பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 04, 2011

உலகக்கோப்பை Finals - உச்சம் தொட்ட இந்தியா

முதல் முறை டாஸ் செய்தபோது ஏற்பட்ட குழப்பத்தால், மீண்டும் செய்த டாஸில் சங்கக்காரா வென்று, பேட்டிங்கை தேர்வு செய்தார்! இந்திய மீடியா சங்கக்காரா ஏமாற்றியது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்த பெருமுயற்சி எடுத்தது ! எதிர்பார்த்தது போல, நெஹ்ராவுக்கு பதில் அணியில் இடம் பெற்ற ஸ்ரீசாந்த் மோசமாக பந்து வீசினார். பெரிய இடைவெளிக்குப் பின் திடீரென்று ஒரு முக்கிய ஆட்டத்தில் ஆட நேர்ந்தால் இப்படி ஆகலாம் என்பதும் எதிர்பார்த்தது தான்! சாகீரின் நிபுணத்துவம் (அவரது முதல் 3 ஓவர்களும் மெய்டன்கள்!) முதல் 10 ஓவர்களில், இலங்கை பேட்டிங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தரங்காவின் விக்கெட்டையும் சாகீர் வீழ்த்தினார், 31/1. இந்த உலகக்கோப்பையில் முதல் பவர் பிளேயில் இலங்கை எடுத்த மிகக் குறைவான ரன்கள் இது.

The initial phase belonged to India. இலங்கை துவக்க ஆட்டக்காரர்களை இழந்து 18 ஓவர்களில், தத்தி தத்தி 65 ரன்களை எடுத்திருந்தது. தங்கள் மிடில் ஆர்டர் அத்தனை பலமானதில்லை என்பதை உணர்ந்து, சங்கக்காராவும், ஜெயவர்த்தனேயும் கவனமாக ஆடினாலும், ரன்கள் steady-ஆக வந்த வண்ணமிருந்தன. யுவராஜ் பந்துவீச்சில் சங்கக்காரா விக்கெட் இழந்தபின் (122/3, 28 ஓவர்கள்) மஹிளா தனது அனைத்து அனுபவத்தையும் ஆட்டத்தில் கொணர்ந்து ஆடியது தான் இலங்கை இன்னிங்க்ஸின் ஹைலைட்! அவரது touch play மற்றும் பந்தை ஃபீல்டர்களுக்கு நடுவே நுணுக்கமாக செலுத்தும் திறன் ஆகியவை அவர் ஒரு world class batsman என்பதை நிரூபித்தன.

நடு ஓவர்களில் ஹர்பஜன், முனாஃப், யுவராஜ் ஓரளவு சிறப்பாக பந்து வீசியதால், 45 ஓவர்கள் முடிந்தபோது, ஸ்கோர் 211/5. யுவராஜ், சாகீர் தலா 2 விக்கெட்டுகள், ஹர்பஜன் 1. இந்த உலகக்கோப்பையில், முதன்முதலாக சாகீரின் "death-overs" பந்து வீச்சு மிக மோசமானதாக அமைந்து விட்டது நமது துரதிருஷ்டம் என்று தான் கூற வேண்டும். Length ball, full toss என்று வீசியதில், மட்டையை சரியாக பிடிக்கத் தெரியாத குலசேகரா, ஃபெரெரா போன்றவர்கள் விளாசியதில் 5 BPP ஓவர்களில் (46-50) 63 ரன்கள் கிட்டின! யாருமே எதிர்பார்க்காதது இது! மஹிளா 48வது ஓவரில் சந்தடியில்லாமல், தனது சதத்தை எட்டினார்.


இலங்கையின் மொத்த ஸ்கோர் 274. தனது முதல் 7 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே தந்த சாகீர், அவரது இறுதி 3 ஓவர்களில் 44 ரன்கள் வாரி வழங்கியதை Absolute Shocker என்று தான் கூற வேண்டும்!! ஆடுகள நிலைமை பெரிய அளவில் மாறாத சூழலில், 275 என்பது நமது பேட்டிங்கை கொண்டு துரத்தவல்ல இலக்காகவே தோன்றியது. மிதமான பயமும், ரென்ஷனும் வயிற்றைக் கவ்வியிருந்ததென்னவோ உண்மை தான் :-)

இந்தியா பேட்டிங்:
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு இறுதியாட்டத்தில் எந்த அணியும் வெற்றிகரமாக துரத்தாத ஓர் இலக்கை அடைய ஒரு நல்ல துவக்கம் மிக அவசியமானது என்ற எண்ணம் பலருக்கும் இருந்திருக்கும். சச்சின், சேவாக் இருவரில் ஒருவர் ஒரு 'பெரிய' நூறு எடுத்தால் மட்டுமே இது சாத்தியம் என்று டிவிட்டரில் நானே பதிவு செய்திருந்தேன்! ஆனால், இன்னிங்ஸின் முதல் மலிங்கா ஓவரில், சேவாக் எல்.பி.டபிள்யு :(

சேவாக் ஒரு 3-4 ஓவர்களுக்குப் பிறகு (அதான், முதல் பவர் பிளேயில் 10 ஓவர்கள் இருக்கின்றனவே!) shuffle across செய்து leg side-ல் பவுண்டரி அடிக்க முயல்வது நல்லது, அல்லது, inside out ஷாட் கூட ஆடுவது இதற்கு பரவாயில்லை! சச்சின் குலசேகரா ஓவரில் 2 பவுண்டரிகள் effortless ஆக அடித்தது நம்பிக்கையைத் தந்தாலும் மலிங்காவின் பந்து வீச்சில் 7வது ஓவரில் சங்கக்காராவுக்கு கேட்ச் கொடுத்து விக்கெட்டிழந்தார் :( அரங்கை மயான அமைதி கவ்வியது, உண்மையில் எனக்கும் நம்பிக்கை போய் விட்டது! ஸ்கோர் 32/2

ரென்ஷன் சற்று அதிகமாக இருந்ததால், பக்கத்துத் தெருவில் இருக்கும் நண்பர் வீட்டுக்குச் சென்றேன் (நண்பர் பெயர் பிள்ளையார்!) அர்ச்சகரும் கிரிக்கெட் ஆர்வலர். 2 விக்கெட்டுகள் காலி என்று நான் கூறியவுடன், துளியும் நம்பிக்கை இழக்காமல், "சச்சின், சேவாக் மட்டும் தான் இந்திய அணியா? இன்னிக்கு கம்பீர் 100 அடிப்பார். கோலியும், தோனியும் கூட நிச்சயம் அசத்துவார்கள், வெற்றி உறுதி, நாளைக்கு வந்து சொல்லுங்க!!!" என்று அசால்டாக கூறினார். அவர் சொன்னது போலவே, கௌதியும், கோலியும் பெரிய அளவிலான அழுத்தத்தை உள் வாங்கிக் கொண்டு அற்புதமாக ஆடினர் என்றால் அது மிகையில்லை. அதே நேரம், ரன்கள் எடுத்த வண்ணம் இருந்ததால், ரன் ரேட் 5.5 க்கு குறையவில்லை.

மீண்டும் ஒரு திடுக் திருப்பம். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கோலி, தில்ஷனின் படு சுமாரான பந்து வீச்சுக்கு அவுட்டானார். ஸ்கோர் 115/3 (22 ஓவர்கள்). யுவராஜுக்கு பதில், 'கப்தான்' தோனி களமிறங்கினார்! முரளி, ரந்திவ், தில்ஷன் என்று 3 off spinners இலங்கை அணியில் இருந்ததால், இடது கை ஆட்டக்காரர் யுவராஜை (மற்றும் ரெய்னாவை) துரத்தலின் இறுதிக்கட்டத்துக்கு வைத்திருப்பது நல்லது என்று தோனி கருதியிருக்கலாம். மேலும், இடது-வலது பேட்டிங் காம்பினேஷன் களத்தில் ஆடுவதும் நல்லது தானே! Dhoni mentioned later that he wanted to take responsibility in that crunch situation and guide the team closer towards the target.

ஃபார்மில் இல்லாத காரணத்தால், தொடக்கத்தில் தோனியின் ஆட்டத்தில் மிகுந்த கவனம் தெரிந்தது. ஆனால், கம்பீர் ஆடிய விதம் கேப்டனுக்கு நிச்சயம் நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். 1-டவுனில் கம்பீர் ஆடுவது இந்திய அணிக்கு ஒரு வரப்பிரசாதம்! சுழற்பந்து/வேகப்பந்து என்று இரண்டையும் சுலபமாக கையாள்வதுடன், ரிஸ்க் அதிகம் எடுக்காமல், ரன் சேர்ப்பதில் தேக்கமும் இல்லாமல் பார்த்துக் கொள்வது கம்பீரின் Specialty! சங்கக்காராவின் பந்துவீச்சு மாற்றங்கள் பலன் எதுவும் தரவில்லை. இதற்கு முரளி (உடல் நிலை காரணமாக) off colour ஆக இருந்ததும் ஒரு முக்கியக் காரணம். கம்பீரும் தோனியும் முரளியில் tricksக்கு ஒத்துழைப்பு தர மறுத்து கவனமாக ஆடியதும் மற்றொரு காரனம் :-) அஜந்தா மென்டிஸ் இல்லாததும் ஒரு குறையே.

முக்கியமான ஆட்டத்தில், உலகக்கோப்பையில் தனது முதல் அரைச்சதத்தை (52 பந்துகள்) தோனி பதிவு செய்தார். ஃபார்மில் இல்லாத நிலையில், playing under great pressure, ஆடுகளம் பேட்டிங்குக்கு அத்தனை கடினமாக இல்லாவிட்டாலும் கூட, தோனியின் இந்த ஆட்டம் மிக்க பாராட்டுக்குரியது! அதற்காக, முந்தைய ஆட்டங்களில் தோனி செய்த சில சொதப்பல்களை நான் விமர்சித்தது, தேசியத்துக்கு எதிரான குற்றம் என்று ஒரு சில தோனி ரசிகர் மன்ற pseudo-patriotic தொண்டரடிப்பொடிகள் பொங்கினால், நான் என்ன செய்ய! தோனியே கூட பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தான் ஆடுகளத்தை சரியாக கணிக்கத் தவறியதை ஒரு பேட்டியில் கூறியிருந்ததை நினைவு கூர்கிறேன்.

ஒரு Gem of an innings ஆடிய கௌதி வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமைந்திருக்க வல்ல சதத்தை தவறவிட்டது வருத்தத்தைத் தந்தது. 97 ரன்களில், அதுவும் ஃபெரெராவின் உருப்படாத பந்துவீச்சில், அடிக்கப் போய், அனாவசியமாக ஆட்டமிழந்தார்! Gambir actually deserved that glory for the calmness he displayed under pressure & the way he anchored the Indian innings in a make or break situation after the cheap dismissal of both Sachin and Sehwag! யுவராஜ் களமிறங்கினார்.

இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. கடைசி 5 (பவர் பிளே) ஓவர்களில் இந்திய வெற்றிக்கு 30 ரன்களே தேவை என்ற நிலையில், தோனியின் அதிரடித் தாக்குதலில் 48.2 ஓவர்களிலேயே ஒரு சிக்ஸர் வாயிலாக, மகத்தானதொரு வெற்றியும், 28 வருட காத்திருப்புக்குப் பின் உலகக்கோப்பையும் இந்தியாவின் வசம் வந்தது!!!! தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, தனது பணியை செவ்வனே செய்து முடித்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. It was good that Dhoni finished the job himself without expecting others below to achieve the victory. இந்த வெற்றியின் மூலம், கபில்தேவின் தனிமையும் விலகியது :) இந்தியாவே விழாக் கோலம் பூண்டது! எனது தெருவில் ஒரு 10 நிமிடங்களுக்கு இடைவிடாத வேட்டுச்சத்தம்!

சச்சின் இந்த வெற்றியை தனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான/பெருமையான தருணம் என்று கூறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை! 20 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின் 6வது முயற்சியில் கிடைத்த பொக்கிஷமல்லவா இந்த உலகக்கோப்பை! ஆட்ட நாயகன் தோனி, அந்த விருதை கம்பீருடன் பகிர்ந்து கொள்வதாக அறிவிப்பார் என்று எதிர்பார்த்தேன்! இதை ஒரு குறையாக கூறவில்லை. யுவராஜ் உலகக்கோப்பைத் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். ஒரு சமயத்தில், இந்திய அணியிலிருந்த விலக்கப்பட்டு, (முக்கியமாக) உலகக்கோப்பைக்காக அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்ட யுவராஜுக்கு இதை விட என்ன பெருமை இருக்க முடியும்!!!

Tail piece:
இந்தியாவுடன் கம்பேர் செய்தால், ஸ்ரீலங்கா அணியில் சங்கக்காரா, மஹிளா, முரளி, மலிங்கா தவிர்த்து மற்றவர் ஒப்புக்குச் சப்பாணிகள் என்பதால் தான், அதை சுமாரான அணி என்று முன்னர் எழுதினேன். இவர்கள் நால்வரிடமும் இந்தியா உஷாராக இருப்பது அவசியம் என்றும் முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்! அது போலவே, முரளி தவிர மற்ற மூவரும் பரிமளித்ததால் தான், இந்த இறுதி ஆட்டம் மிக சுவாரசியமான ஒன்றாக அமைந்தது!

இந்த உலகக்கோப்பை கனவு நனவானதற்கு, இந்திய அணியின் (துளியும் ஆர்ப்பாட்டம் இல்லாத!) பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனின் அபாரமான பங்களிப்பு ஒரு முக்கியக் காரணம்! 2007 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்திய அணியை அரவணைத்து, பல கஷ்டங்களை சமாளித்து, திட்டங்களை வகுத்து, இந்த உலகக்கோப்பை உச்சத்தை அடைய (அப்பாடா, இடுகை தலைப்பு இடுகையில் வந்தாச்சு ;)) அடி கோலிய இவரை Gary Potter என்று அழைக்கலாம் :-)

In the final conclusion, both MS Dhoni and SR Tendulkar are Destiny's Children and realization of this World Cup Dream is just testimony to that ever lasting fact !!!

Passing Shot:
சூப்பர் ஸ்டார் (அரங்கில்) பார்வையாளராக இருந்த ஓர் ஆட்டத்தில் இந்தியா தோற்றுப் போகும் என்பது கூட கனவிலும் நடக்க முடியாத ஒரு விஷயம் தானே ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா
http://balaji_ammu.blogspot.com
அப்பாடா, இனி எல்லோரும் ரென்ஷன் இல்லாமல் இருக்கலாம் :-) ( ரென்ஷன் = எ.அ.பாலா)

32 Comments:

Anonymous said...

ITS A GREAT VICTORY!!!! HOPE WE WILL WIN NEXT WORLD CUP ALSO!!!
ALL THE INDIANS HAVE TO GIVE THE SAME SUPPORT TO OUR HOCKEY TEAM!!!

INDIAN

Roaming Raman said...

ஜெயிச்சாச்சு..இருந்தாலும்.. கவுத்தி கொஞ்சமே கொஞ்சம் பொறுமை காட்டியிருந்தால் இந்தியாவில் இரண்டு செஞ்சுரி பார்த்திருக்கலாம்!! செஞ்சுரி என்பது ஒரு பதிவு அல்லவா?? ஆனாலும் இது போன்ற ஒரு பைனல் மாட்சுக்கு "ரென்ஷேன்" மற்றும் High Score இருந்தால்தான் சுவாரஸ்யமே! அப்போதான் ரெண்டு டீமுக்கும் பெருமையும்!!
-ரோமிங் ராமன்

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

ஒரு கட்ட வியாபாரம் முடிந்தது.. அடுத்த கட்ட வியாபாரம் எட்டாம் தேதி தொடங்குது.. இதெல்லாம் ஒரு விளையாட்டா?? ச்சே!! ஆபீஸ்ல இருந்து பர்மிஷன் போட்டு சீக்கிரம் கிளம்பியும், ட்ரெய்ன் கிடக்காம முதல் அஞ்சு ஓவர் பார்க்க முடியல!ஹி..ஹி.. ஹி..


//அப்பாடா, இனி எல்லோரும் ரென்ஷன் இல்லாமல் இருக்கலாம் :-) ( ரென்ஷன் = எ.அ.பாலா) //
வரும் தொடருக்கு எழுத மாட்டாரா என்ன??

http://sagamanithan.blogspot.com/

rksrini said...

as per idlyvadai prediction india have own .becoz our asttrologer said 1981 born captain will win the cup.in that category two players one is dhoni,other smith.

atlast astro also won

Anonymous said...

Hurray!!! India won the world cup.
Hurray ,,Hurray: Bala's commentary is also over!!!

Anonymous said...

Bala, Do you cut and paste the english portion of your commentary from some websites?

Actually, they do not mix with the tamil commentary. That's why!

Only a few people like your "Vathiyaar" Sujatha are good in doing such things.

You may actually consider working towards improving your writing style, as there is none at present.

Above all: Thanks for stopping the comments that you were posting in the name of Bala's Rasigar mandram. They were really irritating.

krish said...

Ponga sir..

Itana naal kapil dev pudicha catch eh pottu pottu news channel namma kanna azha vechanga..

Ini dhoni oda sixer ah adutha 20 varusham poduvanga pola..

Epdiyum India Jeyichadu Santhosamey.. aana news channels oda alumbal daan mudiyala.

4 naal kazhichu vara match ku ippovae preview nu ivanunga panna attooyiyam irukaey.. sabbaaaaaaaa.

Anonymous said...

எலைட்டுகளாக தங்களை நினைத்துக் கொள்பவர்களை எப்படி கண்டுபிடிக்கலாம்? அவர்கள் எழுதும் சங்கீத, விளையாட்டு கட்டுரைகளில் நடுநடுவே பல வாக்கியங்கள் முழுமையாகவே ஆங்கிலத்தில் வந்து போகும்...

//Gambir actually deserved that glory for the calmness he displayed under pressure & the way he anchored the Indian innings in a make or break situation after the cheap dismissal of both Sachin and Sehwag!//

J. Ramki said...

எங்க தலைவரோட ராசி நல்ல ராசி. கேலரிலேர்ந்து அவர் தந்த ஆசி

Chandramouli said...

I thought Gambir would be the man of the match. He very much deserved it. But for him, we might not have made it. However, Captain Dhoni should be given full credit for his strategy, field placement, his own entry into the arena - all point to his 'man of the match' award. But, as you say, at least, the award might have been given jointly to Gambir & Dhoni. Or at best, Dhoni could have right away handed over the award to the deserving Gambir. For this match, Gambir was the sheet-anchor. I felt sorry for him that he was not fully recognized.

enRenRum-anbudan.BALA said...

"Indian" Anony, Roaming Raman,
Thanks for your comments.

Sagamanithan,
Dont worry, I will be back for IPL if Idlyvadai permits ;-)

rksrini,
Its great that the prediction worked out favourably for India :-)

Anony,
//Hurray!!! India won the world cup.
Hurray ,,Hurray: Bala's commentary is also over!!!
//
Dont be too happy, Lot of cricket is coming up in 2011 including IPL :)

enRenRum-anbudan.BALA said...

My dear Pathetic Anony,

//Do you cut and paste the english portion of your commentary from some websites?
Actually, they do not mix with the tamil commentary. That's why!
Only a few people like your "Vathiyaar" Sujatha are good in doing such things.
//
Honestly speaking, I dont need to cut and paste anything! You are not able to understand/appreciate because of your very limited vocabulary. Pl try to improve it but I am not sure it would really be of any help in your case. I beg you not to talk about Sujatha!

//You may actually consider working towards improving your writing style, as there is none at present.
//
And it is expected that a moronic 'anony' like you would neither have the language sense nor the common sense. So, please advise on writing style once you are able to write properly 1 paragraph either in English or Tamil or a mixture of both :-)

//Thanks for stopping the comments that you were posting in the name of Bala's Rasigar mandram. They were really irritating.
//
Last but not the least, its ridiculous to suggest that I need to post anything as anonymous and that too to respond to a faceless & nameless miserable coward like you! Go, have some life elsewhere, not in cricket related posts ;)

enRenRum-anbudan.BALA said...

Krish,
Thanks for your comment.

"Elite" disliking Anony,

Even I dont like Elite and dont consider myself as one! I am unable to express certain things effectively in thamizh and so I am forced to use english. Thats all.

enRenRum-anbudan.BALA said...

Rajni Ramki,
I expected you would comment in this post :)

Chandramouli,
Its true that Gambir has not been given due credit but I think Dhoni and team consider him to be of great value to the ODI team. Lets not create a controversy over MoM award :)

R.Gopi said...

//"உலகக்கோப்பை Finals - உச்சம் தொட்ட இந்தியா"//

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள்...

//Passing Shot:
சூப்பர் ஸ்டார் (அரங்கில்) பார்வையாளராக இருந்த ஓர் ஆட்டத்தில் இந்தியா தோற்றுப் போகும் என்பது கூட கனவிலும் நடக்க முடியாத ஒரு விஷயம் தானே ;-)//

ஆஹா... கடைசியில இப்படி சூப்பர் ஷாட் அடிச்சுட்டீங்களே......... கலக்கல் பாலா....

AALUNGA said...

நீங்கள் எழுதியுள்ளது அனைத்தும் மிகவும் உண்மை...
ஒரு வீரனின் 20 ஆண்டுகள் காத்திருப்பு வீண் போகவில்லை!!

Anonymous said...

தோனி வாங்கிய கோப்பை போலியானது. உண்மையான கோப்பை மும்பை சுங்க வரி அலுவலகத்தில் உள்ளது.

enRenRum-anbudan.BALA said...

அன்புள்ள கோபி,

//ஆஹா... கடைசியில இப்படி சூப்பர் ஷாட் அடிச்சுட்டீங்களே......... கலக்கல் பாலா....
//

:)
இது வரை வந்த எனது கிரிக்கெட் பதிவுகள் அனைத்தையும் வாசித்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி. நலம் தானே?

enRenRum-anbudan.BALA said...

AALUNGA,
//ஒரு வீரனின் 20 ஆண்டுகள் காத்திருப்பு வீண் போகவில்லை!!
//
ஆமாம். அவரின் அயரா உழைப்பும், கர்வமின்மையும் அதற்கு முக்கியக் காரணங்கள்.

Anony,
//தோனி வாங்கிய கோப்பை போலியானது. உண்மையான கோப்பை மும்பை சுங்க வரி அலுவலகத்தில் உள்ளது.
//

ஏங்க, இப்டி புரளியைக் கெளப்பறீங்க :-)

jp said...

"சூப்பர் ஸ்டார் (அரங்கில்) பார்வையாளராக இருந்த ஓர் ஆட்டத்தில் இந்தியா தோற்றுப் போகும் என்பது கூட கனவிலும் நடக்க முடியாத ஒரு விஷயம் தானே ;-" very true..

kothandapani said...

what about the news going round the cricket world.....instead ofthe individuals fixing the matches this time the nations themselves took up initiative, and that
is the reason why Gilani and Premadasa airdashed to india to sign the pact with their counterparts.............

Anonymous said...

//So, please advise on writing style once you are able to write properly 1 paragraph either in English or Tamil or a mixture of both :-)
//

A reader need not become a writer in order to comment about his style.

You sound like Raghuvaran challenging Arjun telling " Nee Chief Ministeraa irundhu paaru, appa theriyum".

Subramani said...

பாவம் நம்ம பாலா, விமர்சனத்த தாங்க முடியல போல! அனானி மேல ரொம்ப எரிச்சல் படறாறு.

Madan Kumar said...

//தோனி வாங்கிய கோப்பை போலியானது. உண்மையான கோப்பை மும்பை சுங்க வரி அலுவலகத்தில் உள்ளது.
//

ஏங்க, இப்டி புரளியைக் கெளப்பறீங்க :-)

Seems like Bala reads the News only after 2 days. (as usual) ;-)

Sundar C said...

Ananiyai pazhikum arivaliye. Um aarva kolaarukku oru alave illayaa???

Anonymous said...

ஏம்பா பாலா
இட்லி வடைங்கற அனானி ப்ளாக்குல வந்து அன்னனிங்களை திட்டறியே! உன் ப்ளாக்குல போயி எழுதுறதுதானே! வேணுங்கறப்ப அனானி இனிக்குதாக்கும்!

enRenRum-anbudan.BALA said...

Anony,

//A reader need not become a writer in order to comment about his style.

//

Yes. I agree. But the issue is, one cant simply comment "consider working towards improving your writing style, as there is none at present" without pointing out the issues, as he sees them. Moreover, blogging is not professional writing! That 'pathetic' anony is simply being vindictive! Thats all.

As he advised me to improve, I too have the right to advise that anony to try writing something first (so that he is able to understand the difficulties!)

enRenRum-anbudan.BALA said...

Subramani,

//பாவம் நம்ம பாலா, விமர்சனத்த தாங்க முடியல போல! அனானி மேல ரொம்ப எரிச்சல் படறாறு.
//

I can accept criticism if it’s fair but that is not the case with that Anony! I welcome any rebuttal or opposite view based on the ‘content’ of my post, not mudslinging.

enRenRum-anbudan.BALA said...

Madhan Kumar,

//Seems like Bala reads the News only after 2 days. (as usual) ;-)

//

You got me :-)Sundar C,

//Ananiyai pazhikum arivaliye. Um aarva kolaarukku oru alave illayaa???//

கேள்வி கேட்கப்பட்ட முறையில் தான் அதற்கான பதிலும் அமையும் !Latest Anony,

//ஏம்பா பாலா
இட்லி வடைங்கற அனானி ப்ளாக்குல வந்து அன்னனிங்களை திட்டறியே! உன் ப்ளாக்குல போயி எழுதுறதுதானே! வேணுங்கறப்ப அனானி இனிக்குதாக்கும்!
//

"அனானி" இனிக்கவும் இல்லை, கசக்கவும் இல்லை :) போகிற போக்கில் இஷ்டத்துக்கு காழ்ப்புடன் ஏதாவது எழுதினால் , அனானியாக இருந்தாலும், பேரோடு வந்தாலும், பதில் இப்படித் தான் இருக்கும்!

enRenRum-anbudan.BALA said...

JP, Kothandapani,

Thanks for reading and commenting.

Tamil Cinema mp3 said...

நம் இந்தியன் அணிக்கு வாழ்த்துகள்

Anonymous said...

Bala,

I donno wats the motivation to always blame Dhoni though he had put lot of effort as a captain.... change this attitude....