பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 19, 2011

'துரோகம்' அரசியலில் இல்லாத வார்த்தை

புதுச்சேரியில் தனித்து ஆட்சி அமைத்து, கூட்டணிக்கு துரோகம் இழைத்துவிட்டார் என புதிய முதல்வர் ரங்கசாமி மீது ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் ரங்கசாமி காங்கிரஸ் 15 இடங்கள், அதிமுக 5 இடங்கள் வென்றது.

ஒரு சீட் இருந்தால் பெரும்பான்மை என்ற நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏ சிவகுமார் ஆதரவுடன் ரங்கசாமி ஆட்சி அமைத்தார். இதில் வேடிக்கை என் என்றால் இவர் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றவர். இதனால் ஜெயலலிதா கூட்டணிக்கு ரங்கசாமி துரோகம் இழைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

இது துரோகம் என்றால் வைகோவை கழட்டிவிட்டதும் துரோகம் தான்.

21 Comments:

சந்திரமௌளீஸ்வரன் said...

மம்தாவை பார்த்து இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்; தனித்தே ஆட்சி அமைக்க வாய்ப்பிருந்தும் இணைந்து தானே தேர்தலில் நின்றோம் வாருங்கள் அமைச்சரவையில் பங்கு பெறுங்கள் என காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார்.. இன்றைய செய்திப்படி காங்கிரசு அதனை ஏற்றதாகவும் தெரிகிறது..

தமிழகத்தில் இந்த ஃபார்முலா ஜெ செய்வாரா

Anonymous said...

HI Chandramoulishwaran,

Wait and Watch. This TMC will also be merged with Congress (I).

Regards
pradeep

Anonymous said...

இட்லிவடைக்கு என்ன ஆச்சு? திடீரென்று அம்மாவை கழட்டி விட்டது போல தெரிகிறதே!

வேலவன் said...

இட்லி வடை ஏன் சுருங்கி விட்டது.. ஒரு நிமிட பதிவுகள் என்று முடிவு எடுத்துவிட்டிர்களா ? இல்லை மேட்டர் இல்லாமல் சும்மா ஒப்பேத்தி வலைத்தளம் ஓடுதா?

Anonymous said...

இது காங்கிரசுடன் நெருக்கமாக ... பயன்படுத்தும் ஆயுதம்.

புரட்சித்தலைவன் said...

தமிழகத்தின் நிலை வேறு. அதிமுக தனி பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைத்துள்ளது. ஒரு வேளை தனிபெரும்பான்மை இல்லாமல் காங்கிரசுடனோ அல்லது பாமக உடனோ கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தால்தான் கூட்டணி துரோகம். ஆனால் பாண்டியில் நிலைமை வேறு. ரெங்கசாமி கூட்டணியை புறக்கணித்து விட்டு பெரும்பான்மை பெற சுயேட்சையுடன் கூட்டணி வைத்தது கூட்டணி துரோகம். இங்குதான் ரெங்கசாமிக்கு சிக்கல். 15 இடங்கள். இதில் ரெங்கசாமி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். எனவே ஆறு மாதத்தில் ஒரு தொகுதிக்கு இடை தேர்தல் வரும். தற்சமயம் 14 தொகுதிகள். சுயேச்சையை சேர்த்து 15 தொகுதிகள். அறுதி பெரும்பான்மை இல்லை. 16 தேவை. எனவே திமுக வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது. தற்சமயம் திமுக காங்கிரஸ் கூட்டணி இருப்பதால் அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு. ஜெயாவின் இந்த கண்டனத்தை காங்கிரஸ் பயன்படுத்தி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வாய்ப்பு அதிகம் உள்ளது. தேர்தல் தோல்வியால் ரெங்கசாமி மீது ஏக கடுப்பில் உள்ள காங்கிரஸ் இதற்கு முயற்சிக்கும். ரெங்கசாமிக்கு வேறு வழி இல்லை. அதிமுகதான் ஒரே தீர்வு. கூட்டணி ஆட்சிதான் முடிவு. இல்லை என்றால் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் ரெங்கசாமியை படுத்தி எடுத்து விடுவார்கள். ஏற்கனவே காங்கிரசிடம் பட்டது ரெங்கசாமிக்கு நினைவிருக்கலாம். இப்ப பாருங்க ரெங்கசாமி புடுங்கி கிட்டு அதிமுகவே சரணம் என்ற நிலைக்கு வரும். ஒரே நாளில் இது நடக்கும். ஜெயா ஒரு கருத்து தெரிவித்தால் அதில் நிறைய அர்த்தங்கள் இருக்கும் என்பதற்கு இதுவும் உதாரணம். ஏற்கனவே ஒரு முறை "டைம்ஸ் நொவ்" ஸ்பெக்ட்ரம் பேட்டி கொடுத்து ராசாவை திகார் ஜெயிலுக்கும் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நிலைக்கு தள்ளினார். இனிமேலாவது வாசகர்கள் அரசியல் தெரிந்துகொண்டு கருத்து தெரிவிக்கவும்.

------Sivakumar.M - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

"தினமலரில் இருந்து சுட்டது"

idlyvadai
how come it is betrayal for MDMK
She offered seats for a sinking party which does not have any say with the people. It is Vaiko who opted out. Don't say because of thanmanam he opted out. He or his party members losed so calledn thanmanam when then had alliance with DMK.

Anonymous said...

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வினியோகிப்பதை பள்ளி கல்வித்துறை திடீரென நிறுத்தியுள்ளது. இந்தப் பாடப் புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த குறிப்புகளும், அவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. அந்தப் பகுதிகளை நீக்கிவிட்டு புத்தகங்களை வெளியிட அதிமுக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

Anonymous said...

ஜெ. பதவியேற்பு விழா-மோடி வந்ததால் புறக்கணித்த மனிதநேய மக்கள் கட்சி!

ஜெ. பதவியேற்பு விழா-மோடி வந்ததால் புறக்கணித்த மனிதநேய மக்கள் கட்சி!

Anonymous said...

Ippo IdlyVadai Sun TV mathiri... Athavathu Nadu nilaiyam...

ராவணன் said...

அப்போ நீங்க அடுத்த மாதம் டீ பார்ட்டி போட‌ப்போறது வேற்றுக்கிரகவாசி கூடவா அம்மணி !?

kothandapani said...

இது வரை ஜெயதான் கூட்டணி கட்சிகளுக்கு தண்ணீ காட்டுவார். முதன் முறையாக கூட்டணி கட்சிகளின் வலியை உணர ஒரு சந்தர்ப்பம்
கொடுத்துள்ளார் ரங்கசாமி . இனிமேலாவது மனிதர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் ஜெயா. தினமலரில் வந்த கட்டுரையில் உள்ளது
எல்லாம் ரங்கசாமிக்கு தெரியாதா. அந்த நேரத்தில் இதே ஜயாவே பேரத்திற்கு படிய மாட்டர்களா அல்லது தீண்டதகதவன் என்று திமுக ஒதுக்கபட்டுவிடுமா. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

Anony8 said...

இது துரோகம் என்றால் வைகோவை கழட்டிவிட்டதும் துரோகம் தான்.
------------

She Gave them 12 Seats beyond their potential. MDMK only turned it down and went out.

சட்னி சாம்பார் said...

இது துரோகம் என்றால் வைகோவை கழட்டிவிட்டதும் துரோகம் தான்.
------------

She Gave them 12 Seats beyond their potential. MDMK only turned it down and went out.

She Also invited Vaiko for her Ceremony to be seated in 1st row. Vaiko himself said this.

Anonymous said...

இது துரோகம் என்றால் வைகோவை கழட்டிவிட்டதும் துரோகம் தான்.

IdlyVadai started looking for cheap publicity

Anonymous said...

Without Rangasamy, AIADMK winning 5 seat is impossible. Rangasamy won the majority because of his earlier good will. - karuna pondicherry

cho visiri said...

//Without Rangasamy, AIADMK winning 5 seat is impossible. Rangasamy won the majority because of his earlier good will. - karuna pondicherry//

If it is really so, let Rangaswamy's nominee win the bye election (tobe held after the former resign one of the two seats he has now won) without any support from AIADMK.

Had his party won over 15 seats JJ may not have said what she had said.

Balamanian said...

ஜெயலலிதா மதிமுகாவிற்கு தருவதாக கூறின இடங்கள் எல்லாம் ஜெயிக்கக்கூடிய இடங்கள்.
நல்லதொரு சந்தர்பத்தை மதிமுக இழந்துவிட்டது. ஜெயலலிதா தான் எடுத்த முடிவு சரியானதே என்று நிருபித்தும் இருக்கிறார்.
எந்த எந்த இடத்தில் போட்டி போட்டால் எந்த கட்சி ஜெயிக்கும் என்று விக்ஞான ரீதியில் கணக்கிட்டு முடிவு எடுத்துள்ளார் ஜெயலலிதா.
ரங்கசாமி தன் முடிவிற்கு வருத்தபடுவார்.
மணியன். ,

Anonymous said...

///எந்த எந்த இடத்தில் போட்டி போட்டால் எந்த கட்சி ஜெயிக்கும் என்று விக்ஞான ரீதியில் கணக்கிட்டு முடிவு எடுத்துள்ளார் ஜெயலலிதா.///
HOW Science played here? SUPER JALRA>