பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 13, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 13-6-2011

அன்புள்ள இட்லிவடை,
எனக்கு எப்போதும் ராமர் இருக்காரா இல்லையா என்று பெரிய சந்தேகம் இருக்கிறது. முன்பு மு.க ராமர் இல்லவே இல்லை என்று ராமாயணத்தை எல்லாம் மேற்கோள் காட்டி சொன்ன போது, ராமர் இல்லை என்று நம்பினேன். ஆனால் இப்ப அதே மு.க ஒரு திருமண விழாவில் நாம் ஆட்சியில் இல்லை என்றால் என்ன "...புராணத்தில், ராமாயணத்தில் கூட 14 ஆண்டு காலம் ராமன் ஆட்சியிலோ இல்லை, அவன் ஆட்சியிலே இல்லாத காலத்தில் தான் அவன் தாடகைக்கு புத்தி கற்பித்தான் என்று எழுதி வைத்திருக்கிறார்கள. ஆகவே ஆட்சியிலே இருந்தாலும் இல்லாவிட்டாலும் தவறுகளைச் சுட்டிக் காட்டவும், நாட்டுக்கு வருகின்ற கேடுபாடுகளைக்களையவும், தடுத்து நிறுத்தவும் நாம் முயல வேண்டும் நம்மால் முடியும்"..


என்று பேசியுள்ளார். ஆக இப்ப ராமர் இருக்கிறார். அடுத்த கலைஞர் டிவி விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி அன்று லியோனி பட்டிமன்றத்தில் விவாதிக்கலாம். எது எப்படியோ கலைஞர் தசரதர் மாதிரி இல்லை என்றால் கனிமொழி ராமர் மாதிரி அப்பா சொன்னதை கேட்டிருப்பாரா ?

அதே திருமண விழாவில் இன்னொரு விஷயத்தையும் சொல்லியுள்ளார் " ‘’ஒரு குழுவில் நண்பர்கள் மத்தியில் ஜோக்கர்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் சில ஜோக்கர்கள் அரசியலிலும், கலைத்துறையிலும் இருப்பதை நாம் பார்க்கின்றோம்" என்கிறார். அரசியல், சினிமா இரண்டிலும் இருப்பவர்களுக்கு தான் தமிழ் நாட்டு முதல்வர் பதவி என்று எழுதி வைத்திருக்கிறது. ஆக யார் ஜோக்கர் என்று நீயே முடிவு செய்.

இந்த ஜோக் எல்லாம் பேசாமல் கேப்டன் தன் கட்சி எம்.எல்.ஏ 29 பேருக்கும் மின்அஞ்சல், வலைத்தளம் இவைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காகவும், தொகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு குறைகளை அவ்வப்போது தெரிவிக்கும் வகையில் மின்னஞ்சல் உடனுக்குடன் பார்த்துக் கொள்வதற்கு வசதியாக பிளாக்பெர்ரி செல்போன் வழங்கிவிட்டார். சரி மக்கள் தங்கள் குறைகளை உடனுக்கு உடன் இவர்களுக்கு சொல்ல தன் தொகுதி மக்கள் எல்லோருக்கும் பிளாக்பெரி வழங்கினால் நல்லா இருக்கும். செய்வார ?

இந்த எதிர்கட்சி தலைவர் இப்படி என்றால் கர்நாடகாவில் எடியூரப்பா கொஞ்சம் மூச்சு விடலாம் இப்ப குமாரசாமி, குட்டி ராதிக்காவுடன் உள்ள தொடர்பு பற்றி படம் போட்டு பத்திரிக்கைகள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இதை பற்றி குமாரசாமியிடம் கேட்ட போது "இது எனது தனிப் பட்ட விஷயம் இது பற்றி யாரும் கேட்க வேண்டாம்" என்று சொல்லிவிட்டார். அவர் சொல்லுவது சரி தானே ? பல்லு இருகிறவன் பட்டாணி சாப்பிடுகிறான்!. மனசாட்சியை தொட்டு சொல்லுங்க ? இந்த மாதிரி தைரியமாக சொல்ல எந்த தமிழ்நாட்டு அரசியலவாதிக்கு தைரியம் இருக்கா ?

முன்னாடி கலைஞர் மனசாட்சியாக மாறன் இருந்தார். இப்போது திருமாவளவன் போல இருக்கு. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தோல்விக்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் கட்சியுடன் கசப்பான உணர்வு கொண்ட எங்கள் தோழர்கள் தேர்தலில் செயல்பட முடியவில்லை. திமுக அரசு மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததுதான் தமிழின உணர்வாளர்களுக்கு ஆதங்கம். ஆக பார்ப்பனர்கள் காரணம் இல்லை காங்கிரஸ் தான் காரணம். பலே!

அடுத்த ஒரு பலே நியூஸ். பொது நல வழக்கு, மற்றும் தகவல் அறியும் சட்டத்தின்(RTI) மூலம் மாயாவதியின் ஊழல்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. முதல்ல இவர்கள் நாத்தம் வெளியில் வருவதை நிறுத்தட்டும். தண்ணிக்குள்ள ---- விட்டா தெரியாமல் போய்விடுமா என்ன ? இனிமே ஊழல் பற்றி பேச அரசியல்வாதிகளுக்கும், சாமியார்களுக்கும் தடைவிதிக்க வேண்டும். இப்ப ஊழல் பற்றி பேசுவதே ஃபேஷனாகிவிட்டது. முதல்ல இதுக்கு தடைவிதிக்க வேண்டும்.

இப்ப தமிழ்நாட்டில் அம்மா கொண்டு வந்த இலங்கை தீர்மானத்துக்கு பாராட்டு தெரிவிப்பது ஃபேஷனாகிவிட்டது. எல்லோரும் அம்மாவை பாராட்டுகிறார்கள். அந்த லிஸ்டில் விஜய் சேர்ந்துவிட்டார். இலங்கை அரசுக்கு எதிராக மத்திய அரசு ஏதாவது செய்தால் தான் உண்டு தமிழ் நாட்டு தீர்மானம் எல்லாம் மன்மோகன் சிங்குக்கு எழுதும் கடிதம் போல தான். எழுதும் நாள் நியூஸ், அடுத்த நாள் கடலை கட்ட தான் உதவும். 100 முறை கடிதம் எழுதினால், நிருபாமா ராவ் ஒரு முறை இலங்கைக்கு சென்று வருவார். அவ்வளவு தான்.

இங்கே இருக்கும் பெங்களூருக்கு போக முடிவவில்லை, ஆனால் இன்று ஜெயலலிதா த‌‌மிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி செல்கிறார். சோனியா காந்தியுடண் டி பார்ட்டி உண்டா? என்று பார்க்க வேண்டும்.

சோனியா காந்தி போன வெள்ளிக்கிழமை அன்று தயாநிதி மாறன் சந்தித்துப் பேசியதும், அதன் தொடர்ச்சியாக சென்னை வந்த அவர், சனிக்கிழமை அன்று கருணாநிதியைச் சந்தித்ததும், பலருக்கு தெரியவே இல்லை :-)

கலர் கலாராக டிரஸ் போட்டுக்கொண்டு கிரிக்கெட் கூத்து விளையாட இப்ப சினிமாகாரர்களும் தயாராகிவிட்டார்கள். நம் நாட்டில் சினிமா, அதைவிட்டால் கிரிக்கேட் இவை இரண்டும் சேர்ந்தால் நாடு விளங்கிவிடும். Celebrity Cricket League(CCL). முதல் முறையாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலக நட்சத்திரங்கள் இணைந்து ' டுவென்டி டுவென்டி' முறையில் CCL மேட்ச்களில் விளையாடி ரசிகர்களை பரவசப்படுத்த இருக்கிறார்கள். யார் சியர் லீடர்ஸ் என்று தெரியலை, அதை பொறுத்து தான் என் சப்போர்ட்.

கலைஞர் இடத்தை வைகோ சீக்கிரம் பிடித்துவிடுவார் போல வீரத்தாய் வேலு நாச்சியார் வரலாற்று நடன நாடகம் தயாரித்து, ஊக்கமும் அளித்துள்ளார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. வாழ்த்துகள்.

குழந்தைகளுக்கு ஒரு நல்ல படம் வர போகிறது பெயர் "“கிரீன் லேண்டர்ன்" உலகில் பேரழிவை நிகழ்த்த தீயசக்திகள் முயல்கிறது. ஓர் அறிய சக்தி உலகை காப்பாற்ற கதாநாயகனை தேர்வு செய்து அவனிடம் சக்தி வாய்ந்த பச்சை விளக்கு, பச்சை நிற மோதிரம் போன்றவற்றை கொடுத்து அனுப்புகிறது. இந்த படம் ஏற்கனவே மே 13 அன்று தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போகிறது என்று நினைக்க வேண்டாம் இனிமே தான் இது வர போகிறது ! தீய சக்தியை அழிக்க பச்சையாக ஏதாவது வந்தால் தான் முடியும் போல.

தீய சக்தியை அழிக்க புதுவை முதல்வர் ரங்க சாமி அடிக்கடி கோவில்களுக்கு படையெடுக்கிறார். அப்படி அவர் போகும் கோயில் சேலம் அப்பாபைத்தியம் சாமி கோவிலில் ஒரு மாதத்தில் 6 முறை சென்று உள்ளார், கூடவே ஆனை மலையில் உள்ள அழுக்குச்சாமி கோவிலுக்கும் சென்று ரங்கசாமி சாமி கோயிலுக்கும் போகிறார்.
ரங்கசாமி வழிபடும் அப்பா பைத்தியம் சாமியின் குருவே அழுக்குச்சாமி. அம்மாவிடம் சமரசம் செய்துக்கொண்டு பேசாம புதுவை சட்டமன்றத்தை சேலம் அப்பாபைத்தியம் சாமி கோயிலுக்கு பக்கம் கொண்டு வந்துவிடுங்கள்

டில்லியில் உள்ள திகார் சிறையில் தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை சேர்க்கப்பட்டுள்ளது. இதனை தயாரிக்க சமைப்பவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தென்னிந்திய கைதிகள் மட்டுமில்லாது வடஇந்திய கைதிகளும் இட்லி மற்றும் தோசைகளை விரும்பி சாப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா தரவேண்டும் என்று அவர் ரசிகர்கள் கோரினார்கள். அவரோ வெளிநாட்டில் தான் சம்பாதித்த விளம்பர வருமானத்துக்கு வரிவிலக்கு பெறுவதற்காக தன்னைத் தொழில் முறை நடிகர் என்று அறிவித்திருக்கிறார். எனவே அவருக்கு நடிப்பிற்கான தாதா சாகிப் பால்கே அல்லது பாரத் விருது தரவேண்டும் என்று இனி கேட்பார்களா? என்று ஞாநி போன வார கல்கியில் கேட்டிருக்கிறார். சச்சின் ரசிகர்கள் எல்லாம் இதை பற்றி பேசாமல் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள் என்ன செய்ய


டெல்லியில் பிஜேபி புள்ளிகளும் ஜெயலலிதாவை சந்திக்கிறார்கள் :-)

இப்படிக்கு,
அன்புடன்
முனி

15 Comments:

middleclassmadhavi said...

கேப்டன் கொடுக்கும் ப்ளாக்பெர்ரி நம்பர்களை மக்களுக்கு தெரிவிப்பார்களா?!!

willi said...

ப்ளாக்பெர்ரி உபயோகபடுத்த தெரியுமா !!!!

Anonymous said...

சூப்பர்..இட்லி... பேக் டு தி பார்ம்..

சுபத்ரா said...

:))))))))))

kothandapani said...

தமிழக அரசியல்வாதி செஞ்சா தவறு கர்நாடக அரசியல்வாதி செஞ்சா சரி என்ற மனபாங்கு தவறானது. பொது வாழ்க்கைக்கு வந்த பின் தனிப்பட்ட விஷயம் என்பது எல்லாம் செல்லாது. நாளைக்கு ஊழல் செய்துவிட்டு இது என் தனிப்பட்ட விஷயம் என்றால் விட்டு விட வேண்டியதுதான்.
நேற்று கருணா பார்பனர் என்றார் இன்று திருமா காங்கிரஸ் என்கிறார் நாளை வீரமணி காங்கிரஸில் உள்ள பார்பனர்கள் என்று கிச்சுகிச்சு மூட்டுவார்.
இலங்கை விஷயத்தை பொறுத்தவரை ஜெயாவின் response உண்மையிலே எதிர் பார்த்ததை விட அதிகம்தான். காங்கிரஸ் ஆட்சியில்
இருக்கும் வரை இலங்கை தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். சமுக அமைப்பாக ஆரம்பித்து அரசியல் அமைப்பாக மாறுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல். இதிலும் வைகோ மறுமலர்ச்சி ஏற்படித்து உள்ளார்.

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.மேலும் விபரம் அரிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

ப்ரியா கதிரவன் said...

//முதல் முறையாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலக நட்சத்திரங்கள் இணைந்து ' டுவென்டி டுவென்டி' முறையில் CCL மேட்ச்களில் விளையாடி ரசிகர்களை பரவசப்படுத்த இருக்கிறார்கள்//

இட்லி, எந்த ஊருல இருக்கீங்க? மேட்ச் எல்லாம் போன ஞாயிறு அன்னைக்கே முடிஞ்சு சென்னை ரைனோஸ் கப் வாங்கிட்டாங்க.

IdlyVadai said...

//மேட்ச் எல்லாம் போன ஞாயிறு அன்னைக்கே முடிஞ்சு சென்னை ரைனோஸ் கப் வாங்கிட்டாங்க.//

ஸ்ரேயா படத்தை போடவிட மாட்டீங்க போல. விடுங்க

IdlyVadai said...

//எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.மேலும் விபரம் அரிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.//

மகாத்மா காந்தியின் கண்ணாடிகளைக் காணவில்லையாம். அதை பற்றியும் போடுங்க!

Anonymous said...

வர வர இட்லிவட சவ சவ . கொஞ்சம் கவனிங்கப்பு... - SP

Ratan said...

அண்ணாவின் இதயத்தைத் திறந்தால் நம்ம கருணா நிதி இருக்கிறார்... கருணா நிதியின் இதயத்தைத் திறந்தால் யார் இருப்பார்?
(சரியாகச் சொன்னால் ஒரு ப்ளாக்பெர்ரி இலவசம்)

Anonymous said...

புது இட்லி , பழையவர் மாதிரியே எழுதனும்னு ஒரு கட்டாயமும் இல்லை. உமக்குன்னு ஒரு ஸ்டைல் கொண்டு வரலாமே!

Anonymous said...

!!!எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்!!!
யோவ்! அவரே கதைகளே பாதி ஆங்கிலத்திருந்து சுட்டதுதான்! இதுல சொல்ல வந்துட்டீங்க

jaisankar jaganathan said...

//டெல்லியில் பிஜேபி புள்ளிகளும் ஜெயலலிதாவை சந்திக்கிறார்கள் :-) //

இதுக்கு ஏதாவது உள் அர்த்தம் இருக்குதா?

Anonymous said...

அம்மாவின் ஆசை:
அனைத்து பாலங்களையும் உடைக்க வேண்டும்.புது சட்டமன்ற கட்டிடத்தை உடைக்க அம்மாவின் ஆசை:
அனைத்து பாலங்களையும் உடைக்க வேண்டும்.புது சட்டமன்ற கட்டிடத்தை உடைக்கவேண்டும்.அனைத்து புத்தகத்தையும் எரிக்க வேண்டும். அனைத்து டிவிகளையும் உடைக்க வேண்டும். அனத்து தனியார் மறுத்துவ மனைகளையும் தரை மட்டமாக்க வேன்டும்