பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 12, 2011

இட்லிவடை அழைக்கிறாள்

எலக்ஷன் முடிஞ்சு ஒரு மாசம் போனதே தெரியலை. பலமணி நேரப் பவர் கட்டிலும், கனிமொழியின் காராக்ரஹத் தடுப்பு முயற்சியிலும், ஐபிஎல் கூத்திலும் மக்களுக்குப் பொழுது போனது. வடக்கத்திய சேனல்கள் வழக்கம் போல மொக்கையான செய்திகளை ஊதும் வேலையச் செய்கின்றன. நேத்திக்கு ராகுல் காந்தி பைக் ஒட்டி, விவசாயிகளின் பிரச்னையை வளர்த்து விட்ட செய்திதான் இன்னிக்கு ஓடும் பொழப்பு. வடக்கே அப்படி இருக்க, தெற்கே என்ன சோகம் என்றால் ராமதாஸ் வைகோ கேப்டன் விஜயகாந்த் என்ற பெயர்களில் பெருந்தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதைக்கூட மக்கள் மறந்து விட்டார்கள்/மறக்கடிக்கப் பட்டார்கள். பத்திரிக்கைகளில் கூட ரெண்டு மூணு வாரமா. மருந்துக்குக் கூட இவிங்க பேரு வரலை. இன்று நித்தியானந்தா பழனியில் பேட்டியில் சிரித்துக்கொண்டு சித்தர்களுக்கு சிலை வைக்க போகிறாராம். அடிக்கடி வந்து ஜோக்கடிக்கும் எஸ்.வீ. சேகர் கூட சிதம்பரத்துக்கு பத்திரிகை வைத்த பிற்கு காணாமல் போய் விட்டார்.எது எப்படியோ. பரவாயில்லை. நாளைக்குக் காலையில் ஒரு மாசமாக் காணாமல் போனவர்கள் கண்டிப்பா வந்து விடுவார்கள்.

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், கர வருஷம் சித்திரை மாசம் முப்பதாம் நாள் ஸூர்யோதயத்தில் (சூர்யன் உதித்தாலும் உதிக்காவிட்டாலும்) இட்லிவடையில் எலெக்ஷன் ஸ்பெஷல் "லைவ்"ஆக ஓட இருக்கிறது, இதன் மூலம் இட்லிவடையின் ஆஸ்த்தான வாசகர்களையும், பின்னூட்டவாதிகளையும், ட்விட்டரில் வெட்டி அரசியல் செய்பவர்களையும் இந்த ஆட்டத்தில் கலந்து கொள்ள பாசத்துடன் அழைப்பதில் இட்லிவடை மகிழ்ச்சி அடைகிறது.

மறக்க வேண்டாம். மறந்தும் இருக்க வேண்டாம். காலை 5.00 - 6.00 மணி முதல் கடை களை கட்டட்டும். அனைவரும் வருக :-)

8 Comments:

Anonymous said...

We thought idlyvadai is "HE". From when did "HE" becomes "SHE"? So the rumours right!?

jaisankar jaganathan said...

அழைக்கிறாளா? அழைக்கிறானா?

ஸ்ரீதர் நாராயணன் said...

//காலை 5.00 - 6.00 மணி முதல்//

கரெக்ட்டா சொல்லுங்க 5 மணி முதலா? 6 மணி முதலா? இல்ல 5 மணி முதல் ஆறு மணிவரையா?

Anonymous said...

// ஸ்ரீதர் நாராயணன்//
அஞ்சுலேர்ந்து ஆறு முஹூர்த்தம் மாதிரி. :>

IdlyVadai said...

//We thought idlyvadai is "HE". From when did "HE" becomes "SHE"? So the rumours right!?//

நாளை அய்யா போய் அம்மா வருகிறார் என்ற அர்த்தமாக கூட இருக்கலாம்

IdlyVadai said...

//கரெக்ட்டா சொல்லுங்க 5 மணி முதலா? 6 மணி முதலா? இல்ல 5 மணி முதல் ஆறு மணிவரையா?//

அட பல் தேய்த்துவிட்டு வாங்க சரியா இருக்கும்.

Anonymous said...

குளிக்காமல் வந்தால் தான் நான் ஒட்டு போட்ட கட்சி ஜெயிக்கும். அப்படித்தான் வருவேன். சம்மதமா?

solan said...

ஹிந்து தெய்வங்களை இழிவு படுத்தக்கூடிய வகையில், ஹிந்து தெய்வங்களை ஜெயலலிதா போன்று ஒப்பனை செய்வது கண்டனத்திற்கு உரியது. இட்லி வடை, பிற மத கடவுள்களையோ அல்லது அவர்கள் மதத்தை நிறுவியவரையோ இது போன்று உருவாக படுத்தி வெளியிடும் தைரியம் உண்டா? கேரளாவில் கேள்வி கேட்டதற்கே கையை வெட்டினார்கள். அது போன்று நாங்களும் நடந்து கொண்டால் தான் உங்களுக்கு எல்லாம் புத்தி வருமா? சாது மிரண்டால் காடு கொள்ளது... ஒழுங்காக அந்த கார்டூனை நீக்குங்கள்.