பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 30, 2011

புத்தக விற்பனை குறித்த சர்வே விளம்பரம்

இன்று ஒரு அன்பர் சாட்டில் வந்து இட்லிவடையில் ஒரு சர்வே போட முடியுமா என்று கேட்டார் ? தேர்தல் பற்றிய சர்வே போடுவதற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்திருக்கு என்று சொன்னேன். "சே சே இது புத்தமம் பற்றிய சர்வே என்றார்" பேஷா போடலாம் என்றேன். இதோ இந்த லிங் என்று ஒன்றை கொடுத்தார். அதில் புத்தக விற்பனை குறித்த சர்வே என்று கீழ்கண்டவாறு எழுதியிருந்தது..

ஜெயமோகன் புத்தகங்கள் விற்பனை தொடர்பாகவும் , பொதுவான வாசிப்பு தொடர்பாகவும் தகவல்களை திரட்ட நியூ ஹாரிசன் மீடியா (கிழக்கு பதிப்பகம் ) விரும்புகிறது , இந்த சர்வே ஜெயமோகன் புத்தகங்களை இன்னும் நிறைய வாசகர்களுக்கு கொண்டுசேர்க்க உதவியாக இருக்கும் .
எனவே வாசகர்கள் இந்த கணக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டுகிறோம் ,
முடிவில் உங்கள் முழுமுகவரியை தாருங்கள் , “ஜெயமோகன் எழுதிய வாழ்விலே ஒருமுறை” புத்தகத்தை இலவசமாக அனுப்பி வைக்கிறோம் .
அன்புடன் ,
நியூ ஹாரிசன் மீடியா "


ஒரு எழுத்தாளர் தான் எழுதிய புத்தகங்களில் உங்களுக்கு பிடித்தது எது சொல்லுங்க, அதை கூடுதலாக சில காப்பி போடுகிறோம் என்று சொல்லுவது தமிழ் கூறும் நல்லுலகில் முதல் முறை. சபாஷ்!.

பாலகுமாரன் பிடித்தாவர்களுக்கு ராஜேஷ்குமார் பிடிக்காமல் இருக்கலாம், இட்லிவடை பிடித்தவர்களுக்கு தேசை பிடிக்கமால் இருக்கலாம் இப்படி இருக்கும் இணைய வாசகர்களை இலக்கிய அந்தஸ்தில் வைத்து இது போல சர்வே நடத்தினால் என்ன நடக்கும்? ஜெயமோகன் போல பெரிய எழுத்தாளர்களுக்கே இந்த நிலமை என்றால் மற்ற எழுத்தாளர்களை பற்றி கேட்கவே வேண்டாம்!.

கிழக்கு பதிப்பக மார்கெட்டிங்க்கு இது வசதியான விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை, இந்த சர்வே அவர்கள் பக்கத்தில் வர வேண்டும், ஒரு எழுத்தாளர் நடத்தும் சொந்த பக்கத்தில் வந்தால் நன்றாகவா இருக்கிறது? இதென்னமோ குசேலனில் வடிவேலு வலுக்கட்டாயமாக ஆள் பிடிப்பது போல இருக்கு.

பதிப்பகத்துக்கு சில ஆலோசனைகள்:
இந்த வருடம் கச்சா முச்சா என்று புத்தகம் போடாமல், உங்கள் லிஸ்டில் இருக்கும் எல்லாம் புத்தகங்களும் ஒரு முறை பாருங்கள். பல புத்தகங்கள் எண்ணிக்கைக்கு உதவும் ஆனால் எவ்வளவு புத்தகங்களை மக்கள் அட்டைக்கு பிறகு திருப்பி பார்த்திருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள். மக்கள் புத்திசாலிகள் அவர்களுக்கு ரூ 50/= க்கு ஏதாவது நாவல் கொடுத்தால் சரி எப்பவாவது படித்து பார்க்கலாம் என்று வாங்கி வைத்துக்கொள்ளுவார்கள். அவ்வளவு தான்.நிறைய புத்தகங்கள் போட்டால், மக்கள் குப்பைகளை கிளறி வாங்கிக்கொள்ளுவார்கள்.

எழுத்தாளர்களுக்கு ஒரு ஆலோசனை:
கட்டு கட்டாக 10 புத்தகம், 15 புத்தகம் என்று ரிலீஸ் செய்யாதீர்கள். உங்கள் கற்பனை ஓட்டத்துக்கு ஏற்றவாறு எழுதுங்கள். ரிலீஸுக்காக எழுதாதீர்கள். வாசகர்கள் புத்திசாலிகள், அவர்கள் எதை படிக்க வேண்டும் எதை நிராகரிக்க வேண்டும் என்று தெரியும். ஆனானப்பட்ட ரஜினியே பாபா படம் எடுத்து ஓடவில்லை. பயப்படாதீர்கள், தைரியமாக எழுதுங்கள்.

ஓட்டு போட்டா டிவி, மிஷ்ஸி, கிரைண்டர், ஃபேன் கிடைக்கும், சர்வேயில் பங்கு கொண்டால் புத்தகம் இலவசம் கிடைக்கும்.முந்தினா உண்டு. இல்லேன்னா துண்டு.


பிகு: இந்த பதிவு யாரையும் தாக்கும் பதிவு கிடையாது.

5 Comments:

அநிருத்தன் said...

அடப்பாவிகளா , ஒரு பதிப்பகம் இப்படி ஏதாவது செய்தாவது புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை கொண்டுவர நினைக்கிறது ,

அதைப்போய் இப்படி சொல்கிறீர்களே ?

kggouthaman said...

எது எப்படியோ! நான் இப்பொழுது படித்துக் கொண்டிருப்பது கிழக்குப் பதிப்பக வெளியீடு, 'உடல் மொழி' என்னும் புத்தகம். பெரும்பாலும் புனைவு புத்தகங்களை நான் வாங்குவதும் இல்லை, படிப்பதும் இல்லை.

King Viswa said...

//பிகு: இந்த பதிவு யாரையும் தாக்கும் பதிவு கிடையாது//

இந்த பதிவுலேயே இதுதான் டாப்.

பை தி வே, ஏன் இவ்வளவு ஸ்பெல்லிங் மிஸ்டேக்?


கிங் விஸ்வா
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சித்திரக்கதை - சென்னை சூப்பர் கோமிக்ஸ் - பாண்டி : பாய் ஆப் தி மேட்ச்

Anonymous said...

நடுநிலை வேசம் போட வேண்டாம்.ஜெமோவுக்கு ஜே கிழக்கிற்கு ஒரு ஒ என்று போட்டே எழுதலாம்.

clayhorse said...

"வாசகர்கள் புத்திசாலிகள், அவர்கள் எதை படிக்க வேண்டும் எதை நிராகரிக்க வேண்டும் என்று தெரியும்". அப்படீங்களா? ஆச்சர்யமா இருக்கு! இந்த வெவரம் தெரியாத பெருசு ஒண்ணு, "கடை விரித்தோம், கொள்வார் இல்லை" அப்படீன்னு புலம்பிட்டுப் போயிருக்கு.
வினவு, இட்லிவடை, போன்ற வம்புப் பக்கங்களுக்குக் கிடைக்கும் வருகையில் ஒரு சதவீதம் கூட உருப்படியானப் பக்கங்களுக்கு வராது என்பது உங்களுக்கும் தெரியும். வேறு என்ன சொல்வது?