பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 08, 2011

பூம்புகார் தொகுதி டவுண்டப் - வரதராஜன்

இந்த தொகுதி பா.ம.க க்கு ஒதுக்கபட்டுள்ளது. அதன் சார்பில் அகோரம் என்பவரும், அ.தி.மு.க சார்பில் பவுன்ராஜ் என்பவரும் போட்டியிடுகின்றனர். தொகுதி மறு சீரமைபின் படி பல இடங்கள் புதிதாக இனைதுள்ளது. அகோரத்தின் சொந்த ஊர் சீர்காழியுடன் இனைததால் இவருக்கு குறைந்தபட்சம் 2000 வாக்குகள் இழப்பு.மேலையூர், பூம்புகார், பொறையார் என இவர் பிறந்து, வளர்ந்த ஊர் என்பது கூடுதல் பலம். இதுவே இவருக்கு ஒருவகையில் பலகினமும் கூட. இவரின் அடாவடி தனம் இங்கு உள்ள அனைவருக்கும் தெரியும். இங்கு உள்ள தி.மு.காவினருக்கும் இவருக்கும் ஆகாது.கூட்டணி தர்மத்துக்காக வேலை பார்தாலும் ஒட்டு போடுவது சந்தேகம்தான். பிரஸிடண்ட் தேவேந்திரன் (தி.மு.க), துனை பிரஸிடண்ட் கணேஷ் ( தே.மு.தி.க), இருவரும் மேலையூர், பூம்புகார் பகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளவர்கள். ஆனால் கவுன்சிலர் நாகராஜ் (பா.ம.க) க்கு அவ்வளவு நல்ல பெயர் இல்லை.So ஆ.தி.மு.கவுடன் தே.மு.தி.க உள்ளதால் போட்டி பலமாக உள்ளது. பவுன்ராஜ் ஏற்கனவே இங்கு போட்டியிட்டு தோல்வியடைந்தவர். ஆனாலும் மக்களிடம் எந்த கெட்டபெயரும் இல்லாதவர்.இங்கு நிலவும் கடுமையான மின்தட்டுபாடு( தினமும் குறைந்தபட்சம் 3 மணி நேரம்). அழகிய சுற்றுலாதலமான பூம்புகாரை வீனடித்துகொண்டிறுப்பது, அரசு கல்லூரியாக இருந்த பூம்புகார் கல்லூரியை தன்னாட்சி கல்லூரியாக மாற்றியது, காவிரியில் மனல் கடத்தலை தடுக்காதது, பொது மக்களின் பலத்த எதிர்பையும் மீறி பொறையரில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்க ஆதரவு இது போன்ற காரனங்களால் ஆகோரத்தின் வெற்றி பாதிக்கபடலாம்.

அன்புடன்
வரதராஜன்

3 Comments:

Unmai said...

என்னைக்கேட்டால் தி மு க தான் மீண்டும் தமிழ் நாட்டில் வரணும். அப்புறம் கனிமொழி எல்லா துறையிலும் நுழைந்து சன் குழுமத்தை விட பணக்காரி ஆகி விடுவார். சன் குழுமம் எல்லா கம்பனி கலையும் வாங்கி மிக பணக்காரர்கள் ஆகி விடுவார்கள். ஸ்டாலின் / அழகிரி கட்ட பஞ்சாயத்து பண்ணி சட்டம் ஒழுங்கை ஒழிப்பார்கள். கரை வேட்டி களும் மற்ற அமைச்சர்களும் ஊரை அடிச்சு ஒலையில் போடட்டும். நம்ம நூறு நாள் வேலை வாய்பில் காசு வாங்கி டாஸ்மாக் அடிச்சுட்டு ஒரு ரூபா அரிசி வாங்கி இலவச டிவி இல் ஊழலையும் கருணா பேரங்கள் எடுக்கிற படங்களையும் பாத்துட்டு சந்தோசமா காலத்தை ஓட்டலாம்

அப்பாதுரை said...

நல்ல தொகுப்பு. கூட்டணியின் தலைமைக் கட்சியான திமுகவுடன் தகராறு என்றாலும் இவருக்கு சீட் கிடைத்தது வியப்பாக இருக்கிறது