பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 25, 2011

ஒரே ஆப்ஷன் சும்மா இருப்பது !

கல்மாடி, கனிமொழி என்று வந்த இரண்டு செய்தியிலும் இரண்டு ஒற்றுமை - சிபிஐ, ஊழல். வேறு ஒரு ஒற்றுமையும் இருக்கிறது அது கால தாமதம். மீடியா தொடர்ந்து கொடுத்த பிரஷரில், உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் ஏதோ செய்கிறார்கள். இரண்டு நாட்களாக தயாளு அம்மாள், கனிமொழி பெயர்கள் வரும் என்று லீக் செய்தார்கள், நேற்று தயாளு அம்மாள் பெயர் வராது என்றார்கள். இன்று அதே போல நடந்துவிட்டது.

கலைஞ‌ர் டி.வி.யில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், கனிமொழிக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளது ஆனால் தயாளு அம்மாளுக்கு தமிழ் தவிர மற்ற மொழிகள் தெரியாது. அதனால் அவர் பெயர் இடம்பெறவில்லை என்று சிபிஐ விளக்கம் சொல்லியுள்ளது. செம்மொழிக்கு கலைஞர் செய்த தொண்டு அவர் மனைவியைக் காப்பாற்றி இருக்கு.

கலைஞர் இன்று அளித்த பேட்டியிலிருந்து ஒரு கேள்வி:

கேள்வி: குற்றப்பத்திரிக்கையில் உங்கள் குடும்பத்தினரின் பெயர்கள் இடம்பெற்றால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறுமா?

முதல்வர்: பெண்ணாக இருந்துகொண்டு இதுமாதிரிப் பேசக்கூடாது. பெண் நிருபர் இப்படி இதயத்தை தூக்கி எறிந்துவிட்டுப் பேசக்கூடாது.பெண்ணாக இருந்துக்கொண்டு, ராஜாவுக்கு பதவி வேண்டும் என்று ஒரு பெண் நீரா ராடியாவுடன் பேசலாம். ஆனால் இது போல கேள்வி கேட்க கூடாது. எது எப்படியோ கலைஞருக்கு நிறைய ஆப்ஷன் எதுவும் இல்லை. அவருக்கு ஒருக்கும் ஒரே ஆப்ஷன் - சும்மா இருப்பது. இன்றும் நாளையும் அஷ்டமி நவமி. அதனால் பகுத்தறிவைப் பயன்படுத்தி புதன் கிழமை அன்று மீட்டிங் வைத்துவிட்டு சும்மா இருக்கார்.

10 Comments:

பாரதசாரி said...

//அதனால் பகுத்தறிவைப் பயன்படுத்தி புதன் கிழமை அன்று மீட்டிங் வைத்துவிட்டு சும்மா இருக்கார்.//

:-)

உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கீர்கள்

Anonymous said...

பிரதர் ஒரு டவுட்டு.
இரண்டு லேடீஸ், ஓரு சரத்குமார்: இவங்க நடத்தற தொலைக்காட்சி ப்ரைவேட் கம்பனியில் ஊழல்.அதுலே சி பி ஐ நடவடிக்கை எடுத்து இருக்கு.... இதுலே தி.மு க. கட்சி உயர் மட்டக் குழு எங்கே வந்தது? -கபாலி

Anonymous said...

manjal comment useless olaral.. aanaal nach-nnu irukku :)

Anonymous said...

இட்லி வடை ஒரு ஆணாக இருந்துகொண்டு இதுமாதிரிப் பேசக்கூடாது. இதயத்துக்கு இனமான நீங்கள் இப்படி இதயத்தை தூக்கி எறிந்துவிட்டுப் பதிவு போடக்கூடாது.என்னமோ போங்கள். கிழக்கு வெளுக்கு நாள் அது தூரத்தில் இல்லை என்பதை மறவாதீர்கள்.

ஆனால் உயர் மட்டக் குழுவில் இப்படித்தான் பேசுவார் ஐயா. (கற்பனை அல்ல, நிஜமாகவும் கூட நடக்கலாம்)

”சி.பி.ஐயரே... உங்களுக்கு இதயமே இல்லையா? அய்யகோ.. அய்யகோ.. இந்தக் கொடுமையை நான் எங்கே போய்ச் சொல்வது? சி.பி.ஐயும் தேர்தல் கமிஷன் போல் அதிமுகவுடன் சேர்ந்து கொண்டு கழக அரசுக்கு எதிராகச் சதி செய்கிறது. இது ஒரு ஆரிய திராவிடப் போர். நான் ஒரு சூத்திரன் ஆட்சியில் இருப்பதும், என் குடும்பத்தினர் உழைத்து முன்னேறி வந்திருப்பதும் வந்தேறி பார்ப்பனர்களின் கண்களை உறுத்துகிறது. தமிழினமே திரண்டு வா. பார்ப்பன, ஆரிய சதிகளை முறியடிப்போம்.இன மானம் காப்போம். திராவிடம் வெல்வோம்.

ஆனால், இதனால் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் எந்தப் பாதிப்பும் வராது. குற்றப்பத்திரிகையில் பெயர் இருப்பதனாலேயே அவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார்.ஒருவேளை கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர் குற்றவாளி அல்ல. குற்றம் சாட்டப்பட்டவரே! ஒருவேளை தண்டிக்கவே செய்தாலும் அவர் குற்றவாளி ஆகமாட்டார். தண்டனைக் குற்றத்திற்கு ஆளானவரே! ”

”ஏப்ம்பா துரை, நான் சரியா பேசறேனாய்யா...”

”ஆமா.. ஆமாங்க... ஜிங் சக்... ஜிங்.. சக்... ஜிங் சக்...”

- ஞான சூன்யம்

Anonymous said...

Why dont IV write about the vaidaas that Amma is getting every other week.

We The People said...

//பெண்ணாக இருந்துக்கொண்டு, ராஜாவுக்கு பதவி வேண்டும் என்று ஒரு பெண் நீரா ராடியாவுடன் பேசலாம். ஆனால் இது போல கேள்வி கேட்க கூடாது.//

இது மாதிரி கேள்வியை கேட்பதற்கு முன் நீ ஒரு பெண் என்பதை ஞாபத்தில் வைத்து கொள்! அப்புறம் என் மேல் பாசம் கொண்ட உடன்பிறப்பு எதாவது செய்துவிட்டால் நான் பொறுப்பில்லை என்று சொல்ல வறாரு... இதை கூட பிரியலய உமக்கு இ.வ

Anonymous said...

தயாளு அம்மாவுக்குக் கலைஞர் டீவீயில் முதலீடு செய்ய வருமானம் ஏதுமில்லை. அது கலைஞரின் பணம் தானே. கலைஞரை ஏன் ஒரு கேள்வி கூடக் கேட்கவில்லை? கலைஞர் எப்படி எனக்கும் கலைஞர் டீவீக்கும் பெயர் தவிர வேறு தொடர்பு இல்லை என்று சொல்லலாம்?
---பணிவரையன்

Anonymous said...

தயாளு அம்மாவுக்குக் கலைஞர் டீவீயில் முதலீடு செய்ய வருமானம் ஏதுமில்லை. அது கலைஞரின் பணம் தானே. கலைஞரை ஏன் ஒரு கேள்வி கூடக் கேட்கவில்லை? கலைஞர் எப்படி எனக்கும் கலைஞர் டீவீக்கும் பெயர் தவிர வேறு தொடர்பு இல்லை என்று சொல்லலாம்?
---பணிவரையன்

Anonymous said...

திமுக மிகப்பெரிய வழி அனுப்பு விழாவை ஏற்பாடு செய்றாங்களாம்-- கனிமொழி மே 6-ம் தேதி டில்லிக்குப் போகிறார் இல்லையா, அன்று மீனம்பாக்கம் அதிறும். --வேலு

R.Gopi said...

அதனால் பகுத்தறிவைப் பயன்படுத்தி புதன் கிழமை அன்று மீட்டிங் வைத்துவிட்டு சும்மா இருக்கார்.//

பகுத்தறிவு பகலவன், வாழும் வள்ளுவன், முத்தமிழ் வித்தகர் - இப்படி எல்லாம் ”மஞ்சள் துண்டு மைனரை” அவரின் அல்லக்கைகள் ஜால்ரா அடிக்கும் வேளையில் நீங்கள் இப்படி சொல்லி இருக்கப்டாது....

பகுத்தறிவு பகலவன் உதிர்த்த சில முத்துக்கள் இதோ :

கலைஞர் டி.வி.என்பதில் என் பெயர் மட்டுமே இருக்கிறது... அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...

குற்றம் சாட்டப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளி என்று ஆகிவிடாது - ஆட்டைய போட்ட ஆண்டிமுத்து ராசா மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை வந்த போது...