பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 23, 2011

கலைஞர் அறிக்கை

கலைஞர் அறிக்கை இரண்டு நாளைக்கு முன்பே போட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த நீண்ட அறிக்கையை படிக்க எனக்கு இவ்வளவு நாள் ஆச்சு அதனால் கொஞ்சம் லேட் :-)

என்னைப் பற்றியும், என் குடும்ப வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கைப் பற்றியும் நேரம் வரும்போதெல்லாம் பல முறை உனக்கும், உன் வாயிலாக ஊராருக்கும் சொல்லி இருக்கிறேன். இப்பொழுது சொல்லப்போவது அதைப்போன்ற "சுய புராணம்'' அல்ல. சுயபுராணத்தைத்தான் "நெஞ்சுக்கு நீதி'' என்ற தலைப்பில் ஐந்து பாகங்கள் எழுதி முடித்திருக்கிறேனே. இப்பொழுது நான் எழுதப்போவதை அடுத்த பாகத்தின் முன்னுரை என்று கருதிக்கொண்டாலும் சரி, அதற்கிடையே எழுந்துள்ள "மன ஓலம்'' என்று எண்ணிக் கொண்டாலும் சரி, இந்தச் சூழலில் இவற்றை நான் ஞாபகப்படுத்தியே தீர வேண்டும்.

நான் உயிரினும் மேலாக கருதும் நமது கழகம், பெரும் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் கால கட்டம் இது. அந்த இழப்புக்கு எது காரணம்? இணைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக்கொண்ட தொகுதிகளின் கணக்கா? தமிழ்நாட்டிற்கென்றே தனியான "ஜபர்தஸ்து''களை, ஜனநாயக விரோதச்செயல்களை, சாட்டைகளாக கொண்டு, சர்வாதிகார "பாட்டை'' வகுத்துக்கொண்ட தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் நான் போக விரும்பவில்லை.

ஆனால் இந்தியாவிலேயே அல்லது தமிழ்நாட்டிலேயே அதிகார செல்வாக்கைப் பெருக்கி - "ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, லட்சம் கோடி சம்பாதித்து மூட்டைகளாகக் கட்டி வைத்திருக்கிற குடும்பம், கருணாநிதியின் குடும்பம்'' என்று தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்தவர்கள், மழை விட்டும் தூறல் விடவில்லை என்பதைப் போல, இப்போதும்கூட அந்த பிரச்சாரத்தை ஏடுகள் வாயிலாக, ஏனைய ஊடகங்களின் வாயிலாக கூறிக்கொண்டிருக்கிறார்களே, அவற்றை பொய்யுரை என்றும், புனைந்துரை என்றும், புளுகு மாயப்புழுதி மாயம் என்றும், என் தமிழ் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக சிலவற்றைத் தொகுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

நான் செல்வச் செழிப்பான பெரும் தனவந்தர் குடும்பத்தில் நான் பிறந்தவன் அல்லன். தஞ்சை மாவட்டத்தில் (தற்போது நாகை மாவட்டத்தில்) திருவும் வளமும் கொண்ட திருக்குவளை கிராமத்தில் சுற்றிலும் சூழ்ந்திருந்த வயல்களில் கிடைத்த பயிரையும், நெல்லையும், அரிசியையும் பயன்படுத்தி கொண்டு, ஒரு ஓட்டுவில்லை வீட்டில் விவசாயியாகவும் இசைமேதைகளில் ஒருவராகவும் இருந்த - முத்துவேல நாதசுரக்காரருக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தவன் நான்.

நான் உருண்டும் புரண்டும் தவழ்ந்தும் தள்ளாடி நடந்தும் பின்னர் திருவாரூர் பள்ளியில் பயின்றும், அங்கு பெற்ற அறிவால் அந்த இளமையிலேயே அண்ணாவையும், பெரியாரையும் முறையே அரசியல் இயக்கத்திற்கும், அறிவு இயக்கத்திற்கும் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டும், சூடு தணியாத சுயமரியாதை உணர்வோடு பொது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான்.

பதினான்கு வயதிலேயே "பனகல் அரசரை'' படித்து "படிக்க முடியாது கட்டாய இந்தியை'' என்று மொழிப்போரில் புகுந்து, அதற்கு அடுத்தடுத்த தொடர் களங்கள் பலவற்றைச் சந்தித்து ஐந்து முறை முதல்-அமைச்சராகவும், 12 முறை தமிழகச் சட்டப் பேரவை உறுப்பினராகவும் வெற்றி பெற்று - பொன்விழாக்கள், பவளவிழாக்கள் கொண்டாடியும்கூட, இலக்கியவேந்தர், கலை வேந்தர் என வேந்தர் பட்டங்களை பெற்றாலும்கூட, வேண நிலங்களுக்கு சொந்தக்காரன் என்றோ, வான்தொடும் மாளிகைகளுக்கு உரிமையாளன் என்றோ, அடுக்கி வைத்த பணப்பெட்டிகளுக்கு அதிபர் என்றோ என்னை நான் என்றைக்குமே ஆக்கிக்கொள்ள நினைத்ததும் இல்லை; அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இல்லை. அவற்றைத் தேடிக்கொள்ள திருட்டு வழியை தேடிக் கொண்டவனுமல்ல

அப்படியானால் இத்தனை ஆண்டுக்காலம் கட்சிக்கு பொருளாளராக, 42 ஆண்டு காலம் கட்சிக்குத் தலைவராக, 19 ஆண்டு காலம் ஆட்சிக்கு முதல்வராக இருந்த காலகட்டங்களில் எதுவுமே சம்பாதிக்க வில்லையா என்ற கேள்விக்கு நான் தரும் பதில் ஆம்; சம்பாதித்தேன், "தமிழுக்கு தொண்டு செய்வோன்'', "தமிழ் வாழ தலையும் கொடுக்கத்துணிவோன்'' என்ற பட்டப்பெயர்களை, புகழுரைகளை நிரம்ப சம்பாதித்தேன். என் எளிய வாழ்க்கையை நான் நடத்திட பொருளீட்டியதே இல்லையென்று புளுகிடும் துணிவு எனக்கில்லை, பொருளீட்டியது உண்டு. அந்தப்பொருளில் பெரும் பகுதியை வாழ்வின் இருளில் இருந்தோர்க்கு வழங்கியது உண்டு.

நான் முதலில் எழுதி, நானும் நடித்த "சாந்தா அல்லது பழனியப்பன்'' எனும் நாடகத்தை - 1940-களில் நூறு ரூபாய்க்கு விற்று, அந்தப்பணத்தை என் குடும்பச்செலவிற்கு மட்டுமல்லாமல், அடுத்த நாடகத்திற்கான முன் செலவுகளுக்கும் ஆரூர் நடிகர் கழக அமைப்புக்கும் அளித்தேன். அதைத்தொடர்ந்து, கோவை ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த "ராஜகுமாரி'' படத்திற்கும், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "மந்திரி குமாரி'', "தேவகி'' போன்ற படங்களுக்கும் நான் வாங்கிய பணம் மாதச்சம்பளமாக இருந்ததால் அந்த ஊதியத்தை, வருமானவரி போக மிச்சப்பணத்தை தான் தந்தார்கள்.

பின்னர் "பராசக்தி'', "மனோகரா'', "மலைக்கள்ளன்'', "இருவர் உள்ளம்'', "மருதநாட்டு இளவரசி'' - "திரும்பிப் பார்'', "பணம்'', "நீதிக்குத் தண்டனை'', "இளைஞன்'' என்றெல்லாம் தொடர்ந்து தற்போது "பொன்னர்-சங்கர்'' வரையில் 76 படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். சில படங்களுக்கு பாடல்களும் எழுதியிருக்கிறேன்.

பிரசாத் இயக்கத்தில் உருவான "தாயில்லா பிள்ளை'' மற்றும் "இருவர் உள்ளம்'' படங்கள் நூறு நாள் ஓடினால் மேலும் பத்தாயிரம் ரூபாய் தருவதாக பிரசாத் வாக்களித்து, அவ்வாறே நூறுநாள் அந்தப் படம் ஓடியதற்காக அவர் தந்த பத்தாயிரம் ரூபாயை கொண்டு என்னை பெற்றெடுத்த திருக்குவளையில் - "முத்துவேலர், அஞ்சுகம் தாய் சேய் நல விடுதி'' கட்டி அந்நாள் முதல்-அமைச்சர் பக்தவத்சலத்தைக் கொண்டு திறப்புவிழா நடத்தினேன்.

அப்பொழுது நான் எழுத்தாளர் மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினரும் கூட (எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் இருந்தவன்). இதே போல நான் எழுதிய படங்கள் அனைத்திலும் பெற்ற ஊதியத்தில் திருவாருக்கு அடுத்த காட்டூரில் சிறிதளவு நஞ்செய் நிலம் வாங்கவும் பயன்படுத்திக் கொண்டது போக மிச்சத்தை நலிந்தோருக்கே வழங்கினேன். காட்டூரில் ஆரம்பப் பள்ளிக்கூட கட்டிடத்திற்கு அப்போதே நிதியளித்து அந்தக் கிராமப்பகுதியில் கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிந்தேன்.

கட்சிக்குப் பொருளாளராக இருந்தபோது அண்ணாவின் ஆணைப்படி, தமிழகத்தில் ஊர்தோறும், நகர்தோறும், பட்டி தொட்டி, குக்கிராமம் என செல்லாத இடமில்லை என்ற அளவிற்குச் சென்று - கழகக் கொடியேற்ற, கழகத்தினர் இல்லத்தில் உணவருந்த என்பதற்கெல்லாம் கட்டணம் விதித்து - சென்னை விருகம்பாக்கம் கழக மாநாட்டில் அண்ணாவிடத்தில், மூதறிஞர் ராஜாஜி, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பொதுவுடைமை வீரர் பி.ராமமூர்த்தி, பார்வர்ட் பிளாக் இயக்கத்தைச் சேர்ந்த பி.கே.மூக்கையா தேவர் ஆகியோர் முன்னிலையில் 11 லட்சத்தை தேர்தல் நிதியாக அளித்தேன். வெள்ள நிவாரண நிதி, புயல் நிவாரண நிதி, கைத்தறியாளர் கண்ணீர் துடைக்க நெசவாளர் நல்வாழ்வுக்காக நிதி, இப்படி எத்தனையோ நிதிகள் வழங்கியும்-வசூலித்து தந்தும் தொண்டாற்றியவன்தான் நான்.

2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்'' திரைப்படத்திற்காக 11 லட்சம் ரூபாயும், "கண்ணம்மா'' திரைப்படத்திற்காக 10 லட்சம் ரூபாயும் கிடைத்ததை சுனாமி நிவாரண தொகையாக -அப்போதிருந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் மு.க.ஸ்டாலின் மூலமாக நேரடியாக கொடுக்க செய்தேன். 9-7-2008-ல் "உளியின் ஓசை'' திரைப்படத்திற்காக எனக்கு தரப்பட்ட 25 லட்சம் ரூபாயில் ஏழு லட்சம் ரூபாய் வருமானவரிபோக மீதத்தொகை 18 லட்ச ரூபாயை அன்று கலையுலகை சேர்ந்த நலிந்த கலைஞர்களுக்கு உதவிநிதியாக - கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நேரடியாக வழங்கினேன்.

17-9-2009இல் "பெண் சிங்கம்'' திரைப்படத்திற்காக எனக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்தத்தொகையினை அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்குவேன் என்று அறிவித்ததை யொட்டி, அப்படி வழங்கப்பட வேண்டிய தொகை 61 லட்சம் ரூபாய் என்று கூறிய போது என்னுடைய சொந்த கையிருப்பு நிதி 11 லட்சம் ரூபாயையும் சேர்த்து உதவி நிதியாக 29-10-2009 அன்று வழங்கினேன். 27-4-2010 அன்று "இளைஞன்'' திரைப்படத்துக்காக வருமானவரி போக 45 லட்சம் ரூபாய் எனக்கு வழங்கப்பட்டது. அந்த தொகையினை முதலமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து பிறகு மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுக்காக அந்த தொகை உதவி நிதியாக வழங்கப்பட்டது.

"பொன்னர் -சங்கர்'' திரைப்படத்திற்காக 8-9-2009-ல் 10 லட்சம் ரூபாயும், 6-6-2010-ல் 121/2 லட்சம் ரூபாயும் எனக்கு வழங்கப்பட்டது. இந்த படத்திற்காக தரப்பட வேண்டிய 25 லட்சம் ரூபாயில் வரியாக 21/2 லட்சம் ரூபாய் போக எஞ்சியத்தொகை 221/2 லட்சம் ரூபாயாகும். இந்த தொகையிலிருந்து காவல் துறையிலே விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற வீரர்களுக்கு வழங்கச் செய்தேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் தொல். திருமாவளவன் வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் நிதியினை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்த்துள்ளேன்.

கழகத்தை தோற்றுவித்த தலைவர்கள், தோன்றா துணைவர்களாக இருந்த தலைவர்கள், உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் தொண்டர்கள் ஆகியோருக்கு குடும்ப நிதியாக, நல வாழ்வு நிதியாக அள்ளித் தந்தது ஆயிரம் ஆயிரம். அவை இன்றைக்கும் என்னுடைய பெயரால் அமைந்துள்ள அறக் கட்டளைகளின் சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாள் நிகழ்ச்சிகளிலும், மாலைக்கு பதிலாகவும், பொன்னாடைகளுக்கு பதிலாகவும் வழங்கப்பட்ட நிதியினையும் முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியிலே சேர்த்திருக்கிறேன்.

ஈழத்தமிழர் நிவாரணத்திற்காக தமிழக அரசின் சார்பில் நிதி திரட்டப்பட்ட போது என்னுடைய சொந்தப் பொறுப்பில் 10 லட்சம் ரூபாயினை நன்கொடையாக வழங்கியிருக்கிறேன் "சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த என் மனைவி தயாளு அம்மையார் அதிலிருந்து பிரிந்து வந்த வகையில் கிடைக்கப்பெற்ற 100 கோடி ரூபாயில் எனக்கு கிடைத்த 10 கோடி ரூபாயில் ஐந்து கோடி ரூபாயினை பங்கீட்டுத் தொகையாக செலுத்தி, தி.மு.கழகத்தின் சார்பில் "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை'' ஒன்றினை கழகத்திலே உள்ள நலிந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக தொடங்கப்பட்டது.

11-1-2007 அன்று நடைபெற்ற 30-வது புத்தக கண்காட்சி விழாவில் நான் பேசும்போது -இந்த 5 கோடி ரூபாயிலிருந்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவித்து, அவ்வாறே அந்த சங்கத்துக்கு அந்த தொகை வழங்கப்பட்டது. அந்த தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையை கொண்டு-அந்த சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் நல்ல புத்தகங்களை, சமுதாய சீர்திருத்த கருத்துகள் தாங்கிய புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள், வெளியிடும் பதிப்பாளர்கள் ஐந்து பேரை தேர்வு செய்து, தலா ஒரு லட்சம் பொற்கிழி வழங்கிட கூறியுள்ளேன்.

இந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக்கொண்டு "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை'' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்டு இதுவரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

தி.மு.கழக சார்புடைய "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை''க்கு நான் கொடுத்ததில் எஞ்சிய நான்கு கோடி ரூபாய்க்கு மாதந்தோறும் கிடைக்கின்ற வட்டித்தொகையிலிருந்து-கழகத்திலே உள்ள நலிந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2005 நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மேமாதம் வரை 2337 பேருக்கு மொத்தம் 2 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளன. இந்த உதவித்தொகை தற்போதும் ஒவ்வொரு மாதமும் தரப்பட்டு வருகிறது.

"சன்'' தொலைக்காட்சியிலிருந்து எனக்கென்று கிடைத்த 10 கோடி ரூபாயில்-"கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை''க்கு அளித்த 5 கோடி ரூபாய் போக எஞ்சிய 5 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. அந்த வைப்புநிதிக்கு கிடைத்த வட்டித்தொகையிலிருந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக தமிழ்ச்செம்மொழி நிறுவனத்திற்கு 26-7-2008 அன்று வழங்கி அந்த தொகையிலிருந்து கல்வெட்டியல், தொன்மையியல், நாணயவியல் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி செய்யும் சான்றோர்களுக்கு விருது வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன்.

கோவையில் நடைபெற்ற உலக தமிழ்மாநாட்டின்போது முதன் முறையாக இந்த விருது பின்லாந்து நாட்டு தமிழ்அறிஞர் அஸ்கோ பர்போலாவுக்கு பத்து லட்ச ரூபாய் பொற்கிழியாக நன்கொடையுடன் வழங்கப்பட்டது. இதற்கெல்லாம் மேலாக சென்னை கோபாலபுரத்தில் நான் தற்போது வாழ்ந்து வரும் என்னுடைய வீட்டைக்கூட ஏழை-எளியவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு மருத்துவமனையாக மாற்றி அளிப்பேன் என்றும் அறிவித்து, அதற்கான முறையான பத்திரப்பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன.

"சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாளு அம்மாள் பங்குதாரராக இருந்து பிரிந்ததையொட்டி - 18-10-2005 அன்று "சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தால் தரப்பட்ட தொகை 100 கோடி ரூபாயில் - 22.5 கோடி ரூபாய் வருமான வரியாக முறைப்படி செலுத்திய பின் எஞ்சிய தொகையான 77.5 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்டபோது என் இளைய மகள் கனிமொழி தனக்குக் கிடைத்த 2 கோடி ரூபாயை பங்குத்தொகையாக செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.

கனிமொழி அதை விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என்று அதற்கு ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாபமோ, நட்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பங்குதாரராக ஆகிவிடுவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொருநாள் நடவடிக்கைக்கும் அனைத்து பங்குதாரரும் பொறுப்பாக ஆவதில்லை.

டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஒரு நிறுவனத்தில் நடைபெறுகிற வரவு-செலவு, கொடுக்கல்-வாங்கல், இவற்றில் எல்லாம் அந்த நிர்வாகத்தின் பங்குதாரர்கள் பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்று விதிமுறை இல்லை என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டிய பிறகும் கூட; கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தின் நிர்வாகி தம்பி சரத் குமாரையும், என் மகள் கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர்கூடி, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள போதிலும்கூட, அத்துடன் நிம்மதி அடையாது, நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி - புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என்று அதுவும் "தர்ப்பைப் புல்'' முளைத்த இடமாகப் போக வேண்டுமென்று குமரி முனையிலிருந்து இமயக் கொடுமுடி வரையிலே உள்ளவர்கள் தவம் கிடக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை.

உடன்பிறப்பே, உனக்கும் இந்த உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான், உன் தமையன் நான் "சுயபுராணம்'' இது என்றாலும் சுயமரியாதைப் புதினமாக இதைக் கருதி இந்தக் கடிதத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரையில் ஒவ்வொரு வரியாக நீ படித்து, சிந்தித்து, புரிந்துகொண்டு, செயல்படுத்துவாயானால் தன்மானக் கழகமாம் தமிழர்நலம் தேடும் இந்தப் பாசறை அறப்போர்க் கணைகளை ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் வடிவில், தம்பி தங்கைகள் உருவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது திண்ணம்

குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இந்தியருக்கு அமெரிக்கா விருது! - முரசொலி செய்தி


46 Comments:

Anonymous said...

Manjal Comment Superb!!

Anonymous said...

"Kaneer Thulikal" !!!!!! no wonder they were called as Kaneer thulikal when DMK was formed...

-Kannan

Anonymous said...

"Kaneer Thulikal" !!!!!! no wonder they were called as Kaneer thulikal when DMK was formed...

-Kannan

Anonymous said...

***குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம்****

எப்பிடிய்யா இந்த மாதிரி டைமிங்கா மஞ்சள் கமெண்ட் போடுறீங்க. சூப்பார். வாழ்த்துகள்.

”மாங்காய்ப் பால்உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி”

பிரேம்

krishna said...

yappaa saami...ippovae kanna kattuthae.... thaathaa intha kathai ellam unga peranukkum pethikkum solli kaathu kuthunga.... egalukku eppovo kuthittaanga...

krishna said...

Yappaa Saami...ippovae kanna kattuthae... thaathaa intha kathai ellaam unga peranukkum, pethikkum sollunga... engalukku eppovo kaathu kuthittaanga....

Gopal said...

How and why 214 crores were transferred to kalignar TV by Balwa?
Why it was returned only after Raja's arrest? Can Karuna answer this?

prakash said...

As per his article, he gave all his money to others, so don't he have any money at all?

How he call share from Sun TV, is it free? i.e how he invested money on sun tv?

Ganpat said...

சரியோ, தவறோ, ஒரு 90 வயது முதியவரால், முற்றிலும் பிரதிகூலமான நிலையில்,
இவ்வளவு கூர்மையாகவும் தெளிவாகவும் சிந்திக்க முடிகிறது எனும் உண்மையே மிகுந்த வியப்பளிக்கிறது!

prakash said...

As per his article, he gave all his money to others, so now don't he have any money at all?

How he got share from Sun TV, is it free? i.e how he invested money on sun tv?

Anonymous said...

Sarth and Kani are innocent then who is responsible for getting the 200 crore money to Kalaingar TV. If your daughter is innocent then identify the people who are responsible for the deal

Jawahar said...

ஒரு பூசனிக்காய் தோட்டம் சோற்றில் மறைக்கப்படும் ஆச்சரியம்!

http://kgjawarlal.wordpress.com

ரத்தினம் said...

அந்த வஞ்சனையாளர்கள் யார் என்று கூற முடியுமா ? அ.தி.மு.க. இப்பொழுதுதான் பதவியில் உள்ளனர். மத்தியில் காங்கிரஸ் .. உங்களுக்கு சாதகமானவர்கள். வேறு யார் உங்களுக்கு வஞ்சனை செய்கின்றனர் ? சன் குடும்பமா ? இல்லை, உங்களுக்கு வாக்களிக்காத சிறுபான்மையினரா ?

Harish said...

Inga kaati irrukkardhu ,ellaarukkum theriyanumnnu sambaadhicha panam , adhanaala vaari vazhangi irrukkinga. . . . veliya theriyaama sambaaricha konjam panam enna aachu? andha kanakku edhula varum? Kooti kazhichi paathaa sammandhamaay illayaay!!!

R. J. said...

It is hard to believe that everyone is against such an honest person whose life and earnings are open books. MK can do only one thing now. An account statement of his incomes since he was 14, clearly indicating his income from films. He has donated the entire salaries he received for his last 5 films - which run into lakhs. Before that it was in thousands and hundreds. How is it that all his wards are Crorepathis with no big business ventures? How and how much did MK invest in Sun TV and when was it? How is it Stalin's son has a beach side mansion in ECR where he has parked all his luxury cars - some 20 or so - including Masereti, BMW etc. What was his income from the films he produced? MK is answerable for his entire clan. - R. J.

Anonymous said...

then what is the source for crores of rupees that has been declared asassets by Kanimozhi,Stalin.ALagiri in their election forms.what is the source for OLIVER ROAD.C.I.T.NAGAR BUNGALOWS.HOW MONEY COMES TO ALL HIS GRANDSONS FOR INVESTING IN CRORES IN TAMIL FILM INDSTRY.
IT IS NOT ONLY MONEY BUT THE ARM TWISTING DONE BY HIS KITH AND KIN THAT ENSURED KARUNANIDHIS DOWNFALL. THE AMOUNT OF ANGER AND VERUPPU THAT WAS PILED UP MADE PEOPLE GO AND THROW OUT DMK AND KARUNANIDHI.IT WAS A SILENT REVOLUTION.THE BEST THING KARUNANIDHI CAN DO NOW IS TO KEEP QUIET FOR SOMTIME,LEAVE ALL BRHMIN BAITING AND WAIT FOR PEOPLE TO FORGET THE ATROCITIES OF HIS FAMILY MEMBERS.

பாலாஜி said...

பொலம்பறதைப் பாத்தா பாவாமா இருக்குப்பா..........

Anonymous said...

Nazir Said,

இப்போ எதுக்கு இந்த சுய விளக்கம் என்று கேட்கும் கழக சிங்கங்களுக்கான பதில் - இதைதான் தாத்தா டெய்லி நாலு முறை சொல்லி பழகறார். CBI Interogation அப்புறம் வந்திடுசுனா கோர்வையா சொல்லலாமே.

pvr said...

Whom does he blame? the voters?
and, adhenna dharbhai pull avLo kevalamaanadha?

Possibly he has reached the age that prevents any learning. Pity him.

Tamil MA said...

மனசாட்சி இல்லாம கட்டுரை எழுதுவது எப்படின்னு மு.கருணாநிதிகிட்ட கேட்கலாம்.

Tamil MA said...

மனசாட்சி இல்லாம கட்டுரை எழுதுவது எப்படின்னு மு.கருணாநிதிகிட்ட கேட்கலாம்.

சத்தியமூர்த்தி said...

இவ்ளோ சொன்னாரு, இத்தனை தர்மங்களுக்கு பிறகு எவ்ளோ சொத்து எங்கெங்கே இருக்குதுன்னு சொல்லலியே? சன் டிவி எப்படி ஆரம்பிக்கப்பட்டது, முதல் யார் கொடுத்தார், யார் யார் க்யாரண்டி கொடுத்தார் (திமுக தந்தது), அப்படி கிடைத்த க்யாரண்டிகளுக்கு (திமுகவுக்கு) ஏதாவது லாபம் கிடைத்ததா (100 கோடி வேண்டாம் ஒரு 20 கோடி?), எல்லா வருமானங்களையும் தர்மம் செய்தவருக்கு எப்படி சிஐடி காலனி வீடு கட்ட முடிந்தது, திரைப்படத்துக்கு கதைவசனம் எழுதிய ஏ.எல். நாராயணன், ஆரூர்தாஸ் போன்றோர் ஒரு படத்துக்கு எத்தனை சம்பாதித்தார்கள், இப்பொழுது இருக்கும் கதை வசனகர்த்தாக்களுக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு என்பன போன்ற தகவல்களையும் மு.க. முரசொலிப்பார் என்று நம்புவோம்.

Anonymous said...

Intha aalu taan neraiya sothu sugam serkulanu thaan sollurarae oliya thannudaiya kudumbam evvalo serthu vachirukkunu sollavae mattenu adam pudikkuraar. Varathai jalathula ivaru puli aana padikkuravan antha kaalathula irunthavanga maathiri madaiyarkal kedaiyaathu...

Anonymous said...

//"சன்'' தொலைக்காட்சியிலிருந்து எனக்கென்று கிடைத்த 10 கோடி ரூபாயில்//

ஏன் கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள்,எப்படிக் கொடுத்தார்கள் காரணமென்ன?

- பொல்லாதவன்

Anonymous said...

//சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாளு அம்மாள் பங்குதாரராக இருந்து பிரிந்ததையொட்டி - 18-10-2005 அன்று "சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தால் தரப்பட்ட தொகை 100 கோடி ரூபாயில் ..//


இதுவுமெதுக்குக் கொடுத்தாங்க,ஏன் கொடுத்தாங்க?

Anonymous said...

//அந்த நிர்வாகத்தின் ஒவ்வொருநாள் நடவடிக்கைக்கும் அனைத்து பங்குதாரரும் பொறுப்பாக ஆவதில்லை//

புரியுதுங்க. அடுத்த பலிகடா சரத்தா?பேஷ்..பேஷ்..

Anonymous said...

கனி கைத்துக்கு இந்தியா முழுதும் போராட வேண்டுமா? அடுத்து ராஜாத்தி,தயாளு கைதானால்...

Anonymous said...

ellorum madayargal endru thiru mk ninaikkirar.
Kani s shareholder like any other person in Ka'gar TV. kadhula poo irundhakoota nambamudiyathu.
Kalaingar TV seems to be closed held limited company with 60/20/20 share by 2 family member and 1 employee.
It is not widely held Pub Co- in that case MK sollum karanathai nambalam.
Why a Vegetable company should be interested in Kalainge TV suddenly?
Why should u take loan from Bombay- vadakathiayar when u can get same from TN itself.
who will give loan of 200cr+ to a company having investment of 10plus cr? - not even made profit-
Mk pl be transparent about Anna/Murasoli/K Trust - who is managing? no udanpirappu only blood related- than adavittalum sadai adum!!!

Anonymous said...

suya puranam- solvathai sollivaippom
kenayargal kettu /padithu rasikkattum enru MK feel panrar.

even in this as usual Brahamiin baiting why? they are very less in % of Population-

suresh said...

மே பதிமூன்றாம் தேதி, தேர்தல் முடிவுகள் வரத்தொடங்கிய உடன், தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ராஜினாமா கடிதம் லீக் ஆகிவிட்டது. அதுவும் கவர்னர் மாளிகையில் இருந்து.
கடிதம் எண்: 8,57,68,69,38,38,49,35,89,93,736.
http://crackedpots.co.in/?p=965

Anonymous said...

karuvin kutram enru pazha.karuppaiah sonnadhu 100% sari thaan.

indha sotta thalaiyana ellam madhichu avan ezhudharadha padikaradha vida urupadiya edhavadhu seiyalam.

Anonymous said...

இவ.. அமைச்சர் மரியம் பிட்சையின் மரணம் கொஞ்சம் சந்தேகத்திற்கு இடமாக உள்ளதே.. நே ல ஆரமிச்சு ரு ல முடியும் ஒருவரும், அவர் தம்பி ராம நவமியில பாதியும் ஜெயம் ரவியில மீதியும் பெயர் கொண்டவருக்கும் தொடர்பு உண்டாம்ல? இடிச்ச லாரி யாருது? அது எங்க இருக்கு ? முன்னால போன எஸ்கார்ட் போலீஸ்காரங்க யாருவே? ஒரு லாரிய உள்ள உடுற அளவுக்கு என்னத்த எஸ்கார்ட் பண்ணினாணுவ?

Anonymous said...

F L A S H N E W S !!!!!
--------------------------
Kalaignar gives up Manjal Thudnu!

See this: http://new.vikatan.com/news/images/IN23_KARUNANIDH.jpg

தீய முக சொம்பு said...

ஸூப்ப்ர் தலைவா,
அப்படியே நீங்க சாகும்போது இல்ல உங்க குடும்பம் உங்கள கொலை செய்யும்போது தமிழ், தமிழ்நாடு, இந்தியா ன்னு சொல்லிட்டு சாவுங்க. அப்பத்தான் உங்க பேரு, போட்டோ,சிலைன்னு வச்சுக்கிட்டு காந்தி rangeukku திராவிட அரசியல் பண்ண ஏதுவாக இருக்கும்.

தீய முக சொம்பு

தீய முக சொம்பு said...

ஸூப்ப்ர் தலைவா,
அப்படியே நீங்க சாகும்போது இல்ல உங்க குடும்பம் உங்கள கொலை செய்யும்போது தமிழ், தமிழ்நாடு, இந்தியா ன்னு சொல்லிட்டு சாவுங்க. அப்பத்தான் உங்க பேரு, போட்டோ,சிலைன்னு வச்சுக்கிட்டு காந்தி range'la திராவிட அரசியல் பண்ண ஏதுவாக இருக்கும்.

தீய முக சொம்பு

தீய முக சொம்பு said...

சரியோ, தவறோ, ஒரு 90 வயது முதியவரால், முற்றிலும் பிரதிகூலமான நிலையில்,
இவ்வளவு கூர்மையாகவும் தெளிவாகவும் சிந்திக்க முடிகிறது எனும் உண்மையே மிகுந்த வியப்பளிக்கிறது!

----
இது போல மக்கள் இருக்கும்வரை எங்களை யாரும் அசைக்க முடியாது.
Bye Bye. See you all in 2016. Next Target is just the Same Figure of Two Lakh Crores (but in USD) ONLY.

தீய முக சொம்பு

Anony8 said...

One of the DMK campaigners managed to convince (and confuse) people by saying... "2G airwaves scam is a meaningless accusation, How can one sell Air and how can one do corruption in it???"

LOL

No Wonder He still writes such letter to stupid people.

Anony8 said...

நான் செல்வச் செழிப்பான பெரும் தனவந்தர் குடும்பத்தில் நான் பிறந்தவன் அல்லன்.

அடுக்கி வைத்த பணப்பெட்டிகளுக்கு அதிபர் என்றோ என்னை நான் என்றைக்குமே ஆக்கிக்கொள்ள நினைத்ததும் இல்லை

----------
Lots of Same Side Goals.

Anonymous said...

இரண்டு விசயங்கள் இந்த மர மண்டைக்கு புரியவில்லை.

ஒன்று. கலைஞர் டிவி வாங்கிய ரூபாய் 200 கோடி லோன் ஒரு தின்சரி நடவடிக்கை எனவும் அந்த முடிவு எடுக்கும் அதிகாரம், மற்றும் அது பற்றிய முடிவுகள் எதிலேயும் எம்.டி.யோ கனிமொழியான இன்னொரு பங்கு தாரருக்கும் கிடையாது என்றால், அந்த முடிவை, யார் எடுத்தது? அந்த‌
ப்யூன் பெயர் என்ன ?

இரண்டாவது, கலைஞர் டிவி க்கு லோன் வேண்டுமென்றால், திமுக தொண்டர்களாக இருக்கும் லட்சோப லட்சம் அங்கத்தினர்களிடம் each Rs.100
அல்லது வங்கிகளிடம் இருந்து பெற்றிருக்கலாமே ! திடீரென ஒரு அறியாத தெரியாத நபர் எப்படி கலைஞர் டிவிக்கு கடன் தருகிறார் ?

Anonymous said...

//ஒரு பூசனிக்காய் தோட்டம் சோற்றில் மறைக்கப்படும் ஆச்சரியம்//

I DO NOT THINK ANY MORE COMMENT NECESSARY.

Anonymous said...

Actually, it was the lift operator in Kalaignar TV office who did the 200 cr transaction. Raja and K(R) ani are innocent. They are being targeted.

Anonymous said...

http://savukku.net/home/878-2011-05-24-19-40-29.html

Anonymous said...

கனிமொழி கவிதை:
மூடிய விழிகளைத் தாண்டி

துளைக்கின்றது குத்திட்ட பார்வை

(ஓ.பி.சைனியின் பார்வை)
அசைவற்ற முகதில் உறைந்துகிடக்கிறது

(ராசாவின் முகத்தில் சவக்களை)
புன்னகை.

சொல்லொணாப்
பதற்றங்கள் நிறைக்கின்றன என்னை.

(பெயில் கிடைக்குமா, கிடைக்காதா என்று)
அறையின் கதவுகளுக்குப் பின்னால்
பத்திரமாய்ப் பதுக்கிவைத்திருக்கிறேன்

(ராசாவையும், சரத்குமாரையும், சாதிக் பல்வாவையும்)

குருதியில் தோய்த்த
கத்திகளை கருத்த உதிரத்தின் நெடியோடு.


குத்தீட்டிகளும் பஞ்சடைத்த
மிருகங்களும் நிறைந்த அறைக்கு

(சிறை எண் 6. திஹார்)
எப்படித் திரும்புவேன்
இனி எப்படிக் கடப்பது உன்
விழி தவிர்த்த பெருமிதத்தோடு நடந்த

சாலைகளை.
(திஹார் சிறையின் சாலைகள்)

ஓய்ந்து விரிந்த இரவுகளில் கனவாய்
வேண்டுதலாய் யாசித்து சிறு
பிசிறில்லாமல் ஒத்திகைபார்க்கப்பட்ட
இத்தருணம் சிதறி உருள்கிறதுதானே
வகுக்கும் பாதைகளில்.

(நிரந்தரமான சிறைப் பாதை)
நினைவுகள் முகிழதாழ்கள்
நெகிழ்ந்து பேழைகள்
திறக்கின்றன பேய்களும்
தேவதைகளும் ஒருங்கே
அலையும் காடுகளில் முகையும்பூக்களின்
மணம் திக்குகளை நிறைக்கிறது.
அதன் திரை விலக்கித் துவளும்
கரங்கள்.

(கரங்களில் விலங்குகள்) -சவுக்கு blog

நா.க.மலர்ச்செல்வன் said...

இந்த அறிக்கையை மட்டும் படிக்காமல் போய் இருந்தால் கருணாநிதி தப்பானவர் என தப்பபிராயம் கொண்டிருப்பேன் என்றென்னும் பொழுது என் மணம் ஐயகோ என பிதற்றுகிறது, காலடியில் உள்ள பூமி நழுவுவது போல் உள்ளது, அடங்க மாட்டா துயரம் என்னுள் குமுறுகிறது ...
ஆயிரம் இருந்தாலும் இமயம் முதல் குமரி வரை நடக்கும் சதி ஏற்றுகொள்ளவே முடியாது...

உடன்பிறப்பே பொங்கி எழு...
மூளையை அடகு வை...
சிந்திப்பதை மற...
என்ன ஆனாலும் முரசொலி அறகட்டளை சொத்து பற்றி மட்டும் சிந்திக்காதே !!!

Anonymous said...

athu enna tharpaipul athiram kannai maraikirathu pathavi pariponathum pulambal

R.Gopi said...

Idhu oru NEELA OLAM.....