்கிறார்.

Anonymous said...

next prime minister our superstar