பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 07, 2011

மன்மோகன் சிங் ஜோக்

டாவடிக்கும் போது பெண்களிடம் கொடுக்கும் வாக்குறிதிகள் போல தான் தேர்தல் வாக்குறுதிகளும். தேர்தல் முடிந்த பிறகு எல்லாம் காற்றில் பறந்துவிடும். UPA2, நாங்கள் வெற்றி பெற்றால், அயலக வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் என முதலில் பாஜக (அத்வானி) தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. ஆயினும் காங்கிரஸ் இது பற்றிக் கண்டு கொள்ளாததால், மற்ற கட்சிகளின் விமர்சனத்திற்குள்ளானது. பிறகு வேறு வழியில்லாமல், காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற 100 தினங்களுக்குள் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் என சூளுரைத்தது. அவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கணக்கில் வராத பணத்தின் மதிப்பு சுமார் இருபத்தி மூன்று லட்சம் கோடி ரூபாய்கள் என தோராயமாக மதிப்பிடப் படுகிறது.


தேர்தலும் முடிந்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாண்டுகளாகிறது. எவ்வளளவு தான் சண்டை இருந்தாலும், பாலு சோனியா, மன்கோகன் சிங் பக்கத்தில் சிரித்துக்கொண்டு போட்டோவிற்கு போஸ் கூட கொடுத்துவிட்டார், ஆனால் இன்னமும் கறுப்புப் பணத்தை மீட்பதற்குண்டான நடவடிக்கைகளை மன்மோகன் சிங் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. இதனைப் பற்றிய கேள்வியெழும்போதெல்லாம் இது நினைத்தவுடன் சாதிக்கக் கூடிய விஷயமல்ல என அரசு சால்ஜாப்பு சொல்கிறது. தேர்தல் அறிக்கையில் 100 நாட்களுக்குள் என்று குறிப்பிடும்போது இது தெரியவில்லை போலும். முதலில் நினைத்தால்தானே சாதிப்பதற்கு? ஹஸன் அலி விவகாரமே இதற்கு சான்று. பூ்னாவைச் சேர்ந்த குதிரை வியாபாரியான இவர் சுமார் நாற்பதாயிரம் கோடிக்கும் மேலான கறுப்புப் பணத்தை அயல்நாட்டில் பதுக்கி வைத்திருப்பதற்குண்டான ஆதாரம், மூன்றாண்டுகளுக்கு முன்னரே சிபிஐ வசம் கிடைத்த பின்னரும் கூட, மத்திய சர்க்கார் மெளனியாக இருந்ததிலிருந்தே இது வெளிச்சம். கனிமொழி ஜெயிலுக்கு போனதற்கு, ஏன் எங்க ஆள் கல்மாடியும் போயுள்ளார் பாருங்கள் என்று பெருமை வேற இவர்களுக்கு.

இந்த பகாசுர சர்க்காரின் ஊழல்கள் ஒவ்வொன்றும், ஒன்றையொன்று தூக்கி சாப்பிடும் அளவிற்கு பெரிதாக கிளம்பி வந்து கொண்டே இருக்கும் சூழலில், அன்னா ஹஸாரே என்பவர் ஊழலுக்கெதிரான இயக்கம் ஒன்றைத் துவங்கி, உண்ணா நோன்பிருந்தார். நாடெங்கிலும் இவருக்குக் கிடைத்த ஆதரவு, எதற்கும் அசையாத காங்கிரஸையே அசைத்து விட்டது. ஆனால் இப்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் ஹஸாரேவையே சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது. தியாகத் திருவிளக்கு, அன்னை, ரே பரேலித் தாய் சோனியாவிடமிருந்து நற்சான்று பெற்ற இவர், குஜராத்தை ஊழல் மலிந்த மாநிலம் என்று வர்ணிக்கிறார். இதற்கு ஒருவாரம் முன்பாக, ஊழலற்ற மிகச் சிறந்த நிர்வாகி என மோதியைப் பாராட்டினார் என்பது இவ்விடம் குறிப்பிடத்தக்கது

இந்த வார துக்ளக் பத்திரிக்கையில் வந்த எச்சரிக்கை பகுதியிலிருந்து கீழே


அனைவரும் – காங்கிரஸ் உட்பட – குஜராத்தில் ஊழல் பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கிறார்கள். நேர்மைக்கும், நிர்வாகத் திறமைக்கும் குஜராத்தும், மோடியும் உதாரணமாகத் திகழ்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், குஜராத்தில் எங்கு பார்த்தாலும், ஊழல் மலிந்திருப்பதாக அன்னா ஹஸாரே கூறியிருக்கிறார். அங்கு சமீபத்தில் தாம் சிலரிடம் பேசியதாகவும், அதிலிருந்து இது புரிந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மதச்சார்பின்மைவாதிகளின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, ஏற்கெனவே இவர் மோடி விஷயத்தில் தடுமாறினார். மோடியைப் பாராட்டி விட்டு, பின்னர் ஒரு பல்டி அடித்து, அந்தப் பாராட்டை வாபஸ் பெற்று, மதச்சார்பின்மைவாதிகளின் ஆதரவைப் பெற முயன்றார். அப்படியும் மதச்சார்பின்மைவாதிகள் திருப்தி அடையவில்லை. ஆகையால், தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துவிட்ட அன்னா ஹஸாரே, குஜராத்தைப் பற்றி உளறியிருக்கிறார்.

இவரைப் பற்றி நாம் ஏற்கெனவே கூறிய கருத்துக்கள் கடுமையானவை என்று சில வாசகர்கள் கூறினார்கள். கடுமை கூடியிருக்க வேண்டும் – என்று நாம் கருதுகிறோம். சோனியா காந்தியிடமிருந்து ஊழல் எதிர்ப்பு சர்ட்டிஃபிகேட் பெற்று மகிழ்ந்த மனிதரிடம் இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது. அன்னா ஹஸாரே, கைதட்டலுக்கு ஏங்குகிற மனிதர்.

மரியாதைக்குரியவர் என்று பலராலும் கருதப்படுகிற அன்னா ஹஸாரே, பரிதாபத்திற்குரியவராகவே நமக்குத் தெரிகிறார்.
- துக்ளக்


இந்நிலையில் யோகாசன குரு பாபா ராம்தேவ் என்பவர், கறுப்புப் பண விவாககரத்தைக் கையிலெடுத்து, அரசு அதனை மீட்பதற்குண்டான நடவடிக்கைகளைத் துவங்கும் வரை சத்யாக்ரஹப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். இன்று நேற்றாக அல்லாமல், சுமார் இரண்டு மாதகாலமாக இதனைக் கூறி வந்த இவர் நேற்றைய முன்தினம் முதல் அதனைத் துவக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதற்காக தில்லியின் ராம்லீலா மைதானத்தையும் தேர்வு செய்திருந்தார்.

அன்னா ஹஸாரேவின் உண்ணா நோன்பால் ஆட்டம் கண்டிருந்த காங்கிரஸ், ராம்தேவின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்து, அவரை உண்ணா நோன்பிருப்பதிலிருந்து தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. காங்கிரசின் கபில் "ஜீரோ லாஸ்" சிபல் தலைமையில் ஒரு குழு ராம்தேவுடன் மூன்று கட்டங்களாகப் பேச்சு வார்த்தை நடத்தித் தோல்வி கண்டது. இறுதியில் ராம்தேவ் தாம் முன்னர் அறிவித்தபடி, ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணா நோன்பைத் துவக்கினார்.

அன்றிரவு சுமார் ஐயாயிரம் ஆயுதம் தாங்கிய காவாலர்படை மைதானத்தில் திடீர் ப்ரவேசம் செய்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பொதுமக்களைக் கலைந்து போகச் செய்தனர். இதில் 76 பேர் படுகாயமடைந்து, இருவர் உயிருக்குப் போராடுகின்றனர். ஆயுதமில்லாத அப்பாவிப் பொதுமக்கள் மீது எதற்காக இவ்வளவு கொடூரமான தாக்குதல் என்பது தெரியவில்லை. காங்கிரசின் அறிவுஜீவிகளில் ஒருவரான மனீஷ் திவாரி குறிப்பிடுகையில், அத்தினத்தில் ராம்லீலா மைதானத்தில், பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று நிலவிய ஒரு சூழல் நிலவியதாக தெரிவித்தார். இன்னமும் வேடிக்கையாக, 1998 இல் பாஜக அரசாங்கம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லையா என்று கேட்கிறார். இதை விட கேனத்தனமாக ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளர் உளறவே முடியாது.

பாபா ராம்தேவையும் குண்டுக் கட்டாகக் கைது செய்து, ஹரித்வாரில் கொண்டு சேர்த்து விட்டனர். தில்லி காவல்துறையின் இச்செய்கை பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உச்சநீதிமன்றம் தானாகவே இதனை ஒரு வழக்காகப் பதிவு செய்து அரசிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசும் சளைக்காமல் தினம் ஒரு காரணமாகக் கூறிக் கொண்டிருக்கிறது.

முதலில் யோகாசன செய்முறைக்காக அனுமதி வாங்கிவிட்டு, உண்ணா நோன்பு துவங்கியதால் அவ்விடத்தைக் காலி செய்தோம் என்றது அரசு. இவர் ராம்லீலாவில் உண்ணா நோன்பிருக்கப் போவதாக ஒருவாரமாகக் கதறிக் கொண்டிருக்கிறார்; தவிர அரசும் மூன்று கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியது; அப்பொழுதெல்லாம் இதற்கு அனுமதியளித்த தில்லி காவல்துறைக்கு இது தெரியவில்லையா என்று எழுப்பப்படும் கேள்விக்கு இதுவரை பதிலில்லை. அடுத்ததாக ராம்தேவ் உயிருக்கு அச்சுறுத்தல் என்பதால் அவரை அப்புறப்படுத்தினோம் என்றனர்; ராம்லீலா மைதானத்தின் கொள்ளளவை விட அதிக மக்கள் கூடியதால் அப்புறப்படுத்தினோம் என புதுப் புதுக் காரணங்களாக சொல்கின்றது அரசு. கலைஞர் மஞ்சள் துண்டிற்குக் கூட இவ்வளவு காரணங்கள் சொன்னதில்லை.

காங்கிரஸ் ஊழல் ஒழிக்கும் லட்சணத்தின் அடுத்த உதாரணம், தயாநிதி மாறன் விவகாரம். 323 முறைகேடான தொலைபேசி இணைப்புகள் மூலம் சுமார் 440 கோடி ரூபாய் அரசிற்கு இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார். இதுபற்றி நான்காண்டுகளுக்கு முன்னரே சிபிஐ விசாரித்து, விசாரணை அறிக்கையை தலையணைக்கடியில் போட்டு குறட்டை விட்டிருக்கிறது. காரணம் கூட்டணி தர்மம். இப்போது சட்டசபைத் தேர்தலில் திமுகவின் படுதோல்வியால் ஏற்பட்ட கசப்பில் இப்போது இதெல்லாம் ஒவ்வொன்றாக வெளி வருகிறது. இன்னும் என்னென்ன கிளம்புமோ?

தயாநிதி மாறனுக்கு எதிராக சிவசங்கரன் அளித்துள்ள வாக்குமூலம் முக்கிய சாட்சியமாக மாறுகிறது. இதை வைத்து ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தரப்பட்ட விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய சிபிஐ தயாராகி விட்டது. பிரதமரின் அனுமதிக்காக தற்போது சிபிஐ காத்துள்ளதாக தெரிகிறது. திஹார் ஜெயிலை Extend பண்ணலாமா என்று மத்திய அரசு யோசித்துக்கொண்டு இருக்கிறது.

இம்மாதிரியான அரசாங்கமும், அதனைச் சேர்ந்தவர்களும்தான் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டிருக்கிறார்களாம். சோட்டா ஷகீலும், சோட்டா ராஜனும் சேர்ந்து பம்பாயில் தாதாயிஸத்தை ஒழிப்போம் என கூட்டுப் பிரகடனம் செய்தால் எப்படியிருக்குமோ அதை விட வேடிக்கையாய் இருக்கிறது காங்கிரஸின் ஊழல் ஒழிப்புப் பிரகடனம். இவர்கள் ஊழலை ஒழிக்கப்போவதில்லை, ஊழலை ஒழிக்க வேண்டுமென்பவர்களை ஒழிப்பதில் முனைந்திருக்கிறார்கள்.

பிரதமர் இவ்விவகாரம் குறித்து தெரிவிக்கையில், துரதிருஷ்டவசமானது, அதே சமயம் போலீசாருக்கும் வேறு வழியில்லை என்று அசடு வழிந்திருக்கிறார். இதற்கு வழக்கம்போல், எனக்கு எதுவும் தெரியாது என்றேனும் சொல்லியிருக்கலாம். பிரதமர் மன்மோகன் சிங்கை பார்த்தால் பாவமாக இருக்கிறது.காமெடி பீஸ்:
மத்திய அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகளை வெளியிட்டார் பிரதமர் மன்மோகன் சிங். மத்திய அமைச்சர்கள் தங்கள் சொத்துக்கணக்குகள் மற்றும் குடும்ப வருவாய் விவரங்களை வெளியிட வேண்டும். அரசு சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்துடன் தொடர்பை கைவிடவும் அறியுருத்தபட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் வர்த்தக தொடர்புகள் பற்றிய விவரங்களை வெளியிடவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்

மன்மோகன் சிங் என்றாலே ஜோக் என்று ஆகிவிட்டது.


15 Comments:

kggouthaman said...

அதுக்குள்ள ஆடி பொறந்தடுச்சா?

ConverZ stupidity said...

well.. back in track

ரிஷபன்Meena said...

படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ என்று போவான் என்ற பாரதி சொன்னதெல்லாம் பலிக்காது போலருக்கு. படித்தவர்கள் மட்டுமேஅத்தனை அட்டகாசமும் செய்கிறார்கள். எனக்கு எதுவுமே தெரியாது என்ன்னும் நபர் உட்பட. இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் எதற்கு படிப்போ ?

ஆங்கிலச் சேனல்களில்
ஆளும் தரப்பு சார்பா பேசுகிற யாருமே சுய செல்வாக்கே இல்லாத புகுத்தப்பட்ட தலைவர்கள் அதனால் அரசியல் சாதுர்யமே இல்லாமல் நானும் ரெளடிதான் என்கிற மாதிரி ரொம்ப எடுத்தெறிந்து பேசுகிறார்கள்.

இந்த ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நாட்டின் முக்கிய எதிர்கட்சி ஏன் முழுவீச்சில் செய்ய முயலவில்லை ?

Anonymous said...

UPA -II is an extreme misrule, looting, arrogance. Their only word is secular. MAsking secularism, they do add bad things. There is no govenence, but looting.

Anonymous said...

marupadiyum oru
mokkai post
unga
kadi thaangala iv

Anonymous said...

உங்கள் வரிசையில் "சொக்கத் தங்கம்" விடுபட்டு விட்டது, சேர்த்துக் கொள்ளவும்!!

Anonymous said...

நடவடிக்கை தவிர்க்க முடியாததாக ஆகி விட்டதாம். ராத்திரி 1 மணிக்கு முகூர்த்த நேரமாக இருக்கும்.அதணல் தடியடி செய்தார்கள்! தூங்குகிறவர்கள் தூக்கத்தில் ரகளை பண்ணியதைக் கண்டுபிடித்திருக்க வேண்டும் டில்லி போலீஸ்.- கபாலி

Ganpat said...

என்னமோ புதுசு மாதிரி சொல்லறீங்க??
சர்தார்ஜி ஜோக்ஸ் உலகப்ரசித்தி பெற்றவை என்பது தெரியாதா?

ராகவன் பாண்டியன் said...

அசத்தல் ஆரம்பம்! அடுத்த கட்ட ஆட்டத்திற்க்கு வாழ்த்துக்கள்!

virutcham said...

அண்ணா ஹசாரே நவீன காந்தியா ஆர் எஸ் எஸ் கைக்கூலியா ?
http://www.virutcham.com/2011/06/அண்ணா-ஹசாரே-நவீன-காந்திய/

ksr said...

I have started blog to bring like minded people living in Chennai who can contribute information about the City and involve in NGO activities to increase the greenery and living conditions of the city

http://greenchennai.wordpress.com/

ந.லோகநாதன் said...

The government is going down day by day!!!

Anonymous said...

மிகத்தீவிரமான பத்தாம் பசலியாகிய திரு சோ ராமசாமி கடந்த 40 ஆண்டுகளாக எல்லோரையும் குற்றம்/குறை சொல்வதை தவிர்த்து உருப்படியாக ஏதும் செய்ததில்லை. மேலும் அவருக்கு தலைமை தாங்கும் திறமையும் மனப்பாங்கும் அறவே கிடையாது.அவர் குறைகூறியே வளர்த்த கழகங்கள் இன்று தமிழ் நாட்டையே விழுங்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளன
அன்னா ஹசாரேயிடம் சில குறைகள் இருக்கலாம்.ஆனால் மிக குறுகிய காலத்தில் இந்தியர்களிடையே ஒரு உணர்வை ஏற்படுத்த அவரால் முடிந்தது.அதற்கே நாம் அவரை பாராட்ட வேண்டும்.
முடிந்தால் சோ ராமசாமி எதாவது செயலில் இறங்கி பிரச்சினையை தீர்க்கபார்க்கலாம்.
முடிவாக "traffic Ramasami" சாதித்ததைக் கூட சோ ராமசாமி சாதிக்கவில்லை என்பதே நிஜம்

Shri Hari said...

அனானி,காங்கிரஸ் கட்சிகாரர் போல இருக்கு, அதுதான் தேவை இல்லாமல் சோவை குறை கூறுகிறார். எனக்கும் சோவை அவ்வளவாக பிடிக்காது. அதற்காக அவறை பற்றி இவ்வாரு கூறுவது முட்டாள் தனம். இவர் செய்வது பத்திரிக்கை தொழில். அவர் தனது கடமையை செய்கிறார். இதில் என்ன தவறு. சரியான லாஜிகே இல்லாத கேள்வி. இது எப்படி இருக்கு தெரியுமா? நேற்று நடந்த விபத்தில் ஓட்டுனர் தவறு தான் காரணம் என்று எழுதினால், அந்த பத்திரிக்கைகாரரை பார்த்து... நீ என்ன ஒழுங்கா நீ வண்டி ஓட்டி பாரு அப்ப தெரியும் என்று சொல்வது போல் உள்ளது.

vsankar said...

Once again Dr.Manmohan singh proves to be toothless.Instead of chucking out Maran,he awaits patiently for his resignation.