பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 25, 2011

ஏன் இந்த மின்வெட்டு ? யார் இதற்குப் பொறுப்பு ? – சோ


20_11_2008 துக்ளக் இதழில் இருந்து மின்வெட்டு பற்றிய சோ கட்டுரை.. ( அனுப்பி வைத்த கணேஷுக்கு நன்றி )

"ஜெயலலிதா ஒன்றும் தெரியாதது போல், ஊருக்கு ஊர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். அவரது ஆட்சியில் ஒழுங்காக மின் உற்பத்தித் திட்டங்களைப் போட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது' என்பது, இன்றைய மின்வெட்டு பற்றி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அளித்திருக்கிற தீர்ப்பு.

அதாவது, இன்றைய மின்வெட்டுக்குக் காரணம் தி.மு.க. அல்ல; ஜெயலலிதாதான் என்பது அவருடைய கண்டுபிடிப்பு. இதை இன்னமும் தெளிவாகவே கூறியிருக்கிறார், விஜயகாந்த் கட்சியில் மூத்த தலைவராக விளங்குகிற முன்னாள் மின் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

"மின்வெட்டு காரணமாகப் பலர் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம், இந்த ஆட்சிக்கு முன்பு முதல்வராக இருந்த


ஜெயலலிதாதான். அவர் திட்டம் போட்டு மின் திட்டங்களை உருவாக்கியிருந்தால், இந்த மின்வெட்டு இருந்திருக்காது' என்று அவர் கூறியிருக்கிறார்.

அதாவது, தி.மு.க.விற்கு இதில் பொறுப்பே இல்லை என்று, ஒரு சர்ட்டிஃபிகேட் வழங்குகிற அளவிற்குச் சென்றுள்ளது விஜயகாந்த் கட்சி.

தி.மு.க.விற்காக இப்படி உழைக்க விஜயகாந்த் கட்சி முனைந்திருப்பதில் நமக்கு வியப்பில்லா விட்டாலும், பலருக்கு இது ஏன் என்று புரியாமலிருக்கலாம்.

அதைப் பார்ப்பதற்கு முன்பாக, தமிழகத்தில் மின் உற்பத்தி, தேவை, பற்றாக்குறை, போன்றவற்றைப் பற்றிய சில விவரங்களைப் பார்ப்போம்.

இங்கே தரப்பட்டுள்ளவை, விவரமறிந்த பலரிடம் பேசி, ஆதாரபூர்வமாகத் திரட்டிய தகவல்கள். அதைக் கேள்வி – பதில் வடிவத்தில் தந்தால், தெளிவு

இருக்கும் என்பதால், கேள்வி – பதிலாகவே எழுதுகிறேன் :

கேள்வி : முந்தைய ஜெயலலிதா ஆட்சியில், மின் உற்பத்தித் திறன் எந்த அளவில் இருந்தது?

பதில் : அனல், புனல், எரிவாயு – மின் உற்பத்தி; தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிற மின் உற்பத்தி; மத்திய தொகுப்பிலிருந்து பெறப்படுவது

– எல்லாமாகச் சேர்ந்து 10,011 மெகா வாட்கள் என்ற அளவில், ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின்போது மின் உற்பத்தித் திறன் இருந்தது. இது, தி.மு.க.வின் இன்றைய ஆட்சி சமர்ப்பித்த பட்ஜெட்டிலேயே கூடக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

(பருவகாலத்தைப் பொறுத்ததாகவும், நிச்சயமற்ற தன்மை உடையதாகவும் இருப்பதால், காற்றாலை மின் உற்பத்தி இதில் சேர்க்கப்படவில்லை.)


கேள்வி : உற்பத்தித் திறன் 10,011 மெகா வாட்கள் என்ற நிலையில், நடைமுறையில் உற்பத்தி எந்த அளவில் இருந்தது?

பதில் : ஜெயலலிதா ஆட்சியின்போது, 8,775 மெகா வாட் உச்ச நிலை உற்பத்தி இருந்தது; அதற்கு மேல் அப்போது தேவைப்படவில்லை; தேவை ஏற்பட்டால், மேலும், குறைந்தபட்சம், 1000 மெகா வாட்கள் உற்பத்தி செய்யக்கூடிய

நிலையில், உற்பத்தித் திறன் இருந்தது. காற்றாலை, பயோமாஸ் மூலமான உற்பத்தி போன்ற உற்பத்தித் திறன் கணக்கில் சேர்க்கப்படாத இனங்கள்

மூலம் இது எளிதில் பெறப்பட்டிருக்கும்.

கேள்வி : கூடுதல் மின் உற்பத்திக்காக, ஏதாவது திட்டங்கள் முந்தைய ஆட்சியில் போடப்பட்டனவா? திட்டங்கள் வகுக்கப்பட்டன என்றால், அவற்றின் நடைமுறை முன்னேற்றம் எந்த அளவில் இருந்தது?


பதில் : தேசிய அனல் மின் உற்பத்திக் கழகம் (நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் – என்.டி.பி.ஸி.) மற்றும் தமிழ்நாடு மின்வாரியம் (டி.என்.ஈ.பி.)

கூட்டு முயற்சியால், எண்ணூரில் தலா 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட, இரண்டு அனல் மின் உற்பத்தி நிலையங்கள் ஏற்படுத்த, திட்டம்

வகுக்கப்பட்டது. அதாவது, கூடுதலாக 1000 மெகா வாட் உற்பத்திக்கான திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் 2003ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டது.

இதற்காக உப்புத் துறையிடமிருந்து, 1100 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. சுற்றுப்புறச் சூழல் ஒப்புதல் பெறப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் பூமியின் தரம்,

திட்டத்திற்கு ஏற்றதுதானா என்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அதற்கான அனுமதியும் பெறப்பட்டது. இவைதான் காலம் நீட்டிக்கொண்டே போகக்

காரணமாக அமைகிற அம்சங்கள். அவை முடிக்கப்பட்டுவிட்டன.

கட்டிடங்கள் எழுப்புவதற்கும், இயந்திரங்களை நிர்மாணிப்பதற்குமான பணிகள் தொடங்க இருந்த நேரத்தில் ஆட்சி மாறியது.

முறையான பணிகள் தொடரப்பட்டிருந்தால், இத்திட்டத்தின் மூலம் 1000 மெகா வாட்கள் கூடுதல் உற்பத்தி, மார்ச் 2009லிருந்து கிடைத்திருக்கும். ஆனால்,

ஜெயலலிதாவின் ஆட்சிக்குப் பின் பதவியேற்ற தி.மு.க. அரசு, இந்த திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றி, அதிக மின் உற்பத்தி பெறுவதில் ஆர்வம்

காட்டாமல், மெத்தனமாக நடந்துகொண்டு, இன்று வரை, இதைப் பயனற்றதாக்கிக்கொண்டிருக்கிறது.


கட்டுமானப் பணிகள், இயந்திரங்கள் நிறுவுதல் ஆகியவை தொடங்கப்பட வேண்டிய கட்டத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2009 செப்டம்பர் மாதம் முதல்

கிட்டியிருக்க வேண்டிய கூடுதல் மின் உற்பத்திக்கான பணிகளில் தி.மு.க. ஆட்சியில் ஆர்வம் காட்டப்படாததால், இந்தத் திட்டத்திற்காக ஜெயலலிதா

ஆட்சியில் தொடங்கப்பட்டு, முடிக்கப்பட்ட பணிகள், மீண்டும் பதவி ஏற்ற தி.மு.க. ஆட்சியினால் வீணடிக்கப்பட்டன.

இந்த தூத்துக்குடி மற்றும் எண்ணூர் திட்டங்கள் போக, பைகாராவில் (கூடுதலாக) 150 மெகா வாட்கள் உற்பத்திக்காகக் கொண்டுவரப்பட்ட தமிழக அரசின்

திட்டம், மத்திய அரசினால் (அதாவது தி.மு.க.வினால்) சுற்றுப்புறச் சூழல் காரணம் காட்டி தடுக்கப்பட்டது. அதன் பிறகு, ஜெயலலிதா அரசு,

நீதிமன்றத்தில் மனுச் செய்து, அனுமதி பெற வேண்டியதாயிற்று. ஹைகோர்ட்டில் ஜெயலலிதா அரசு இவ்வாறு அனுமதி பெற்ற பிறகும், மத்திய அரசு

விடவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து திட்டத்தைத் தடுக்கவே முனைந்தது. அங்கும் ஜெயலலிதா அரசு வென்ற பிறகே, இத்திட்டத்தைத்

தடுத்துவிட தி.மு.க. – மத்திய அரசு செய்த முயற்சிகள் நின்றன.

இந்தக் காலதாமதத்தையும் மீறி, இந்தத் திட்டம் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றி வைக்கப்பட்டது.

இதன் மூலமாகவும், வேறு சில சிறிய மின் உற்பத்தித் திட்டங்களை நிறைவேற்றியதன் மூலமாகவும், ஜெயலலிதா ஆட்சியில் (20012006) 2047 மெகாவாட்

மின் உற்பத்தி, கூடுதலாகப் பெறப்பட்டது. இதுபோலவே, 199196ல் அ.தி.மு.க. ஆட்சியின்போது, 1300 மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாகக் கிடைக்க, திட்டங்கள் வகுக்கப்பட்டு நிறைவேற்றிவைக்கப்பட்டன.


ஆகையால், ஜெயலலிதா ஆட்சியில் புதிய திட்டத்துக்காக எதுவுமே செய்யப்படவில்லை என்பது, உண்மை நிலைக்கு முற்றிலும் விரோதமானது; பொய்ப்

பிரச்சாரம்.

கேள்வி : இப்போதைய, மின் உற்பத்தி எந்த அளவில் இருக்கிறது?

பதில் : இப்போதைய மின் உற்பத்தி, 7500 மெகா வாட்கள் என்ற அளவில் இருப்பதாக, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சட்டசபையில் 14.11.08

அன்று கூறியிருக்கிறார். ஆனால், இன்றைய தேவை 9200 மெகா வாட்கள் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். அதாவது, தேவையை விட, 1700

மெகாவாட் குறைவாக உற்பத்தி உள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் சில இருக்கின்றன. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த உற்பத்தித் திறன், 10,011 மெகா வாட்கள். அது குறைந்திருக்க

நியாயமில்லை. (மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கிற மின்சார அளவு குறைந்தால் தவிர.)

ஜெயலலிதா ஆட்சியின் போது – ஆட்சி மாற்றத்தின் போது கூட – 8775 மெகாவாட் மின் உற்பத்தி இருந்தது. இது இப்போது குறைவானேன்?

ஒன்று – மத்திய தொகுப்பிலிருந்து வருகிற மின்சாரம் குறைந்திருக்கிறது. இரண்டு – நிலக்கரி வாங்குவதிலும், அதன் தரத்திலும், அதை ஸ்டாக் செய்து வைப்பதிலும் நுழைந்துள்ள குறைபாடுகள். அனல், புனல் மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகளில் அக்கறையின்மை. எரிவாயு பெறுவதில் முனைப்பின்மை – போன்ற காரணங்கள், மின் உற்பத்திக் குறைவில் முடிந்திருக்கின்றன.

ஜெயலலிதா ஆட்சியின்போது கூட, மத்திய தொகுப்பிலிருந்து தரப்படுகிற மின்சாரத்தைக் குறைக்க, மத்திய அரசு முனைந்தது. ஆனால், ஜெயலலிதா

நேரிடையாகத் தலையிட்டு, மத்திய அரசுடன் வாதாடி, அந்தக் குறை ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். இத்தனைக்கும், அப்போதைய மத்திய அரசோ,

தி.மு.க. பங்கேற்ற அரசு; (ஒன்று வாஜ்பாய் அரசு, மற்றொன்று மன்மோகன் அரசு). ஜெயலலிதாவின் அ.தி.மு.க.விற்கு விசேஷமாக உதவக்கூடிய அரசுகள்

அல்ல அவை. ஆனால், ஜெயலலிதாவின் உறுதியான அணுகுமுறை காரணமாக, அவர்கள் செய்ய முனைந்த குறைப்பைச் செய்யாமல் விட நேர்ந்தது.

இப்போதோ, மத்திய அரசு, தி.மு.க. பங்கேற்கிற அரசு மட்டுமல்ல; தி.மு.க. கேட்கிற இலாகாவை, தி.மு.க. சொல்கிறவருக்குக் கொடுத்து மகிழ்கிற அரசு.

"டெல்லி இப்போது கோபாலபுரத்தில் இருக்கிறது' என்று தமிழக மூத்த அமைச்சர் ஒருவர் வர்ணிக்கிற அளவில் உள்ள அரசு.


ஆனால், இந்த அரசிடம் கூறி, இந்தத் தி.மு.க.வினால், இந்த மின் குறைப்பைத் தடுக்க முடியவில்லை என்றால் – இந்த லட்சணத்தை என்ன என்று

வர்ணிப்பது? கையாலாகாத்தனம் என்பதா? அக்கறையின்மை என்று கூறுவதா? நிர்வாகத் திறமையின்மை என்று சொல்வதா?

கேள்வி : மின்சாரத்தை வினியோகிக்க, போதுமான கட்டுமானப் பணிகளை சென்ற அ.தி.மு.க. ஆட்சி விஸ்தரிக்கவே இல்லை – என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

பதில் : இதுவும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானதே. 1996 – 2001ல் தி.மு.க. ஆட்சியில் இருந்ததை விட, 20012006 ஜெயலலிதா ஆட்சியில் கட்டமைப்பு

பெரும் முன்னேற்றத்தைக் கண்டது. உயர் அழுத்த மின்பாதை (ஏ.கூ. ஃடிணஞுண்) 11,268 கிலோ மீட்டரிலிருந்து 14,079 கிலோ மீட்டராகவும்; தாழ்வழுத்த மின்பாதை
(ஃ.கூ. ஃடிணஞுண்) 34,194 கிலோ மீட்டரிலிருந்து 51,904 கிலோ மீட்டராகவும் உயர்த்தப்பட்டன. 4,923 என்ற அளவில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர்களின் எண்ணிக்கை 25,393 ஆக உயர்த்தப்பட்டது.

கேள்வி : இப்போது தொழிற்சாலைகள் பெருகிவிட்டதால், மின்தேவை மிகவும் கூடிவிட்டது – என்று கூறப்படுகிறதே?


பதில் : வருடா வருடம் மின்சாரத் தேவை கூடிக்கொண்டேதான் வந்திருக்கிறது. ஆண்டொன்றிற்கு சுமார் 7 சதவிகிதம் மின்சாரத் தேவை அதிகரித்து

வருகிறது என்பது அனுபவம் காட்டுகிற உண்மை. இந்தக் கணக்குப்படி பார்த்தால், ஜெயலலிதா ஆட்சியின் இறுதிக் கட்டத்தில், 8,775 மெகாவாட் போதுமானதாக இருந்தது எனும்போது, அதில் ஏழு சதவிகிதத்தைக் கூட்டினால் – தி.மு.க. ஆட்சியின்

முதல் வருட முடிவில், தேவை 8,775 + 614 = 9,389 மெகாவாட். இரண்டாவது ஆண்டு முடிவில், அதாவது இப்போது, 9,389 உடன் 7 சதவிகிதம் கூடுதல் தேவை. அதாவது 9,389 + 657 = 10,046 மெகா வாட்கள்.

ஆனால், அமைச்சரோ "இப்போதைய தேவை 9,200 மெகாவாட்' என்று சொல்லியிருக்கிறார். அதாவது, வழக்கமாக ஏற்படுகிற வருடாந்திர கூடுதல் தேவையை விட, கடந்த இரண்டாண்டு தேவை, குறைவுதானே தவிர, அதிகம் அல்ல. ஆகையால், "தொழிற்சாலைகள் எக்கச்சக்கமாகப் பெருகிவிட்டதால், மின்தேவை மிக அதிகமாகிவிட்டது' என்கிற வாதம் எடுபடாது. அது வாதம் அல்ல; சால்ஜாப்பு.

கேள்வி : அப்படியானால், இன்றைய மின்வெட்டுக்கு என்னதான் காரணம்?

பதில் : விஜயகாந்த் கூறுகிற மாதிரி, ஜெயலலிதா ஆட்சி அல்ல காரணம். மின்வெட்டிற்குக் காரணம், முழுக்க முழுக்க இன்றைய தி.மு.க. ஆட்சிதான்.

ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் இருந்த பல திட்டங்கள், தி.மு.க. ஆட்சியின் ஆர்வமின்மையினால் தேக்க நிலையை அடைந்துவிட்டன. மத்திய தொகுப்பிலிருந்து வருகிற மின்சாரக் குறைப்பு பற்றி இப்போதுதான் – மிகத் தாமதமாகத்தான் – விழிப்பு வந்திருக்கிறது.

நிலக்கரியை வாங்குவதிலும், தரம் பார்ப்பதிலும், சேகரித்து வைப்பதிலும், பராமரிப்புப் பணிகளிலும், முனைப்பில்லாமல் போயிற்று. இவ்வாறாக, தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையும், அக்கறையின்மையும்தான் இன்றைய மின்வெட்டிற்குக் காரணங்கள். உண்மை இவ்வாறிருக்க, விஜயகாந்த் "இன்றைய மின்வெட்டிற்கு,
முந்தைய ஜெயலலிதா ஆட்சிதான் காரணம்' என்று அடித்துச் சொல்வது, விசித்திரம்தான்.

விஜயகாந்த் மட்டும் சொன்னாலாவது, "சரி, விவரம் தெரியவில்லை. ஏதோ பேசியிருக்கிறார்' என்று நினைக்கலாம். ஆனால், அவருடைய கட்சியில் மூத்த தலைவராக விளங்குபவரும், முன்னாள் மின்துறை அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனும் விஜயகாந்தைப் போலவே, "ஜெயலலிதா ஆட்சிதான் காரணம்' என்று கூறுகிறபோது, "இது விவரமறியாத பேச்சு அல்ல; வேண்டுமென்றே செய்யப்படுகிற பிரச்சாரம்' என்பது தெளிவாகிறது.

மற்ற கட்சியினர் யாரும், இப்படிக் கூறவில்லை. சொல்லப்போனால், மின்சார அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூட, சில சமயங்களில், முந்தைய

ஆட்சியின் மீது பழிபோட முயன்றாலும், "காற்று வீசவில்லை' என்பதிலிருந்து, "தொழில் பெருகிவிட்டது' என்பது வரை ஏதேதோ காரணங்களைக் கூடவே

சொல்லி வருகிறார்.

உண்மைக்கு முற்றிலும் நேர் விரோதமாக "ஜெயலலிதா ஆட்சிதான் காரணம்' என்று சொல்வது விஜயகாந்தும், அவருடைய கட்சியினர் மட்டுமே. ஏன்?

இன்று மக்களை மிகவும் கோபமடையச் செய்திருக்கிற மின்வெட்டுப் பிரச்சனைக்கான பொறுப்பு தி.மு.க. அரசு மீது விழுவது அவர்களுக்குப்

பொறுக்கவில்லை. அவர்கள் நோக்கம், தி.மு.க.விற்கு எதிரான வாக்குகளைப் பிளந்து, ஒரு பகுதியைத் தாங்கள் பெற்று, அ.தி.மு.க.வின் வாய்ப்புகளைத்

தங்களால் இயன்றவரை கெடுக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால், இப்போது இந்த மின்வெட்டினால் பாதிக்கப்பட்ட சகல தரப்பினரும் "ஜெயலலிதாவின் ஆட்சியில் இப்படி நடக்கவில்லை. அந்த ஆட்சி

எவ்வளவோ மேல்' என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இது தங்களுக்கு ஆபத்து; தி.மு.க. வென்றால் பரவாயில்லை; அது வருகிற வருடங்களில்

பலவீனமடையப் போகிற கட்சி; ஆனால் அ.தி.மு.க. வென்றால், அது மேலும் வலுவடையும்; அதன் பிறகு அதை எதிர்கொள்வது நமக்கு இன்னமும் கடினமாகிவிடும்; ஆகையால், இப்போதே அதன் வாய்ப்புகளைக் கெடுத்து, தி.மு.க.விற்கு உதவுவதுதான் நமக்கு நல்லது' என்று விஜயகாந்த் கட்சித் தலைமை நினைக்கிறது.


அதுதான் இந்த மின்வெட்டுப் பிரச்சனையில் அவர்கள் செய்கிற முற்றிலும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரத்திற்குக் காரணம்.

தி.மு.க.வை எதிர்ப்பது போலப் பேசிக்கொண்டே, தேர்தலில் அக்கட்சிக்கு மறைமுகமாக உதவும் நோக்கத்துடன் செயல்படுவது என்கிற அரசியல் முடிவை

விஜயகாந்த் கட்சி எடுத்திருப்பது புரிகிறது. அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுப்பது, அவர்களுடைய உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் ஒரு விஷயம்.
இந்த மின்சார விஷயத்தில், அவர் முந்தைய ஆட்சியைச் சம்பந்தப்படுத்துகிறார். அப்போது மின்சாரம் இருந்தது. அதனால் இதைத் தொட்டால் "ஷாக்' அடிக்கும்.

ஆகையால், தி.மு.க.விற்கு உதவி செய்ய, விஜயகாந்த், வேறு ஏதாவது ஒரு விஷயத்தைத் தேடுவது அவருக்கு நல்லது.

10 Comments:

பெசொவி said...

இவ்ளோ பழைய கட்டுரையை இப்ப போட வேண்டிய அவசியம் என்ன? ஏதோ ஞாபகத்தில் 1996-97களில் சோ ஜெயலலிதாவை எதிர்த்து எழுதியதையும் வெளியிடுவீர்களோ?

IdlyVadai said...

//இவ்ளோ பழைய கட்டுரையை இப்ப போட வேண்டிய அவசியம் என்ன? ஏதோ ஞாபகத்தில் 1996-97களில் சோ ஜெயலலிதாவை எதிர்த்து எழுதியதையும் வெளியிடுவீர்களோ?//

போன முனி கடிதம், அதில் வந்த பின்னூட்டங்கள் தான் காரணம். 1996-97ல் சோ ஜெயை எதிர்த்து எழுதியதை அனுப்பினால் போடுகிறேன். இதில் என்ன இருக்கிறது ?

பெசொவி said...

நீங்கள் இந்தப் பதிவு போடாமல் இருந்திருந்தால் கூட மின் பற்றாக்குறைக்குக் காரணம் யாரென்று மக்களுக்குப் புரியும் என்றுதான் நினைக்கிறேன்!

//சோ ஜெயை எதிர்த்து எழுதியதை அனுப்பினால் போடுகிறேன். இதில் என்ன இருக்கிறது ?
//

எலக்சன் சமயத்தில ரெண்டு மேஜர் டிவிக்களும் அடிச்ச கூத்தை நீங்களும் அடிக்க வேண்டாம் என்று நான் கருதுகிறேன்.
:)

ConverZ stupidity said...

லக்கி இந்த கட்டுரையை படித்திருப்பாரா

Don said...

It's true the DMK govt is solely responsible for power crisis. DMK has mismanaged TNEB, they've stopped recruiting workers due to which there was insufficient workforce at project sites. Probably they had big plans (like 2G) to sell TNEB to private and make some big money out of it. Dividing the power distribution and generation was first step towards it. Even if 1000 Subramania swamy comes, they won't be enough for unearthing DMK's strategies. But due to the current situation, privatization of EB might also be a good move, owing to the well known work ethics of govt employees.

kothandapani said...

2008 ல் தீர்கதரிசனமாய் சோ கணித்துள்ளார். ஜெயா அபிரிதமாக வளர்ந்து வருகின்றார். பின்னர் நடந்த இடைத்தேர்தல்கள் மரண அடி கொடுத்த உடனே நிதர்ச உண்மை அறிந்த அறிவு ஜீவி சோ எந்த விஜயகாந்தை விளாசி உள்ளாரோ அதே விஜயகந்தோடு2011 இல் கூட்டணி ஏற்பட பகிர்த பிரயர்த்தனம் பட்டுள்ளார். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா

kothandapani said...

2008 1997 களில் நடந்ததை மறப்போம் . 2014 ல் நடப்பதை பார்ப்போம்
தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கு காரணகர்த்தா ஜெயாவே என்பதை துக்ளக் மிக தெளிவாக கட்டுரை வெளியிட்டுள்ளது
of course கேள்வி பதில் வடிவத்தில்தான். (2008 ல் வந்த அதே கட்டுரைதான் ஜெயா என்ற இடத்தில கருணா என்று போட்டுகொள்ளவும் ) 2016 ல் கருணா விஜயகாந்த் கூட்டணி ஏற்பட
சோ பங்கற்றியதக தகவல். மீண்டும் ஜெயா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே தாங்காது என்று சோ கருத்து. தேர்தலுக்கு பின் iidlyvadai துக்ளக்கின் கட்டுரை வெளியிட்டு மகிழ்ந்து கொள்ளும்
பி. கு இப்படியெல்லாம் நடக்ககூடாது என்றுதான் நமது ஆசை. அனால் அது பேராசை அல்லவா

Madhusoodhanan said...

Please check the link:
http://www.eng.chauthiduniya.com/2011/04/mega-scam-in-coal-worth-26-lakh-crores

Madhusoodhanan said...

Please check this link.

http://www.eng.chauthiduniya.com/2011/04/mega-scam-in-coal-worth-26-lakh-crores

cho visiri said...

//போன முனி கடிதம், அதில் வந்த பின்னூட்டங்கள் தான் காரணம். 1996-97ல் சோ ஜெயை எதிர்த்து எழுதியதை அனுப்பினால் போடுகிறேன். இதில் என்ன இருக்கிறது//

Side by side, you start recalling what PMK leaders were telling about DMK government - especially the "Pachchaidhrogam" comment.