பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 08, 2011

கைமாறிய இட்லிவடை ?

இட்லிவடை கை மாறிவிட்டது என்று நேற்று ஏதோ ஒரு பட்சி சொன்னதை கேட்டு பலர் சந்தோஷம் அடைந்தார்கள் என்று கேள்விப்பட்டேன். அப்படி சொன்னவர் பேசாமல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளாராக சேர்ந்துவிடலாம். அவர்கள் தான் இப்படி உளறிக்கொட்டுவார்கள்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் எல்லாம் கேமராவை பார்த்தால் ஒன்று முழிப்பார்கள் அப்பது பேத்துவார்கள். கருப்பு பண விவகாரத்தை அடுத்து இப்போது தெலங்கானா பிரச்சனையை குழப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். "தெலங்கானா பிரச்சனை என்பது சுலபமான பிரச்சனை அல்ல, அனைத்து தரப்பினருடனும் பேசி சுமூகத் தீர்வை எட்ட வேண்டும்" என்று சொல்லுகிறார் குலாம் நபி ஆஸாத்.இந்த ஞானோதயம் காங்கிரஸிற்கு முன்னமேயல்லவா வந்திருக்க வேண்டும்? அதற்குள் எதற்காக தனி தெலங்கானாவை உருவாக்குவோம் என ப.சிதம்பரம் வாக்குறுதியளிக்க வேண்டும்? பிறகு இப்போது எதற்காக தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, அது சிக்கல், மெதுவாகத்தான் சிடுக்கெடுக்க வேண்டுமென சால்ஜாப்பு? ராம்தேவுக்கு போட்டியாக சந்திரசேகர் ராவை உண்ணா விருதம் இருக்க ஏற்பாடு செய்வாகள் போல யார் கண்டது.

தமிழ்நாட்டில் ஒரே கட்சி அடுத்தடுத்து ஆட்சிக்கு வராது என்று தெரிந்திருந்தும், சந்தர்ப்பவாத கூட்டணியை நாங்கள் விரும்பாததால், அதிமுகவிடமிருந்து வந்த 'சிக்னலை' நிராகரித்தோம். `ஏ' தோற்கப் போகிறது என்பதற்காக, `பி'யுடன் கூட்டணி சேர முடியாது" என்கிறார். பேசாமல் 'C'யுடன் கூட்டணி சேர்ந்திருக்கலாம். நான் சொல்லுவது C-Captain! இது மட்டும் இல்லை "திமுகவுடன் கூட்டணி வலுவாகவே உள்ளதாகவும், ஒரு தந்தையாக அவருடைய மன வேதனையைப் புரிந்து கொள்வதாகவும், தவிர கனிமொழி விவகாரம் சிபிஐ வசம் இருப்பதால் மத்திய அரசால் எதுவும் செய்ய இயலாது என்றும் தெரிவித்துள்ளார். சிபிஐ வசம் கேஸ் இருந்தபோதுதான் குவாத்ரோக்கி தப்பினார் என பிற்காலத்தில் முக சொல்வார் என எதிர்பார்க்கலாம். கூடா நட்பு அதிகாரத்தை இப்போது தான் ஆரம்பித்திருக்கிறார்.

ஜெயலலிதா தனது வறட்டுப் பிடிவாதத்தை சற்றே தளர்த்தி, புதிய சட்டசபைக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் முழுக்க முடிந்ததும், அங்கிருந்தே அரசை நடத்தலாம். எது எப்படியாகினும் அது மக்களுடைய பணம். தனியே முறைகேடுகள் பற்றிய நியாயமான விசாரணையையும் முடுக்கிவிட்டு தண்டனையும் பெற்றுத் தந்தால், இருபுறமும் லாபம்தான். இதில் என்ன கொடுமை என்றால் முறைகேடுகள் பற்றி அலசப்படும் என்று சொன்ன பர்னாலா பெயர் புதிய சட்டமன்ற கட்டிட வளாகத்தில் திறந்தாவர்கள் பெயர்களில் இடம் பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு கட்சியிலும் ஒரு வெற்றி கொண்டான் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுபோலத்தான் காங்கிரஸிற்கு திக்விஜய சிங். தினமும் மீடியாவில் முகம் வர வேண்டுமென்பதற்காக கண்டமேனிக்கு உளறிக் கொண்டிருக்கிறார். இவரது சமீபத்திய உளறல் சஹிக்க இயலாத ரகம். பாபா ராம்தேவ் விவகாரத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கையைக் கண்டித்து, ராஜ்காட்டில் பாஜக மேற்கொண்ட அடையாள உண்ணாவிரதத்தில், தேசபக்திப் பாடலொன்றுக்கு நடனமாடிய சுஷ்மா ஸ்வராஜை, டான்ஸர் என்றும், பாஜக ஒரு டான்ஸர்களின் கட்சி என்றும் விமர்சித்துள்ளார். சுஷ்மாவிற்கு இதுவாவது தெரிந்திருக்கிறதே என்று பிஜேபி சந்தோஷப்பட வேண்டும். திமுகவுடனான சகவாச தோஷமோ என்னவோ இவர்களை இப்படியெல்லாம் பேசத் தூண்டுகிறது. இனி திக்விஜய சிங் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்க வேண்டும். ஏனெனில் அவருக்கு நிகராக அவருக்கு பதிலளிக்கக் கூடிய உமா பாரதி பாஜகவிற்கு மறு பிரவேசம் செய்துள்ளார். இனி உத்திரப் பிரதேசத்தில் பாஜகவின் வளர்ச்சியில் கவனிக்கப் போகிறாராம் இவர். இவரின் வருகையால் திக்விஜய்க்கு பிரச்சனையோ இல்லையோ, பாஜகவிற்குப் பிரச்சனை நிச்சயம்.

இன்று சட்டசபை கூட்டம் நடந்துக்கொண்டு இருக்கும் போது திடீர் என்று எல்லா திமுக உருப்பினர்களும் வெளிநடப்பு செய்தார்களாம் ஏன் என்று கேட்டால் கனிமொழியின் ஜாமீன் மனுவை இன்று டெல்லி உயர்நீதி மன்றம் நிராகரித்துள்ளதைக் கேள்விப்பட்ட கலைஞருக்கு ஆறுதல் கூற என்று சொல்லுகிறார்கள்.

சிபிஐயிடன் மாட்டிக்கொண்ட பிறகு தாங்கள் லஞ்சமாக வாங்கிய 200 கோடி கடனை உடனே திருப்பி தந்தார்கள் என்பது பழைய நியூஸ் ஆனால் திருப்பி தர உங்களிடம் எப்படி அவ்வளவு பணம் கிடைத்தது என்று சிபிஐ நோண்ட ஆரம்பித்துள்ளார்கள் என்று சொல்லுகிறார்கள். அடுத்த குற்றப்பத்திரிக்கையில் திஹார் ஜெயிலில் எவ்வளவு பரப்பளவு அதிகமாக போகிறதோ யார் கண்டது.

கருணாநிதி கொஞ்சம் மூடவுட்டாக இருந்தால் உடனே அழகிரி வடிவேலுவிற்கு போன் போட்டு கலைஞரிடம் பேச சொல்லுகிறாராம். வடிவேலுவிற்கு பட சான்ஸ் கம்மியானாலும், ஏதோ வேலை இருக்கிறது.


கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கையோட எனக்கு நேற்று பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கோடான கோடி நெஞ்சங்களுக்கு என் நன்றிகள்.


20 Comments:

பாரதசாரி said...

வருங்கால முதல்வர் இட்லிவடைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

இட்லிவடை = nutcase

jaisankar jaganathan said...

வருங்கால ஜெனாதிபதி இட்லிவடைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Kannan.S said...

belated wishes

Ramachandranwrites said...

அப்போ idli vadi = ஹரன் பிரசன்னா ?

Suresh said...

திமுக சார்பில் நாளை உண்ணாவிரதப் போராட்டம்...நீங்க போறீங்களா?
உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பு

King Viswa said...

இன்னும் கை மாறலையா? என்ன வாழ்க்கைடா இது?


கிங் விஸ்வா
ஆண்மை தவறேல் - ஒரு நேர்மையான முயற்சி

Anonymous said...

இட்லி பாபு, திக்விஜய் ஒரு கத்தோலிக்கர் என்கிற விஷயம் உனக்கு தெரியுமோ இல்லையோ! மாமாமியாவின் ஆளப்பா திக்கு!. ஹிந்து சாமியார்களை போட்டுத்தக்கும்போதே தெரிஞ்சிருக்கணுமே சாமி...மாமாமியாவை சுத்திலும் ஒரு பெரிய கத்தோலிக்க கும்பலே இருக்கப்பு..கொஞ்சம் கொஞ்சமா தென் கொரியா மாதிரி ஆகப்போகுது பாரு மக்கா....அப்ப தெரயும்லா உங்களுக்கு...

Anonymous said...

பாடிகார்ட் முனி முழித்துக் கொண்டார் மாதிரி இருக்கிறது.

ஹரன்பிரசன்னா said...

//கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கையோட எனக்கு நேற்று பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கோடான கோடி நெஞ்சங்களுக்கு என் நன்றிகள்.//

What is this?

Anonymous said...

உருப்புட்டாப்லதான். இருந்தாலும் வாழ்த்துகள். ஆமா ராம்தேவ் உண்ணாவிரதத்துல இட்லி கலந்துக்கலையா?

Shri Hari said...

\\சுஷ்மாவிற்கு இதுவாவது தெரிந்திருக்கிறதே என்று பிஜேபி சந்தோஷப்பட வேண்டும். \\

சரியான வரிகள்.

Shri Hari said...

இட்லி வடைக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

Madhavan Srinivasagopalan said...

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி, இட்லிவடை வாழ்க..

R. Jagannathan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இது, பதிவின் பிறந்த நாளா அல்லது எழுத்தரின் பிறந்த நாளா?

//ஆனால் திருப்பி தர உங்களிடம் எப்படி அவ்வளவு பணம் கிடைத்தது என்று சிபிஐ ,,// வாங்கின பணத்தைத் தான் திருப்பினார்கள். என்ன, கொஞ்ஜம் வட்டி முப்பது கோடி புரட்டியிருப்பார்கள்.

//கருணாநிதி கொஞ்சம் மூடவுட்டாக இருந்தால் உடனே அழகிரி வடிவேலுவிற்கு போன் போட்டு கலைஞரிடம் பேச சொல்லுகிறாராம்// வைரமுத்து, வாலி என்ன ஆனார்கள்?

- ஜெ.

R. Jagannathan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இது, பதிவின் பிறந்த நாளா அல்லது எழுத்தரின் பிறந்த நாளா?

//ஆனால் திருப்பி தர உங்களிடம் எப்படி அவ்வளவு பணம் கிடைத்தது என்று சிபிஐ ,,// வாங்கின பணத்தைத் தான் திருப்பினார்கள். என்ன, கொஞ்ஜம் வட்டி முப்பது கோடி புரட்டியிருப்பார்கள்.

//கருணாநிதி கொஞ்சம் மூடவுட்டாக இருந்தால் உடனே அழகிரி வடிவேலுவிற்கு போன் போட்டு கலைஞரிடம் பேச சொல்லுகிறாராம்// வைரமுத்து, வாலி என்ன ஆனார்கள்?

- ஜெ.

Anonymous said...

//அப்போ idli vadi = ஹரன் பிரசன்னா ?//

அந்த மாதிரி ஒரு இமேஜ் வரணும்னு “அவர்” பிரியப்படறார் போலிருக்கும். பாவம் பிரசன்னா, அவர் ’ட்விட்’ பண்ணவே நேரம் இல்லாமத் தவிக்குறாரு. பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்னவங்களுக்கு ’நன்றி’ன்னு டைப் பண்ணியே அவர் விரலு சுளுக்காயிருச்சாம்.

அதுசரி உண்மையிலேயே ‘இட்லிவடை’ யாருன்னு உங்க யாராலயும் கண்டுபிடிக்க முடியலையா என்ன? ஒண்ணு பண்ணலாமா? ”ஷெர்லாக் ஹோம்ஸை”க் கூப்பிட்டு கிழக்கு மொட்டைப் பக்கமா ப (த்) தி ரி கை ய ப் ப (பி) டி ச் சி பார்க்கச் சொல்வோமா?

ஹரன்பிரசன்னா said...

ஐயா அனானிமஸ் தெய்வமே

என் உடலெல்லாம் புல்லரிக்கிறது. வாழ்க நீவிர். நான் இட்லிவடை அல்ல என்று சொன்னது கூட முக்கியமல்ல, என்னைப் போல் ‘அவர்’ (அவர்கள்!) பேர் வாங்க விரும்புகிறார் என்று சொன்னீர்கள் பாத்தீர்களா, என்ன சொல்ல, என் கண்ணில் நீர் தளும்புகிறது.

பின்குறிப்பு: டிவிட் பண்ணவே நேரமில்லாமத் தவிர்க்கிறார் என்ற வரியை நீங்கள் எடிட் பண்ணியிருக்கவேண்டும் பிரதர். :>

khaleel said...

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் எல்லாம் கேமராவை பார்த்தால் ஒன்று முழிப்பார்கள் அப்பது பேத்துவார்கள்.//

i dont think so. both manish tiwari and abhishek singhvi handle the media quite comfortably. you may watch any debate with arnab on times now or with rajdeep on cnnibn. on the contrary its actually bjp's nirmala seetharaman who stumbles, stutters with her poor language and very poor communication skills.

Anonymous said...

//குறிப்பு: டிவிட் பண்ணவே நேரமில்லாமத் தவிர்க்கிறார் என்ற வரியை நீங்கள் எடிட் பண்ணியிருக்கவேண்டும் பிரதர்//

antha alavukku neenga busya irukkeengannu sonneen sir. thappa ninaichukathinga.

parunga, ippadi ungala vachu alakukku game adurangale neenga en ithai ellaam kand(u)ikka mattenguringa .

plz do the needful