பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, June 12, 2011

தமிழ் நாடு பார்ப்பனர்களுக்கு கடமைப் பட்டிருக்கிறது !

அவசரக்கூட்டம் முடித்த கையோடு கலைஞர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்...
திமுக தோல்விக்கு முக்கியமான காரணம் ஒரு சில "பார்ப்பனர்களின்'' முயற்சிதான் என்கிறார். முழு பேட்டியையும் சிரிக்காமல் படித்தால் எனக்கு சொல்லி அனுப்புங்கள், பரிசு தருகிறேன். ராணா படத்தில் வடிவேலுக்கு பதில் கலைஞரை கே.எஸ்.ரவிகுமார் அணுகலாம்.


கேள்வி: மத்திய அரசு, சிபிஐ அமைப்பை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: ஆயுதமாக இருக்கலாம், அரசியல் ஆயுதமாக இருக்க முடியாது.

கேள்வி: திருவாரூரில் நீங்கள் பேசும்போது கனிமொழி மீது போடப்பட்டுள்ள வழக்கு மத்திய அரசால் போடப்பட்ட வழக்கு என்பதைப் போல குறிப்பிட்டீர்கள். ஆனால், இன்றைய உங்கள் தீர்மானத்தில் அது குறித்து ஏதும் குறிப்பிடவில்லையே?.

பதில்: திருவாரூரில் நான் என்ன பேசினேன் என்பதை திரித்துச் சொல்லாமல், முறையாக, ஒழுங்காக, உண்மையாக, சத்தியமாகக் கேளுங்கள்.

கேள்வி: 'கூடா நட்பு'' என்று சொன்னீர்களே, அது யாரைக் குறிக்கிறது?.

பதில்: உங்களில் ஒருசிலரோடு இருக்கின்ற நட்பாகக் கூட இருக்கலாம் அல்லவா?

கேள்வி: காங்கிரஸ் கட்சி, திமுகவை என்றைக்கும் மதித்ததில்லை என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கூறினீர்கள். இப்போது கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னீர்கள். அதனால் மீண்டும் இப்போது காங்கிரஸ் கட்சி, திமுகவை என்றைக்கும் மதித்ததில்லை என்று கூறுவீர்களா?.

பதில்: ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றி- அப்போதுள்ள நிலையைப் பொறுத்து கூற வேண்டிய சூழ்நிலையில் நான் அப்படி கூறியிருப்பேன். அதையே இப்போதும் நீங்கள் கூறுவீர்களா என்று கேட்க முடியாது.

கேள்வி: எக்காரணம் கொண்டும் காங்கிரசுடன் பிரச்சனை இல்லை என்று கூறுவீர்களா?

பதில்: நிச்சயமாகச் சொல்வேன். காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது விரோதத்தை உண்டாக்க வேண்டும், பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு திட்டமிட்டு ஒரு சிலர் முடிவு செய்து அதை இங்கே வந்து கேள்வியாகக் கேட்கிறீர்கள். அப்படித் தானே?

கேள்வி: டெல்லியில் குலாம் நபி ஆசாத் உங்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் 2ஜி வழக்கு நடப்பதால் தான் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நீதிமன்ற விவகாரங்களில் அரசு தலையிட வேண்டுமென்று நாங்கள் என்றைக்கும் நினைப்பவர்களும் அல்ல, செயல்படுகிறவர்களும் அல்ல.

கேள்வி: ஜுலை மாதத்தில் நீங்கள் கூட்டும் பொதுக்குழுவில் திமுக, காங்கிரஸ் கட்சியோடு கொண்டுள்ள உறவு தொடருமா? தொடராதா? என்ற முடிவினை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?

பதில்: நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்பது உங்கள் கேள்வியிலேயே தெரிகிறது.

கேள்வி: காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான பத்திரிகை ஒன்றில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று எழுதியிருக்கிறார்களே?

பதில்: ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை பூதாகரமாக சில சுயநலவாதிகள், சில பொறாமைக்காரர்கள் ஊதிவிட்ட காரணத்தால், அதை எடுத்து வைத்துக் கொண்டு அந்தப் பத்திரிகையிலே எழுதியிருப்பார்கள்.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனை தேர்தல் தோல்விக்குக் காரணமா, இல்லையா?

பதில்: இல்லை. ஒரு சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்.

கேள்வி: பாஜகவுடன் நீங்கள் கூட்டணி அமைக்கப் போவதாக டெல்லியில் சொல்கிறார்களே, அதற்கு ஒரு முயற்சி நடைபெறுவதாகவும் கூறுகிறார்களே?

பதில்: அதைப் பற்றித்தான் உண்ணாவிரதம் இருக்கின்ற ராம்தேவ் சாமியாரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று கூடச் சொல்வீர்கள்.

கேள்வி: அடுத்து சிபிஐ தாக்கல் செய்ய உள்ள 3வது குற்றப் பத்திரிகையிலே தயாநிதி மாறனின் பெயர் இடம் பெறப்போவதாகச் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: நீங்கள் முயற்சி செய்தால் அது நடக்கலாம். ஆனால் உண்மையா அல்லவா என்பதை சிபிஐ தான் சொல்ல வேண்டும். சிபிஐ இதை 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம் என்று சொல்லியிருக்கிறது.

கேள்வி: எதிர்க்கட்சிகள் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டுமென்று சொல்கிறார்களே, ஒரு கட்சித் தலைவராக நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்: ராஜினாமா செய்ய வேண்டாமென்று எதிர்க்கட்சிகள் எப்போதாவது சொல்வார்களா?.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனையிலே நீங்கள் ராசாவை ஆதரித்த அளவிற்கு தயாநிதி மாறனை ஆதரித்து கருத்துக் கூறவில்லையே, அவரே பதில் சொல்வார் என்று சொல்லியிருக்கிறீர்களே?.

பதில்: நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை, தயாநிதி மாறனே சொல்வார் என்ற அந்த எண்ணத்தோடு நான் பதில் சொன்னேனே தவிர, நீங்கள் கலகமூட்டுவதைப் போல தயாநிதி மாறனை நான் ஆதரிக்காமல் இல்லை.

கேள்வி: சட்டமன்றத்தில் தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் மன்றத்திலே உங்கள் கட்சிதான் எதிர்க்கட்சி...

பதில்: உண்மையைச் சொன்னதற்கு நன்றி.

கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் கடந்த காலத்தில் நீங்கள் சரியாகச் செயல்படவில்லை என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறாரே?

பதில்: நான் அவருக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்.

கேள்வி: இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலே உங்கள் சுய மரியாதை காப்பாற்றப்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

பதில்: எங்கள் சுயமரியாதையைப் பற்றி தெருவிலே போகிறவர்கள் எல்லாம் சொல்ல முடியாது. சுயமரியாதையைப் பற்றி எனக்குத் தெரியும்.

கேள்வி: 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எந்த விதத்திலும் உங்களுக்கு உதவி செய்யவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?

பதில்: அப்படிப்பட்ட வருத்தம் எனக்குக் கிடையாது. எனக்கு வருத்தம் வரவேண்டுமென்று நீங்கள் தான் படாதபாடுபடுகிறீர்கள்.

கேள்வி: ராசாவும், கனிமொழியும் சிறையிலே இருக்கக் காரணம் காங்கிரஸ் கட்சி தான். அவர்கள் தான் இந்த விஷயத்தை வெளியிலே கொண்டு வந்திருக்கிறார்கள் என்று உங்கள் கட்சித் தொண்டர்களே வெளியே பேசுகிறார்களே?

பதில்: எந்தத் தொண்டர் அவ்வாறு பேசினார்?.

கேள்வி: டெல்லிக்கு எப்போது போகிறீர்கள்?

பதில்: போகும்போது சொல்லிக் கொண்டு போகிறேன்.

கேள்வி: போபர்ஸ் வழக்கிலே சிபிஐயின் செயல்பாடும், இப்போது 2ஜி வழக்கிலே சிபிஐயின் செயல்பாடும் எப்படி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

பதில்: ஒவ்வொரு பிரச்சனையையும் எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது புதிதல்ல.

கேள்வி: உயர்நீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் மறுத்து விட்டார்களே?

பதில்: உயர் நீதிமன்றத்தில் இதைப்பற்றி கேட்கிறீர்களே, இன்றைக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலே சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக ஜெயலலிதா அரசிற்கு எதிராகத் தீர்ப்பு கூறியிருக்கிறார்களே அதைப்பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்று யாராவது நினைத்தீர்களா?. அந்தத் தமிழ் ரத்தம் யாருக்காவது ஓடுகிறதா?.

கேள்வி: உங்கள் தீர்மானத்தில் சிபிஐயை கண்டித்திருக்கிறீர்கள். சிபிஐ பிரதமரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதனால் பிரதமரையே தாங்கள் கண்டித்ததாக எடுத்துக் கொள்ளலாமா?.

பதில்: நீங்கள் அப்படித் தான் எழுதுவீர்கள். உங்கள் சுதந்திரம் அது.

கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல் வாழ்வுத் திட்டங்களையெல்லாம் இந்த ஆட்சியினர் நிறுத்தியிருக்கிறார்கள். அதனால் மக்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதே?

பதில்: மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. யார் சொன்னார்கள் மக்களுக்குப் பாதிப்பு என்று? பாதிப்பு வருமென்று தெரிந்திருந்தால் மக்கள் அவர்களை தேர்தலில் ஆதரித்திருப்பார்களா?.

கேள்வி: நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களையெல்லாம் அதிமுக அரசு நிறுத்தி வைத்ததைக் கண்டித்து நீங்கள் ஏதாவது போராட்டம் நடத்துவதாக இருக்கிறீர்களா?

பதில்: நாங்கள் தற்போது கூட்டங்கள் நடத்துவதாக அறிவித்திருக்கிறோம். இந்தக் கூட்டங்கள் முடிந்த பிறகு பொதுக் குழுவைக் கூட்டுவோம். அந்தப் பொதுக்குழுவில் போராட்டம் பற்றி தீர்மானிப்போம்.

கேள்வி: நிருபமா ராவ், சிவசங்கர் மேனன் ஆகியோர் இலங்கை சென்றிருக்கிறார்கள். பல முறை அங்கே போய் விட்டு வந்து விட்டார்கள். எதுவும் நடக்கவில்லையே?

பதில்: இது செய்தி

கேள்வி: உங்கள் கட்சி எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் எப்படி செயல்படப் போகிறார்கள்?

பதில்: பொறுத்திருந்து பாருங்கள்.
கலைஞர் கூறுவது உண்மை என்றால், தமிழ்நாடு ஏன் இந்தியாவே பார்ப்பனர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது!


பிகு:
முன்னதாக சிபிஐயை கண்டித்து திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர் சரத்குமார் ஆகியோரை சிபிஐ குற்றவாளிகளாகச் சேர்த்திருப்பது முற்றிலும் தவறானது என்றும் அதைக் கண்டிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதில் முன்னாள் அமைச்சர் ராசாவின் பெயர் இடம் பெறவில்லை. தலித் என்பது கூட காரணமாக இருக்கலாம் !

30 Comments:

KALIMUTHU said...

//பதில்: அதைப் பற்றித்தான் உண்ணாவிரதம் இருக்கின்ற ராம்தேவ் சாமியாரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் //

//அந்தத் தமிழ் ரத்தம் யாருக்காவது ஓடுகிறதா?//

பத்மநாபன் said...

//சிரிக்காமல் படித்தால் எனக்கு சொல்லி அனுப்புங்கள்,//

இல்லை ..பரிசு எனக்கு இல்லை

Aaryan66 said...

எதிர்கட்சி,எதிர்கட்சி என்கிறாரே யாரது?

Palanivel Raj G said...

he is getting old . thats why dont knw what he is talking. this is start of the end of DMK

Anonymous said...

இதற்கு முன்னோடியான சில பதில்களும் உண்டு. 'நீதான் கொலை செஞ்சே", 'வா, ரெண்டு பேரும் தீக்குளிக்கலாம்' என்பன சில பருக்கைப் பதங்கள். இத்தகையவைதான் சூப்பர் ஆக்டர் முதல் நம்ம ஃபேஸ்புக் ஃப்ரண்ட் வரை, ராஜதந்திரம், சாதுர்யம், தமிழாற்றல் என்று பிரமிக்க வைக்கிறது போலும்.

Katz said...

ayya naan pottiyila thothutten

R. Jagannathan said...

மு க வை இப்படி புலம்ப வைத்த பார்ப்பனர் சோவுக்கு நன்றி. தி மு க வைத் தோற்கடித்த பார்ப்பனர் ஜெ க்கு நன்றி. வருத்தப் பட வைக்கும் பார்ப்பனர் அல்லாத பார்ப்பனர் ஞானிக்கும் நன்றி. எனக்கு ஒரு சந்தேகம் - ராஜா உண்மையிலேயே தலித்தா அல்லது மு க வைப் படுத்தும் பார்ப்பனரா? - ஜெ.

R. Jagannathan said...

மு க வை இப்படி புலம்ப வைத்த பார்ப்பனர் சோவுக்கு நன்றி. தி மு க வைத் தோற்கடித்த பார்ப்பனர் ஜெ க்கு நன்றி. வருத்தப் பட வைக்கும் பார்ப்பனர் அல்லாத பார்ப்பனர் ஞானிக்கும் நன்றி. எனக்கு ஒரு சந்தேகம் - ராஜா உண்மையிலேயே தலித்தா அல்லது மு க வைப் படுத்தும் பார்ப்பனரா? - ஜெ.

Anony8 said...

என்னடா இது தோத்து போய் இவ்வளவு நாளா யாரையும் திட்டலைன்னு பார்த்தேன்.

Isn't abusing a particular group of people a crime which can get 5 yrs upto 10 years Jail. Is Jaya listening?

Anonymous said...

மஞச‌ள் துண்டு சரியாகவே சொல்லியிறுக்கிரார்.கேடி பிரத‌ர்கள் உட‌லில் பார்பன இரத்தம் ஓடவில்லையா? அவர்களும் சதி செய்தவர்கள் அல்லவா?

virutcham said...

//கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல் வாழ்வுத் திட்டங்களையெல்லாம் இந்த ஆட்சியினர் நிறுத்தியிருக்கிறார்கள். அதனால் மக்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதே?

பதில்: மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. யார் சொன்னார்கள் மக்களுக்குப் பாதிப்பு என்று? பாதிப்பு வருமென்று தெரிந்திருந்தால் மக்கள் அவர்களை தேர்தலில் ஆதரித்திருப்பார்களா?.//

????
வயசாயிடுச்சு. அவரை இப்படி கேளிவி கேட்டு தொந்திரவு பண்ணுவதை தவிர்க்கலாம். அல்லது திமுக வாவது அவருக்காக பதில் சொல்ல ஒரு சரியான ஆளை நியமிக்கலாம். இல்லை என்றால் இன்னும் கொஞ்ச நாளில் தான் எந்தக் கட்சி என்பதை மறந்து அதிமுகவுக்கு ஆதரவாக முழுக்க முழுக்க பேசி விடக் கூடும்

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

அவர்தான் தோல்வியில் தளர்ந்து போய் ஏதோ சொன்னார் என்றால் அதையும் பெரிதாக போஸ்டர் போடும் உங்களை என்னவென்று சொல்வது? எத்தனையோ காழ்ப்புணர்வுக் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார் - அதைவிட்டு சாதியை மட்டும் பிடித்துக் கொண்டு தலைப்பு தருகிறீர்களே? உங்களுக்கும் வெட்கமில்லையா? 'பார்ப்பனர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது' என்ற உங்கள் தலைப்பு மிக மோசம். beyond sensationalism. அறியாமை என்பது இட்லிவடைக்கும் பொது. வருந்துகிறேன்.

பல பதிவுகளில் வெளியான பேட்டியை தாமதமாக வெளியிட்டு மஞ்சள் கோடிடுவதற்கு பதில், ஆக்கப்பூர்வமாக அறிவோடு ஏதாவது செய்திருக்கலாமே? பழைய இட்லிவடை அடிச்சுவடுகள் எங்கே போயின? 'தமிழ் ரத்தம் யாருக்காவது ஓடுகிறதா?' கேள்விக்கும் சமச்சீர் தீர்ப்புக்கும் தொடர்பில்லாதது போல் தெரிகிறது. இதை எடுத்துப் போட்டு கருணாநிதியின் அறியாமையை விளக்கியிருக்கலாமே?

அவர் மீண்டும் பதவிக்கு வந்தால் 'பார்ப்பனர்கள் செய்த பேருதவி' என்று சொல்லப்போவதில்லை.. ஒரு வேளை நீங்கள் 'பார்ப்பனத் துரோகிகள்' என்று கொடி பிடிப்பீர்களோ?

middleclassmadhavi said...

கனிமொழி கேள்விக்கும் தமிழ் ரததம் பதிலுக்கும் என்னதொடர்பு என விளக்கி ஒரு பதிவு போடலாமே!!

கிருபாநந்தினி said...

\\ஒரு சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்.\\ ஆமாங்க... விஜய்காந்த், கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க எல்லாம் பார்ப்பனர்கள் இல்லையா பின்னே? அவ்ளோ ஏங்க... அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த அத்தனை ஜனங்களும் பார்ப்பனர்கள்தான்!

Anonymous said...

குடும்பத்துக்குள்ள மட்டும் எதுக்கு இவ்ளோ பார்ப்பனப் பொண்ணுங்கள மருமகள்களா அனுமதிச்சிருக்கார்? ஒரு வேளை எல்லா பார்ப்பனப் பொண்ணுங்களும் சேர்ந்து தி மு க தோற்க சதி பண்ணிட்டாங்களோ?

Anonymous said...

Why do they still ask qtns to MK?its a waste of time. OR may be he keeps us smiling.

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

Anonymous said...

மைனாரிட்டி எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்த மகிழ்ச்சியில் பேசியிருக்கிறார். ஏதோ ஸ்டாலினைப் பார்த்து மக்கள் போட்ட வாக்குகளால் இவ்வளவாவது வந்தது. இல்லாவிடடால இவரும் ’திருமா’ஆகியிருப்பார்.-- குணா

Anonymous said...

பெருச இப்படி பொலம்ப விட்டுட்டாங்களே! ரொம்ப ஆடிட்டு திடீர்னு நின்னா சமாளிக்கறது கஷ்டம்தான்! என்ன பண்ணும் பெருசு...மனசும் உடம்பும் ஒத்துழைக்கனும்ல....

Anonymous said...

What a shame to see that he doesn't have the maturity for his age. How long he is going to play the divide and rule between Brahmins and others.

Also, he has the habit of replying with another question instead of answers. He might think he is intelligent but to me it looks like he does that only when he doesn't have answers or guilty.

Anonymous said...

Paavam.. merinaavil itam kitaikka vaippey illai, thotta tharani kitta design pannakkuda chonnaram..---- Gajapathy

Narayanan said...

'துக்ளக்' சத்யா தோற்றார். நான் கூட எதோ கற்பனை பதிவோன்னு நினைச்சேன். கருணாநிதிக்கு அபார நகைச்சுவை உணர்வு.
:-)

Anonymous said...

தீகாரில் இட்லி வடை:
http://thatstamil.oneindia.in/news/2011/06/13/south-indian-cuisine-tihar-jail-kanimozhi-aid0128.html

Anony8 said...

Is it just coincidence that all Dictators and Corrupt regimes always abuse and attack the very people they were ruling, just before they are completely eliminated or go into extinct.

IV,
Perhaps this is a great idea for a write up which can draw up parallels of all such evil rulers in recent or medieval history.

R.Gopi said...

//முழு பேட்டியையும் சிரிக்காமல் படித்தால் எனக்கு சொல்லி அனுப்புங்கள், பரிசு தருகிறேன்.//

பரிசெல்லாம் தர மாட்டேன்னு நேராவே சொல்லிட்டு போலாம்ல....

அதென்ன, கருணாநிதி மாதிரியே பேசறீங்க....

R.Gopi said...

ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா....

Kumaran said...

vijay tv, adhu idhu edhu program la oru round. enna kettalum adhukku mattum answer solla kooadahu.. adhula ivar thaan best.

seekiramae keelpakkathula oru seat potra vendiyadhu thaan. orae confusion la irukkarnu mattum theriyudhu.

Subramanian said...

கலைஞருக்கு பார்ப்பன துவேஷம் எந்த அளவுக்கு இருக்கோ அதே அளவுக்கு நாம உள்ளடி வேலை பாத்து எதவேனா மாத்திறுவோம்ங்கிற கர்வம்,நாங்கதான் ஆட்சியைக்கூட மாத்துனோம்ங்கற மடத்தனமான நம்பிக்கை நெறய பேருக்கு இருக்கு.....

இதுல உண்மையான ஹீரோ சாமானிய மக்களே...சோவெல்லாம் ஒரு காமெடி நடிகன் அப்படிங்கறத தாண்டி இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தின பல கோடி ஹீரோக்களுக்கு தெரியாது.

Balram-Cuddalore said...

நிரம்ப கஷ்ட்டம். கருணாநிதிக்கு அரசாங்கத்தினையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. கட்சியையும் கட்டுப் பாட்டில் வைத்திருக்க வில்லை.
குடுப்பத்தினர், பெரிய வட்டம், சின்ன வட்டம் என அனைவரும் கொள்ளையடித்தனர்.

தோற்றதற்கு உண்மையான காரணத்தை இவர் கூற விரும்பாவிட்டாலும், இத்தனை வயது முதிர்ந்த் அரசியல் தலைவருக்கு, உண்மையான காரணம் தெரிந்தே இருக்கும். எப்போதும் போல, தோற்றதிற்கு அவருக்கு ஏதாவது ஒரு காரணம் தேவைப்படுகிறது. பார்த்தார். எதற்கும் பதில் சொல்லாமல், தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் அகப்பட்டார்கள். பசுமாடு போலிருக்கும் இவர்களை கரித்துக் கொட்டுவதில் இவருக்கு என்ன லாபம்? வேறு ஜாதியினரை இதுபோல சொல்லிவிட்டு, சும்மா இருக்க முடியுமா? இன் நேரம் 10 பஸ்ஸையாவது எரித்து இருக்க மாட்டார்கள்?

இதில் வேடிக்கை என்ன வென்றால், எனக்கு தெரிந்த இந்த பார்ப்பனர்கள் பலர் கருணா நிதி கட்சிக்கு பரிபூரண விசுவாசிகள்.

இருக்கட்டும். ராமதாஸ் தோற்றதிற்கு யார் காரணம்? காங்கிரஸ் தோற்றதிற்கு யார் காரணம்? இவை எல்லாவற்றிற்குமே பார்ப்பனர்கள் தானா? கம்யூனிஸ்ட்கள் ஜெயித்ததற்கு யார் காரணம்? சென்றமுறை கருணாநிதி ஜெயித்தபோது, இந்த பார்ப்பணர்கள் எல்லோரும் அமரிக்காவிற்கு சென்றுவிட்டார்களா?


பாழாய்ப் போன இந்த ஜாதி அரசியல் தமிழ் நாட்டைவிட்டு என்று ஒழியப்போகிறதோ தெரியவில்லை.