பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 06, 2011

கனிமொழி

இன்றைய தினம் மீடியா கனிமொழி மீது தான். அவருடன் யார் வந்திருக்கிறார்கள், என்ன டிரஸ் என்று எல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். துக்ளக் பத்திரிக்கையிலிருந்து சில பகுதிகள்

நமக்கு ஸி.பி.ஐ.யின் நோக்கங்கள் பற்றிய சந்தேகம் தொடர்கிறது. சாதாரணமாக பணம் பாதாளம் வரை பாயும் என்றால், ஊழல் பணம் மலை உச்சி நோக்கி செல்லும்; பெரியவர்களுக்கு பங்கு இல்லாமல், பெரிய ஊழல்கள் நடைபெறாது என்பது, இந்தியப் பொருளாதாரத் தத்துவம். ஆகையால், ஸ்பெக்ட்ரம் ஊழல் பங்கு, மேலே எவ்வளவு தூரம் வரை போகிறது என்பதைப் பொறுத்துத்தான், ஸி.பி.ஐ. விசாரணையின் தன்மை அமையும் என்பது நம் கருத்து.

இப்போது கனிமொழி மீது வந்திருக்கிற குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டிருக்கிற காரணங்களில் சில, வினோதமாக இருக்கின்றன. ‘ராசாவை இவர் அடிக்கடி சந்தித்தார்; இவருக்கு கலைஞர் டி.வி.யின் செய்திகளில் முக்கியத்துவம் தரப்பட்டது...’ என்றெல்லாம் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவை எதை நிரூபிக்கப் போகின்றன? கனிமொழி 2-ஜி சதியில் உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டையா? எப்படி? நமக்குப் புரியவில்லை.

போகப் போக, இவ்வழக்கில் காட்டப்படுகிற ஆதாரங்கள், ஒருவேளை குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கிற வகையில் அமையலாமோ, என்னவோ! இப்போது குற்றப் பத்திரிகையில் கூறப்படுவதுதான் ஆதாரம் என்றால், அது தமாஷாகத்தான் முடியும்.

குற்றப் பத்திரிகையில், கலைஞரின் மனைவியின் பெயர் ஏன் இடம் பெறவில்லை என்பது பலரால் விவாதிக்கப்பட்டு வருகிறது. சரி; புரிகிறது. ஆனால் அதே சமயத்தில், ‘கலைஞர் மீது நடவடிக்கை உண்டா, இல்லையா’ என்பது, ஏன் ஒரு கேள்வியாகக் கூட கருதப்படவில்லை என்பது புரியவில்லை. கிரிமினல் சட்டப்படி, ஒருவரால் அவருடைய மனைவிக்கோ, குமாஸ்தாவிற்கோ, வேலைக்காரனுக்கோ கூட... சொத்து கிடைத்திருந்தால், அது, அவருடைய சொத்தாகவே கருதப்படும்.

ஒருவர், பொது வாழ்க்கையில் இருக்கிறபோது, இந்தப் பொறுப்பு இன்னமும் கூடுகிறது. கலைஞர், பொது ஊழியர். கலைஞர் சேனலுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்று கலைஞர் கூறியது, அப்படியே ஏற்கப்பட்டதா? அல்லது, அவருடைய மனைவி, மகள் போன்றோரின் பெய ரில் இருப்பது, அவரால் கிட்டியது என்பதால், இவ்விவகாரத்தில் அவருக்கு உள்ள பொறுப்பு விசாரிக்கப்படுகிறதா?

ஸி.பி.ஐ., இந்த விவகாரத்தில் பலன் அடைந்தவர்கள் பட்டியலில் அவர் பெயரையும் இணைத்தால், ‘அப்படி தான் பெற்ற பயன் அல்ல அது’ என்று நிரூபிப்பது, ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி கலைஞர் பொறுப்பாகுமே? இந்த ரீதியில் ஸி.பி.ஐ. சிந்திக்கவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? நமக்குப் புரியவில்லை. நமது சந்தேகங்கள் தொடர்கின்றன; இந்த வழக்கில், சட்டத்தை விட, அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக நமக்குத் தோன்றுகிறது.

கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜர் ஆகிறார். இவர் தான் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

26 Comments:

Roaming Raman said...

கட்டுரையை விட வழக்கத்தை விட கூடுதலாக சிறப்புற்றிருப்பது உம்ம மஞ்சள் கமென்ட்டுதான்!! பிரமாதமான மஞ்சள் கமென்ட்!!
-ரோமிங் ராமன்

Anonymous said...

yes..Ram Jethmalani is bringing out the blackmoney by way of his hefty fees...Also attention all DMK workers/ Sympathisers...Jethmalani is telling in the Court that Kani is only a shareholder and the actual conspirator is Rasa...Aha Aha so much for the welfare of the party and its workers...

யோவ் said...

//இவர் தான் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்//

பிரேமானந்தா வுக்கும் இவர்தான் வக்கீல்

அரசியல் மட்டுமல்ல சட்டத்திலேயும் இதெல்லாம் சகஜமப்பா!

middleclassmadhavi said...

ம்..., என்னத்தச் சொல்ல?!

Ganpat said...

இந்திய ஜனத்தொகை 120 கோடி
அதில் ஆண்கள் 10கோடி பெண்கள் 10கோடி மீதி 100 கோடி பாப்பாக்கள் என்று நினைக்கிறேன்

2G ஊழலில்,முதலில் விசாரிக்கப்பட்டு,தண்டிக்கப்பட
வேண்டிய மூன்று பேர்:
மன்மோகன்,
சோனியா
கருணாநிதி
மற்றவர் எல்லாம் அப்புறம்தான்!

என்று நம் நாட்டில் பாராட்டுக்கள்
கீழ் மட்டத்திலிருந்தும்,
தண்டனைகள் மேல்மட்டத்திலிருந்தும் வழங்கப்படுகிறதோ,
அன்றுதான் விடிவு காலம்.

ksrjapan said...

Ram Jethmalani is a joke and shame for India. He is a money minded guy with no ethics. I am not telling this because he is arguing for Kanimozhi but his past record of supporting all the criminals and politicians speaks for himself

Anonymous said...

எவ்வளவு கேவலப்பட்டலும் சிரிக்கிறாங்களே!. தப்பு பண்ணோம்ங்கிர பயம் கொஞ்சம் கூட இல்லையே! - வடிவேலுகிட்ட ரெகமென்ட் பண்ணி வருத்தப்பட வாலிபர் சங்க தலைவி பதவி வாங்கி கொடுங்கப்பா சரியாய் இருக்கும்.

Anonymous said...

"Mr Jethmalani said, "She's a law-abiding citizen, an MP and a woman,so she shoul be given bail""
ஏன் மத்த்வ்ங்க எல்லாம் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்களா? இதே பெண், முன்னாள் முதல்வர் ஜெவை எப்படி நடத்தினர் 97ல்?

Mahesh and Team, Jawahar arts and science college, neively said...

கல்லூரி மாணவர்கள் நாங்கள் ஒரு குழு அமைத்து கடந்த 20௦ நாட்களாக தமிழகத்தின் பல தொகுதிகளில் மக்களை சந்தித்து சேகரித்த முடிவின் படி கணிப்பு இது.

சர்வே குழு - 38 ,
மொத்த தொகுதிகல் சென்றது - 110
மொத்த மக்கள் - 12000+

3 கேள்விகள் தான் முன் வைத்தோம்

1. எந்த கட்சிக்கு வாக்களித்தீர்
2. யாருக்கு வாக்களிப்பதாக நினைத்திருந்தீர்
3. முக்கிய பிரச்னை எது

முடிவுகள்

தி மு க விற்கு வாக்களித்தோம் - 40%
அதி மு க விற்கு வாக்களித்தோம் - 51௧
ப ஜ க - 6
மற்றவை - 3

தி மு க விற்கு வாக்களிக்க நினைத்து அதிமுக விற்கு மாறியவர்கள் - 17%

அதிமுக விற்கு வாக்களிக்க நினைத்து திமுக விற்கு மாறியவர்கள் - 9%

திமுக அதிமுக விற்கு வாக்களிக்க நினைத்து ஆனால் இரண்டும் பிடிக்காமல் மற்ற கட்சிக்கு வாகளிதவர்கள் 6%

தொகுதிகள்

தி மு க 28
அதிமுக 81
BJP 1

இதன் படி பார்த்தல் தி முக 60௦ம் அதிமுக 172௦ம் , BJP -2

முக்கிய பிரச்சனையாக மக்கள் சொன்னது :

மின் வெட்டு, விலையேற்றம்

spectrum , ஈழம் ஒரு சில தொகிதிகளில் மட்டுமே பிரச்சனையாக சொல்லப்பட்டது.. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

மதிமுக வெளியேற்றப்பட்டதால் அதிமுகக்கு வாக்களிக்க நினைத்ததில் 4% பேர் வேறு கட்சிகளுக்கு வாகளித்துள்ளனர்

மதிமுகவினர் பலரும் திமுக விற்கும், சிலர் பாஜக விற்கும் வாக்களித்துள்ளனர், குறிப்பிட்ட சதகிவிததினர் வாகளிக்கவே இல்லை

விஜயகாந்த் பிரச்சாரம் எடுபட வில்லை - விஜயகாந்த் அதிமுக கூட்டணி வைத்தது பிடிக்காமல் தேமுதிக வாக்குகள் சில ப ஜ க விற்கு சென்றுள்ளது

ஜெயலலிதா போக்கில் மற்றம் இல்லை எனினும் இன்றைய சூழலுக்கு அவரே சரியானவர் என்று பலர் சொன்னார்கள்

கருணாநிதி நல்லவர் சுற்றி இருப்பவர்கள் சரி இல்லை என்ற கருத்தும் உள்ளது

இலவச திட்டங்கள் கிராமங்களில் நல்ல வரவேற்பு ஆனால் மின்தடை விலை வாசி ஆகியவை பலனை குறைத்துள்ளது

வடிவேலு பிரசாரம் சில தொகுதியில்
எடுப்பட்டுள்ள போதிலும்.. பல இடங்களில் அவரை வேடிக்கை பார்க்க மட்டுமே கூட்டம்

கிராமபுரத்தில் திமுகவிற்கு சற்று வலு கூடியுள்ளது
நகர்ப்புறங்களில் அதிமுக முந்துகிறது.

பிரசாரத்தில் பிடித்தது - கலைஞர், ஸ்டாலின், நல்லகண்ணு, நெப்போலியன்.

ஊனமுற்றோர் பலர் தி மு க விற்கு வாகளித்துள்ளனர்

மதுரையில் இந்த முறை ஆசாகிரிக்கு இறங்கு முகம்
கொமுக பெரிய அளவில் தி மு கவிற்கு உதவிட
வில்லை

அதே போல ச ம க மற்றும் புதிய தமிழகம் அதிமுகக்கு உதவிடவில்லை

Note: Please make this as a seperate post if possible.

MANIVASAGAM S N said...

ராசா குற்றமற்றவர் ,தலித் என்பதால் குற்றம் சாற்றப்பட்டார் என்று கூறிய கனிமொழி,
இன்று ராசா முற்பட்டோர் சாதியை சார்ந்தவர் ஆகிவிட்டாரோ? அதனால் தான் இன்று
நீதி மன்றத்தில் கனிமொழியின் வக்கீல் ராம்ஜெத்மலானி ராசா மட்டுமே குற்றவாளி,
கனிமொழி ஏதும் அறியாதவர் என்று வாதாடினாரோ?. அரசியல் வாதிகளை நினைக்கும்போது
நமக்கே வெட்கமாக இருக்கிறது. என்ன கேடு கேட்ட அரசியல்.

Nallavan said...

ராசா குற்றமற்றவர் ,தலித் என்பதால் குற்றம் சாற்றப்பட்டார் என்று கூறிய கருணாநிதி மற்றும் கனிமொழி,
இன்று ராசா முற்பட்டோர் சாதியை சார்ந்தவர் ஆகிவிட்டாரோ? அதனால் தான் இன்று
நீதி மன்றத்தில் கனிமொழியின் வக்கீல் ராம்ஜெத்மலானி ராசா மட்டுமே குற்றவாளி,
கனிமொழி ஏதும் அறியாதவர் என்று வாதாடினாரோ?. அரசியல் வாதிகளை நினைக்கும்போது
நமக்கே வெட்கமாக இருக்கிறது. என்ன கேடு கேட்ட அரசியல்.

Anonymous said...

கனிமொழிக்கும் 2G க்கும் சம்மந்தமே இல்லை என்று ராம்ஜெத்மலானி வாதிட்டாராமே... ஏன் வாதிட மாட்ட்டார்? விட்டால் கனிக்கும் கலைஞருக்குமே சம்மந்தம் இல்லை என்று வாதிட்டாலும் வாதிடுவார் ..லாயராச்சே ? அதுவும் பிஜேபி எம்பி வேற...

Anonymous said...

I second "ksrjagan's" opinion.

Even for premanandha, the same counsel was none other than Ram-Jetmalaani.

If a talented, brilliant person doing against his own conscience.... in supportive of evils, whatever he does ruin the society.

Anonymous said...

தமிழ் நாட்டு மக்களுக்கு யார் (நரி) எப்படி போனாலும் சரி நம் மீது பாயாமல் போனால் சரி
என்ற சுய நலம் படைத்தவர்கள். தான் தவறு செய்தால் மட்டும் எல்லோரும் தன்னை காப்பாற்ற
வேண்டும் என்று நினைக்கும் சுயநலமிகள். நாம் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டு அரசாங்கம்
கடுமை கட்டவில்லை என்றால் அரசை எதிர்ப்பார்கள். கலக்கம் செய்வார்கள். தான் இனமக்களையே
கேடயமாக பயன்படுத்தி தன்னை காத்துகொள்வர்கள். தன்னை தவிர மற்றவர்கள் என்ன கதியானுல்ம்
கண்டு கொள்ள மாட்டார்கள். அதற்கு ஈழமே சாட்சி. தமிழ் நாட்டில் வாய்கிழிய பேசும் அரசியல் வாதிகள்
ஈழப்போர் நடந்தபோது, இங்கிருந்தே கூவிகொன்டிருந்தனர். ஒருவராவது சர்வே தேச சமுதாயத்தில் இதைப்
பற்றிப பேசி ஆதரவு திரட்டவில்லை.. அறிக்கைகளும், சிறு நேர உண்ணாவிரதமும் இருந்து, அதையும் பொய் காரணம்
காட்டி வாபஸ் வாங்கிய மாபெரும் தலைவர்களை கொண்ட நாடு. தமிழ் என்று சொல்லாமல் தலை குனிந்து நட

is ram jethmalani a upper caste iyer?

Anonymous said...

//Ram Jethmalani is a joke and shame for India//

அவர் ஏன் சார் குறை சொல்லுறீங்க? இந்திய சட்டங்களும், கோர்ட் நடவடிக்கைகளும், இன்ன பிற இத்தியாதிகளும் தான் இந்தியாவின் வெட்ககேடு.. சமீப உதாரணங்களே நிறைய இருக்கே

Anonymous said...

ஒரு முஸ்லீம காவு குடுத்தாச்சு, அடித்தது ஒரு தலித்த காவு குடுக்க போறாங்க போல?

Shan said...

கனிமொழி ஒரு வேளை அர்ரெஸ்ட் செய்யபட்டால் தமிழ்நாட்டின் கதி என்ன . எத்தனை பஸ்கள் எரிக்கபடுமோ . அல்லகைகள் ஆட்டம் தாங்கமுடியாது இருக்கும் . மகளிர் அமைப்புகள் வீறு கொண்டு விளையாடும் .கண்ணை கட்டுதுடா சாமீ .

ஸ்ரீராம். said...

//"இவர் தான் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்"//

நகைமுரண்
தொகைமுரண்
தொழில்முரண்
கொள்கைமுரண்
பாரத சமுதாயம் வாழ்கவே...

Gopal said...

The very fact that Jethmalani is representing Kanimozhi is an open proof that she is a celebrity criminal and such criminals always go scot free. Long live Injustice India.

R Sathyamurthy said...

I am still wondering why Ram Jeth Money didn't appear for Kasab!

Anonymous said...

மன்மோகன் சிங்கும், கருணாநிதியும் பேசிக் கொள்கிறார்கள்

மன்மோகன் : கலைஞர்ஜி உண்மைய சொல்லுங்க, அந்த 2 லட்சம் கோடி எங்க?

கலைஞர் : சொல்றேன்பா, இவ்வளவு நாளா என் மனசில பூட்டி வச்சிருக்கற குடும்ப ரகசியத்தை சொல்றேன், இது கடுகளவு வெளிய கசிஞ்சாலும் என்ன நீங்க உயிரோடவே பார்க்க முடியாது..!

மன்மோகன் : ஒக்கே சொல்லுங்க..

கலைஞர் : ரொம்ப நாளா கனிமொழிய ராசா வச்சிருக்கறதா ஊருக்குள்ள ஒரு வதந்தி, அத கேட்டு கோவப்பட்ட நான் அவன் சட்டைய புடிச்சி, ஏண்டா என் மகள நீ வச்சிருக்கியாடா ன்னு கேட்டேன், அவன் சிம்பிளா ஒரு பதில சொன்னான்

மன்மோகன் : என்ன பதிலு?

கலைஞர் : கனிய நான் வெச்சுக்கறேன், ’’மணி’’ய நீ வெச்சுக்கன்னு சொன்னான்.

மன்மோகன் ; அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?

கலைஞர் : பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்த்த ு, நானும் ஒத்துக்கிட்டேன்

mc said...

Anon, unga comment romba sooper!