பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 13, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 13-5-2011

வணக்கம் முனி,

அதிமுக கூட்டணி 186 இடங்கள் என்று நீ சொன்ன கணிப்புதான் கொஞ்சம் பக்கத்தில் வந்தது. ஹெட்லைன்ஸ் டுடே, நக்கீரன் எல்லாம் தேர்தல் அறிக்கை போலவே பொய்த்துவிட்டது. தமிழர்களாகப் பார்த்து எனக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டார்கள் என்று சொல்லுகிறார் கலைஞர். அவர் முகத்தில் இன்று நிஜமான சந்தோஷத்தை பார்த்தேன். சில வருஷம் முன்னாடி ஞாநி ரெஸ்ட் எடுங்க என்று சொன்னதற்கு கனிமொழி தலைமையில் வாணி மஹாலில் ஞாநிக்கு பூணூல் அர்ச்சனை விழுந்தது. இனி கலைஞருக்கும் 'Rest' of the DMK தலைவர்களுக்கும் பர்மனென்ட் ரெஸ்ட் தான். ஏன் ஞாநி கூட இனி ஓ-பக்கங்களில் கலைஞருக்கு ரெஸ்ட் கொடுத்துவிடுவார் என்று நம்புவோம். கலைஞர் இல்லை என்றால் இட்லிவடை கடையை நான் எப்படி ஓட்டுவேன்? பேசாம நானும் ரெஸ்ட் எடுக்க போய்விடலாம் என்று இருக்கேன்.

இந்த தேர்தலில் சில சந்தோஷங்கள் இருக்க தான் செய்கிறது. முதல் சந்தோஷம் பா.ம.க விரட்டியடிக்கப்பட்டுள்ளது, அடுத்து விடுதலை சிறுத்தைகளுக்கு விடுதலை அளித்துவிட்டார்கள். இனி அவர்கள் ஃபிரீயாக உலாவலாம். அடுத்து காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தவர்கள் தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பார்கள் என்ற Myth முறியடிப்பட்டுள்ளது.

குஷ்பு போல குழந்தை, அண்ணாவுடன் ஸ்கூல் போன தலைவர்கள் இருக்கும் திமுகவில் வடிவேலுவின் 'தண்ணி' பிரச்சாரத்தை ஓயாமல் டிவியில் காண்பித்துக்கொண்டு இருந்தார்கள். இவை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்.

விஜயகாந்த் என்ற கேப்டன் காங்கிரஸுக்கு மாற்றாக வந்துவிட்டார் என்பது 2011 தேர்தலில் புதிய செய்தி. அடுத்த தேர்தலில் காங்கிரஸ், விஜயகாந்த் என்று கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ரஜினிக்கு இல்லாத தைரியம் விஜயகாந்துக்கு இருப்பது அவரின் உழைப்பு, நம்பிக்கையை காட்டுகிறது.

திரையுலகம் ஜால்ரா அடித்தாலும், அவர்களும் தியேட்டர் பிரச்சனை போன்றவைகளை பேச முடியாமல் இருந்தார்கள், இனி சன் டிவி வாங்கவில்லை என்றாலும், காக்க காக்க போன்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்கும் இது ஒரு விதத்தில் நல்லது. திமுக அனுதாபிகள் டிவிட்டர் பக்கம் இன்று வராதது நம் 'அதிர்ஷ்டம்'. பூனை மட்டுமல்ல, யானை கண்ணை மூடிக்கொண்டாலும் கூட பூலோகம் இருண்டுவிடாது.

அடுத்து வரும் கல்லூரி, +2, பத்தாம் வகுப்பு தேர்வில் பலர் தமிழ் பாடங்களை எடுப்பார்கள், தமிழ் மட்டுமே படித்தால் கிரிமினல் வழக்கிலிரிந்து தப்பிக்கலாம் என்ற பாடம். சில வாரங்களுக்கு முன் எல்லோருக்கும் புரிந்தது. ஸ்டாலின், கலைஞர் போன்றவர்கள், ஏன் ஜெயலலிதாவும் கூட பயந்துக்கொண்டு தங்கள் தொகுதிகளை விட்டு சென்னைக்கு வெளியே இருக்கும் தொகுதிகளை தேர்ந்தெடுத்தது வெட்ககேடு. அவர்கள் இருக்கும் தொகுதிக்கு என்ன செய்தார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. சும்மா ஒரு பஸ்டாண்ட், கக்கூஸ் கட்டிவிட்டால் தொகுதி மக்கள் குறைகளை தீர்த்துவிட்டதாக நினைக்கிறார்கள்.

காங்கிரஸ் தமிழக தேர்தல் தோல்வியை பார்த்து வருத்தப்பட்டாலும் , காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இருவர் சந்தோஷப்படுவார்கள் என்று நிச்சயம் எனக்கு தெரியும் - ஒன்று இ.வி.கே.எஸ் இளங்கோவன், மற்றது எஸ்.வி.சேகர். தங்கபாலு தோற்றது தமிழக மக்கள் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம்.

ஒரு தலித் திஹார்க்குப் போகலாம், ஆனால் குடும்பத்தில் இருப்பவர்கள் டெல்லிக்கு கூட போக கூடாது என்ற புதிய சமூக நீதியை கருணாநிதி நமக்குப் புரியவைத்துள்ளார். தலித் என்பதால் ராசா மீது குற்றம் சுமத்துகிறார்கள், என்று ராமரைத் தூற்றிய கலைஞர், இப்போ ராசாதான் எல்லாவற்றிருக்கும் காரணம் என்று 'ராம்'ஜத்மலானியை கொண்டு கனிமொழி சார்பில் வாதாடவைக்கிறார். அதே கோர்ட்டுல அதே நாளில் அதே ராசா ராசாத்தி காலுல விழுந்து சேவிச்சாராம். வெக்கம் கெட்ட ஜென்மங்கள்.

காங்கிரஸ் குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி பெயரை தேர்தலுக்கு பின் வருமாறு பேரம் பேசப்படுகிறது, பிறகு முன் ஜாமீன் மனுக்கள் தேர்தல் முடிவுக்குப் பிறகு தள்ளிவைக்கிறது சி.பி.ஐ நீதிமன்றம். இவை எல்லாவற்றையும் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மறந்துவிடுவார்கள்.

பா.ஜ.க ஐபிஎல் மாட்சில் இருக்கும் சியர் லீடர்ஸ் போல. அவர்களை இந்தத் தேர்தலில் கண்டுகொள்ள வேண்டாம். அசாம், கேரளா, தமிழகம், மேற்குவங்கம், ஆந்திரா, பாண்டிச்சேரி என்று எதிலும் அவர்கள் இல்லை.

அழகிரி ரொம்ப டென்ஷனில் இருக்கிறார் என்று தகவல். மதுரையில் அவருக்கு கிடைத்த மார்க் 0/10. திருமங்கலத்தில் பணம் கொடுத்து இடைத்தேர்தலில் சொல்லி அடித்தவருக்கு இந்தத் தேர்தலில் வடை போச்சே என்று இருக்கதான் செய்யும்.

இன்னும் சில மாதங்களில் (நாட்களில்), திமுக குடும்பச் சண்டை வெளி உலகத்துக்கு வந்து நாறும் என்று எதிர்பார்க்கலாம். குமுதம் அரசு பதில்களில் ஹிஹி என்று சிரிப்பதைப் போல தமிழகம் சிரிக்கும். சன் டிவி ஜெயலலிதா காட்சிகளை காண்பிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அவர்கள் நிலை இப்போது 'நடுநிலமை'. கலைஞர் டிவியில் மம்தா, ஓபாமா என்று ஹிந்தி சானல் போல ஆகிவிடும். விகடன், கல்கி, குமுதம் என்ற பத்திரிக்கை 'சலாம்' போட்டு விட்டு கொஞ்ச நாளில் ஜெயை விமர்ச்சித்து தலையங்கம் எழுதும், அதை முரசொலி மறுபதிப்பு செய்யும். கீ.வீரமணி நிலைமை ரொம்பப் பாவமாக இருக்கிறது. இருந்தாலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை பார்த்து வணக்கம் சொல்லிச் சிரிப்பார்.

திமுக தோல்விக்கு இலங்கை, மீனவர் பிரச்சனை காரணம் என்று நம்பினால் அது முட்டாள் தனம். காரணம் யாருக்கும் தெரியாது. ஏதோ ஒரு விதத்தில் திமுக மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது தான் காரணம். 2G ஒரு காரணம் அவ்வளவு தான் இவர்கள் கொடுத்த இலவச டிவி தான் முக்கிய காரணம். ஏன் என்றால் அதில் தான் இவர்கள் மீடியா 2G பற்றி ஓயாமல் பிரச்சாரம் செய்ததை இலவசமாக பார்த்தார்கள்.


பிகு: இன்று பிளாகர் கொஞ்சம் படுத்திவிட்டது, இருந்தாலும் கவர் இட் லைவில் பலர் கலந்துக்கொண்டார்கள் அவர்களுக்கு என் நன்றிகள்.

18 Comments:

Anonymous said...

//
ஸ்பெக்ட்ரம், குடும்ப ஆதிக்கம், லொட்டு, லொசுக்குவெல்லாம் ஆட்சிக்கு எதிரான அலையை கிளப்ப போதுமானதல்ல.

திமுக இம்முறை வெல்லப்போவது அதிமுக கூட்டணியை மட்டுமல்ல. திமுகவுக்கு எதிராக அதிமுகவோடு கூட்டணி அமைத்திருக்கும் ஊடகங்கள் மற்றும் தேர்தல் கமிஷனையும் சேர்த்துதான்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சென்னையில் இருக்கும் 16 தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லப் போகிறது.

பூனை மட்டுமல்ல, யானை கண்ணை மூடிக்கொண்டாலும் கூட பூலோகம் இருண்டுவிடாது.
//

பார்க்க அதிர்ஷ்ட பார்வையின் உளறல்

மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கும் லக்கிலுக் போன்றவர்களின் முகத்தில் பூசப்பட்ட கரி இந்த தேர்தல் முடிவுகள்.

kothandapani said...

therthal padippinai


1. இலவசங்களை பார்த்து மக்கள் மயங்குவதில்லை. இலவசங்கள் இல்லாத வங்கத்து தேர்தல் % விட இங்கு அதிகம். சென்ற தேர்தலில் கருணா ஜெயித்தது இலவசங்களால் இல்லை.
ஜெயித்தது negative வோட்டல்தான்
2. பணம்தான் வெற்றியை நிர்ணயிக்கிருது என்பதும் மாயைதான். இந்த தேர்தலில் முழுமையாக இல்லாவிட்டாலும்
பெருமளவு கட்டுபடுதபட்டுது . இருந்தும் வாக்குபதிவு புது உச்சைத்தை தொட்டு உள்ளது சாரை சாரையாக மக்கள்
வோட்டு போட்டது பணம்தான் எல்லாம் என்பதை தகர்த்துள்ளது
3 கூட்டணி தர்மம் என்பது தேர்தல் அறிவிப்புக்கு பின்தான் அமலுக்கு வரும். தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போகும். தொடர்ச்சியாக ஜால்ரா
அடிசுகிட்டு கிளைகழகம் போல் செயல்பட்ட வைகோவை பாருங்கள்....
தேர்தல் விதிமுறைககுபின் கூட்டணிக்கு வந்த pmk வைபாருங்கள் .
4 வடிவேலுக்கு வந்த கூட்டத்தை பார்த்து தப்பு கணக்கு போடக்கூடாது. 80 களில் சோ என்ற தனிமனிதனுக்கு வராத கூட்டமா.ஆனால் தேர்தலில்
கிடைத்தது ஆப்புதான்
5 போலீஸ் வண்டிகளிலே பணம் கடத்துபடுவதாக election commission கோர்டிலேயே தெரிவிதபின்னரும் , இருவரும் அதை மேல்கொண்டு
கண்டுக்காமல் விட்டது தவறான முன்னுதாரணம் .அரசியலில் இதல்லாம் சகஜம் என்று இருக்க கூடாது.
6. தமிழக மக்கள் அறிவாளிகள். எந்த ஒரு கட்சியும் தங்களை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆட்டி படைக்க விடமாட்டார்கள். குதிரை பேரத்திற்கு வழி வைக்காமல் ஒரே கூட்டணிக்கு வழக்கம்போல் வெற்றி கொடுத்துள்ளர்கள்.

Balaji Santhanam said...

blog thollai thaan karanama ...naan kuda ADMK illati MDMK kathci appis poyetingalo nu nenaichen! :)

Nondha Krishna said...

"பூனை மட்டுமல்ல, யானை கண்ணை மூடிக்கொண்டாலும் கூட பூலோகம் இருண்டுவிடாது" - very sarcastic, liked it :)

Nondha Krishna said...

கொலை பண்றாங்க....கோவணத்த உருவுறாங்க...உடன் பிறப்பே....மூத்த திம்மி கோவணம் காத்துல பறக்குதே.......2009 parilament தேர்தலக்கு ராஜாதி ராஜான்னு பதிவு போட்டியே....இப்போ எனோட கோவணம் போச்சே....இப்போ கூஜாதி கூஜா ஆகி போய்ட்டனே....கொலை பண்றாங்க....கோவணத்த உருவுறாங்க......

nerkuppai thumbi said...

தி.மு.க மீது வளர்ந்து கொண்டிருந்த வெறுப்புக்கு last feather on the camel's back ஆக 2G spectrum வந்தது.
ஆனால் மக்களவையில் தி மு கவை தே மு தி கவை விட குறைவான இடங்களைப் பெரும் அளவுக்கு அமுக்கும் என்று எவரும் நினைக்கவில்லை. பண்ரூட்டி ராமச்சந்திரன் மட்டும் தான் மே மாதம் பதிமூன்றாம் தேதி ஜே முதல் அமைச்சாராகவும் , காப்டன் எதிர் கட்சித் தலைவராகவும் சந்திப்பர் என்று கோவையில் சொன்னார்; அது சரியாகப் போயிற்று.

kothandapani said...

நேற்று அப்பா fail
இன்று மகளுக்கு jail or bail

மாயவரத்தான்.... said...

//திமுக அனுதாபிகள் டிவிட்டர் பக்கம் இன்று வராதது நம் 'அதிர்ஷ்டம்'. பூனை மட்டுமல்ல, யானை கண்ணை மூடிக்கொண்டாலும் கூட பூலோகம் இருண்டுவிடாது.

//

மாத்திச் சொல்றீங்க. அவங்க அதிர்ஷ்டம்னு சொல்லுங்க! :)

Suresh said...

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு
வைகைப் புயல், திமுக சூறாவளி வடிவேலுவை கடந்த சில மணி நேரங்களாக காணவில்லை. இவரை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் எல்லாம் இவருக்காக ஷூட்டிங்-காக காத்திருக்காங்க (அப்படின்னு சொல்ல சொன்னாங்க).

அடையாளங்கள்
கருப்பு சிகப்பு சேந்தாப்புல டிரஸ் போட்டு இருப்பார்
கையில ஆந்திராவுக்கோ கர்நாடகாவுக்கோ போக ரயில் டிக்கெட் வச்சு இருப்பார்
முகத்துல ஒரு மரண பயம் இருக்கும்
மாறுவேடங்களில் கூட இருக்கலாம் (போக்கிரி படத்துல கொண்டையுடன் வர்ற மாதிரியான வேடங்களில்)

காணவில்லைங்கோ
மாட்டுனா என்ன கதி?

sam said...

2006 ADMK won 60+ seats and the only reason for losing is split of votes by DMDK. So people saying "anti-incumbency leads to ADMK's victory" are only trying hard to digest ADMK's victory. We like it or not the fact is "DMK is detoriating". It's being proved again that people find Jayalalitha more able as an administrator".

Ganpat said...

"34ஆண்டுகளாக ஒரே தோசையை வார்க்கும் தமிழக வாக்காளர்கள்:"

திமுக விலிருந்து அதிமுக பிரிந்தது முதல் இவ்விரு கட்சிகளையும் ஒரு தோசையின் இரு பக்கங்களாக கருதி
மாற்றி மாற்றி திருப்பிப்போட்டு,தங்களுக்கே மாபெரும் தீங்கு இழைத்துக்கொள்கிறார்கள்,தமிழக வாக்காளர்கள்.இதை நேற்று வந்த முடிவு உறுதி செய்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை "அ" வை நகர்த்தி "ஆ" வை மாற்றுவதோடு தங்கள் வேலை முடிந்து விட்டது என்றும் அவர்கள் எண்ணிக்கொண்டுள்ளர்கள் என நினைக்கவும் தோன்றுகிறது.

இதனால் இவ்விரு கட்சிகளும்,நான் ஒரு ஐந்து ஆண்டு மேய்ந்து விட்டு அடுத்த ஐந்து ஆண்டு அசை போடுகிறேன்.நீ ,நான் அசை போடும் ஐந்து ஆண்டுகளில் மேய்ந்துவிட்டு,நான் மேயும் ஐந்து ஆண்டுகளில் அசை போட்டுக்கொள் எனும் ரகசிய ஒப்பந்தம் ஏதேனும் செய்துகொண்டுள்ளார்களோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது.
நீங்களே பாருங்களேன்,தேர்தல் வாரியாக இவ்விரு கூட்டணிகளும் வென்ற தொகுதி எண்ணிக்கையை
வருடம்: திமுக+ அதிமுக+
1977 48 144
1980 69 162
1984 34 195
1989 170 30
1991 7 225
1996 220 4
2001 37 196
2006 163 163
2011 31 200

இம்முறையாவது ஜெ நல்லாட்சி தருவார் என நம்புவோம்; பிரார்த்திப்போம்!
ஆனால் அவ்வாறு இல்லாத பட்சத்தில் 2016தேர்தலில் அவருக்கு மாற்று திமுக இல்லை என்றும் உறுதி பூணுவோம்!

Ganpat said...

பட்டியல் தெளிவாக இல்லை..
இன்னொரு முயறசி
வருடம்=திமுக=அதிமுக
1977=====48=====144
1980=====69=====162
1984=====34=====195
1989====170===== 30
1991======7=====225
1996====220===== 4
2001=====37=====196
2006====163===== 69
2011=====31=====203

சிரமத்திற்கு மன்னிக்கவும்

Prakash said...

Congratulation to ADMK for the big victory. I actually thought DMK+ might win at least by 125 seats. But on the ground there seems to be more undercurrents that have pulled DMK chances.

But, Need to accept the fact; even DMK is unable to become Opp. Party. DMDK getting more seats than DMK is not a good sign.

DMK need to do a soul search if it wants to regain its strength. The first culprit is Maran's power trusty at in the Center, that's why DMK is not ready to come out from Cong.

Can anyone like you and Abdulla, etc should at least try to bring the issues that are impacting DMK to Top Leadership notice, if you people have some contact.

At this stage also, I feel DMK Central leadership have delivered good governance that have benefitted each and every section of the people.

To my knowledge, the primary reasons for DMK’s defeat in spite of good governance are,

1. Power Cut
2. No Control on district and local level party functionaries. This has triggered anger over party candidates. Example Veerapandi Arumugam, MKK Raja etc..
3. Not giving tickets to new faces, this has resulted in intra party revelries and the people thought why the same people only contesting for ages. Relatives of MLAs occupied Local Body posts and people and party men thought only few relative family benefited.
4. Inclusion of PMK and VC might triggered other community voters like (BCs) Mudaliyars, Udayars, Yadavas, Chettiyar etc to vote against DMK.
5. More Seats given to alliance parties beyond their capacity.
6. Back stabbing on Eelam Tamil’s issue and became as slave/puppet of congress.
7. Wide projection by Medias as Monopolization in film industry by MK’s family.
8. Not done counter campaign to defend DMK’s stand on 2G and Price raise etc. DMK only concentrated on saying the achievements. TN people, is always interested in counter attacks and highlighting one’s negatives. This is not done properly

சீனு said...

நச்...

http://jeeno.blogspot.com/2011/05/2011.html

Anonymous said...

all people including idly vadai is either forgetting or pretending about one thing. due to official duties I had oppurtunity to meet alot of people particularly woman.the relationship of Kanimozhi was giving repulsion to them.many were surprised at the brothers and father keeping quiet. in fact father was abetting the crime. Tamilian women and men value morality and chastity highly in the case of woman. for men it is a different yardstick.in Kanimozhi's case more than 2G her lack of respect to values created an anti wave. KUSHBOO ON THEIR SIDE FURHER DAMAGED THE CASE. JUST SIX MONTHS BACK PMK & VIDUTHALAI CHIRUTHAIGAL WERE DRIVING HER FROM PILLAR TO POST FOR HER COMMENTS. THE MOMENT SHE JOINED DMK ALL HER ACTIONS BECAME PURE. THE PEOPLE ARE NOT SUCH FOOLS.
THIS ELETIONS GREAT LESSON IS THAT YOU CANT TAKE PEOPLE FOR GRANTED. THEY WATCH EVERYTHING AND WILL GIVE REPLY AT THE CORRECT TIME.

Anonymous said...

:) ithuvum Kadanthu Pogum..

Don said...

I would have said, people voted for ADMK, as they didn't get their expected share of election money from DMK. But inspite of all the ruling party & vadivel's remarks at Vijayakanth, people helped him grow from 1 seat to 29 seats. This fact alone increased the respect I had for my fellow tamils, manifold.
Well done!
This election shows one thing about the mentality of people. I'm sure the govt officials and their families would have all voted for DMK. But inspite of that, if ADMK was able to get such a massive victory, it's either because the govt' employee family population is depleting which is unlikely. Or it could be the common folks irked by power-cuts, made it a point to vote. The cine artists families would have all voted for ADMK. I don't think common man cares much about 2G scam. So it must be power cuts(or in other words - improper governance) that gave ADMK the victory. Correct me if I'm wrong.

Karuthu Kandasamy said...

ட்வீட்டரில் ..படித்ததில் பிடித்தது....


@Vaanmugil : விக்கல் நிற்க விஷம் குடித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களே!, இன்னும் 2 நாட்களில் பேயாட்டம் தொடக்கம். என்ஜாய்!