நேற்று ஜெயலலிதாவின் டெல்லி பயணம் அரசியலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்பட வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று பலர் நினைத்தார்கள். ஆனால் கலைஞர் போல எதிர் கேள்வி, வழ வழ கொழ கொழ என்று இல்லாமல், யாரும் எதிர்பார்பார்க்காத ப.சிதம்பரம் பற்றிய கருத்து எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்.
தேர்தல் வெற்றி பெற்றவுடன் கூட்டணி பற்றிய கேள்விக்கு கனிவாக பேசிய ஜெயலலிதாவின் போக்கில் சட்டென்று ஒரு மாற்றம் தெரிகிறது.
"தற்போது தி.மு.க.வும், காங்கிரசும் ஒரு அணியில் உள்ளன. இருகட்சிகளுமே கூட்டணி தொடருவதாக கூறுகின்றனர். தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் என்று காங்கிரசும் அறிவித்துள்ளது. தி.மு.க.வுடனான காங்கிரஸ் உறவு இப்போதும் தொடருகிறது. மத்தியில் ஆளும் கூட்டணி அரசிலும் தி.மு.க இடம்பெற்றுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் சோனியாகாந்தியை சந்தித்து பேசுவது உகந்ததாக இருக்காது" என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்து, காங்கிரஸ் திமுகவை கழட்டிவிட்டால் தான் அடுத்த பேச்சே என்று முடிவாக சொல்லிவிட்டார்.
ஆக டெல்லிக்கு சென்றால் சோனியாவை சந்திக்காமல் வருவது தற்போது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு பழக்கமாகிவிட்டது.
காங்கிரஸ் இன்னும் திமுகவை கழட்டிவிடாத ஒரே காரணம் தான் இப்படி பேசியதற்கு காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணம் கூட்டணி தொடர்ந்து கொண்டிருப்பதற்கு ப.சிதம்பரம் தான் முக்கியக் காரணம் என்றும் சொல்லுகிறார்கள்.
ஜெயலலிதாவின் பேச்சு யாருக்கு சந்தோஷமாக இருக்குமோ தெரியாது, ஆனால் திமுக கொஞ்சம் மூச்சு விட ஆர்ம்பித்திருக்கிறது என்பது தான் நிஜம்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, June 15, 2011
மூச்சு விட்ட திமுக
Posted by IdlyVadai at 6/15/2011 06:39:00 AM
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)











17 Comments:
முதல் வடை..
அப்போ அம்மாவும் வடை சாப்பிடனும்னு ஆசைப்படுறா...
அப்போ சீமான் ????$??$??%%))௦௦௦௦??????????
சிதம்பரம் குறித்த ஜெ வின் பேச்சு ஜெ முதல்வர் பொறுப்புக்கு லாயக்கில்லாதவர் என்பதைக் காட்டுகிறது
//ஜெயலலிதாவின் பேச்சு யாருக்கு சந்தோஷமாக இருக்குமோ தெரியாது, ஆனால் திமுக கொஞ்சம் மூச்சு விட ஆர்ம்பித்திருக்கிறது என்பது தான் நிஜம்.
//
கமெண்ட் சூப்பர்
She has clearly indicated what Congress needs to do to get her support.
Now i understand why Jaya had targetted PC...PC is no saint either! BJP joining the call for PC's resignation...CAG report on RIL-bureaucrats nexus, opposition must join together...congress govt. has lost moral authority to continue
ஜெ. எக்காரணம் கொண்டும் காங்கிரசுடன் சேரக்கூடாது. அடுத்த பார்லிமெண்ட் தேர்தல், அது எப்பொழுது நடந்தாலும், காங்கிரஸ் மூட்டைக்கட்டப்போவது உறுதி.
ஜெ. காங்கிரஸ் கூட்டணி அமைத்தால், மீண்டும் பார்லிமெண்டில் எதிர்கட்சியில் அமரவேண்டியதுதான். கடந்த சில பா. தேர்தல்களில் ஜெ. தப்புக்கணக்கு போட்டதுதான் 2ஜி நடக்க ஏதுவானது. இன்னொருமுறை மத்தியில் தீய.மு.க. செல்வாக்கு நாட்டுக்கு நல்லதல்ல.
நந்த வனத்து ஆண்டிதான் நினைவிற்க்கு வருகிறார்.
ஜெ, எக்காரணம் கொண்டும் காங்கிரசுடன் சேரக்கூடாது. அடுத்த பார்லிமெண்ட் தேர்தல் - அது எப்பொழுது நடந்தாலும், காங்கிரஸ் மூட்டைக்கட்டப்போவது உறுதி.
இரா. சத்தியமூர்த்தி கூறியதுதான் என் கருத்தும்..
காங்கிரஸ் மிக வேகமாக தன செல்வாக்கை இழந்து வருகிறது.குறிப்பாக தமிழ்நாட்டில் அது வெறுக்கப்படும் ஒரு கட்சி.
ஜெயா BJP யுடன் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.ஆனால் அதை இப்போவே செய்யாமல்,ஓரிரு ஆண்டுகளுக்கு பிறகு செய்தால் நல்லது.(எப்படியும் தேர்தல் மே 2014 இல தானே!)
அவருடைய திட்டமும் அது போலத்தான் தெரிகிறது!
மு.க சொல்கிறார் :
இத,
இத,
இதத்தான்,
நான்
எதிர்பார்த்தேன்!!
வணங்க வயதில்லை;வாழ்த்துகிறேன்
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில், தி மு க, அ இ அ தி மு க, காங்கிரஸ், தே மு தி க, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை தனித்தனியாக நிற்கும் என்றும் - மற்ற கட்சிகள் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கூட்டணி அமைத்து நிற்கும் என்றும் தோன்றுகிறது. மத்தியில் ஆட்சியமைக்கப் போகும் கட்சிக்கு, (காங்கிரஸ் அல்லது பி ஜே பி) யார் எவ்வளவு ஜெயித்து வருகிறார்களோ அந்தந்தக் கட்சி, வெளியிலிருந்து அல்லது உள்ளேயிருந்து ஆதரவு கொடுக்கும்.
Hi IV,
Please see the following video,We are helpless looking at the plight of Srilankan Tamils.
Channel 4 has an important new Sri Lanka documentary, with brutal new video from the end of the civil war http://t.co/LGJYQGJ
Pavam advaniyum santhikalai ,sonia um santhikavillai.What happenend tp the tea party invitation?JJ speaks of frustration.
// shiva said...
Pavam advaniyum santhikalai ,sonia um santhikavillai.What happenend tp the tea party invitation?JJ speaks of frustration.//
Don.t think she is frustrated. In fact, she is at a more advantageous position in TN
///சிதம்பரம் குறித்த ஜெ வின் பேச்சு ஜெ முதல்வர் பொறுப்புக்கு லாயக்கில்லாதவர் என்பதைக் காட்டுகிறது
////
CORRECT
ஆஹா .... தொடங்கிட்டாருய்யா... தொடங்கிட்டாருய்யா... நம்ம பேப்பர் அறிக்கை, புள்ளி விபர புலி கருணாநிதி:
********
தி.மு.க. ஆட்சியிலே எழுப்பப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகையை மட்டும் புனருத்தாரணம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாமா? தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மேம்பாலங்களின் வழியாகத்தானே ஜெயலலிதாவின் கார் செல்லுகிறது! கருணாநிதி கட்டிய மேம்பாலம், அதிலே நான் பயணம் செய்யமாட்டேன் என்று நிறுத்திவிட்டாரா என்ன?
டெல்லி சென்றபோது அவசரஅவசரமாக டெல்லி தமிழ்நாடு இல்லத்தை சீர்படுத்தி அங்கே சென்று தங்கினாரே; நான் கட்டிய கட்டிடம் என்பதற்காக அங்கே போகாமலா இருந்துவிட்டார். கோபம் என் மீதுதானே தவிர; நான் கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் என்ன "பாவம்'' செய்தது?
எனவே முதலமைச்சர் பொறுப்புக்கு மூன்றாவது முறையாக வந்துள்ள ஜெயலலிதா இனியாவது, அரசியலில் பக்குவப்பட்ட ஒரு தலைவராக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். தி.மு.க. ஆட்சி செய்ததையெல்லாம் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது என்பது அவர் இருக்கும் பதவிக்கு அழகல்ல. எந்தவிதப் பெருமையையும் சேர்க்காது. மக்களின் வரிப் பணத்தைச் செலவழித்து கட்டப்பட்ட கட்டிடங்களை வேண்டாமென்று கூறுவது தன்னிச்சையான போக்கு மட்டுமல்ல; மக்களையே அவமதிப்பதாகும்.
புதிய தலைமைச் செயலகம் தமிழக அரசுக்குச் சொந்தமான இடம். அனைத்து அலுவலகங்களையும் ஒரே இடத்தில் அமைத்திட முடியும். ஆனால் பழைய தலைமைச் செயலகம் மத்திய அரசுக்குச் சொந்தமானது. காலத்தின் மாற்றத்திற்கேற்ற நிர்வாகத் தேவைகளை அங்கே நிறைவு செய்திட முடியாது.
இதற்கு மேல் நான் எதுவும் எழுதத் தேவையில்லை என்று கருதுகிறேன். பகுத்தறிந்து பார்க்கும் - பழக்கமும் தெளிவும் தமிழ் மக்களுக்கு அறவே அற்றுப்போய்விட்டதாக நான் கருதவில்லை. அந்த நம்பிக்கையின் ஒரு துளிதான் இந்த அறிக்கை என்று கூறியுள்ளார் கருணாநிதி.
Post a Comment